Reviews

thirumanam ennum nikah-review
இந்த படத்தின் ஒன் லைனை இப்படியும் சொல்லலாம்! ரயிலில் கிடைத்த காதல், வெயிலில் விரித்த குடை மாதிரி இதமாக இருந்ததா? இல்லையா? ‘ரயில் சினேகம் பிளாட்பாரத்தோடு போச்சு’ என்றில்லாமல் அதற்கப்புறமும் தொடர்ந்தால் அதன் வலி வேதனை ஜாலி சோதனைகள் எப்படியிருக்கும்? அதுதான் இந்த படத்தின் டிராவல்! அப்படியென்றால் படத் தலைப்பில் வரும் ‘நிக்காஹ்..’. ‘திருமணம்…’ அதெல்லாம்? லவ்வர்சுக்குள் வரும் சிக்கலே அதுதானய்யா…. ரயில் டிக்கெட் கிடைக்காத ராகவாச்சாரி என்கிற ஐயங்கராத்து…
irukku-aana-illa Review
சட்டியை அரைவேக்காட்டில் இறக்கியிருக்கிறார்கள். ஆனாலும் கூட ‘ஆவி’ பறக்கிறது. ஏனென்றால் கதையே ‘ஆவி’ சம்பந்தப்பட்டதுதானய்யா! பாரில் தண்ணியடித்துவிட்டு வீட்டுக்கு வரும் வழியில் ஆக்சிடென்ட்! தன் கண்ணெதிரிலேயே ஒருத்தி செத்துப் போகிறாள். நடுநடுக்கத்தோடு அறைக்கு வருகிற ஹீரோவின் கண்களில் அதே பெண் தென்பட, அப்புறமென்ன…? விடிகிற வரைக்கும் ‘அவ்வ்வ்…’தான்! அதற்கப்புறமும் வருகிறாள் அவள். அலறுகிறான் அவன். அவளை பார்க்கும் போதெல்லாம் ஹீரோ தொடர்ந்து அலற, ஒரு கட்டத்தில் ‘ஏய், கத்துறத நிறுத்து’…
VIP-review01
ஒரு தண்ட சோறு, தடபுடல் விருந்தாவதுதான் கதை! கடந்த சில படங்களாகவே ரசிகர்களை ‘களி’ தின்ன வைத்த தனுஷ், இந்த படத்தில் முனியாண்டி, அஞ்சப்பர், சரவணபவன், வசந்தபவன், கையேந்திபவன்களின் கிச்சனையே ஓப்பன் பண்ணி விட்டிருக்கிறார். ரசனை இருப்பவர்கள் தின்னக்கடவது….! அதிலும் முதல் பாதி முழுக்க தன் இமேஜை கூட பார்க்காமல் தனுஷ் அடிக்கும் ரகளைகள் இருக்கிறதே… ‘கதைக்காக முதுகும் வளைவேன், சிரிப்புக்காக விளக்குமார் அடியும் வாங்குவேன்’ என்பதுதான் அது! பல…
Sathuranga -Vettai- Review
நெத்தியில நாமம் போடவென்றே ஸ்பெஷல் நாமக்கட்டியோடு திரிகிற கூட்டம் ஒன்று, உங்களுக்கு பக்கத்திலேயே இருக்கலாம். ‘பாக்கெட் ஜாக்கிரதை’ என்பதுதான் இந்த படத்தின் அட்வைஸ்! இது ஏமாறுகிறவன் தப்பா? ஏமாற்றுகிறவனின் சாமர்த்தியமா? என்றெல்லாம் காதுக்கு பின்னாலிருக்கும் ‘கருத்து’ ஏரியாவை குத்தி குத்தி உணர்த்துகிறது ஒவ்வொரு காட்சியும். அட்றா சக்க… மனுஷன் ஏமாற்றதுக்குதான் எத்தனையெத்தனை வாய்ப்புகள். அதிலும் ஹீரோ பேசுகிற ஒவ்வொரு வசனமும் நச் நச். ‘நான் உங்களை ஏமாத்தல. ஏமாற்றதுக்கு ஒரு…
nalanum nandhiniyum
குடும்பமே ‘குத்துவேன்… வெட்டுவேன்’ என்று கூச்சல் போட்டுக் கொண்டாலும், எதிராளி வீட்டு புளியோதரைதான் பிடிக்கிறது எல்லா எலிக்கும்! அப்படி ஒரு காதல் எலிகள்தான் நளனும் நந்தினியும்! பெற்றோர்களை எதிர்த்துக் கொண்டு காதல் திருமணம் செய்து கொள்ளும் இருவரும், வாழ்க்கையில் வென்றார்களா? சொந்தங்களை ஒன்று சேர்த்தார்களா? என்பதுதான் கதை. படம் நெடுகிலும் சுமார் ஒரு டஜன் உறவுக்காரர்கள் திரிகிறார்கள். யார் யாருக்கு உறவு? அதுவும் என்ன மாதிரியான உறவு? என்பதையெல்லாம் புரிந்து…
ramanujan-review
கணக்கே பேச்சு, எண்களே மூச்சு என்று வாழ்கிற ஒருவனுக்கு தமிழன் கொடுக்கிற ‘டார்ச்சர்’ என்ன? வெள்ளைக்காரன் கொடுக்கிற ‘ஃபியூச்சர்’ என்ன? இதுதான் கதை. இல்லையில்லை… வாழ்ந்த ஒரு மனுஷனின் வரலாறு! படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது இப்படிதான் தோன்றுகிறது, ‘வெள்ளையனே… நீ வெளியேறாமலே இருந்திருக்கலாம்!’ கும்பகோணத்து குழந்தை ராமானுஜனில் ஆரம்பிக்கிறது படம். பால் வடியும் முகம், கணக்கு பாடத்தில் கொதிக்க கொதிக்க கேட்கிற கேள்விகள் என்று தன்னை சுற்றியிருக்கிறவர்களை…
arima nambi-review
முதல் இருபது நிமிஷம், ‘அருவா தம்பி’யாக இருக்கிறது அரிமா நம்பி! அதற்கப்புறம் ‘அற்புதம்டா தம்பி!’ (லாஜிக் மிஸ்டேக்குகளை ஆடி தள்ளுபடியில் கழித்து விட்டால்) ஒரு மத்திய அமைச்சருக்கும் ஒரு சேனல் சிஇஓ வுக்கும் நடைபெறும் இழுபறியில் மண்டை நொறுங்கிப் போகிற ஒரு இளைஞனின் ‘ஸ்பீடு’தான் கதை. கடைசியில் அமைச்சர் பதவி அரோகரா ஆகிவிட, அதுவரை சற்று படபடப்போடு அமர்ந்திருந்து படத்தை கண்டு களித்த நாமும் வியர்வையை துடைத்துக் கொண்டு ‘அப்பாடா’…
saivam-review
‘படத்துல கதையவே காணலப்பா’ என்று சம்பந்தப்பட்ட படத்தின் இயக்குனர்களே தேடித் திரிகிற பொல்லாத காலம் இது! இந்த காலத்தில், ஒரு சேவல் காணாமல் போனதை வைத்துக் கொண்டு ஒரு விறுவிறுப்பான, அழகான, கவித்துவமான கதையை உருவாக்கியிருக்கிறார் டைரக்டர் விஜய். படம் துவங்கி முடிகிற வரைக்கும் அந்த கோழியை தேடி நாமும் ஓடிக் கொண்டிருக்கிறோம். வில்லேஜ் அழகானது. வில்லேஜ் கதைகள் அதைவிட அழகானவை! இந்த கதையை எந்த நேரத்தில் படமாக எடுக்க…
athithi
முற்பகல் ‘செய்யின்’ பிற்பகல் என்னாகும் என்பதுதான் இந்த படத்தின் ஒன் லைன்! ஒருவரும் விழுந்து புரண்டடித்துக் கொண்டு நடிக்கவில்லை. ஆனால் அந்தளவுக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறது திரைக்கதை. இராமாயணத்திலும் நீதிமான் பரதன், நிகழ்காலத்திலும் நீதிமான் பரதன்தான்! யெஸ்… இந்த படத்தின் இயக்குனர் பரதன் சொல்லியிருக்கும் மெசெஜ், தினத்தந்தி, தினகரன்களின் கள்ளக்காதல் பெட்டிச் செய்திகளை எதிர்காலத்திலாவது குறைக்க உதவும். ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நந்தாவும், அவரது மனைவி அனன்யாவும் காரில்…
vadacurry-review
ஏட்டு சுரைக்காய் ‘கறிக்கு’ உதவாது என்பார்கள். கொஞ்சம் திருத்தி ‘வடகறிக்கு’ என்று வாசிக்கலாம். அப்படியொரு ஸ்கிரிப்ட்! ஆங்காங்கே வசனங்களால் கிச்சு கிச்சு மூட்டுவதால், காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகனுக்கு முழு பட்டினியிலிருந்து விலக்கு! ஒரு மொக்கை ஃபிகராவது கிடைக்காதா என்று தவியாய் தவிக்கும் ஜெய்க்கு ஒரு உண்மை புரிகிறது. ‘நல்ல ஐ போன் கையில் இருந்தால், அதற்காகவே ஃபிகர்கள் மடியுறாங்கப்பா ’ என்பதுதான் அது. ஏழை புலவன் ஒரு…
Mundasupatti-review
ஒவ்வொரு போட்டோவுக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது. அதற்குள் இறங்கி தேட ஆரம்பித்தால் ஒரு சம்பவம் மட்டுல்ல, நாடே வியக்குமளவுக்கு ஒரு ‘சக்சஸ்’-ம் கிடைக்கும் என்று நம்பியவர்களின் முண்டாசுக்கு ‘கிரீடம்’ என்று பெயர் சூட்டுவோமாக! போட்டோ எடுத்தால் போதும், ஆளே காலி என்று நம்புகிற ஒரு கிராமம். இந்த கிராமத்திற்குள் ஒரு பிணத்தை போட்டோ எடுக்கப் போகும் ஹீரோவும் அவரது தோழனும் என்ன பாடு பாடுகிறார்கள் என்பதுதான் மு.ப. ஒரு செங்கல்லை…
vivek-nanthan bala-review
வெறும் வேர்க்கடலை வறுப்பதற்கு, எதற்கு பாற்கடலை கடையணும்? ‘விவேக் ஹீரோவாக நடிச்சா நல்லாதானய்யா இருக்கும்’ என்று கவலைப்பட்டவன்தான் தமிழன். அவனுடைய கவலைக்கு பால் ஊற்றுகிறேன் பேர்வழி என்று ‘கள்ளிப்பால்’ ஊற்றியிருக்கிறார் இயக்குனர் கண்ணன். விவேக்கின் லொட லொட வாயிலும் படபட வசனத்திலும் விழுந்து… தேய்த்து… குளித்து… தன்னையே சுத்தமாக்கிக் கொண்ட அத்தனை பேருக்கும் நான்தான் பாலா, ‘ஏன்தான் பாலா!’ ஒரு நேர்மையான பெருமாள் கோவில் பூசாரிக்கு, அதே பெருமாள் கொடுப்பது…
manjapai-review
மனங்களால் ஆன வாழ்க்கையை நிறங்களால் பிரிக்க கற்றுக் கொண்டிருக்கிறான் மனிதன். ‘கலர்ல என்னடா இருக்கு கருமாதி?’ என்று இதை விலக்கவும் முடியாமல், தொடரவும் முடியாமல் தவிக்கும் இதே உலகத்தில் ‘மஞ்சப்பை’ என்ற ஒரு வார்த்தையே கலரையும் ஆளையும் எடை தராசில் ஏற்றி ஒரு சேர ‘பொதுக்கடீர்’ என்று போட்டுத்தள்ளுகிறது. அப்படி காலகாலமாக கறையாகி நிற்கும் ஒரு மஞ்சப்பைக்குள் ‘மரியாதையை’ நிரப்பியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ராகவன். ‘இவனுங்க பண்றதையெல்லாம் எங்க தாத்தன்…
un samayal arayil
கோடம்பாக்கமே ஒரு பெரிய கொத்து பரேட்டா சட்டியாகிக் கொண்டிருக்கிறது. அந்த ‘சட்டியும் காரம். சமையல்காரனின் எரிச்சலும் அதன் ஓரம்’ என்பது போலவே இருக்கிறது எல்லா படங்களும். இந்த அசந்தர்ப்பமான சூழலில்தான், ஆர அமற மர நிழலில் உட்கார்ந்து பாட்டி சுட்ட வடையை பந்தி பரிமாறுகிறார் பிரகாஷ்ராஜ். அத்தனை கவளங்களுக்குள்ளும் ஒளிந்திருக்கிறது ஆர்ப்பாட்டமில்லாத ருசி. நாற்பதை கடந்த பின்பும் ஏனோ கல்யாணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே போகும் பிரகாஷ்ராஜ், சரியான சாப்பாட்டு…
poovarasam peepee
குழந்தை முகமூடியோடு வந்திருக்கும் ஒரு நாலாந்தர படம்! அற்புதமான ஒளிப்பதிவு, அழகான குழந்தைகள், அலட்டல் இல்லாத நடிப்பு. ஆனால் எல்லாவற்றையும் ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆக்குகிறது படத்தின் போக்கும், காட்டப்படும் காட்சிகளும். உதாரணத்திற்கு ஒன்றே ஒன்று. முழு சைக்கிளில் ஏறினால் அரை பெடலுக்கு கூட முக்குகிற உயரத்திலும் வயசிலும் இருக்கும் ஒரு சிறுவன், ‘டேய்… நாமெல்லாம் இதை ஒண்ணுக்கு போறதுக்கு மட்டும்தான்னு தப்பா நினைச்சுட்டோம்டா… இத வச்சுகிட்டு வேற…
kochadayaan
முதலையை மோர் பானையில் மூடி வைத்த மாதிரி, இத்தனை காலமும் இந்த பிரமாண்டமான கோச்சடையானை வதந்திகளே மூடி வைத்திருந்தன! அவிழ்த்தால்…. அதே ஆக்ரோஷம் கொஞ்சமும் குறையாத ரஜினி அண்டு ரஜினி! ராணா படத்தைதான் சுல்தானாக்கி, சுல்தான் படத்தைதான் கோச்சடையான் ஆக்கியிருக்கிறார்கள் என்றெல்லாம் முன்பு எழுதப்பட்ட வதந்தியாளர்களின் திரைக்கதைக்கு ‘பெப்பே’ காட்டுகிறது ரஜினியின் வழக்கமான ஸ்டைலும், வரிஞ்சு கட்டி நிற்கும் பரபரப்பும். எல்லாமே கே.எஸ்.ரவிகுமாரின் கதை திரைக்கதை வசன மாயாஜாலங்களன்றி வேறில்லை!…
vallavanukku-pullum-aayudham-review
பேரீக்காய் ஊறுகாய் ஆகலாம். ஊறுகாய் பேரீக்காய் ஆகுமோ? சந்தானத்தின் ஹீரோ ஆசையும் அப்படிதான் இருக்கிறது. அவர் திரையில் தோன்றி முழுசாய் ஒரு மணி நேரம் போன பின்பும், என்னடா இன்னும் சிரிப்பே வரலீயே? என்று நினைத்துக் கொண்டிருந்தால், ‘அண்ணாச்சி இந்த படத்தில் வெறும் சிரிப்பு நடிகர் மட்டுமில்லேப்பா… அவர்தான் ஹீரோ தெரியும்ல?’ என்கிறது பின் மண்டை திடீரென விழித்துக் கொண்டு! அதிலும் சந்தானத்தின் அறிமுகக் காட்சி இருக்கிறதே… ‘எல்லாரும் ரஜினி…
yamirukka bayamey -review
‘ஆவி’ பறக்க ஒரு சூடான படம். அதுவும் இட்லி பானைக்குள்ளிருந்து ஜெட்லி கிளம்பி வந்தால் எப்படியிருக்கும்? அப்படியொரு எதிர்பாரா இன்ப குத்து! தமிழில் வரும் அநேக பில்லி சூனிய பேய் பிசாசு படங்கள் எல்லாமே நமது பிராணனை வாங்குகிற மாதிரி ஒரே ஸ்டீரியோ டைப்பில்தான் இருக்கும். யாமிருக்க பயமே-வும் அப்படியொரு சாயலில் அமைந்த படமாகதான் இருக்கப் போகிறது என்கிற அசால்ட் மனப்போக்குடன் அமர்ந்தால், ஆவியை விட்டு கிச்சு கிச்சு மூட்டுகிறார்…
angusam-review
ஆறாயிரம் கிலோ யானையை கூட அரையடி அளவுள்ள அங்குசம், பெண்டு நிமித்துகிற பேராற்றலை சினிமாவாக காட்டினாலென்ன என்று நினைத்திருக்கிறார் மனு கண்ணன். பெயரிலேயே ‘மனு’ இருப்பதால், மக்கள் சார்பாக மனு போடுகிற கதையை யோசித்திருக்கிறார் போலும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பலா பலன்கள் பற்றிதான் சொல்கிறது இந்த படம். இப்படியொரு கதையை யோசித்ததற்காகவே தெருமுனை கூட்டம் போட்டு திணற திணற பாராட்டு விழா நடத்தலாம் ம.கவுக்கு. வாத்தியார் மகனான…
ennamo etho-review
ரீமேக் கிங் ஜெயம் ராஜா வாழும் திசை நோக்கி வணங்கி விட்டுதான் இந்த விமர்சனத்தையே எழுத ஆரம்பிக்கணும். காப்பியடிக்கறதுக்கும் கொஞ்சம் ரசனை வேணும் பிரதர்…! தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன ‘அல மொதலாயிந்தி’ படத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் ரவி தியாகராஜன் என்ற அறிமுக இயக்குனர். இன்னும் ஏழெட்டு படம் பண்ணினாலும் இவர் அறிமுக இயக்குனராகவேதான் இருப்பார் போலிருக்கிறது. (கத்தின்னா கத்தி. அப்படியொரு கத்தி) காதலில் தோல்வியடைந்த ஒருவனுக்கு மற்றொரு…
Page 14 of 17« First...1213141516...Last »

all news