Villangam Vivagaaram

Pattadhari-Abisaravanan
ஓடு ஒண்ணுதான். உள்ளேயிருக்கிற மஞ்சள் கருவுக்கும் வெள்ளைக் கருவுக்கும்தான் விவகாரம் என்று பீடிகையோடு சொல்ல ஆரம்பிக்கிறது கிசுகிசு வட்டாரம். பொதுவாகவே ஒரு படத்தில் நடிக்கும் ஹீரோவுக்கும், அப்படத்தில் சம்பந்தப்பட்ட மற்றவர்களுக்கும் ஒரு ஏழரையோ எட்டரையோ இருந்து கொண்டே இருக்கும். நான் ஹீரோ என்ற பந்தாவோடு நடந்து கொள்வார் கதாநாயகன். பணம் போட்டவன் நானாச்சே என்ற பந்தாவோடு நடப்பார் தயாரிப்பாளர். கேப்டன் ஆப் த ஷிப் நான்தானே, நியாயமா நானல்லவா திமிரை…
tamil Actress in pub
ரெஜினா, மஞ்சிமா மோகனுக்கெல்லாம் பப்புக்கு போகிற பழக்கம் இருக்கா? என்று கேட்டு, ‘ஆமாம்’ என்ற பதில் வந்தால், சொசைட்டியில் சில பல தற்கொலைகள் விழுந்தாலும் விழும்! அவ்ளோ நம்பிக்கை அந்த குத்துவிளக்குகள் மீது! ஆனால் அவ்விருவரும் சமீபத்தில் ஒரு பப்புக்கு வந்தார்கள். இடம் சென்னைதான்… வேறெங்கே! இவர்களுக்கு ‘ஹாய்’ சொல்லியபடி சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்த அந்த நடிகைக்கு பாடவும் தெரியும். இது நம்ம ஆளு என்று கொஞ்சுகிற பேஸ்கட்டுதான்…
VijayFans Canada
சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் மெட்ரோ என்ற படத்திற்கு தமிழ்நாட்டில் என்ன வரவேற்போ தெரியாது. ஆனால் கனடாவிலிருக்கும் விஜய் ரசிகர் ஒருவர் இந்த படத்தை பார்த்துவிட்டு, “அண்ணா இதை விடக்கூடாது. எனக்காக இந்த செய்தியை உங்க இணையதளத்தில் வெளியிடுங்க” என்று கண்ணீர் மல்க ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். கூடவே அவர் சில ஸ்கிரீன் ஷாட்டுகளையும் நமக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இப்படியொரு வெறிபிடித்த ரசிகரா என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இனி அவரது கடிதம்-…
Samuthirakkani-Appa
அப்பா என்ற படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார் சமுத்திரக்கனி. தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு நல்ல இமேஜை கொண்டிருக்கும் அவர், இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு எடுக்கப்பட்ட படம்தான் இது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி நடத்த வேண்டும்? என்பதை சொல்கிற படமாக உருவாகியிருக்கிறதாம் இந்த அப்பா. “முதல்ல குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுற பெற்றோர்கள் வேணும். ஒரு சம்பவம்தான் இந்த கதையை நான் உருவாக்க காரணமா…
Vishal-SureshKamachi
லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள ‘பகிரி’ என்கிற படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் வசந்தபாலன் வெளியிட்டார். பிரபல ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக்கொண்டார். விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி பேசும்போது, “நாங்கள் இந்தப் ‘பகிரி’ இயக்குநர் இசக்கி கார்வண்ணன் எல்லாருமே சீமான் என்ற ஒரே ஆலமரத்திலிருந்து வந்த விழுதுகள்.. இப்படத்தின் இசையமைப்பாளர் கருணாஸ் ஜல்லிக்கட்டு பற்றி சட்டசபையில் பேசியிருக்கிறார். மகிழ்ச்சி. அப்படியே அவர் திருட்டு விசிடி பற்றியும் பேச…
Vasantha Balan
‘தமிழ்சினிமா எங்கே போய் கொண்டிருக்கிறது?’ என்றொரு கருத்தரங்கம் வைத்தால், ஒரு மாதமானாலும் அந்த கூட்டம் முடியாது போலிருக்கிறது! அவ்வளவு குமுறல்கள், வருத்தங்கள், வேதனைகள்! செய்வதறியாமல் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் பல நல்ல பட இயக்குனர்கள். வெயில், அங்காடித் தெரு என்று தமிழ்சினிமாவில் அழுத்தமான படைப்புகளை வழங்கி அழியாத புகழுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்ட வசந்த பாலனும் அவர்களில் ஒருவர். நேற்று நடந்த பகிரி என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த…
MetroDistributer
வயித்து வலி உனக்கு, வாந்தி பேதி எனக்கா? என பெரும் எரிச்சலில் இருக்கிறார் அந்த விநியோகஸ்தர். பிறகென்னப்பா? ஒரு ஓப்பனிங்கும் இல்லாத ‘மெட்ரோ’ படத்தை திடீரென ரேட் ஏற்றினால் எரிச்சல் வரதானே செய்யும்? ஆனந்த கிருஷ்ணன் என்பவர் இயக்கியிருக்கும் மெட்ரோ திரைப்படம், பெண்களிடம் செயின் பறிக்கும் இளைஞர்களை பற்றிய கதை. மேக்கிங் நல்லாயிருக்கு… மற்றதெல்லாம் கொஞ்சம் வீக்தான் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகிற நிலையில், தயாரிப்பு தரப்பு படத்தின் மீது வைத்திருக்கும்…
Vijay BirthDay Photos
சொசைட்டியில் டாப்பில் இருக்கும் ஹீரோ, ஹீரோயின்களை கண்டால், ஒரு ரசிகராகவே உருமாறி அவர்களுடன் செல்பி எடுத்து அதை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் பதிவு செய்து புளகாங்கிதப்படுவதில் டாப் ஒன்னாக இருக்கிறார் இசைமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். அடுக்கடுக்காக அவர் போட்டுத் தள்ளும் போட்டோக்கள், எங்கிருந்தோ ஏங்கும் ரசிகர்களுக்கு மேலும் ஏக்கத்தை உண்டு பண்ணி வருகிறது. நேற்று விஜய் பிறந்த நாள் அல்லவா? அவர் சென்னையில் இருக்கிறாரா, வெளிநாட்டுக்கு பறந்துவிட்டாரா என்ற குழப்பம்…
mysskin-mariya soosaiyin kadhal
ஒரு டைரக்டராக அல்ல, ஒரு மனுஷனாகவே சற்று விநோதமானவர் மிஷ்கின். ஒரு குழந்தை யானையை வேடிக்கை பார்க்குமே, அப்படி பார்க்கலாம் அவரை! இந்த வார விகடன் பேட்டியில், “மிஷ்கின் யார்?” என்று அவரிடம் கேள்வி எழுப்ப, “கோமாளி” என்று பதில் சொல்லியிருக்கிறார் அவர். (என்னவொரு அற்புதமான ஸ்கேனிங்?) அவரது மேனரிசங்களை போட்டோ எடுத்து கண்காட்சி வைத்தால், அவர் வணங்கும் அகிரகுரோசாவே கல்லறைக்குள்ளிருந்து எழுந்துவந்து, “ஹலோ… கொஞ்சம் கடைய மூட்றீங்களா” என்பார்.…
Songs Kabaali
இந்த செய்திக்கான தலைப்பு சற்றே குழப்பத்தை ஏற்படுத்தினாலும் நிஜம் அதுதான்! கபாலி பாட்டு எப்படி? இரண்டு எறும்புகள் சந்தித்துக் கொண்டால் கூட, இப்படியொரு கேள்வியை கேட்டுவிட்டுதான் நடையை கட்டிக் கொண்டிருக்கிறது தமிழுலகத்தில். அந்தளவுக்கு தமிழனின் இட்லி தோசை பழைய சோறு பொங்கலோடு ஒன்றிப் போய்விட்டது கபாலி திரைப்படம். அந்த படம் ரிலீஸ் ஆகிற நேரம் காலம் எதுவாக இருந்தாலும், அதுதான் தமிழனுக்கு தீபாவளி பொங்கல் என்கிற அளவுக்கு அப்படத்தின் வைப்ரேஷன்…
SooriVishal
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் கதையும் இல்லை. சதையும் இல்லை. ஆனால் நீதான் புஸ்ப்பா புருஷனா என்கிற ஒரு கேள்வியை வைத்துக் கொண்டு படத்தை ரணகள காமெடியாக எடுத்து, வெற்றிப்படமாகவும் ஆக்கிவிட்டார் எழில். அதற்கப்புறம் சில படங்கள் பிரஷ்ஷாக ரிலீஸ் ஆனாலும், வெள்ளைக்காரன் இன்னமும் தியேட்டரை விட்டு நகர்வதாக இல்லை. ஜனங்களும் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்குப் போய், கூட்டம் கூட்டமாக சிரித்தபடி திரும்புகிறார்கள். நிற்க! இப்படி ஊரையே சிரிக்க வைத்த…
LakshmiMenon-BF
பிரபலமான பலான வெப்சைட் ஒன்றில் நுழைந்து லட்சுமி மேனன் என்று தேடினால், அவரைப்போலவா… அல்லது அவரேதானா என்று குழம்பி வெதும்பிப் போகிற அளவுக்கு ஒரு பிகர் வருவதாக கிசுகிசுக்கிறது இன்டஸ்ட்ரி. லட்சுமிமேனனிடம் குளோஸ் அப்பில் வந்து பேசும் சிலர், இந்த விஷயத்தை அவருக்கு சொல்ல அவரும் அதை பார்த்து பேரதிர்ச்சி அடைந்ததாக கேள்வி. சம்பந்தப்பட்ட வலை தளத்திற்கு இமெயில் அனுப்பினாலும், மேட்டர் படம் நீக்கப்படுவதாக இல்லை. இந்த விஷயம் தனிச்…
Nayanthara-Vigneshsivan
முனை தேய்ந்த கத்தியாக இருந்தாலும், பழம் அறுக்க துடியாய் துடிக்குமல்லவா? கிட்டதட்ட அப்படி ஆகிவிட்டது நடிகர் விக்ரமின் நிலைமை! தமிழகத்தின் பிரபல நாளிதழ் ஒன்று விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையேயான காதல் முறிந்துவிட்டதாக செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து பரபரப்பாகிவிட்டது ஹீரோக்கள் வட்டாரம். அந்த செய்தி நிஜம்தானா, உண்மையிலேயே நயன்தாரா விக்னேஷ் சிவனை கழற்றிவிட்டுவிட்டாரா என்று அறிய ஆவலாக இருந்தார்கள். அவர்களுக்காக அல்ல. நிஜம் என்ன என்பதை அறிய நமது விசாரணையை…
Enthiran2
ஒருபுறம் ‘கபாலி’ கொண்டாட்டங்களால் மனம் நெகிழ்ந்திருக்கிறார் ரஜினி. ட்ரெய்லரில் அவர் சொல்லும் ‘மகிழ்ச்சி’, இன்று நாடெங்கிலும் இருக்கும் அவரது ரசிகர்களின் நெஞ்சங்களுக்கு கடத்தப்பட்டுவிட்டது. ஒரு சாதாரண ட்ரெய்லராக இருந்தாலும் சரி, ஒரேயொரு ஸ்டில்லாக இருந்தாலும் சரி. அதை லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் ஷேர் செய்தும், லைக் செய்தும் கொண்டாடும் ரசிகர்களுக்காகவே இன்னும் பல படங்களில் அவர் நடிப்பதற்கு விரும்பக் கூடும். ஆனால் எந்திரன் 2 ன் பளுவாலும், அவர்களின் லேசான அலட்சியத்தாலும்…
Strike
‘எரியுற வீட்டுல புடுங்குன வரைக்கும் லாபம்’ என்ற நோக்கத்தோடுதான் திரிகிறது சினிமா தொழிலாளர்கள் அமைப்பு. ஒரு படத்தின் தயாரிப்பு செலவு என்பது ஒருபுறம் இருந்தாலும், ‘தயாரிப்பில் வீணான தண்டசெலவு’ என்ற பிரிவின் கீழ் பாழாய் போகிற பணம் கொஞ்ச நஞ்சமல்ல. பத்து தொழிலாளர்கள் இருந்தால் போதும் என்ற இடத்தில் ஐம்பது தொழிலாளர்கள் வலுக்கட்டாயமாக வந்து அட்ராசிடி பண்ணுகிற வேலையை கடந்த பல வருடங்களாகவே பார்த்து வருகிறது சினிமா தொழிலாளர் அமைப்பு.…
SherliDhas
தமிழில் மிக சொற்பமான படங்கள்தான் இவர் இசையமைத்து வெளியே வந்திருக்கிறது. இன்னும் வர வேண்டிய படங்கள் அரை டஜன் இருக்கிறது. தமிழ்சினிமாவின் வளர்பிறை இசையமைப்பாளர் என்ற நம்பிக்கைக்குரிய அடையாளத்துடன் இருக்கும் இசையமைப்பாளர் மரியா மனோகர் தனது முகப்புத்தகத்தில் எழுதியிருக்கும் ஒரு விஷயம்… நிஜமாகவே ஷாக். காதல் அரங்கம் என்ற படத்தில் அரை நிர்வாணமாக நடித்து, ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்த ஷெர்லிதாஸ், மரியா மனோகரின் மனசை கொள்ளையடித்தவராம். அதை…
GVPrakash-Lyca
டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்று இரண்டு படங்களின் கலெக்ஷன், “நான்தாண்டா அடுத்த சிவகார்த்திகேயன்” என்று ஜி.வி.பிரகாஷை கொக்கரிக்க வைத்தது. அவரது ஸ்டுடியோவுக்கு போய் வரும் சினிமாக்காரர்கள் பலர், முகமெல்லாம் இருட்டோடு திரும்பி வருவதுடன், “தம்பியோட பேச்சு தாங்கலையே” என்று காதில் வழியும் ரத்தத்தை கையால் வழித்தெறிவதெல்லாம் சர்வ சாதாரணம். ஏன்? அதான் சொன்னோமே… நான்தான் நெக்ஸ்ட் சிவகார்த்திகேயன் என்று அவர் உதார் விட்ட விஷயத்தை? அப்படியே தனுஷ், சிம்புவோட…
Gazali
‘சாய்ந்தாடு’ என்று தன் படத்திற்கு எந்நேரத்தில் தலைப்பு வைத்தாரோ தெரியவில்லை. அவரை சாய வைத்தும் வேக வைத்தும் அனுப்பியிருக்கிறது சென்சார் அமைப்பு. சொல்லொணா அவமானத்திற்கு ஆளாகிவிட்டதாக கண்ணீர் வடிக்கும் அந்த அவரின் பெயர் கஸாலி! அறிமுக இயக்குனர். முன்னாள் பத்திரிகையாளர். சமூக ஆர்வலர். இன்னும் எக்ஸெட்ரா எக்ஸெட்ரா என்று எடுத்துச் சொல்ல பல்வேறு புரபைல்களை உள்ளடக்கியவர். அவரைதான் உள்ளங்கைக்குள் வைத்து ஒரேயடியாக உடைசலாக்கிவிட்டது சென்னை மண்டல சென்சார் அமைப்பு. என்ன…
Dhanush-GVprakash
கம்போசிங் தியேட்டரிலிருக்கும் மியூசிக் கீ போர்ட் சைசுக்கு தன் வாயையும் திறந்து வைத்திருக்கிறார் ஜி.விபிரகாஷ். அதன் விளைவுகள் அவ்வப்போது பல்லை காட்டிக் கொண்டிருக்கிறது அவர் வாழ்வில். முதல் பயங்கரம் இதுதான். வடசென்னை படத்தில் ஜி.வி.பிரகாஷ் இல்லை. பொதுவாகவே வெற்றி மாறன் இயக்குகிற படங்களில் எல்லாம் ஜி.வி.பிரகாஷ் பெயர் அழையா விருந்தாளியாக உள்ளே வந்துவிடும். பொல்லாதவன் துவங்கி, நேற்று வந்த விசாரணை வரை, வெற்றிமாறனால் விட்டுக் கொடுக்கவே முடியாத பெயர் ஒன்று…
Kisukisu-wifeVSHeroine
“பெண்கள்னா ஃபிரீக் அவுட்டா இருக்கணும். அவங்களை சாமி மாதிரி கும்புடுங்கடா” என்ற பொருள்படும்படி படம் எடுத்த இயக்குனர் அவர். அந்த படம் வசூலில் எப்படியோ, சொந்த வாழ்வில் மகசூல் ராஜாவாக இருக்கிறார் அந்த டைரக்டர். இவரது கஜானா முழுக்க காதல் விளைச்சல்தான் இப்போது. தன் படத்தில் நடித்த அந்த ப்ரீக் அவுட் நடிகைக்கே எல்லாமுமாகி இருக்கிறாராம். இந்த சந்தோஷமும் துக்கமும் அவரோடு போனால் அது அவர் பாடு. அவள் பாடு!…
Page 10 of 23« First...89101112...20...Last »

all news