Villangam Vivagaaram

ra-saravanan
mansoor-alikhan
பாதி அரசியல்வாதி, பாதி நடிகர்! மன்சூரலிகானின் சிம்பிள் ஃகாம்பினேஷன் இதுதான். ஊரில் எங்கு பிரச்சனை என்றாலும், அது குறித்து கிஞ்சிற்றும் அச்சமில்லாமல் பேசுகிற மன்சூரலிகானை, இந்த உலகம் காமெடியனாக பார்க்கிறதோ, சீரியஸ் ஆக நோக்குகிறதோ தெரியாது. ஆனால் இன்று அவர் பேசியிருக்கும் இந்த விஷயம், நிச்சயம் அதிமுக தலைவர்களாலும் உறுப்பினர்களாலும் கவனிக்கப்பட்டிருக்கும். இந்த குரலுக்கு என்ன மரியாதை என்ன என்பதை இன்னும் இரண்டொரு நாளில் பார்க்கலாம். அதற்கு முன் அவரது…
gutami-leter-to-modi
மறைந்த முதல்வர் ஜெ. மீது பற்றும் பாசமும் கொண்டிருக்கும் அத்தனை பேர் மனதிலும் மின்னலாய் ஓடிக் கொண்டிருக்கும் எண்ண ஓட்டத்தை, தைரியமாக வெளியே சொல்லியிருக்கிறார் நடிகை கவுதமி. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பியிருக்கும் கடிதத்திலிருக்கும் ஒவ்வொரு வரியும், கவனிக்கத்தக்கவை.
kamal-tribute-amma
எத்தனை ஆத்திரம் வந்தாலும், ஆள் செத்த பின்பு கொள்வது சரியல்ல! இதுதான் நம் முன்னோர் பண்பாடு.
kabaali-issue
செல்லாத நோட்டை வச்சு சீட்டுக்கம்பெனி கூட ஆரம்பிக்கலாம். ரஜினி படத்தை தயாரிப்பது அதைவிட பெரும் சிக்கல் என்கிற மாய நதியை ஓட விடுகிறது ஊர்! ‘லிங்கவாவுல நஷ்டம், கொடுக்கலேன்னா தற்கொலை’ என்று கிளம்பிய விநியோகஸ்தர்கள் இன்னமும் அந்த பஞ்சாயத்து தீரவில்லை என்று கூறிவரும் நிலையில், அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்துவிட்டது ஒரு கூட்டம். இது கபாலி பஞ்சாயத்து.
vishal-manaobala-karunaas
அநேகமாக தமிழ்சினிமாவின் எல்லா சங்கங்களும் ஏழைரையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் நடிகர் சங்கத்தில் நேற்று நடந்த அடிதடி, அநாகரீகத்தின் உச்சம்! கல்லெறிந்தது யார்? மண்டை உடைந்தது யாருக்கு? யாருக்கு யாரால் பிரச்சனை? யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? இப்படி எதுவும் புரியாமல் அல்லாடிக் கொண்டிருந்தார்கள்
gv-praksh-ajith-vijay
‘இந்திரனே சந்திரனே’ என்று புகழப்படுவதை விட, ‘தீவட்டி தலையா, கோமுட்டி வாயா’ என்றெல்லாம் இகழப்பட்டால்தான் சீக்கிரம் போய் ‘ரீச் ’ ஆக முடியும் போலிருக்கிறது. இந்த நெகட்டிவ் ரூட் தரும் இன்பத்தை கடந்த 24 மணி நேரமாக அனுபவித்து வருகிறார் வெர்ஜின் பையன் ஜி.வி.பிரகாஷ்.
gv-prakash-simbu
‘சிவனே’ என்று இருப்பவரல்ல சிம்பு. ஆனாலும் அவர் ஒரு சிவ பக்தர்! மனதில் பட்டதை படக் படக்கென போட்டுத் தாக்குவதில் அப்பா டிஆரை போலதான் இந்த சிம்புவும். நயன்தாரா லவ்வுக்கு வாழ்த்து சொல்லும் பக்குவம், அவங்க கல்யாணத்துல நான் கலந்துப்பேன் என்கிற பெருந்தன்மை, இப்படி சிம்புவின் பட்டவர்த்தமான பேச்சுக்கு ஆஹா போடும் உலகம், சமயங்களில் ஜர்க் ஆவதுதான் கொடுமை.
salmankhan-rajinikanth
எப்பவுமே பாலிவுட்டில் ‘பாக்சர்’ மனப்பான்மை கொண்ட ஹீரோக்கள்தான் அதிகம். நமக்குள் வெட்டு குத்து இருந்தாலும், வெளிமாநிலத்திலிருந்து ஒருவரும் இங்கு வந்து கடை விரிக்கக் கூடாது என்பதில் மிக மிக தெளிவாக இருப்பார்கள். தெலுங்கில் சிரஞ்சீவியும் சரி. தமிழில் கமல் ரஜினியும் சரி. இந்திக்கு போய் அங்குள்ளவர்களின் பாலிடிக்ஸ்சை சமாளிக்க முடியாமல் அப்படியே யெஸ் ஆகி திரும்பியவர்கள்தான்.
vishal-sivakarthikeyan
‘துணிச்சல் இருந்தா எங்க அண்ணன் மேல கை வச்சு பாருடா’ என்பார் முத்துக்காளை. ‘டேய்… அவங்களே போக சொல்லிட்டாங்கடா’ என்று வடிவேலு சொன்ன பிறகும் விடாமல் வம்புக்கு இழுத்து இவருக்கு அடிவாங்கிக் கொடுப்பார். கிட்டதட்ட அப்படிதான் ஆகிவிட்டதாம் சிவகார்த்திகேயனின் நிலைமை. மூன்று தயாரிப்பாளர்களுக்கு படம் பண்ணுகிற விஷயத்தில் ஏற்பட்ட பிரச்சனை அது. தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து கூடியது.
hero-settled
“அம்பானிக்கும் அதானிக்கும் முன் கூட்டியே தெரிஞ்சுதான் எல்லா கருப்பு பணத்தையும் வெள்ளையாக்கிட்டாங்க” என்று மிடில் வட்டி சேட்டுகளும், மேக்சிமம் வட்டி மார்வாடிகளும் வட நாட்டில் கூச்சல் போட ஆரம்பித்துவிட்டார்கள். பாராளுமன்றம் வரைக்கும் இக் குரல் ஒலிக்கும் போலிருக்கிறது. ஆனால் “தமிழ்நாட்லேயும் கொஞ்ச பேருக்கு தெரிஞ்சுருக்கும். இல்லேன்னா சொல்லி வச்ச மாதிரி இப்படி நடக்குமா?” என்று வாயை பிளக்கிறது இன்டஸ்ட்ரியின் இருட்டு மூலை!
politics-vijay
கருத்துச் சுதந்திரம் இருக்கிற நாட்டில்தான், ‘கருத்து சொல்றான்பா’ என்கிற விமர்சனமும் இருக்கிறது. அதுவும் தெருவுக்கு நாலு கவுண்டமணிகள் முளைத்தால் செந்தில்கள் பாடு ஐயோ பாவம்!
sivakarthikeyan-gnavelraja
முள்ளும் உடையாமல் சேலையும் கிழியாமல் ஒரு பிரச்சனையை சரி செய்துவிட வேண்டும் என்று கடும் போராட்டம் நடந்து வருகிறது கோடம்பாக்கத்தில்! முள் யார்? சேலை யார்? என்பது இப்போது முக்கியமல்ல. தீர்வு ஒன்றுதான் முக்கியம்.
modi-annoncement
ஒரு பிளாஷ்பேக்! பிரபலமான அந்த பிரமாண்ட இயக்குனர் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தது வருமான வரித்துறை. தேடித் தேடி கைப்பற்றியதெல்லாம் ஏராளமான கருப்புப்பணம். பல கோடிகள் மதிப்பிலானது. பேஸ்த் அடித்து நின்ற அந்த இயக்குனரிடம், “ஒரு பைசா கொள்ளையடிச்சா தப்பில்ல. ஒரு ஒரு பைசவாவா ஒரு கோடி ரூபாய் கொள்ளையடிச்சா தப்புதானே?” என்று கேட்க,
kamal-residence
‘ஆழ்வார்பேட்டை ஆண்டவா’ என்று ரசிகர்கள் வாழ்த்து கோஷம் இடுவதை சற்றே நமுட்டு சிரிப்போடு ரசிப்பது ‘ஆண்டவனே இல்லை’ என்று சொல்கிற கமலின் சுவை முரண்! ஆனால் இந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவர் அங்கிருந்து கிளம்பி நீலாங்கரை பங்களாவுக்கு போய் இரண்டு வருஷங்களுக்கு மேலாச்சு. ஆனாலும் கமலின் இளமைப்பருவம் கழிந்த ஆழ்வார்பேட்டை வீடு, அலுவலகமாக செயல்பட்டு வந்ததில் எந்த சிரமமும் இருந்ததில்லை.
vishal-kaththisandai
“ஆளுக்கொரு ஆம்புலன்ஸ் சொல்லுங்கப்பா…” என்கிற அளவுக்கு பீதி நிறைந்து காணப்படுகிறது சினிமா இன்டஸ்ட்ரி. உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு திருட்டு இணையதளங்களில் புதுப்படங்களை ஒளிபரப்பி வந்த கும்பல், இப்போது இன்னும் சுலபமாக்கிவிட்டது தன் ஊழியத்தை. யெஸ்… இப்போது லைவ்வாக பேஸ்புக்கிலேயே படங்களை ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.
vadivelu-soori
வடிவேலு திண்ணையை காலி பண்ணிய பின்பு, பெரும் கூட்டம் ஏறிக் கொண்டது அங்கே. அதில் பாதிக்கும் மேல் புளியங் கொட்டைகள்தான். தப்பித்தவறி ஒன்றிரண்டு முந்திரிக் கொட்டைகளும் அந்த திண்ணையில் ஒதுங்கியது தமிழனின் பூர்வ ஜென்ம புண்ணியம்.
ramyakrishnan-goutami
சினிமா வேறு… பர்சனல் வேறு என்பது தென்னிந்தியாவிலும் இல்லை. வட இந்தியாவிலும் இல்லை! அடுத்தவர் குடும்பத்தில் மூக்கை நுழைத்து அகப்பட்ட வரைக்கும் சுவாசிக்கும் அன்பு உள்ளங்கள் நிறைந்த திருநாட்டுக்குதான் அவ்வப்போது கிசுகிசுக்களை தந்து வாழ விடுகிறார்கள் நடிகர்களும், நடிகைகளும். போன வாரம் ரம்பா. அதுக்கு முந்தைய வாரம் வரைக்கும் அமலாபால். இந்த வாரம் யாருப்பா? என்று மூக்கு நுனியை சொறிகிற நேரத்தில்தான் தானாய் வந்து சிக்கினார் கவுதமி.
goutham-menon
அச்சம் என்பது மடமையடா என்று தலைப்பு வைத்துவிட்டு, இப்படி தன் கம்பெனி பெயரைக் கூட போட முடியாமல் அச்சத்திலிருக்கிறாரே கவுதம்? இன்று வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் விளம்பரம் இப்படி உச் கொட்ட வைத்திருக்கிறது இன்டஸ்ட்ரியை.
kamal-gautami-divorce
கடந்த சில மாதங்களாகவே சினிமா பிரமுகர்கள் சிலரால் அரசல் புரசலாக முணுமுணுக்கப்பட்டு வந்த விஷயம்தான்… இன்று டமால் என்று வெடித்துவிட்டது! கமல் கவுதமியின் நட்பு, அல்லது காதல், அல்லது குடும்ப வாழ்க்கை, இன்று முடிவுக்கு வந்துவிட்டது. கவுதமியே இன்று அதை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார்.
Page 3 of 2212345...1020...Last »