Reviews

24-review-surya
லேடீஸ் வாட்ச் மாதிரி சின்ன கதை! அதை ரயில்வே பிளாட்பாரத்தில் தொங்குமே… பெரிய்ய்ய கடிகாரம், அதைப் போலாக்கியிருக்கிறார்கள்! படம் முழுக்க வாரியிறைக்கப்பட்ட கோடிகளும், அந்த கோடிகளை மிக நுணுக்கமாக பயன்படுத்தியிருக்கும் கிராபிக்ஸ் தொழில் நுட்பமும், திருவின் ஒளிப்பதிவும் ‘வச்ச கண்’ வாங்காமல் பார்க்க வைக்கிறது. அதற்கப்புறம் சூர்யா! ஒரு பாட்டில் தேனுக்கு நாலு கிலோ சர்க்கரை இலவசம் என்றால் எப்படியிருக்கும்? அப்படி மூன்று சூர்யாக்கள்! திகட்ட திகட்ட வருகிறார். தித்திப்பும்…
Manithan Tamil Movie Review
ஒரு மத யானையை சுண்டெலி சுளுக்கெடுக்கிற கதைகளுக்கு எப்பவுமே மக்கள் மத்தியில் ஒரு ‘மவுஸ்’ உண்டு. பிரகாஷ்ராஜ் என்ற யானையை உதயநிதி என்ற சுண்டெலி தோற்கடிப்பதுதான் இந்த படத்தின் அட்ராக்ஷன். அதற்கு இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் களம், நம் அன்றாட வாழ்வின் லெவல் கிராசிங் ஏரியாவான பிளாட்பார்ம். அங்கு படுத்துறங்கும் ஏழைகள். (வருங்கால உடன்பிறப்புகள், “ஏழைப் பங்காளனே…” என்று உதயநிதிக்கு குரல் கொடுக்க வசதியாக ஒரு படம்) ஒரு இந்தி படத்தின்…
Vetrivel Review
பாலா படத்தில் சன்னாசியா நடிச்சு சின்னாபின்ன பட்ட சசிகுமார், “இன்னாத்துக்குப்பா ரிஸ்க்?’ என்று நினைத்திருக்கிறார். அந்த எச்சரிக்கையுணர்வு சீனுக்கு சீன் வெளிப்பட்டாலும், சசிகுமாரை கழுவி துடைத்து கலகலப்பு பூசிய டைரக்டர் வசந்தமணிக்கு அகில உலக சசிகுமார் ரசிகர் மன்றத்தின் சார்பில் ஒரு ஆளுயர மாலை! நண்பர்களின் காதல் ஒன்றே நாலு வேளைக்கும் சாப்பாடு என்று திரிந்தே பழக்கப்பட்ட சசிகுமார் இந்த படத்தில் கொஞ்சம் மாறுபட்டு தம்பியின் காதலை சேர்த்து வைக்க…
Fan-Review
பாலிவுட் கிங் எஸ்.ஆர்.கே.வின் ஹீரோ கம் வில்லன் ஆட்டம் தான், ஃபேன். ஆனால், இந்த முறை அவர் தேர்ந்தெடுத்திருக்கும் கதை, அவரோடு நேரடியாக சம்பந்தப்பட்டது, என்பதாலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தி, தமிழ், தெலுங்கு. கன்னடம், மராத்தி.. இப்படி ஏகப்பட்ட இந்திய மொழிகளில் வெளியான, “ரசிகன் கீதம்” (Fan Anthem) பட்டி தொட்டி பட்டணங்களில் எங்கும் பட்டைய கிளப்பியது. ரசிகனின் கீதத்தில் ஷாருக்கானின் தோற்றம் தான், படத்திற்கான வரவேற்பின்…
Review-theri tamil Miovie
அட்லீ இட்லி சுட்டாலும் அதுலேயும் ஒரு அழகு இருக்கும் என்று நம்புகிற கூட்டம் ஒரு பக்கம்! விஜய் நின்றால், நடந்தால், குனிந்தால், நிமிர்ந்தால், “தலைவா…” என்று கூக்குரலிடுகிற கூட்டம் இன்னொரு பக்கம்! இந்த கூட்டணிக்கு விரலிடுக்கில் ‘நெறி’ கட்டுகிற அளவுக்கு தெறி தட்டுகிறார்கள் தியேட்டரில். நாளைக்கு பிறக்கப் போகிற குழந்தை கூட, வயிற்றிலிருக்கும் போதே தெரிந்து வைத்த கதைதான் இந்த தெறி. அதைதான் விஜய் என்ற ஒரே மனிதனின் தலையில்…
jithan2 Review
போன ஜென்மத்துல போண்டாவா பொறந்திருந்தா, இந்த ஜென்மத்துல எண்ணை சட்டியாகவாவது பொறந்துருக்கணும்! அந்த ஜென்ம ப்ராப்தி துளியும் இல்லாமல் வருகிற பார்ட்2 படங்களையெல்லாம் பார்க்கும் போது பரிதாபமே மிஞ்சுகிறது. நல்லா ஓடுன பழைய ஜித்தன் படத்துக்கும், பார்க்குற ஜனங்களையெல்லாம் ‘நல்லா ஓட வச்ச’ இந்த பார்ட் 2 ஜித்தனுக்கும் ஒரு ஜென்ம பிராப்தியும் இல்லை. அது வேற… இது வேற… ஒருவேளை இரண்டிலேயும் ரமேஷ்தான் ஹீரோ என்பதால் இதுவும் பார்ட்…
HelloNaan Pei Pesuren Review
‘விட்டால் பேய்க்கும் ஆதார் அட்டை கேட்பாய்ங்க போலிருக்கே?’ என்கிற அளவுக்கு ஆவியும் ஆர்ப்பாட்டமுமாகி விட்டது தமிழ்சினிமா. இங்கு அரைத்த மாவையே அரைத்து பொறித்த அப்பளத்தையே பொறித்து ‘பிலிம்’ காட்டுகிற டைரக்டர்களுக்கு மத்தியில், ‘எனக்கும் ஒரு டிக்கெட் வேணும்’ என்று பரலோகத்திலிருக்கும் பரிசுத்த ஆவிகளையே கூட கால் கடுக்க தியேட்டர் வாசலில் நிற்க விடுகிற அளவுக்கு இன்ட்ரஸ்ட்டிங்காக ஒரு படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.பாஸ்கர்! (நல்லா வூடு கட்டி அடிக்கிறீங்க பாஸ்……
ThozhaReview
தெலுங்கு ஹீரோக்களை தமிழ் படங்களில் நடிக்க வைக்கிற போது பெரும்பாலும் அது கன்னுக்குட்டி மூக்கில் தும்பிக்கையை பிக்ஸ் பண்ணிய மாதிரி பொருந்தாமல் தொங்கிக் கொண்டிருக்கும். ஆனால் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவை ஒவ்வொரு ரசிகனின் மனசுக்குள்ளேயும் வைத்து பூட்டிவிட்டு போகிற வித்தை இந்த படத்தில் நடந்திருக்கிறது. அதிலும் கார்த்தியின் நடிப்பு, ‘நானே கொம்பன். என்னை அடக்க இன்னொரு கொம்பனா?’ என்று சரிக்கு சரி நின்று மல்லு கட்டியிருக்கிறது. “நாகார்ஜுனா- கார்த்தியில்…
Pugazh Review
கடந்த சில படங்களாகவே சேதாரமாகிக் கிடக்கும் ஜெய்யின் புகழுக்கு, புது பெயின்ட் அடித்து கிரஹப்ரவேசம் செய்ய வந்திருக்கும் படம். காதல் இருக்கிறது. ஆக்ஷன் இருக்கிறது. அரசியல் இருக்கிறது. சென்ட்டிமென்ட் இருக்கிறது. ஆனா படம் நல்லாயிருக்கா? ‘இருக்க்க்க்க்க்க்கு… ஆனா?! ’ புகழ் புகழ்னு ஒரு பையன். அவனை சுற்றி ஏழெட்டு பிரண்ட்ஸ். அந்த ஊரில் ஒரு விளையாட்டு மைதானம். விளையாடவும் அரட்டையடிக்கவும் உதவியாக இருந்த அந்த மைதானத்தின் மீது மினிஸ்டருக்கு ஒரு…
Aagam Review
“பல்பு அவுட்டாகி பனிரெண்டு மணி நேரம் ஆச்சு. இன்னுமா சுவிட்சை நோண்டிகிட்டு இருக்க?” என்ற குரல் கேட்டு திரும்பினால் கழுகார் நின்றிருந்தார். “வாங்க கழுகார். உங்களதான் தேடிகிட்டு இருக்கேன். உங்க காம்பவுன்ட்ல புக் எழுதுன ஒரு ஆளாச்சேன்னு டைரக்டரை நம்பிதான் தியேட்டருக்கு போனேன். இனி வருவியா வருவியா…ன்னு விட்டு வெளாசிட்டாரு…” என்று ஆத்திரத்தோடு கூறிய என்னை ஏற இறங்க பார்த்த கழுகார், “முதல்ல எங்க காம்பவுன்ட்ல அதுக்கு விமர்சனம் எழுதுறாங்களான்னு…
Kadhalum Kadandhu Pogum Review
காதலும் ‘நடந்து’ போகும்… என்பதைதான் ‘கடந்து’ போகும் என்று மாற்றிவிட்டார்களோ? என்று அச்சப்படுகிற அளவுக்கு ஸ்லோவான திரைக்கதை! ஆனால் அக்கம் பக்கம் நகர விடாமல் அந்த திரைக்கதைக்குள் நம்மை டைட்டாக உட்கார வைத்திருக்கிறார் நலன் குமரசாமி! கொரியன் படம் ஒன்றின் ரீமேக் இது. அந்த மூலக்கதை முனிஸ்வரன்களுக்கு முட்டை பரோட்டாவே படைக்கலாம்… மனசார! அதுவும் இரண்டு நடிப்பு புலிகள் இந்த கதைக்குள் நுழைந்துவிட்டால் என்னாகும் என்பதை நிமிஷத்துக்கு நிமிஷம் புரிய…
Natpathikaram Review
ராஜ்கிரண் வாயில் சிக்கிய நல்லி எலும்பு மாதிரி, காதலை மென்று துப்பி விட்டது தமிழ்சினிமா. இதற்கப்புறமும் ஒரு காதல் படம் எடுத்தால் அதில் ஏதாவது புதுசாக இருக்க வேண்டுமே? மண்டையை பிய்த்துக் கொண்டு கணக்கு போட்டதில், டைரக்டர் ரவிச்சந்திரனுக்கு கிடைத்த ஈவு, விடை எல்லாம்தான் இந்த நட்பதிகாரம்! நீங்க எவ்வளவுதான் யோசிச்சாலும் ‘கள்’ அவ்வையார் காலத்தை சேர்ந்ததாக இருக்கும். ‘கலயம்’தான் கம்ப்யூட்டர் காலத்ததாக அமையும்! அப்படிதான் அமைந்தும் இருக்கிறது. இரண்டு…
Mapla Singam Review
ஊர்ல இருக்கிற காதலையெல்லாம் ஒழிச்சு கட்டும் சிங்கம், தொப்புக்கடீர் என்று காதலில் விழுந்து ‘மாப்ளே’ ஆவதுதான் மாப்ள சிங்கம்! இதில் அரசியல், ஜாதி, வெட்டு, குத்து என்று மசாலா ஐட்டங்களை அள்ளிப்போட்டு தொங்கிக்கிடந்த விமல் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியிருக்கிறார் இயக்குனர் ராஜசேகர். (இனிமேலாவது வண்டி ஸ்டடியா ஓடுமா விமல்?) ‘என் சாதிதான் ஒசத்தி, அதனால் எனக்குதான் முதல் மரியாதை வேணும்’ என்று ஓயாமல் ஜம்பம் அடித்துக் கொண்டு திரியும் இரண்டு…
kodaimazhai-review
80 களின் பாரதிராஜா இன்னும் எங்காவது மிச்சம் இருக்கிறாரா என்று தேடிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஏக்க சாமிகளுக்கு, ஐம்பது சதவீத ஆறுதல்…. இப்படத்தின் இயக்குனர் கதிரவன்! வறட்சியும் பொட்டல் வெளியுமாக கிடக்கிற சங்கரன் கோவில் ஏரியாவை கூட, காட்சிக்கு காட்சி அழகாக காட்டியிருக்கிறார். ஒளிப்பதிவாளரும் இவரே என்பது கூடுதல் ஆச்சர்யம். களவை தொழிலாக வைத்திருக்கிற அந்த கிராமத்து இளைஞர்கள் மத்தியில், கனவே மிலிட்டிரிதான் என்று வாழ்கிறார் ஹீரோ. அதே ஊரிலிருக்கும்…
pichaikkaran Review
மண்டை பெருத்த பலர், ‘கதை திரைக்கதை வசனம் லொட்டு லொஸ்கு’ என்று பெருமை கொப்பளிக்க அடுக்குவார்கள். அவை அனைத்தையும் ஒரு சொல்லில் அடக்கி விடலாம். ‘உப்புமா!’ ஆனால் இந்த பாவி மனுஷன் சசி, எப்போதாவதுதான் ஒரு படம் தருவார். பல வருஷங்களுக்கு மனசிலேயே கிடந்து பாடாய் படுத்தும்! ‘பிச்சைக்காரன்’ அப்படிப்பட்ட படங்களில் ஒன்று!! ரஜினிகாந்துக்கே பொருந்தக்கூடிய ஸ்கிரிப்ட்டில், நம்ம விஜய் ஆன்ட்டனியை பிக்ஸ் பண்ணியிருக்கிறார் சசி. இதுவும் கூட தங்கக்…
Arathusinam Review
‘பாக்குறீயா… பாக்குறீயா…?’ என்று கழுத்து நரம்பை புடைத்துக் கொண்டு ஹீரோ கத்த, ‘அடங்குறீயா… அடங்குறீயா…?’ என்று வில்லன் திருப்பி கத்த, நாம் பார்த்து பழகிய போலீஸ் கதைக்கெல்லாம் ஒரு ஃபார்முலா இருக்கும்! இதுவும் போலீஸ் கதைதான். ஆனால் வேற மாதிரி! பாபநாசம் புகழ் ஜித்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்த ‘மெமரீஸ்’ படத்தின் ரீமேக்தான் இது. இந்த மலையாள ரீமேக்குகள் இருக்கிறதே… சமயங்களில் நம்மை யோசிக்க நேரமில்லாமல் கடத்திக் கொண்டு…
Kanithan Review
செய்யாத தப்புக்காக ‘சேதாரம்’ ஆகும் ஒருவன், தப்பு செஞ்சவனுக்கு தருகிற ‘செய்கூலி’தான் கணிதன்! தனி மனித தடால் புடால்கள் இல்லாமல், பொது நோக்கத்திற்காக போர் வாளை வீசியிருக்கும் இப்படத்தின் டைரக்டர் டி.என்.சந்தோஷுக்கு ஒரு வெரிகுட் சர்டிபிகேட் வழங்கலாமா? (போலி சர்டிபிகேட் இல்லேங்க) எப்படியாவது பிபிசி சேனலில் நிருபராகிவிட வேண்டும் என்று துடிக்கும் டி.வி நிருபர் அதர்வாவுக்கு எந்நேரமும் அதே நினைப்புதான். அந்த நேரம் பார்த்துதான் அவர் வேலை பார்க்கும் துக்கடா…
Vijay Sethupathi & Ramya Nambeesan in Sethupathi Movie Photos
மிச்சமிருக்கிறது அது ஒண்ணுதான்… அதையும் ஏன் பாக்கி வைப்பானேன்? என்று காக்கி பக்கம் கவனம் வைக்கிற ஹீரோக்கள் பலர் அப்படியே வானில் பறந்து, புல்லட்டை நெஞ்சில் வாங்கி அதையே திருப்பி வில்லன் நெற்றிக்கு திருப்பியடித்து துவம்சம் பண்ணியிருக்கிறார்கள். “ஸ்… மிடியல” ஆக்குகிற இந்த மாதிரியான போலீஸ் கதைகளின் ‘பாலீஷ்’ வெளுத்து அநேக வருஷமாச்சு. ஆனால், அதே உடுப்பு, அதே மிடுக்குடன் யதார்த்தத்தை அணிந்து கொண்ட போலீஸ் ஹீரோக்களை மட்டும் ‘பொளந்து…
miruthan Review
காலி பெருங்காய டப்பாவுக்குள் கட்டி சூடத்தை தட்டிப் போட்ட மாதிரி, “செஞ்சுதான் பார்ப்போமே” என்ற எண்ணம் சில நேரங்களில் வரும்! அப்படி இந்த படத்தின் டைரக்டருக்கு வந்த கற்பனைதான் இந்த ‘ஆயிரமாயிரம் ஸோம்பிகளும், அஞ்சாத சார்ஜன்டும்’ கதை! குழந்தை மனசோடு போகிறவர்களுக்கு குதூகலத்தையும், குந்தாங்குறையாகப் போகிறவர்களுக்கு குழப்பங்களையும் அள்ளி வழங்குகிறது ‘மிருதன்’! ஆனால் தமிழ்சினிமாவில் புதிய முயற்சி என்பதால், இயக்குனர் ஷக்தி சவுந்தர்ராஜனுக்கு ஒரு லாரி துப்பாக்கி ரவைகள் பார்சேல்ல்ல்ல்ல்!…
villu-ambu Review
விக்கல் எடுத்தவன் ஒருத்தன், வெந்நீர் குடிச்சவன் வேறொருத்தன் என்கிற மாதிரி, ஒருவனால் இன்னொருவனுக்கு ஏற்படுகிற சங்கடமும், சவுக்கியமும்தான் இந்த வில் அம்பு. படம் சொல்லும் நீதி? நல்லதோ, கெட்டதோ… அதுல நாம மட்டும் சம்பந்தப்படல. வேற வேற ஆட்களாக நடமாடிகிட்டு இருக்கிற இந்த சமூகமும்தான்! விட்டால் விண்கல் மண்டையில லேண்ட் ஆகிற அளவுக்கு சிக்கலான கதை. அதை சர்வ சுலபமாக டீல் பண்ணியும், சகலவிதமான வித்தைகளை காட்டியும் படம் முழுக்க…
Page 5 of 15« First...34567...10...Last »