இலங்கை

douglas-devananda
இசைப்பிரியா படுகொலை செய்தி தொடர்பாக முழுமையான நீதி விசாரணை நடத்த வேண்டும். அதன் மூலம் உண்மையை தெளிவு படுத்த வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். இசைப்பிரியா படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பெண் விடுதலைப்புலி இசைப்பிரியா. இலங்கையில் உள்ள தமிழ் தொலைக் காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்தார். வன்னியில் நடந்த இறுதி கட்ட போரில் அவர் கொல்லப்பட்டதாக இலங்கை…
A-Gun-A-Ring04
நம்மை போன்ற உள்ளூர் தமிழர்களுக்கு இப்படத்தை காணும் பாக்கியம் வாய்க்குமா தெரியாது. ஆனால் கனடிய தமிழர்களுக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களில் பெரும்பாலானவர்களுக்கும் அந்த பாக்கியம் கிட்டியிருக்கிறது. படத்தின் பெயர் ‘A Gun and a Ring’ புலம்பெயர் தமிழரான லெனின் பி.சிவம் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம், பெரும் எழுச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கின்றன கனடாவிலிருந்து வரும் தகவல்கள். வெறும் வலிகளை மட்டுமே சுமந்தபடி நாடு கடந்து சென்ற ஒவ்வொரு தமிழனின் மனசிலும்…
தோண்டப்படும் இலங்கை அமைச்சரின் குடும்பக் கல்லறை முன்னாள் அமைச்சர் ஒருவரின் குடும்ப மயானத்தை விசேட அதிரடிப்படையினர் தோண்டிக்கொண்டிருக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் கே.டப்ளியு. தேவநாயகத்தின் குடும்ப மயானமே தற்போது தோண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது. கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி-பதுளை வீதியிலுள்ள அவரது குடும்ப மயானமே தோண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அந்த மயானத்திற்குள் பெருந்தொகையான ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் இன்றேல் பெருந்தொகையில் பணம் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என கிடைத்த தகவலையடுத்தே விசேட அதிரடிப்படையினர் மயானத்தை தோண்டிக்கொண்டிருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் வீடியோ காட்சிகளை கைத்தொலைபேசியில் வைத்திருந்த இளைஞன் கைது! மட்டக்களப்பு, கல்குடாப் பொலிஸ் பிரிவில் தமிழீழ விடுதலை புலிகளின் வீடியோ காட்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பாசிக்குடா யானைக்கல் கடற்கரைப் பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மேற்படி இளைஞனை கைதுசெய்துள்ளனர். பொலிஸாரைக் கண்டு ஓடிய இளைஞனை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளதுடன் கையடக்கத்தொலைபேசியையும் சோதனை செய்துள்ளனர். இதன்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் வீடியோக் காட்சிகளை இளைஞன் தனது கையடக்கத் தொலைபேசியில் வைத்திருந்த…
vimal_ve
வடமாகாண ஆளுநரையும், வடக்கிலுள்ள இராணுவத்தினரையும் முடிந்தால் வெளியேற்றிப் பாருங்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு சவால் விடுத்தார் தேசிய சுதந்திர முன்னணி யின் தலைவரும், அமைச்சருமான  சிங்கள பயங்கரவாதி  விமல் வீரவன்ச. வடமாகாணசபையைக்கைப் பற்றியதால் முழுநாடும் தமக்கு ஏற்றாற் போல செயற்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு நினைத்தால் முடிந்தால் அதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.  சிரிபாயவில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர்…
thuyilum-illam
தமிழர் பிரதேசங்களில் மாவீரர் துயிலும் இல்லங்களை மீளவும் அமைக்க ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வடமாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்ற நிலையில் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்லறைகளை மீள அமைப்பதற்கு வட மாகாணசபைக்கு அதிகாரம் அளிக்கப் போவதில்லை என அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இராணுவத்தினால் அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும்…
thulaikko poriyel
ஒரு சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குள்ளும் சில விடயங்கள் நெருடிக் கொண்டிருக்கும் சிலர் அதை வெளிக்காட்டிக் கொள்வார்கள் பலர் தமக்குள் வைத்துக் கொள்வார்கள் அந்தவகையில் வழமையாக எழுத்துக்களால் விதைக்கப்பட்டவை சில காட்சிகளால் நகைச்சுவையுடன் விபரித்துள்ளது தான் “துலைக்கோ போறியள்“ என்ற இக்குறும்படமாகும். இத்தலைப்பானது வடக்கில் மிகவும் அருகிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு பேச்சு மொழியாகும். ஒருவர் போய்க் கொண்டிருக்கும் போது “எங்கே போகிறீர்கள்“ என்பது ஒரு அபசகுணமாககக் கருதப்படுவதால் இப்படி அழைத்து வினாவுவார்கள்.…
nedundheevu
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தீவகத்திற்கான ஒரேயொரு வேட்பாளராக 12ம் இலக்கத்தில் போட்டியிடும் யாழ் மாநகரசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் அவர்களை ஆதரித்து நெடுந்தீவில் அவரது ஆதரவாளர்கள் துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தபோது.. … நெடுந்தீவு மேற்கு ஒற்றைப் பனையடி என்றவிடத்தில் நேற்று மதியம் EPDP ஐச் சேர்ந்த சுதன் மோகனதாஸ் என்பவர்கள் துண்டுப் பிரசுரங்களைப் பறித்துக் கிழித்திருக்கிறார்கள். பின்னர் இரவு நேரம் நெடுந்தீவுப் பிரதேச சபையின் சிவப்பு நிற .NP. 253-5112 என்ற…
nallur2-600x450
வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தன் ஆலய கொடியேற்ற நிகழ்வு இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது. அந்தண குருமார்களினால் வேத மந்திரங்கள் ஒலிக்க முருக பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் பக்திப்பரவசமாக கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது. நாட்டின் பல பாகங்களில் இருந்தும் அதிக எண்ணிக்கையான முருக பக்தர்கள் கலந்து கொண்டதுடன் ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள மடங்களில் அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்றன. ஆலய பாதுகாப்புக் கடமையில் பொலிசார், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் தொண்டர்கள்,…
vadamarachchi_2-293x150
யாழ்ப்பாணம் வடமராட்சியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பல்லப்பை என்ற பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில். இந்த பகுதிகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்ய வேண்டாம் என்று இராணுவம் காணி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. நேற்று காலை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 15 வருடங்களுக்கு பின்னர் இந்த காணிகளும், வீடுகளும் அவற்றின் உரிமையாளர்களுக்கு மீள வழங்கப்பட்டிருந்தன.…

all news