Villangam Vivagaaram

bobby simha-reshmi
ஐயோ பாவம் சினிமாக்காரர்கள்… வந்த தும்மலை கூட சுதந்திரமாக தும்மிவிட முடியாது. அந்த தும்மலுக்குள் மார்க்கெட் இருக்கும். சம்பளம் இருக்கும். பிரஸ்டீஜ் இருக்கும். இன்னும் என்னென்னவோ இருக்கும். அப்படிதான் பெரும் இக்கட்டில் தவிக்கிறார் சிம்ஹா. இவருக்கும் இவர் நடித்துக் கொண்டிருக்கும் உறுமீன் படத்தின் நாயகி ரேஷ்மி மேனனுக்கும் காதல். குறுகிய கால காதலாக இருந்தாலும், நன்றாக இறுகிய காதலாக மாறியதால், அதை கல்யாணத்தில் முடிக்கவே ஆசை கொண்டாராம் சிம்ஹாவும். வழக்கம்…
robo shankar
இப்படியொரு தலைப்பை படித்ததும் ஆன் த ஸ்பாட்டிலேயே ரத்த வாந்தி எடுக்கிற அளவுக்கு கோபப்படும் வலைதள வல்லூறுகளுக்கு… விஷயம் ரொம்ப சீரியஸ் ஆகிக் கொண்டிருக்கிறது. அதை உணர்த்தும் செய்திதான் இது. ஓவியர் ஸ்ரீதர், ‘மய்யம் ’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் சாதாரண படமல்ல. இந்திய சினிமாவில் முதல் முயற்சி. கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவியரை தேர்வு செய்து அவர்களின் திரைப்படம் உருவாக்குகிற ஆசைக்கு தீனி…
vikram
எல்லாருக்கும் வருகிற ஆசைதான். விக்ரமுக்கும் வந்திருக்கிறது. அது என்ன? தன் மகனை ஹீரோவாக்க வேண்டும் என்பது! விக்ரமுக்கு இருக்கிற தொடர்புக்கும் செல்வாக்குக்கும் அது ஒன்றும் பெரிய விஷயமேயில்லை. ஆனால், குட்டு பட்டால் கூட ஷங்கர் மாதிரி பிரமாண்ட இயக்குனர்கள் கையால் குட்டுப்பட வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருக்காதா என்ன? பொதுவாகவே பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தால் மட்டுமே, அறிமுக ஹீரோக்கள் பட்டிதொட்டியெல்லாம் சென்று சேர முடியும். அந்த வித்தை…
vani
எப்பவோ வச்ச மருதாணி இன்னைக்கும் கைய விட்டு அகலாதது போலல்ல சிலரது விவாகரத்துகள். அது மருதாணியல்ல. ஆனால் சிவப்புதான். அதுவும் சேர்த்து வச்ச நன் மதிப்புக்கெல்லாம் ஒரேயடியாக ரெட் லைட் அடிக்கிற சிவப்பு. 78 ம் வருஷத்திலிருந்து 88 ம் வருஷம் வரைக்கும் கமலுடன் சேர்ந்து வாழ்ந்த அவரது முதல் மனைவி, இப்போதும் கமல் குறித்து பேசுகிறார். அதே மாதிரி கமலும் அவரை பற்றி பேசுகிறார். ஆனால் எதுவுமே நல்ல…
uyire uyire-Radhika speech
ஒரு இடைத்தேர்தலின் பரபரப்பு கூட இந்தளவுக்கு இருக்குமா தெரியாது. ஆனால் கடந்த சில வாரங்களாகவே தமிழ் திரையுலகத்தை அனலாக்கிக் கொண்டிருக்கிறது நடிகர் சங்க தேர்தல் குறித்த முஸ்தீபுகள். கல்யாணம் மற்றும் காதுகுத்து விழாக்களில் கூட அரசியல் பேசுவதுதான் அரசியல்வாதிகளின் யுக்தி. அந்த யுக்தியை ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகை ராதிகா பயன்படுத்த அதே மேடையில் அதற்கு பதிலடியும் கிடைத்தது. அப்படியொரு பதிலடியை கொடுத்தவர் இங்கிருக்கும் தமிழ் நடிகரோ…
sharath-vishal
நடிகர் சங்க பிரச்சனை உச்சகட்டத்திலிருக்கிறது. இளம் தலைமுறை முண்டா தூக்கிக் கொண்டு கிளம்பியதில் மூத்த தலைமுறை முழுவதும் அப்செட்! கேள்வி பேட்டி என்றாலே சிம்பிள் கேள்விகளுக்கு அதைவிட சிம்பிளாக பதில் சொல்லிவிட்டு ஓடிவிடும் விஷால், இந்த தந்திடி.வி சேனலில் கேள்வி சிங்கம் ரங்கராஜ் பாண்டேவுடன் வாதாடுகிறார். சமயங்களில் அவரையே தடுமாற வைக்கிறார். அந்தளவுக்கு வேகம் வேகம்… இளைய நடிகர்களின் இந்த வேகமும், கூட்டு முயற்சியும் சங்கத்திற்கு பலமா? பலவீனமா? வெல்வார்களா?…
Kamal-Hassan-Rajinikanth
‘என் சங்கத்து உறுப்பினரை அடிச்சது எவண்டா?’ என்று கேட்பதற்கு மன்சூரலிகான் மாதிரி முத்துக்காளைகள் பலர் இருக்கிறார்கள். ஆனால் சங்கத்தையே தோளில் தாங்க வேண்டிய ரஜினி கமல் அஜீத் விஜயெல்லாம் அந்தர் தியானமாகிவிட்டார்கள். கடந்த பல வருடங்களாக நடிகர் சங்கத்தின் நிலைமை இப்படிதான். ஆரம்பத்தில் இது குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளாத சிறு நடிகர்கள், மற்றும் மிடில் நடிகர்கள் பலர் இப்போது லேசாக முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்களாம். எம்.ஜி.ஆர், சிவாஜி, என்எஸ்கே, எஸ்எஸ்ஆர் போன்ற…
papanasam
என்னடா… இன்னும் காணோமே? என்று நினைத்துக் கொண்டிருந்தால், ஆரம்பிச்சுட்டாங்களே… பொதுவாகவே கமல் படம் எதுவும் சுக பிரசவமாக இருந்ததில்லை. கத்தி புத்தி சித்தி மூன்றையும் பயன்படுத்திதான் தியேட்டருக்கு கொண்டு வர வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் இன்று கூடிய திரைப்பட விநியோகஸ்தர் கூட்டமைப்பு ஜுலை 3 ந் தேதி வரவிருக்கும் ‘பாபநாசம்’ படத்தை வெளியிட தடை விதித்திருக்கிறது. இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவால் திரையுலகத்தில்…
sooravali
‘இரும்பை முழுங்கிட்டு இஞ்சி ரசம் குடிச்சிக்கலாம்னு நினைச்சு தப்பு பண்ணுற ஊர்டா இது’ என்று இந்த செய்தியை படித்து முடிக்கும் போது நீங்கள் அலுத்துக் கொண்டாலும் தப்பில்லை. ஏனென்றால் இப்படியெல்லாம் ஒரு காரியத்தை ஸ்கிரீன் ப்ளே எழுதி செய்தாலும் நடத்தியிருக்க முடியாது. ஆனால் தந்திரமாக நடத்தி மூணு கோடியை அபேஸ் செய்துவிட்டார் அந்த இயக்குனர். தமிழ்சினிமாவின் பெருமை அந்த இசையமைப்பாளர். அடக்கம். அன்பு. ஐந்து வேளையும் தொழுகை செய்யும் பக்தி.…
kakka-tv
அண்மையில் திரைக்கு வந்து தியேட்டர்களை கொண்டாட வைத்திருக்கும் படம் ‘காக்கா முட்டை’. யாரும் எதிர்பாராத விதமாக இந்த படத்தைக் காண கொத்து கொத்தாக தியேட்டருக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள். கைதட்டல்களும் விசிலும் பறக்கிறது. பொதுவாக அவார்டு திரைப்படங்களை தியேட்டர்களில் யாரும் சீண்டுவதேயில்லை. அந்த பெருமை முதன் முறையாக காக்கா முட்டைக்குதான்! இந்த படத்தை இயக்கிய மணிகண்டனுக்கும், படத்தை தயாரித்த இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ் இருவருக்கும் கூட பாராட்டுகளை குவித்துக்…
awards
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்சினிமா நடிகர் நடிகைகளை டார்வே நாட்டுக்கு அழைத்துச் சென்று விருது கொடுக்கிறேன் பேர்வழி என்று பட்டினி போட்டு அனுப்பும் ஒரு திருவிழா வருஷா வருஷம் நடந்து வருகிறது. சொந்த காசை போட்டு இப்படி சோதனையை வாங்கிக் கொள்ளும் வழக்கம் எவ்வளவு நாளைக்குதான் நடக்கும்? ஒரு பட்டினி இன்னொரு பட்டினியிடம் சொல்லி, அந்த பட்டினி இன்னொரு பட்டினிக்கு எச்சரிக்கை செய்து கடைசியில் டார்வே என்றாலே ‘ஆளை விடுங்க…
tv-tfpc
ஒரு முக்கியமான சேனலுக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிணக்கு, கணக்கு வழக்கில்லாமல் நீளும் போலிருக்கிறது. சேனலும் சும்மாயில்லை. ‘எங்களை தொழில் செய்ய விடாமல் தடுக்க நீங்கள் யார்?’ என்று கேட்டு தயாரிப்பாளர் சங்கத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இதையடுத்து கடும் கோபத்துடன் கூடிய தயாரிப்பாளர் சங்கம், எழுத்துபூர்வமாக யாரையும் தடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இனிமேல் எந்த நடிகர் நடிகைகளும், தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், சினிமா சார்ந்த தொழில்…
set
அந்த மூன்றெழுத்து சேனலுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் செம டோஸ் விழுந்தது. பணத்தை அள்றது முழுக்க எங்க துறை ஆட்களை வைத்துக் கொண்டு. ஆனால் சேனலுக்கு படம் வாங்க மட்டும் கசக்குதா? வருஷத்துக்கு இத்தனை படங்கள் வாங்கலேன்னா உங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் போடும் என்று எச்சரிக்கப்பட்டது. அந்த சேனல் நடத்தவிருந்த பெரிய நிகழ்ச்சி ஒன்றையும் தடுக்க முற்பட்டது. இதில் பீதியடைந்த சேனல் தரப்பு ஓடோடி வந்து சரண்டர்…
rajini-linga
பலாப்பழத்தை புழிஞ்சா முள்ளுதான் மிச்சம் என்கிற நிலைமைக்கு கொண்டு வந்துவிடுவார்கள் போலிருக்கிறது ரஜினியை! 37 கோடி லாஸ்… ரஜினிதான் திருப்பிக் கொடுக்கணும் என்று கிளம்பிய விநியோகஸ்தர்களையும், தியேட்டர்காரர்களையும் ஒருவழியாக சமாளித்து பனிரெண்டரை கோடியில் புல்ஸ்டாப் வைத்தார் ரஜினி. கோபுரம் சும்மாயிருந்தாலும் குருவிங்க சும்மாயிருக்குமா? இந்தா வச்சுக்கோ என்று அதன் தலையிலேயே எச்சமிட்டு தொலைக்கின்றன. கொடுத்த பணத்தை நியாயமாக பிரித்துக் கொடுத்திருந்தால், அவரவர் வேலையை அவரவர் பார்க்கப் போயிருப்பார்கள். ஐந்தரை கோடி…
jeeva
கடந்த பல மணி நேரங்களாக இந்த செய்தி வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் விறுவிறுவென பரவிக் கொண்டிருக்கிறது. அது சொல்லும் விஷயம்? மனிதாபிமானமற்றவர் நடிகர் ஜீவாவும் அவரை சுற்றியுள்ள கூட்டமும் என்பதுதான்! விஷயத்தை விரிவாக பார்ப்போமா? திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில், செங்கிப்பட்டி என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் விபத்திற்குள்ளாகி படு காயமாம். அருகிலிருந்தவர்கள் அவரை அள்ளிப் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்கள். போகிற வழியில்…
nayanthara
‘நான் பொம்பள ரஜினிடா’ என்கிற அளவுக்கு எந்த விஷயத்தை கொளுத்திப் போட்டாலும், சூடாக வியாபாரம் ஆகிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. அதற்காகவே அவரை சுற்றி சுற்றி ரவுண்டு கட்டுகிறது மீடியா. இந்த நேரத்தில்தான் இன்னொரு செய்தி. ஆனால் இது நயன்தாராவின் கம்பீரத்தை காட்டுகிறதே ஒழிய, துளி கூட அவர் மீது வெறுப்பை வரவழைக்கவில்லை. ஏன்? ஆதியோடு அந்தமாக படித்து பார்த்தால்தான் அதன் பொருள் விளங்கும். ஒரு காலத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘கள்வனின் காதலி’…
Porkalathil-Oru-Poo
‘கருத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம்னு ஒண்ணு இருக்கு, ஆனால் அது ஏட்டளவில் பேச்சளவில்தான் இருக்கா? செயலளவில் இல்லையா?’ என்றெல்லாம் குமுறிக் கொண்டிருக்கிறார் ஒரு இயக்குனர். அதற்கு காரணம் அவர் இயக்கிய உயிர்ப்பான படம் ஒன்றுக்கு, தடிப்பான தாழ்ப்பாள் போட்டுவிட்டது சென்சார். ‘படத்தை ரிலீஸ் பண்ணனும்னா பாம்பேக்கு போய் அங்கிருக்கும் தணிக்கை வாரியத்தை அணுகு’ என்கிறார்களாம். ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற தலைப்பில், ஈழ விடுதலைக்காக போராடிய இளம் பெண் இசைப்பிரியாவின்…
thala ajith
‘என்னவோ தெரியலைப்பா… அவரு இப்பல்லாம் அப்படிதான் நடந்துக்குறாரு’ என்கிறார்கள் அஜீத் குறித்து. அதை சொல்வதற்கு முன் ஒரு பிளாஷ் பேக்! அதுவும் நமது நியூதமிழ்சினிமா.காம் வாசகர்களுக்காக. ‘காதல் கோட்டை’ படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். அதற்கு முன்பு வரை அஜீத் ஒன்றும் பெரிய வெற்றிப்பட ஹீரோ இல்லை. அந்த படத்தின் டப்பிங் பணிகள் சென்னை சாலிகிராமத்திலிருக்கும் ஒரு ஸ்டூடியோவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவர் டப்பிங் பேச பேச, ஸ்பாட்டிலிருந்த டைரக்டர்…
uthamavill
நம்பியவர்களுக்கெல்லாம் நண்டுவாக்கிளி கொட்டு வைப்பதுதான் சினிமாவுலக வழக்கம். இப்படி கொட்டு வாங்கியவர்கள் கொஞ்சமா, நஞ்சமா? இதோ- உத்தமவில்லன் விஷயத்தில் நேற்றிலிருந்து விதவிதமான கொட்டுகளையும் விஷக்கடிகளையும் வாங்கிக் கொண்டேயிருக்கிறார் உத்தமவில்லன் தயாரிப்பாளர் லிங்குசாமி. ‘பணத்தை எண்ணி வச்சுட்டு படத்தை ரிலீஸ் பண்ணு’ என்று கழுத்தில் கத்தி வைக்காத குறையாக கிளம்பியவர்கள் சுமார் நாற்பது கோடி அளவுக்கு சுமையை ஏற்றி வைக்க, கிடுகிடுத்துப் போனது உத்தமவில்லன். நேற்றே வெளிவர வேண்டிய படம் முக்கி…
shirdi
இன்று கோடம்பாக்கம் முழுக்க ஒரே பேச்சுதான்! அது ஆஸ்கர் ரவிச்சந்திரன் வங்கியில் வாங்கிய கடன் வட்டியோடு சேர்த்து 97 கோடியாகிவிட்டது என்பதால் வங்கியில் அடமானமாக கொடுத்திருந்த சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுவதாக வந்த செய்தித்தாள் விளம்பர அறிவிப்பு பற்றியது! சொல்ல முடியாது. இன்று கோடம்பாக்கத்தில் பல இடங்களில் சந்தோஷமான ‘சியர்ஸ்’ பார்ட்டிகள் நடக்கலாம். சில இடங்களில் இதே பார்ட்டி கண்ணீரோடும் நடக்கலாம். காரணம், எதிரிகளையும் ஆதரவாளர்களையும் ஒரே நேரத்தில் சம்பாதித்துக்…
Page 22 of 24« First...10...2021222324