Reviews

namma giramam
வத்த குழம்புன்னா அப்பளம், வடை என்றால் பாயாசமும் பக்கத்துல…. என்று மாறாத ‘ஸ்டமக் தர்ம சித்தாந்தம்’ போல, தேசிய விருது பெற்ற படங்கள் என்றால் அதற்கான காம்பினேஷனாக சில கொட்டாவிகளாவது வரணும். அந்த வழக்கத்தை உடைத்தெறிந்திருக்கிறது இந்தப் படம். இத்தனைக்கும் கதையும், அது நடக்கும் காலமும் அரத பழசு. 1938. பால்ய விவாகம், இளம் விதவை, சுதந்திர கோஷம் என்று டிராவல் ஆகிறார்கள் கதை மாந்தர்கள். ஆனால் அந்த கதையிலும்…
Madha-Yaanai-Koottam-Movie-Stills
கறிக்கடை பாய்க்கே கத்தி பிடிக்க கற்றுக் கொடுப்பார் போலிருக்கிறது அறிமுக இயக்குனர் விக்ரம் சுகுமாரன். படத்தில் குறிப்பிடும் சாதியினர், இன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாகவும், அரசுத்துறையில் பலமானவர்களாகவும் ஏன்… ஆன்மீகத்தில் கரை கண்டவர்களாகவும் கூட இருக்கிறார்கள். இருந்தாலும் சுகுமாரன் ஒரு ‘ஹலால் வணக்கம்’ போட்டுவிட்டு கொலை பிரியாணி கிண்டியிருக்கிறார். இப்படி ஒரு படம் இந்த காலத்தில் தேவையா, இந்த இயக்குனரை கைது செய்தால்தான் என்ன என்கிற அளவுக்கு விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு…
endrendrum punnagai
‘குடி’யிருக்கும் கோவிலாகிவிட்டது தமிழ்சினிமா. குடியில்லா படமில்லை என்ற நிகழ்மொழிக்கேற்பதான் இந்த படமும். ஆனால் கிளாஸ் முழுக்க காதலும் கலகலப்பும் நிரம்பியிருப்பதால் இரண்டரை மணி நேரம்…. நிமிஷத்தில் காலி! ஜீவா, வினய், சந்தானம் மூவரும் திக் பிரண்ட்ஸ். விளம்பர பட நிறுவனத்தை நடத்தி வரும் இவர்கள் ஓய்வு நேரத்தில் குடிக்கிறார்கள். ஆபிஸ் நேரத்தில் குடிக்கிறார்கள். அப்புறம்…. நேரம் கிடைக்கும்போதெல்லாம் குடிக்கிறார்கள். ஆனால் சிரித்து சிரித்து மட்டையாவது நாம்தான். அந்தளவுக்கு சிந்துகிற ஒவ்வொரு…
briyani-1
எடுத்த எடுப்பிலேயே பிரேம்ஜியின் கைபர் போலன் கண‘வாய்’க்குள்ளிருந்துதான் துவங்குகிறது படம். அவ்வளவு பெரிய வாயை அவர் திறக்காவிட்டால் கூட திறந்தது போலதான் இருக்கும். இந்த லட்சணத்தில் இவ்வளவு பெரிசாக திறக்க வைத்து, அதையும் குளோஸ் அப்பில் காண்பித்து…. ‘ஹையோ… பிரேம்ஜி இல்லாத காட்சிகளாக பொறுக்கியெடுத்து தா கடவுளே…’ என்று வேற்று கிரகத்திலிருக்கும் வெங்கடாஜலபதிகளை கூட வேண்டிக்கொண்டு உட்கார்ந்தால், அடக்கடவுளே! இந்த படம் பிலிம் இல்லாமல் கூட நகரும் போலிருக்கிறது. பிரேம்ஜி…
thalaimuraigal
கொஞ்சம் கொஞ்சமாக கருவாடாகிக் கொண்டிருக்கிற தலைமுறைகளுக்கு, நீச்சலின் சுகத்தை நினைவுபடுத்தியிருக்கிறார் பாலுமகேந்திரா. ‘எல்லாம் போச்சே’ என்று கவலைகொள்கிற ஒரு கிழவனின் ஆயாசத்தையும், இனிமேலும் போக விடக்கூடாது என்கிற அவசியத்தையும், ஒரு சேர சொல்கிற யுக்தியில் நெஞ்சம் நிறைகிறார் இந்த தலைமுறை தாண்டிய கலைஞன். அடியெடுத்து நடக்கக் கூட முடியாத இந்த மனிதரின் படம், பல ஈர நெஞ்சங்களை அவரது அடிபற்றி நடக்க வைக்கும். ஏனென்றால் இது சினிமா அல்ல. சினிமா…
ivan-vera-mathiri
இயக்குனர்களில் ‘நான் வேற மாதிரி’ என்று இரண்டாவது முறையாக உணர்த்தியிருக்கிறார் சரவணன். ஆக்ஷன் படங்களை பார்க்க கிளம்பும்போதே, Action 500. Anacin வகையறாக்களோடு உள்ளே சென்று பழகிய பலருக்கு, இந்த ஆக்ஷன் ஒரு விறுவிறுப்பான ஸ்கேட்டிங் அனுபவம். அதில் சந்தேகமேயில்லை! திருவாளர் பொதுஜனம் எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் பொம்மையாகவே இருக்கிறாரல்லவா? அப்படியொரு பொதுஜனங்களில் ஒருவரான விக்ரம் பிரபு மந்திரியின் தம்பி ஒருவனுக்கு கொடுக்கிற ஐந்து நாள் பனிஷ்மென்ட், நாட்டுக்கே ரெஃபிரஷ்மென்ட்டாக…
Kalyana-Samayal-Saadham
மடிசாரையும் ‘குடி‘சாரையும் மிக்ஸ் பண்ணி அடித்திருக்கிறார்கள். இது ‘அவாள்’ வீட்டு பந்தி வேறு. ஆரம்பத்தில் பரிமாறப்படும் எல்லாமே ஒரு வித அசுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. அதற்கப்புறம் இந்த கதை ‘பிராமணாள் வீட்டு பிரியாணிடோய்…’ என்று நாக்கை சப்புக் கொட்டவும் வைப்பதால், எதிர் விமர்சனங்களை இலையின் ஓரத்தில் வைத்துவிட்டு ஒருவித ஸ்டேண்டப் மைண்டுடன் செகன்ட் ஹாஃபுக்கு தயாராகிறது மனசு. கதை நாயகன் பிரசன்னாவுக்குதான் எவ்வளவு சங்கடம்? லேகா வாஷிங்டனுக்கு மாப்பிள்ளை பார்க்கிறது அவரது…
ego
காதலர்களுக்குள் ‘ஈகோ ’ இருக்கலாம். ஆனால் லவ்வர்சின் முதல் எழுத்தும் ‘ஈ-கோ’வாக இருந்து, அவர்களுக்குள் ஈகோவும் இருந்தால் எப்படியிருக்கும்? அதைதான் லவ் கிரீட்டிங்காக கொடுத்திருக்கிறார் டைரக்டர் சக்திவேல். காதலை மயிலிறகில் எழுதியிருக்கிறார்கள். சிலேட்டில் எழுதியிருக்கிறார்கள், குளத்துமேட்டில், ஆற்று மேட்டில்… ஏன் ரயிலின் பின்பக்கத்தில் கூட எழுதியிருக்கிறார்கள். ஆனால் இந்த பொல்லாத காதலை, காதலே இல்லாத இருவரை வைத்து எழுதியிருக்கிறார் சக்திவேல். ஐடியாவுக்கு ஒரு சாக்லெட் என்று அள்ளிக் கொடுத்தால் கூட…
Irandam-Ulagam copy
செல்வராகவனின் உலகம் விசித்திரமானது. தனது திரைக்கதை நேர்த்தியை ரெயின்போ காலனியிலிருந்து காலி செய்துவிட்டு எப்போது புதுப்புது உலகங்களில் சஞ்சாரிக்க ஆரம்பித்தாரோ, அப்போதிலிருந்தே அவரது விசித்திரம் தயாரிப்பாளர்களை தரித்திரமாக்கி வருகிறது. இரண்டாம் உலகமும் அவர் வார்த்தைகளில் கேட்டால் ஃபேன்டஸிதான். ஆனால் ஏதோ பேன்ஸி ஸ்டோரில் ஊசி பட்டன் வாங்க போவது மாதிரி மிக சாதாரணமாக இந்த படத்தின் கதையை மண்டைக்குள் அடக்கிக் கொண்டு எவ்வித ஸ்கிரிப்ட்டும் இல்லாமல் கிளம்பியிருக்கிறார் போலிருக்கிறது. படம்…
Ravana-Desam-Movie-review copy
உலகமே கவனித்துக் கொண்டிருக்கும் ஒரு நாட்டின் கதையை, …ந்தா இருக்கும் சாஸ்திரி பவனுக்கு கொண்டு செல்வதற்குள் நாக்கில் பிளாஸ்திரியோடும் வசமான மாவுக்கட்டோடும் திரும்பி வருகிற இயக்குனர்களைதான் இதுவரை கண்டிருக்கிறது தமிழ்சினிமா. அப்படிப்பட்ட சென்‘சார்கள்’ நிறைந்திருக்கும் நாட்டில் இலங்கை தமிழர்களின் அவஸ்தையை, அவசரத்தை இஸ்திரி பெட்டியின் அடிப்பகுதியை கொண்டு சுட சுட முகத்தில் தேய்த்து சொல்வதற்கு ஒரு படம் வந்திருக்கிறதே… ஆச்சர்யம்தான். அதைவிட ஆச்சர்யம்… இந்த படத்திற்கு சென்சார் அனுமதி கிடைத்ததுதான்.…
aarambam-review copy
‘ஆரம்பமே இனிமேதான்’ என்று இன்டர்வெல்லில் அஜீத் பேசும் ஒரு பவர்ஃபுல் டயலாக்கிற்கான முன் பின் காரணங்கள்தான் இந்த படம். இந்த ‘பலே யோஜனா’ டைரக்டருக்கு ஆம் ஆத்மி, அன்னாஹசாரே குரூப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ரூவா நோட்டில் மாலை போட்டாலும் தப்பில்லை. ஏனென்றால் சுவிஸ் வங்கியிலிருக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் இந்த கதையின் சதை! இதற்குள் ஆக்ஷன் ஹீரோக்களுக்கென்றே உருவாக்கப்பட்ட பழிவாங்கல்…
naiyaandi-tamilcinema
மேயுற ஆட்டை நக்குற ஆடு ‘நய்யாண்டி’ பண்ணிய மாதிரி நல்லாயிருந்த சற்குணத்தை… கடந்த ஏழெட்டு தமிழ் படங்களாகவே ‘அவ்வளவு நல்லாயில்லாத’ தனுஷ் மொக்கையாத்தா கோவிலுக்கு நேர்ந்து விட்டிருக்கிறார். மே.. மே…ன்னு கத்துனாலும் சரி, மேல கீழே தவ்வுனாலும் சரி, கழுத்துக்கு மேல தொங்குற கத்தியிலேர்ந்து இனிமே சாப விமோசனம் பெறுவது அவ்வளவு சாதாரணமில்ல சற்குணம் சார். எதிர்காலத்தில் பத்து களவாணியும், இருபது வாகை சூடவாவும் பண்ணிதான் நீங்க மறுபிறவி எடுக்கணும்.…
Idharkuthane-Aasaipattai-Balakumara-Stills71377768573
‘ணங்….’ -இன்னாபா இது? விஜய் சேதுபதி நடிச்சிகிறாரு. அப்புடீன்னாக்கா படம் சோக்காதான் இருக்கும்னு நென்ச்சோம் பாரு, அதுல வுழுந்த கல்லுபா அது! அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் டைப்ல லைட்டிங் இருக்கு. அப்படின்னா படமும் கொஞ்சம் டச்சிங்காதான் இருக்கும்னு முன் சீட்டில கால துக்கி வச்சுகிட்டு உட்கார்ந்தா, பின்னணி சவுண்டுங்குற பேர்ல, சவுண்ட் பாக்சை பொளந்து தலையில கொட்றாய்ங்க. பழைய பேப்பர் கடையில பார்சல் கட்டறதுக்கு பேப்பர் வாங்குன மாதிரி துண்டு…
????????????????????????????????????????
ஒரு ராஜாவும் ஒரு ராணியும் அவரவர் ராஜாவையும் ராணியையும் தொலைத்துவிட்டு ‘ரம்மி’க்காக காத்திருக்கும் கதைதான் ரா.ரா. ‘மௌன ராகத்தை அப்படியே அடிச்சு வச்சுருக்காங்களாம்ல…’ என்று புரளி புத்திரன்கள் யாராவது முச்சந்தியில் நின்று மூக்கு சிந்தினால், அவர்களை கூசாமல் பின்னங் கழுத்தில் அறையலாம். அதே அளவு சுவாரஸ்யமான திரைக்கதையுடனும், அதைவிட சுவாரஸ்யமான சம்பவங்களுமாக இந்த ராஜா ராணியை அழகாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெட்லி, ஸாரி… அட்லீ! காதலில் தோல்வியடைந்த ஆர்யாவும் நயன்தாராவும்…
onayum attukuttiyum
‘பன்னியும் கன்னுக்குட்டியும்’ டைப் படங்களையே பார்த்து பழகிய நம்மை இந்த ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ வாய் பிளக்க வைக்கிறது. படத்தில் மருந்துக்கு கூட பகல் இல்லை. ஆனால் தமிழ்சினிமாவையே வெளிச்சமாக்கியிருக்கிறார் மிஷ்கின். இந்த கதை ‘சுட்டக்கதை’யாக இல்லாத பட்சத்தில் அரசு தயவில்லாமல் அவரவர் செலவில் நேரு ஸ்டேடியத்தில் கூடி மிஷ்கினுக்கு தங்க ஜரிகையிட்ட பரிவட்டமே கட்டலாம். (உலகப்படங்களை மேய்பவர்களே… அலசி ஆராய்ஞ்சு அஞ்சு நாளுக்குள்ளே உத்தரவாதம் கொடுங்க) மருத்துவக் கல்லுரி மாணவரான…
ya ya 01
ஒழுகுற பஸ்சுல அழுகுன தக்காளியை மூட்டை மூட்டையா ஏத்துன மாதிரி, சவசவன்னு படம் எடுக்கறது ஒரு வகை. இந்த டைப் படங்களை அண்ணன் தங்கச்சி கதைகளிலும், ஆத்தா மகன் கதைககளிலும் அப்ளை செய்து பார்ப்பார்கள் சில சென்ட்டிமென்ட் இயக்குனர்கள். உள்ளே நுழையும் போதே ‘செத்தாண்டா சிவனாண்டி’ என்பது போலவே நம்மை பரிதாபமாக பார்த்தபடி டிக்கெட் கொடுப்பார்கள் தியேட்டர்களில். ஆனால் நகைச்சுவை படங்களுக்கு அந்த ஆபத்து இல்லை. எல்லா காலங்களிலும் எல்லா…
tamil-cinema-6-movie
‘ஆறு மனமே ஆறு’ -இதுதான் ஷாமும் முகவரி துரையும் சொல்ல வந்த 6 ஆக இருக்க வேண்டும். திருக்குறள் சைசுக்கு கதை இருந்தாலும், அதில் முதல் வரி முழுவதையும் ஓ.பி அடிக்க பழகியிருக்கிறார்கள் இப்போதிருக்கும் பல இயக்குனர்கள். மீதி ரெண்டாவது வரியில்தான் கதையும் விறுவிறுப்பும் அடங்கியிருக்கும். (சில படங்களில் அந்த உப்பு சப்பும் இல்லை) ஆனால் 6 அப்படியல்ல, படம் தொடங்கி பத்தாவது நொடியில் கதை தொடங்கிவிடுகிறது. கதை தொடங்கிய…
Moodar-Koodam
தமிழ்சினிமா என்கிற கலைக்கூடம், மூடர் கூடமாகி விட்டதே என்கிற முணுமுணுப்பு சப்தம் சற்று பலமாகவே கேட்க துவங்கியிருக்கிற காலகட்டம் இது. இந்த மூடர் கூடத்தை கலைக்கூடமாக்குகிறேன் பார்… என்று சவால் விட்டு கிளம்பியிருக்கிறாரோ என்று பிரமிக்க வைக்கிறார் இப்பட இயக்குனர் நவீன். நல்ல சினிமா, கெட்ட சினிமா என்று மட்டுமே சொல்லத் தெரிந்த ரசிகனை, மாற்று சினிமா, நவீன சினிமா, பொழுதுபோக்கு சினிமா, பிளாக் சினிமா, யூ ட்யூப் சினிமா…
Mathapoo_Movie_Stills6cec34abb19b57d4841a98fae2ec6ebc
பத்த வைக்காத மத்தாப்பூவாக இருக்கிற வரைக்கும் காதலில் ஏதுடா கலர்ஃபுல்? இதைதான் இரண்டரை மணி நேர படமாக தந்திருக்கிறார் ‘தினந்தோறும்’ நாகராஜ். ‘உம்மம்மா’ உதட்டில் ‘உம்’மை மட்டுமே சுமக்கிற ஹீரோயின் காயத்திரி ஏன் அப்படியானார் என்கிற அதிர்ச்சியை பிளாஷ்பேக்காகவும், அவரை மறுபடியும் சிரிக்க வைக்க துடிக்கும் ஹீரோவின் ஆசையை பேலன்ஸ் பேக்காகவும் கொடுத்திருக்கிறார் டைரக்டர். நெடுங்கால விடுமுறைக்கு பின் கோடம்பாக்கத்தின் கதவை ‘டொக் டொக்’கியிருக்கும் டைரக்டர் நாகராஜுக்கு கதவு திறக்குமா…?…
Varutha-Padatha-Valibar-Sangam-movie-pic
பந்தியில டீயை வச்சான். பக்கத்திலேயே நோயை வச்சான்ங்கிற மாதிரி, இந்த படத்தை பாராட்டுவதா, பழிப்பதா என்றே தெரியவில்லை. ‘எல்லாரையும் வயிறு குலுங்க வைக்கணும். அதுதான் எங்க நோக்கம்’ என்ற முடிவோடு இறங்கியிருக்கிறார் டைரக்டர் பொன்ராம். பாராட்டப்பட வேண்டிய முயற்சிதான். ஆனால் ஆடியன்ஸ் சிரிப்பதற்காகவாவது டைம் கொடுக்க வேண்டுமல்லவா? வசவசவென பேசிக் கொண்டேயிருக்கிறார்கள் யாராவது யாருடனாவது. போதாத குறைக்கு பின்னணி இசை வேறு. அதுவும் இவர்களுடன் சேர்ந்து சேர்ந்து பேசுகிறதா, ‘கொஞ்சம்…
Page 16 of 17« First...10...1314151617

all news