Reviews

uthama villan-review
சுருக்கமாக சொன்னால் ‘ஒரு நடிகனின் கதை!’ புகழ் வெளிச்சத்தில் புழங்கும் ஒரு ஹீரோவின் அந்தரங்கம், எவ்வளவு புழுக்கமானது என்பதுதான் முழுக்கதை! மதுரை தமிழ், சென்னை தமிழ், கோவை தமிழ் என்பதை போல ‘கமல் தமிழ்’ என்ற ஒன்றும் இருப்பதால், அதே தமிழில் ஆரம்பிக்கிறார் படத்தை. அதற்கப்புறம் டச் பை டச் கமல் டச்! நடு நடுவே ‘பச்சக் பச்சக்’ என்று அவர் மேயும் ஸ்பாட்டுகள் இதற்கு முன் வந்த கமல்…
yugan copy
நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கும் ஐடி இளைஞர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் என்னாகும்? யூகன் மாதிரி படங்கள் அடிக்கடி வரும்! இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள், எல்லாருமே ஐடி துறையை சேர்ந்தவர்கள்தான். கதைக்காக எங்கும் அலையவில்லை அவர்கள். தங்களது ஐடி துறை அலட்டல் மிரட்டல்களையே படமாக்கியிருக்கிறார்கள். ஒருவேளை அதே துறையிலிருக்கும் இளைஞர்களும், இளைஞிகளும் விழுந்து விழுந்து ஓவர் டைம் பார்தோ, நைட் ஷிப்ட் பார்த்தோ ரசிப்பார்களோ என்னவோ? ஆனாலும்…
kangaru-review
குட்டி வளர்கிற வரைக்கும் அதை தன் வயிற்றிலேயே சுமக்கும் கங்காருதான் கதையின் ‘சிம்பல்!’ பொதுவாகவே ‘குட்டி’ என்றால் டைரக்டர் சாமிக்கு பிடிக்கும் என்பது முந்தைய வரலாறு. அந்த ஒரு காரணத்திற்காகவே, ‘யாரும் யாரும் யாரோடு?’ என்கிற சந்தேகமும், பதற்றமுமாக ஒவ்வொரு ரீலையும் கடந்தால், ‘அட… அசல் நெய்யில் செய்யப்பட்ட அக்மார்க் அண்ணன் தங்கச்சி கதை மக்களே!’ அந்த கதையின் ஹீரோ லேசாக மன நிலை பாதிக்கப்பட்டவன் என்கிற அடிஷனல் ‘டச்‘சும்…
kanjana-review
கெட்ட பேய்க்கும் நல்ல பேய்க்கும் நடுவில் ஒரு பயந்தாக்குளி பையனும், ஒரு பச்சைக்கிளி பொண்ணும் சிக்கிகிட்டா என்னாகும்? ஆவி அமுதா, விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்கள் போன்ற ஹைடெக் பேய் ஓட்டிகள் பார்த்தால் கூட, அவர்களுக்கும் கடைவாயில் நுரை தள்ளுகிற அளவுக்கு மிரட்டுகிறார் லாரன்ஸ். வழக்கம் போல பேய் பிசாசுகளுக்கு நடுவில் அவர் தூவும் காமெடி சாம்பிராணிக்கு கந்தலாகிறது தியேட்டர். என்ன ஒன்று? ஓவர் டோஸ் ஓவர் டோஸ் என்பார்களே… இது ஒவருக்கெல்லாம்…
o kadhal-review
மாநராட்சியோ, தேர்தல் ஆணையமோ, மணிரத்னத்தின் ‘பர்த் சர்டிபிகேட்’டை மறுபடியும் சரிபார்க்கும் நேரமிது! இளமை வழியும் கதையும், அதில் குறும்பு வழியும் வசனங்களுமாக தனது நிஜ வயசில் பல வருஷம் பின்னோக்கி திரும்பி காதலித்திருக்கிறார் மணி. கால காலமாக பிற்பற்றப்படும் கலாச்சாரம் என்கிற பூட்டின் மீது, அவர் வீசியிருக்கிற சுத்தியல்… நல்லவேளை, பெரிசாக சேதப்படுத்திவிடவில்லை எவற்றையும்! இல்லையென்றால் தெருவுக்கு தெரு மணிரத்னத்தின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டிருக்கும். அரசு பேருந்துகள் ‘ஐயகோ’ ஆகியிருக்கும். பொசுக்கென்று…
cuav-review
பாக்கெட் வற்றிப்போன பேச்சுலர்களையெல்லாம் சென்னை, ‘பேச்சு’ இலர் ஆக்கி வேடிக்கை பார்க்கும்! அதுவும் உதவி இயக்குனர்களின் பாடு, செத்த எலிக்கு சீமந்தம் பண்ணுகிற கதைதான்! விக்ரமாதித்யனின் ‘வீடு திரும்பல்’ என்ற கவிதையை ஒரு கதையாக சொன்னால் எப்படியிருக்கும்? (அந்த கவிதையை படத்தில் ஓரிடத்தில் அழகாக சொல்லியும் இருக்கிறார்கள்) அதுதான் இந்த ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’. எவ்வித சமரசங்களுக்கும் இடமில்லாமல் இந்த கதையை மனசு வலிக்கவும், வாய்விட்டு சிரிக்கவுமான ஃபார்முலாவில்…
nanbenda-review
சிறைச்சாலையிலிருந்து உதயநிதி தப்பித்து ஓடிவரும் அந்த டெரர் காட்சியோடு துவங்குகிறது படம். ‘ஆஹா… இவரு ரத்தத்திலேயும் ஆக்ஷன் ஓ பாசிட்டிவ்வை ஏத்திட்டாங்களா? இனிமே வௌங்குனாப்ல’தான் என்கிற திகிலோடு உட்கார்ந்திருந்தால், ‘எங்களுக்கு தெரியாத எக்னாமிக்ஸா? ஃபிரண்டு கதையா இருந்தாலும், அதுகுள்ளேயும் ட்ரென்ட்டை நுழைப்போம்ல’ என்று எகிறி சிரிக்கிறார் உதயநிதி. (அதானே பார்த்தோம்…) வழக்கமான காதல் கதையில், வயிறு வலிக்கும் காமெடியை கலந்தால் அதுதான் ‘நண்பேன்டா’. உலகத்திலேயே படத்தின் தலைப்பை வசனத்திற்குள் வம்படியாக…
review-komban
‘ஒரு டிக்கெட் வாங்குனா கூடவே ஒரு பட்டியல் சாதிக் சாதிக்காரனோட குடல் கறிய இலவசமா தர்றாங்களாமே?’ என்று பொதுமக்கள் அச்சப்படுகிற அளவுக்கு இந்த படத்தில் சாதி வெறி வழிஞ்சு கிடக்கறதா பேதியை கிளப்பி வந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி. படம் பார்த்தபின் அத்தனை பேரும் தேடி தேடி கேள்வி கேட்பார்கள் அவரிடம், நீங்க ‘கிளப்பிவிட்ட’ மாதிரி எதுவுமே இல்லையேங்ணா படத்துல? கோவக்கார கொம்பய்யா பாண்டியன், பாசக்கார பச்சைக்கிளியா மாறுவதுதான் கதையின் மெயின்…
valiyavan-review
புடிச்ச ஃபிகரு ‘அட்றா…’ன்னா புரூஸ்லீக்கே கூட புத்தூர் கட்டு போட்ருவானுங்க நம்ம பசங்க! இதையே மையமா வச்சு ஒரு படத்தை எடுத்திருக்கிறார் ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன். ‘எங்கேயோ எப்போதோ’ நல்ல படம் எடுத்திருப்பாருப்பா… என்கிற ஆயாசத்தை ஒவ்வொரு பிரேமும் வழங்கிக் கொண்டிருக்க, சுமார் ஒண்ணே முக்கால் மணி நேர அட்ராசிட்டிக்கு பிறகு, ஆறுதலாக வருகிறது அந்த க்ளைமாக்ஸ். திருப்பதி லட்டு வேணும்னா தெருமுனை வரைக்கும் க்யூவுல நின்றுதான் ஆகணும். அந்த…
Risha, Pranav in Nadhigal Nanaivathillai Movie Stills
‘காதலிக்காதவர்களிடம்தான் காதல் பத்திரமாக இருக்கிறது’ என்று அண்மைக்காலமாக விளம்பரங்களில் பளிச்சிட்ட வாசகத்திற்கு சொந்தமான படம்! ‘ ரொம்ப பொயட்டிக்கா இருக்குமோ?’ என்கிற சிந்தனையோடு கொட்டாய்குள்ள போகிறவர்களுக்கு, ‘சினிமா எடுக்காதவர்களிடம்தான் சினிமா பத்திரமாக இருக்கிறது’ என்ற எண்ணம் வராமலிருந்தால் ஆச்சர்யம்! நாகர்கோவில் பகுதியில் நடக்கிறது கதை. வேலை வெட்டிக்கு போகாத ஹீரோ பிரணவ், முதல் காட்சியிலேயே குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறான். நடுஹாலில் உறங்கிக் கொண்டிருக்கும் அப்பாவின் வாயில் எரியும் சிகரெட்டை சொருகி…
ennai arindhal -review
அஜீத் கால்ஷீட்டை கஷ்டப்பட்டு வாங்கிய பல இயக்குனர்கள், சிதம்பரம் நடராஜ பெருமானை தி.நகர் சபாவில் ஆடவிட்ட மாதிரி கொடுங்கோலம் செய்துவிடுவார்கள். ஆனால் ஹாலிவுட் ஹீரோ லுக்கில் இருக்கும் அஜீத்தின் கையில் ஒரு துப்பாக்கியை கொடுத்து, அதை எவ்வித நடுக்கமும் அலட்டலும் இல்லாமல் சுட வைத்திருக்கிற ஒரே காரணத்திற்காகவே கவுதம் மேனன் படங்களுக்கு ஆயுள் சந்தா கட்டலாம். பட்… கலகலவென சிரித்து, பரபரவென நடுங்கி, சரசரவென கைபிடித்து அழைத்துச் செல்லும் யுக்தியை…
kumudam add-2

darling-review
‘பயமாயிருக்கு. துணைக்கு ஒரு ஆவிய கூப்பிட்டுகிட்டா தேவலாம்’ங்கிற அளவுக்கு பேய் பிசாசு ஆவிகள் மீது அபரிமித அன்பை ஏற்படுத்த முனைந்து கட்டிக் கொண்டு நிற்கிறது அண்மைகால தமிழ்சினிமா. ட்ரெண்டு அப்படியிருந்தாலும், ஆவிகளை ஃபிரண்டாக்கிக் கொள்கிற அளவுக்கு அது போகணுமா என்கிற கேள்விகள் எழாமலில்லை. இந்த டார்லிங்கும் அப்படியொரு காதல் ஆவிதான்! (தியேட்டர்ல எங்கு பார்த்தாலும் ஒரே சின்னக்குழந்தைங்க. பரிசுத்த ஆவிகளே… இப்படியாகிருச்சே உங்க டக்கு?) ஆசைப்பட்டு காதலித்த சிருஷ்டி டாங்கே…
ambala-review
‘புகை வந்தா போதும். எரியுற நெருப்புல எதை போட்டா என்ன?’ என்கிற முடிவோடு எடுத்திருக்கிறார்கள். சாம்பிராணி வாசனையும் அடிக்கிறது, சமையல் பொடி வாசனையும் அடிக்கிறது. மொத்தத்தில் ஆம்பள? சிரிப்பும் தாங்கல. கடுப்பும் தாங்கல. அக்சூ….ச்! பொதுக்கூட்டத்துக்கு ஆள் சப்ளை செய்யும் தொழில் விஷாலுக்கு. தானுண்டு தன் கூட்டம் உண்டு என்றிருக்கும் அவருக்கு ஹன்சிகாவை பார்த்ததும் வாயோரத்தில் எச்! அவரை கவிழ்க்க ட்ரை பண்ணி எப்படியோ அதில் வெற்றியும் பெறுகிறார். அந்த…
I Review
‘அத்தனை எதிர்பார்ப்பையும் தூக்கி, ஐ தலையில வை’ என்று கடந்த சில ஆண்டுகளாகவே ரசிகர்களை எதிர் நோக்க வைத்த படம்! கதை அதுவா இருக்குமோ? இதுவா இருக்குமோ? என்று ரிலீஸ் தினத்தன்று காலை வரைக்கும் கூட படம் குறித்த யூகங்கள் றெக்கை கட்டி பறக்க, பல்வேறு தடைகளை தாண்டி ஒரு வழியாக தியேட்டருக்கு வந்த ஐ, பாஸா, பெயிலா?‘இது ஷங்கர் படம்டோய்… இப்படியெல்லாம் கேள்வி கேட்குறே? என்று சந்தேகத்துக்கு பூட்டு போட்டுவிட்டு…
pk
அமீர்கான் ஒரே ஒரு டேப் ரெக்கார்டை மட்டும் முன்ஆடையாக மறைத்துக்கொண்டு பரபரப்பைக்கிளப்பி பப்ளிசிட்டியை அள்ளிய படம். பீகே என்பது ஆங்கில எழுத்துக்களோ, ஆங்கில வார்த்தையின் சுருக்கமோ அல்ல… பீக்கே என்பது பக்கா இந்தி வார்த்தை. குடித்து விட்டு வந்திருப்பவன் என்று பொருள்படுத்திக்கொள்ளலாம். வேற்று கிரகவாசி ஒருவன் தன் விண்கலத்தில் பூமியில் வந்திறங்குகிறான். இறங்கும் இடம், ராஜஸ்தான், இந்தியா. தன் விண்கலத்தை இயக்கும் ரிமோட்டை பூமியில் அவன் பார்க்கிற முதல் மனிதன்…
Arya, Hansika Motwani At Meagamann Tamil Movie Photos
அரையிருட்டு… அல்பாயுசில் போக வைக்கும் டூமீல் டூமீல்கள்… ஹஸ்கி வாய்சில் ரகசியம்… பழைய பங்களாக்களில் ஃபைட்…. இவையெல்லாம்தான் அண்டர்வேல்டு கிரைம் படங்களின் ஆண்டாண்டு கால ஃபார்முலா. அதையும் இழக்காமல், ‘அரைச்ச மாவுதாண்டா’ என்கிற அலுப்பையும் தராமல் ஒரு அண்டர்வேல்டு கிரிமினல்ஸ் படத்தை தர முடியுமா? முயற்சி செய்திருக்கிறார் மகிழ் திருமேனி. கொக்கைன் கடத்தும் கொள்ளை கும்பலை கூண்டோடு பிடிக்க களம் இறங்குகிற போலீஸ், அவர்களுக்கு பொறி வைக்கிறது. ஆனால் உஷாராகும்…
vellakkara durai-review
‘லாண்டரியில எலி புகுந்தா லங்கோடு கூட மிஞ்சாது’ என்பார்களே… அப்படியொரு படம்! எப்பவோ ஒரு சீன்ல சிரிச்சோம், எப்பவோ ஒரு சீன்ல கைதட்டுனோம்னு இல்லாம இஞ்ச் பை இஞ்சாக சிரிக்க வைத்து அனுப்புகிறார் எழில். அதில் பல அவர் படத்திலிருந்தே ரீ புரடக்ஷன் செய்யப்பட்டதுதான் என்றாலும், மனசு நிறைஞ்சு சிரிக்கிற நேரத்தில் பழைய பஞ்சாக்கத்தை புரட்டுவானேன்? பேஸ்புக், ட்விட்டர், இங்கிலீசு போன்ற அத்தியாவசிய அலட்டல்கள் தெரிஞ்ச விக்ரம் பிரபுவை வேலைக்கு…
kayal-review
ஆச்சர்யமானது இயற்கை! அதைவிட ஆச்சர்யமானது காதல்! இவ்விரண்டையும் வைத்துக் கொண்டு சித்து விளையாட முடிவெடுத்திருக்கிறார் இயக்குனர் பிரபுசாலமன். அதுதான் கயல்! ஆறு மாதம் கடுமையாக வேலை செய்துவிட்டு கிடைக்கிற பணத்தை வைத்துக் கொண்டு ஊர் சுற்றுகிற இரண்டு நண்பர்கள், போகிற வழியெங்கும் சந்திக்கிற அனுபவங்கள்தான் கதை. புதையலை தோண்டிய இடத்தில் சுற்றிலும் குவிந்துகிடக்கிற மண் போல, படமெங்கிலும் அழகான காட்சிகளை குவித்து வைக்கிறார் டைரக்டர் பிரபு சாலமன். எல்லாவற்றையும் தாண்டியிருக்கும்…
பிசாசு -விமர்சனம் காலகாலமாக நமக்குள் புனையப்பட்டிருக்கும் பிசாசு என்பதன் பிம்பத்தை பீஸ் பீஸாக்குகிற படம்! பிசாசை திரையில் பார்த்து பயந்திருக்கிறோம்… வியந்திருக்கிறோம்…. வியர்த்திருக்கிறோம்… அலறியிருக்கிறோம்…. முதன் முறையாக கண்ணோரத்தில் கவலை ததும்ப காற்றில் தவழும் அந்த உருவத்திற்காக தழுதழுக்க ஆரம்பிக்கிறோம். ‘ஐயோ பவானி. என் தெய்வமே…’ என்று பெற்ற அப்பன் கதறுகிற நேரத்தில் பொளக்கென எட்டிப் பார்க்கும் அந்த கண்ணீர் துளிகள்தான் இந்த படத்தின் கைதட்டல்கள். இத்தனை காலம் பிசாசுக்கென செதுக்கப்பட்டிருந்த பிம்பத்தை…
Page 10 of 16« First...89101112...Last »

all news