Reviews

Kutrmey Thandanai Review
காரக் குழம்புல ஏதுடா கட்டி வெல்லம்? கெட்டது செய்தால், கெட்டதே கிடைக்கும் என்பதுதான் இப்படத்தின் மையப்புள்ளி. இந்த மையப்புள்ளியை சுற்றி மணிகண்டன் போட்டிருக்கும் அழகான விறுவிறுப்பான கோலம்தான் குற்றமே தண்டனை! படம் ஆரம்பித்த அந்த நிமிஷமே கதையும் ஆரம்பம் ஆகிவிடுகிறது. அதற்கப்புறம் படம் முடிகிற வரைக்கும் ஆவென்று வாய் பிளக்கிறோம். உள்ளே போன ஈ வாய்க்குள் ஒரு தாஜ்மஹாலே கட்டினால் கூட தெரியாதளவுக்கு ‘இன்வால்வ்’ ஆக வைக்கிறது மணியனாரின் திரைக்கதை…
kidari movie review
தட்டு முழுக்க உப்பையும், ஓரத்துல சாதத்தையும் வச்சு திங்கிற ஊர் போலிருக்கு! அவ்வளவு ரோசமும் ரத்தமாக பொத்துக் கொண்டு வழிகிறது படம் முழுக்க! மானத்தையும் வீரத்தையும் மட்டுமில்ல, துரோகத்தையும் துவையலா அரைச்சு தின்போம்ல… என்கிறது படத்தில் வரும் சில கேரக்டர்கள். வேறு வழி… படத்தின் மையக் கருத்தே துரோகம்தான்! விருதுநகர் சாத்தூர் ஏரியாவில் பெரிய தலைக்கட்டாக வளர்ந்து நிற்கும் கொம்பையா பாண்டியன், தன் கொம்பால் சீவியது எத்தனை பேரை? அதே…
Meendum Oru Kadhal Kadai Review
கடுகு டப்பாவுக்குள் காதல், காய்கறி மூட்டைக்குள் காதல், சந்து பொந்து, சைடு கண்ணாடியெங்கும் காதல் என்று காதலை விதவிதமாக பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. பர்தா போட்ட முஸ்லீம் பெண்ணுக்கும், பட்டை போட்ட இந்து பையனுக்கும் லவ் என்பது மேற்படி சங்கதிகளுக்குள் ஒன்றாகிப் போய் அநேக வருஷங்களாகிவிட்டது. இந்தப் படமும் அப்படியொரு கிராஸ் காம்பினேஷன்தான். (அதென்னப்பா மணிரத்னம் எடுத்தால் மட்டும், அழுகிய முட்டையோடு அவர் வீட்டு முன் குவியுறீங்க, அதுவே…
Enakku Veru Engum Kilaigal Kidaiyathu Review
கவுண்டரின் வாய்ஜாலம், தமிழ்சினிமாவுக்கே வர்ணஜாலம்! ஆண்டாண்டு காலமாக தொடரும் இந்த அற்புதத்தை, தனது எழுபதாவது வயதிலும் இளைக்காமல் வைத்திருக்கிறார் கவுண்டமணி! அவர் வாயைத் திறந்தால், கலீராகிறது தியேட்டர். அவர் வராத காட்சிகள் ஒவ்வொன்றும் அவர் வருவாரா என்று ஏங்க வைக்கிறது. மாடு இளைத்தாலும், மடி இளைக்காமல் வைத்திருக்கிற இயற்கையை நோக்கி வணங்கித்தான் ஆக வேண்டும் இந்த ஜகஜ்ஜால கவுண்டமணி! இன்னும் என்னய்யா கவுண்டர் கவுண்டர்னுகிட்டு? என்கிற வாயையெல்லாம், தன் கலகலப்பான…
Chokobar Tamil Movie Review
யேய்… நாங்கள்லாம் பார்க்காத பேயா, பிசாசா, பில்லி சூனியமா? என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு தியேட்டருக்குள் போனால், “பேயா அது? பிரமாதம்யா…” என்று நெஞ்சை குழைத்து, பஞ்சை நனைத்து ஒஹோ என்று ஜொள்ளாபிகேஷம் செய்கிறான் அதே ரசிகன். எல்லாம் படத்தில் வரும் அந்த பெண் செய்த மாயம். யாருய்யா அது? யாரோ மனஸ்வினியாம்! 32 – 28 – 32 என்கிற விகிதாச்சாரத்தில் போட்டு இம்சிக்கிறார். பேயே நேர்ல வந்து…
Nambiar Review
முள்ளங்கி பத்தையாட்டம் எம்.ஜி.ஆர் இருக்கும்போது, முள்ளுச்செடி போல இருக்கும் நம்பியாரை எடுத்து சொறிந்து கொண்டால் என்னாகும் என்பதை ஒரு படமாக சொல்ல நினைத்திருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் கணேஷாவின் இந்த நியூ தாட், படம் முடியும்போது குக்கரில் வேக வைத்த குல்பி ஐஸ் போல என்னென்னவோ ஆகிக்கிடக்கிறது. ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற ஆசையுடன் வளர்க்கப்படும் ஸ்ரீகாந்தை அநியாயத்துக்கு ‘டைட்’ பண்ணுகிறது பேமிலி. எவ்வளவு நேரம்தான் நல்லவன் போலவே நடிப்பது?மனசுக்குள் உறங்கிக்…
Dharma Durai Review
திசை காட்டும் கருவிக்கு மனமெல்லாம் வடக்கு! சீனு ராமசாமியும் அப்படிதான். எதற்காகவும் தன்னை திசை மாற்றிக் கொண்டவரல்ல. வணிகக் குப்பைகளில் புரண்டெழுகிற சினிமாவில், வாழ்க்கைக் கதைகளுக்கு வழியேது? இந்த எண்ணத்தை, அவநம்பிக்கையை முற்றிலும் ஒழித்திருக்கிறது தர்மதுரை. மருத்துவத்தின் புனிதத்தையும், காதலின் வலிமையையும், தாய்மையின் மகத்துவத்தையும் ஒரு படத்தில் குழைத்து, வண்ணம் தீட்டியிருக்கிறார் சீனுராமசாமி. வெறும் ரசிகனாக உள்ளே நுழைந்து, விஜய் சேதுபதியின் அண்ணனாகவோ, தம்பியாகவோ ஒவ்வொருவரையும் மாற்றி அனுப்புகிற வித்தை…
Mudinja ivana pudi Review
டபுள் ஆக்ட் கதை. ஆனால் சிங்கிள் ஷாட் உதை. கதை எவ்வளவு பழசாக இருந்தாலும், திரைக்கதையில் உப்பு மிளகாய் இஞ்சி பூண்டு எல்லாம் சேர்த்து, ‘நாக்குக்கு தோதாக கொடுப்பதில் நான்தாண்டா கில்லாடி’ என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். 100 கோடி, 200 கோடிகளை கூட அசால்ட்டாக கொள்ளையடிக்கும் ஒருவன், ‘அவன் நானில்லை’ என்று டபுள் வேஷம் போட்டு தப்பிப்பதுதான் முழு கதையும். அவனும் இவனும் ஒண்ணுதான். நம்மள…
Joker Review
சிந்திக்கிறவனெல்லாம் சிந்தனாவாதியல்ல. சிந்தனையால் சீர் திருத்தம் செய்பவனே அவன்! பத்திரிகையாளர் ராஜு முருகனின் சிந்தனையில் பாவப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை படமாக விரிந்திருக்கிறது. தமிழ்சினிமாவுக்கே இந்தக் கதை புதுசு. ‘முதல்ல டாய்லெட்டை கட்டு. அப்புறம் என் கழுத்துல தாலி கட்டு’ என்கிற காதலியின் ஆசையை நிறைவேற்றக் கிளம்புகிற ஒரு அப்பாவி வாலிபன், அல்ப ஆயுசில் போய் சேர்வதுதான் கதை. நடுவில் அவனை மனநிலை பிறழ வைக்கிறது சுற்றுபுற சுனாமிகள். ‘நானே…
Wagha Tamil Movie Review
வாகாக படுத்துக் கொண்டு, வசதியாக குறட்டை விட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் பாதுகாப்புக்கு பின்னாலும், ‘வாகா’ எல்லையில் அவஸ்தைப்படும் இராணுவ வீரனின் நிம்மதியற்ற உறக்கம் இருக்கிறது. இதைதான் சொல்ல நினைத்திருக்கிறார் ஜி.என்.ஆர்.குமாரவேலன். ஆனால் கும்மிடிப்பூண்டியில் குதித்து, கொருக்குப்பேட்டையில் குப்புற விழுந்து, தஞ்சாவூரில் கரையேறியிருக்கிறது திரைக்கதை. மருந்துக்கும் ‘ஹரிதாஸ்’ டச் இல்லை என்பதுதான் பேரதிர்ச்சி! வீட்டில் அப்பா திட்டுகிறாரே என்பதற்காகவே ராணுவத்தில் சேரும் விக்ரம் பிரபுவுக்கு எல்லை பாதுகாப்பு ஏரியாவான வாகாவில் வேலை.…
Thirunaal Review
காபிக்கு பேர் போன கும்பகோணத்தில் நடக்கும் கதை. ஆனால் காபி வாசனைக்கு பதில் ஒரே ரத்த வாசனை! கதையே ரவுடிகளை பற்றியது என்பதால், ஏ பாசிட்டிவ்-ல் ஆரம்பித்து இசட் நெகட்டிவ் வரைக்கும் ரத்தக்குளியல் நடத்துகிறார் ஹீரோ. சட்டையிலிருந்து பிளேடை உதட்டாலேயே உருவி, அதை புரோட்டா மெல்லுவதை போல மென்று எதிராளி முகத்தில் துப்பி ஓட வைக்கும் ‘ஷார்ப்’பான ரவுடி ஜீவா. இவருக்கு வரும் காதலும், சோதனையும்தான் முழு படம். கதை…
Kabali-Review
தேங்கிய மழை நீரில் திமிங்கலம் ஒதுங்கிய மாதிரி, இந்தப்படத்தில் ஒதுங்கியிருக்கிறார் ரஜினி! சூப்பர் ஸ்டார் ரஜினி!! துபாயில் துப்பட்டா வித்தா நமக்கென்ன? பல்கேரியாவில் பாயாசம் கொதிச்சா நமக்கென்ன? தென் கொரியாவில் தேங்காய் ஒடைஞ்சா நமக்கென்ன? என்கிற மனநிலை படம் பார்க்கிற பத்தாவது நிமிஷத்தில் நமக்கு வந்துவிடுகிறது. காரணம்… மலேசியா தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும், மலாய் முதலாளிகளுக்கும் இடையே நடக்கிற கூலி மற்றும் கொடுக்கல் வாங்கல் பஞ்சாயத்துதான் கதை. தமிழனுக்கு சம்பள…
dhil review new
பக்கெட்ல ஊற்றிய பஞ்சாமிர்தம் போல பரம சுதந்திரமாக இருந்த சந்தானம், இப்போது பாக்கெட், சாஷே என்று கட்டுப்பாடுகளுக்குள் வந்துவிட்டார். பாடலுக்கு முறையா ஆடணும். பைட்டுன்னு வந்துட்டா பாய்ஞ்சு சண்டை போடணும், சென்ட்டிமென்ட் சீன்ல சுவத்துல சாஞ்சு உருகணும்… பிக்காஸ்? ஏன்னா அவரு இப்போ ஹீரோப்பா ஹீரோ! ‘நான் ஹீரோவாயிட்டேன்’ என்று அவர் அறிவித்தபோது, அந்த தில்லுக்காக திட்டு வாங்கியவர், இந்த படத்தில் அந்த பணியை செவ்வனே செய்து துட்டு வாங்கியிருக்கியிருக்கிறார்.…
amv review new
‘கட் அவுட்டுக்கு பால் ஊற்றுகிற கலாச்சாரத்துக்கு ஒரு கெட் அவுட் சொல்ல மாட்டீங்களா ராசாக்களா?’ என்று சமூக ஆர்வலர்கள் ரத்தக் கண்ணீர் வடிப்பது இப்போதல்ல…எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே இருக்கிறது. இருந்தாலும் ஒரு ரசிகனின் மனசு, இன்னொரு ரசிகனுக்குதான் தெரியும் என்பதை போல உணர்ந்து உணர்ந்து இப்படத்தை வடித்திருக்கிறார் திரைவாணன். தன்னுடைய தலைவனுக்காக சூடம் கொளுத்துகிற ஒவ்வொரு ரசிகனும், தன் வீட்டு உலையிலிருந்தே தீயை திருடுகிறான் என்பதை சுத்தியலால் அடித்த மாதிரி சுளீர்…
appa review new
சுண்டைக்காய் செடியில் பூசணிக்காய் விளையுமா என்று பேராசையோடு திரியும் ஜனங்களின் மனசில், குழந்தைகள் என்பது யார்? மெஷினா, உயிரா? அவர்களை கைக்குட்டை போல கசக்கி, பிடித்துணி போல சுருட்டித்தள்ளும் பெற்றோர்களே… உங்கள் புத்தியை புதுப்பித்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல வந்திருக்கிறார் சமுத்திரக்கனி. இப்படியொரு கதையை எடுக்கத் துணிந்ததற்காகவே முதல் வணக்கம். அதையும் ஓரிடத்தில் கூட அலுத்துப் போகா வண்ணம் சுவாரஸ்யமான திரைக்கதையால் அழகூட்டியிருக்கிறாரே… அதற்கு தனியாக ஒரு போனஸ் வணக்கம்!…
Metro Review
தீப்பெட்டி போல அடுக்கப்பட்டிருக்கும் சென்னையில், தீக்குச்சி போல திரியும் சில இளைஞர்களும், அவர்களின் குற்றப்பின்னணியும்தான் மெட்ரோ! இந்த தீக்குச்சிகள் ஏதோ ‘புரட்சி புயல்’கள் என்று நினைத்தால் தப்பு. மாறாக எல்லாரும் திருட்டுப் பயல்கள்! இவர்களிடன் படாடோபத்திற்கு பலியாகும் நடுத்தர குடும்பத்து இளைஞனால் நடக்கும் விபரீதங்கள்தான் முழு படம். கழுத்திலிருப்பதை அறுப்பவர்கள் பற்றிய இந்தப்படத்தின் சில காட்சிகள் நமது கழுத்தையும் சேர்த்து அறுப்பதுதான் காலக் கொடுமை சரவணா! வீட்டிலேயே சரக்கடித்து, வீட்டிலேயே…
Amma kanakku Review
ஆத்மாவுக்குள் குழந்தைகளை சுமக்கும் அம்மாக்களின் கனவு ஒரு வேலைக்காரிக்கும் இருக்குமல்லவா? மகளுக்கும் அம்மாவுக்குமான இந்தக் கணக்கு முதலில் பிணக்காகி, பின்பு என்னவாகிறது என்பதுதான் அம்மா கணக்கு! வயலின் நரம்பு அறுந்து தொங்குகிற அளவுக்கு வாசிச்சே தீருவேன் என்று அடம் பிடிக்காமல், கதைக்கு தேவையான நேரத்தோடு படத்தை முடித்த விதத்தில், பாஸ் மார்க் வாங்குகிறார் டைரக்டர் அஸ்வின் திவாரி. ‘நில்பட்டே சன்னாட்டா’ என்ற இந்திப்படத்தின் தமிழ் வடிவம்தான் இந்த அம்மா கணக்கு.…
Sairat Review
பாலிவுட் என்கிற இந்தி சினிமாவின் தலைநகரமான மும்பை தான், மராத்திய சினிமாவிற்கும் தலைநகரம் என்றாலும், இந்தி திரைப்படங்கள் போல மராத்திய திரைப்படங்கள் மிகப்பெரிய வணிக எல்லைகளுக்குள் சென்றதில்லை. கடந்த மாதம் வெளியான மராத்திய மொழி திரைப்படம், சாய்ரட்(SAIRAT) அதை சாத்தியப்படுத்தி இருக்கிறது. சாய்ரட் என்றால் காட்டுமிராண்டித்தனம் என்று பொருளாம். நான்கு கோடியில் தயாரிக்கப்பட்டு 100 கோடி வசூல் சாதனை படைத்திருக்கிறது சாய்ரட். இந்தி சினிமாவை மிரள வைத்து… இந்தி சினிமா…
Muthuna kathirikka review
“சாமியப் பார்க்க பூவோட போ! சண்டியரை பார்க்க ‘பொருளோடு’ போ!!” இந்த நடைமுறை யதார்த்தத்தை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் வேங்கடராகவன். சுந்தர்சிக்கு ஏற்ற கதையோடுதான் அவரை அணுகியிருக்கிறார். நாற்பது வயசை தாண்டியும் பொண்ணு கிடைக்காமல் சுற்றி வரும் அரசியல்வாதியான அவருக்கு, திடீரென தென்படும் பூனம் பாஜ்வா மீது லவ். லவ்வரின் பின்னணியை அறிய பின் தொடர்ந்து போனால், இவர் பள்ளிக்கூட நாளில் டாவடித்தாரே…. அந்த கிரணின் மகள்தான்…
vithaiyadi naanunakku Review
தியேட்டரில் ரெண்டே பேர் சகித்துக் கொண்டு படம் பார்க்கிற மாதிரியெல்லாம் சினிமாவை கெட்ட சூழ்நிலை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிற இந்த காலத்தில், திரையிலேயே ரெண்டு பேர் மட்டும் வருவது மாதிரி ஒரு படத்தை எடுத்திருக்கிறார் ராமநாதன் KB. திரும்ப திரும்ப ஒரே மூஞ்ச பார்க்கணுமா என்று அலுத்துக் கொள்கிற நேரத்திலெல்லாம் ‘அப்படியெல்லாம் நினைக்க விட்ருவோமா?’ என்று ட்விஸ்ட் அடித்து, இந்த சாதா படத்தை ஆஹா படமாக்கிவிட்டார் இவர். படத்தில் நடித்த இருவருரில்…
Page 3 of 1512345...10...Last »