Reviews

un samayal arayil
கோடம்பாக்கமே ஒரு பெரிய கொத்து பரேட்டா சட்டியாகிக் கொண்டிருக்கிறது. அந்த ‘சட்டியும் காரம். சமையல்காரனின் எரிச்சலும் அதன் ஓரம்’ என்பது போலவே இருக்கிறது எல்லா படங்களும். இந்த அசந்தர்ப்பமான சூழலில்தான், ஆர அமற மர நிழலில் உட்கார்ந்து பாட்டி சுட்ட வடையை பந்தி பரிமாறுகிறார் பிரகாஷ்ராஜ். அத்தனை கவளங்களுக்குள்ளும் ஒளிந்திருக்கிறது ஆர்ப்பாட்டமில்லாத ருசி. நாற்பதை கடந்த பின்பும் ஏனோ கல்யாணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே போகும் பிரகாஷ்ராஜ், சரியான சாப்பாட்டு…
poovarasam peepee
குழந்தை முகமூடியோடு வந்திருக்கும் ஒரு நாலாந்தர படம்! அற்புதமான ஒளிப்பதிவு, அழகான குழந்தைகள், அலட்டல் இல்லாத நடிப்பு. ஆனால் எல்லாவற்றையும் ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆக்குகிறது படத்தின் போக்கும், காட்டப்படும் காட்சிகளும். உதாரணத்திற்கு ஒன்றே ஒன்று. முழு சைக்கிளில் ஏறினால் அரை பெடலுக்கு கூட முக்குகிற உயரத்திலும் வயசிலும் இருக்கும் ஒரு சிறுவன், ‘டேய்… நாமெல்லாம் இதை ஒண்ணுக்கு போறதுக்கு மட்டும்தான்னு தப்பா நினைச்சுட்டோம்டா… இத வச்சுகிட்டு வேற…
kochadayaan
முதலையை மோர் பானையில் மூடி வைத்த மாதிரி, இத்தனை காலமும் இந்த பிரமாண்டமான கோச்சடையானை வதந்திகளே மூடி வைத்திருந்தன! அவிழ்த்தால்…. அதே ஆக்ரோஷம் கொஞ்சமும் குறையாத ரஜினி அண்டு ரஜினி! ராணா படத்தைதான் சுல்தானாக்கி, சுல்தான் படத்தைதான் கோச்சடையான் ஆக்கியிருக்கிறார்கள் என்றெல்லாம் முன்பு எழுதப்பட்ட வதந்தியாளர்களின் திரைக்கதைக்கு ‘பெப்பே’ காட்டுகிறது ரஜினியின் வழக்கமான ஸ்டைலும், வரிஞ்சு கட்டி நிற்கும் பரபரப்பும். எல்லாமே கே.எஸ்.ரவிகுமாரின் கதை திரைக்கதை வசன மாயாஜாலங்களன்றி வேறில்லை!…
vallavanukku-pullum-aayudham-review
பேரீக்காய் ஊறுகாய் ஆகலாம். ஊறுகாய் பேரீக்காய் ஆகுமோ? சந்தானத்தின் ஹீரோ ஆசையும் அப்படிதான் இருக்கிறது. அவர் திரையில் தோன்றி முழுசாய் ஒரு மணி நேரம் போன பின்பும், என்னடா இன்னும் சிரிப்பே வரலீயே? என்று நினைத்துக் கொண்டிருந்தால், ‘அண்ணாச்சி இந்த படத்தில் வெறும் சிரிப்பு நடிகர் மட்டுமில்லேப்பா… அவர்தான் ஹீரோ தெரியும்ல?’ என்கிறது பின் மண்டை திடீரென விழித்துக் கொண்டு! அதிலும் சந்தானத்தின் அறிமுகக் காட்சி இருக்கிறதே… ‘எல்லாரும் ரஜினி…
yamirukka bayamey -review
‘ஆவி’ பறக்க ஒரு சூடான படம். அதுவும் இட்லி பானைக்குள்ளிருந்து ஜெட்லி கிளம்பி வந்தால் எப்படியிருக்கும்? அப்படியொரு எதிர்பாரா இன்ப குத்து! தமிழில் வரும் அநேக பில்லி சூனிய பேய் பிசாசு படங்கள் எல்லாமே நமது பிராணனை வாங்குகிற மாதிரி ஒரே ஸ்டீரியோ டைப்பில்தான் இருக்கும். யாமிருக்க பயமே-வும் அப்படியொரு சாயலில் அமைந்த படமாகதான் இருக்கப் போகிறது என்கிற அசால்ட் மனப்போக்குடன் அமர்ந்தால், ஆவியை விட்டு கிச்சு கிச்சு மூட்டுகிறார்…
angusam-review
ஆறாயிரம் கிலோ யானையை கூட அரையடி அளவுள்ள அங்குசம், பெண்டு நிமித்துகிற பேராற்றலை சினிமாவாக காட்டினாலென்ன என்று நினைத்திருக்கிறார் மனு கண்ணன். பெயரிலேயே ‘மனு’ இருப்பதால், மக்கள் சார்பாக மனு போடுகிற கதையை யோசித்திருக்கிறார் போலும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பலா பலன்கள் பற்றிதான் சொல்கிறது இந்த படம். இப்படியொரு கதையை யோசித்ததற்காகவே தெருமுனை கூட்டம் போட்டு திணற திணற பாராட்டு விழா நடத்தலாம் ம.கவுக்கு. வாத்தியார் மகனான…
ennamo etho-review
ரீமேக் கிங் ஜெயம் ராஜா வாழும் திசை நோக்கி வணங்கி விட்டுதான் இந்த விமர்சனத்தையே எழுத ஆரம்பிக்கணும். காப்பியடிக்கறதுக்கும் கொஞ்சம் ரசனை வேணும் பிரதர்…! தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன ‘அல மொதலாயிந்தி’ படத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் ரவி தியாகராஜன் என்ற அறிமுக இயக்குனர். இன்னும் ஏழெட்டு படம் பண்ணினாலும் இவர் அறிமுக இயக்குனராகவேதான் இருப்பார் போலிருக்கிறது. (கத்தின்னா கத்தி. அப்படியொரு கத்தி) காதலில் தோல்வியடைந்த ஒருவனுக்கு மற்றொரு…
??????????????????????????????????????????????????
சோப்பு டப்பாவுக்கு சுண்ணாம்பு டப்பா போட்டியாக இருந்த காலத்தை இப்போது நினைத்தாலும் பக்கென்கிறது. ‘தலைவா’ படத்தின் ஷுட்டிங் நடக்கும் போதுதான் ‘தலைவன்’ என்ற படத்தின் ஷுட்டிங்கும் நடந்தது. அந்த படத்தின் ஹீரோவுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமிருந்தது. இந்த படத்தின் ஹீரோவுக்கு பேங்க் பேலன்சும் பொலிட்டிக்கல் பேக்ரவுண்டும் ஸ்டிராங்காக இருந்தது. யாரை யார் வெல்லுவாரோ என்று ஜனங்கள் கடுகாய் பொறிந்து கொண்டிருந்த நேரத்தில்தான், மிளகாயாய் உறைத்தார் ஒருவர். (ஹ்ம்ம் அந்த கதையெல்லாம்…
naan sigappu manithan-review
கையிலிருந்து கிளவுசை கழற்றியபடி கேமிராவை நோக்கி முன்னேறிக் கொண்டே, ‘இவருக்கு வந்திருக்கிறது அன் லிமிட்டேடு மீல்சோ பிளக்கியான்னு சொல்லுவாங்க’ என்று டாக்டர் பேச ஆரம்பிக்கும்போதே மொத்த தியேட்டரும் கொல்லென்று சிரித்து வைக்கும். கடந்த சில வருடங்களாகவே பிளட் கேன்சரால் பாதிக்கப்பட்ட ஹீரோவையோ, இதய நோயால் எந்த நிமிஷம் புட்டுக் கொள்வாரோ என்று தவிக்க வைக்கும் ஹீரோயினையோ இப்படிதான் முகம் கொள்ளாத சிரிப்புடன் எதிர்கொள்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் இந்த படத்தில் விஷாலுக்கு…
maankaratte-review
உள்ளே நுழைந்து ஏழு படங்கள் கூட கிராஸ் ஆகாத நிலை. மார்க்கெட்டில் ‘மான் கராத்தே’ போட்டே மளமளவென முன்னேறிக் கொண்டிருக்கும் சிவகார்த்தியேன் இந்த கராத்தேவில் வாங்கியிருப்பது பிளாக் பெல்ட்டா? அல்லது பாண்டி பஜார் பெல்ட்டா? கோடம்பாக்கமும், ‘கோபம்’பாக்கமும் இணைந்தே கவனித்துக் கொண்டிருந்த படம் இது, கேள்வியும் இதுதான். ஆனால் ச்சும்மா சொல்லக் கூடாது. நடிப்பில் தன் முந்தைய பட ரெக்கார்டை தானே முறியடித்திருக்கிறார் சிவா. முருகதாசின் கதையும் பாஸ் பாஸ்தான்……
inam
இரண்டாம் உலகப் போரின் போதும் அதற்கு முன்பும் யூதர்களை இனவெறியோடு ஹிட்லர் கொன்று குவித்த கொடுமை பற்றி எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னும் இன்னும் கூட ஹிட்லரைக் கண்டித்து உலக அளவில் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன . எடுக்கப்பட்ட பழைய படங்கள் திரையிடப் படுகின்றன . . அதற்காக கண்ணீர் விடுவதில்தான் மனித இனத்தின் ஆண்மையும் நேர்மையும் நிரம்பி இருக்கிறது . அதை விடுத்து ”யூதர்களுக்கு எதிரான போரில் முன்னூத்தி சொச்ச…
nedunjalai-movie-stills
சீவலபேரி பாண்டி, மலையூர் மம்பட்டியான் என்று அந்த கால டெரர் ஆசாமிகளுக்கெல்லாம் ஆயுள் காப்பீடு செய்து அதன் பிரிமியத்தையும் வட்டியையும் சேர்த்தே அனுபவித்து அனுப்பியும் வைத்துவிட்டது தமிழ் சினிமா. மிச்சம் மீதியிருக்கிற அக்யூஸ்ட்டுகளை தேடினால் ஆளுக்கொரு கதை கிடைக்கும். அதற்குள் ஒரு லவ் இருக்கும். இந்த படத்திற்கு பயன்பட்டிருப்பவர் ‘தார்ப்பாய்’ முருகன். தேனி மாவட்டத்தில் ஏணி போட்டு வாழ்ந்தவர் என்கிறது போலீஸ் வரலாறு. நட்ட நடு ராத்திரியில் லாரிக்குள் தாவி,…
oru oorla
சேது, காதல், வெயில், அழகி மாதிரி சில படங்கள்தான் நம்மை உறங்கவிடாமல் அடிக்கும். ‘ஒரு ஊர்ல’ அப்படிப்பட்ட படம். மண் சார்ந்த கதைகளா? மண்ணுக்குள்ளேயே போட்டு புதை… உறவின் அற்புதத்தை உருக்கமாக சொல்கிறார்களா? அப்படியே எழுந்து ஓடு என்கிற அளவுக்கு கொடூரமான மனநிலையோடு படங்களை ரசிக்க தொடங்கிவிட்டான் நவீனத் தமிழன். இந்த இக்கட்டான நேரத்தில் தீயில் விழுந்த பட்டுத்துணி போல ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அதை எவ்வித சமரசத்திற்கும்…
marumunai
இன்டர்வெல் வரைக்கும் கூட என்ன சொல்ல வருகிறோம் என்பதையே தீர்மானிக்க முடியாமல் வெட்டியாக அளக்கும் பல இயக்குனர்கள், ‘ஆமா… கதைன்னு ஒண்ணு சொல்லனுமில்ல?’ என்று சுதாரித்துக் கொண்டு திரும்பி வருவதற்குள் பாதி ஆடியன்ஸ் கேட்டீனில் ஆறிப் போன டீக்கு ஆளாய் பறப்பார்கள். நல்லவேளை, இந்த படத்திற்கு அப்படியொரு சங்கடம் இல்லை. முதல் காட்சியிலேயே கதை ஓப்பன் ஆகிவிடுகிறது. அதற்காகவே அறிமுக இயக்குனர் மாரீஷ் குமாருக்கு ஒரு மனம் திறந்த வெல்கம்.…
cuckoo-review
கண்ணில்லாதவர்களின் உலகம் எப்படியிருக்கும் என்பதை ஒருமுறை கூட யோசித்து பார்க்காத, அல்லது அதற்கெல்லாம் நேரமில்லாத நமக்கெல்லாம் ராஜுமுருகன் கொடுத்திருக்கும் ‘பளார்’தான் இந்த படம். இதற்கப்புறமாவது சாலையோரத்தில் வரிசை கோர்த்தார் போல கடந்து போகும் அவர்களின் கதையை கேட்க ஒருவராவது உட்காருவார்கள் எனில், அதுதான் இந்த படத்திற்காக நாம் அடிக்கும் சல்யூட். பொதுவாகவே இப்படி பார்வையற்றவர்களின் கதையை படமாக்குவதென்றால் அதிலிருக்கும் சவால்களில் ஒன்று ‘நம்ம பிரச்சனையே பெரும் பிரச்சனையாயிருக்கு. இதுல இவங்க…
????????????????????????????????????????????????????????????????
கேரளாவின் தலைநகரமாகிக் கிடக்கிறது கோடம்பாக்கம். நயன்தாராக்களையும், லட்சுமிமேனன்களையும் நமக்காகவே பெற்றுப் போட்ட அந்த புண்ணிய பூமியில் மேலும் கொஞ்சம் கங்கையை தெளித்து பம்பையில் நீராடியிருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.குமரன். தலைப்பே கொஞ்சம் சர்க்கரை துக்கலாக இருப்பதால் ஒருவித ஆர்வத்தோடு உள்ளே நுழைகிறோம். நுழைகிற நமக்கு கிடைப்பது கொஞ்சம் கிச்சு கிச்சு, கொஞ்சம் கிறுகிறு… ‘கட்டினால் ஒரு கேரள பெண் குட்டியைதான் கட்டணும்’ என்று குட்டியாக இருக்கும்போதே குழந்தையின் மனசில் ஊட்டி…
Nimirnthu-Nil-Review
குழம்பு ஊற்றுவார் என்று நினைத்தால் எரிமலை குழம்பை ஊற்றியிருக்கிறார் சமுத்திரக்கனி. அந்நியன் ரமணா டைப் கதைதான் என்றாலும், முக்காலத்திற்கும் தேவையான வெக்காள சூப்தான் இது! ஆசிரமத்தில் தங்கி படிக்கும் ஜெயம் ரவிக்கு படிப்பு முடிந்து வெளியே வந்தால் எங்கு நோக்கிணும் சட்ட மீறல்கள், சவடால் கூச்சல்கள்தான் தெரிகிறது. ஒருத்தர் கூட சட்டத்தை மதிக்கலையே என்று அந்நியன் அம்பி போல கவலைப்படுகிறார். எதற்கெடுத்தாலும் நேர்மை பேசும் இவரை இழுத்துக் கொண்டு போய்…
panivizhum malar vanam
ஒரு காதல் ஜோடிக்கு பனிவிழும் மலர் வனமாக இருக்க வேண்டிய காடு, ‘சனி’ விழும் மலர்வனமாகிறது. எப்படி? என்பதுதான் கதை. அழுக்கு பரட்டைகள், அல்லது அல்ட்ரா அழகுகள் என்று தமிழ்சினிமா சுற்றி சுற்றி வரும் யூஷுவல் கதையல்ல இது. அதற்காகவே இப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் டேவிட்டை பாராட்டலாம். பேஸ்புக் மூலம் காதலில் விழும் இளசுகள் இரண்டுக்கும் வீட்டில் செம அடி விழுகிறது. ‘இந்த அப்பா அம்மாக்களே இப்படிதான். நம்ம காதலை…
aaha-kalyanam_review
ஒரு மேகத்திற்குள் எத்தனை மழைத்துளிகள் என்று யாரால் கணிக்க முடியும்? காதலை அள்ளி சுமந்து கொண்டு இன்னும் எத்தனை எத்தனை படங்கள் வருமோ, தெரியாது. ஆனால் இந்த படம் காதல் ஸ்பெஷல்! காதலர்கள் ஸ்பெஷல்! ஏன் காதலிக்காதவர்களின் ஸ்பெஷலும் கூட! படம் துவங்கிய பத்தாவது நிமிடத்திலேயே நம் மனசுக்குள் மருதாணி மாதிரி ஒட்டிக் கொள்கிறது இந்த ஜோடி. அதற்கப்புறம் அவர்களின் சேட்டை பிடிக்கிறது. சில்மிஷம் பிடிக்கிறது. சண்டை பிடிக்கிறது. அழுகையும்…
Bramman
கட்சிக்காரன் கையில் கிடைத்த காலி சுவர் மாதிரி, சாக்ரடீஸ் கையில் சிக்கியிருக்கிறார் சசிகுமார். உலக சினிமாவையெல்லாம் கவனிக்கிற சசிக்கு உள்ளூர் சினிமாவை கண்டுகொள்ள நேரமில்லாமல் போனதுதான் இந்த சறுக்கலுக்கு காரணம். ஏனென்றால், பிரம்மனின் கதையோட்டம், வெயில், குசேலன், போன்ற படங்களின் பின்னோட்டம்தான்! அப்படியிருந்தும் இதை புதுக்கதை என்று நம்பி கால்ஷீட் கொடுத்த சசியின் அறியாமைக்கு இந்த படத்தின் சறுக்கலே சமர்ப்பணம். ஒருவேளை நட்பு குறித்து வரும் நாலே நாலு வசனங்களில்…
Page 15 of 17« First...10...1314151617

all news