Press Releases

senjittaley
தலைப்பு சற்று வித்தியாசமாக இருந்தாலும் பெண்களை அவதூறு செய்கிற கதையல்ல . காதல்தோல்வியடைந்த கதாநாயகன் தன் வாழ்வில் சந்திக்கின்ற பிரச்சனைகளும் இறுதியில் அவனுக்குக் கிடைக்கின்ற தீர்வும் சமீப காலங்களில் காதல் மலினப்பட்டுவருகின்றதா என்பதற்கான விடையும் படத்தின் கதைக்கருவாகும். காதல் குறித்த மற்ற தமிழ்த்திரைப்படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதையம்சம் கொண்டது. இத்திரைப்படத்தின் இயக்குனரும் கதாநாயகனுமான எழில் ஐம்பதிற்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்தும் சில திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியவர்; மேலும் இவரது…
punniyakodi
புண்ணியகோடி இந்தியாவின் முதல் சமஸ்க்ருத அனிமேஷன் திரைப்படமாகும். இது crowd funded ( குழு முதலீடு ) மற்றும் crowd sourced முறையில் செய்யப்படும் ஒரு புதிய முயற்சி . இப்படம் உண்மையை மட்டும் பேசும் ஒரு பசுவின் கதை. இப்படம் மனிதனின் பேராசையால் இயற்கைக்கு உருவாகும் தீங்கை பொழுது போக்கு விஷயங்களோடு சேர்த்து கூறும் புதுமையான ஒரு படைப்பு . இப்படத்தின் மூல கதை மஹாபாரத காவியத்தில் இருந்து…
Thiri
தமிழ் சினிமாவில் தந்தை – மகன் உறவை மையமாக வைத்து வந்த படங்கள் குறைவு என்றாலும், அவை யாவும் தமிழக ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிந்த திரைப்படங்கள் ஆகும். தற்போது அந்த வரிசையில் இணைய தயாராகிவிட்டது அஸ்வின் கக்கமனு – சுவாதி ரெட்டி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் ‘திரி’. ‘சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ஏ.கே. பாலமுருகன் மற்றும் ஆர். பி. பாலகோபி தயாரித்து வரும் இந்த ‘திரி’ படத்தை…
kv
சிறந்த படைப்பாளியாக தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருப்பவர் இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். சமீபத்தில் வெளியாகி அமோக வெற்றி பெற்ற கோ 2 திரைப்படத்திற்காக இவர் இசையமைத்த “கண்ணம்மா…’ மற்றும் “கோகிலா…” பாடல்கள் இள வட்டாரங்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றது. இப்படி ஒரே படத்திலேயே தமிழக ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிந்த லியோன் ஜேம்ஸ் தற்போது ஜீவா – காஜல் அகர்வால் நடித்து கொண்டிருக்கும் ‘கவலை…
savarakaththi Mysskin
தமிழ் திரைப்படங்களில் ஆரம்ப காலத்திலிருந்தே நமது தினசரி வாழ்க்கைக்கு உதவும் சிறு தொழில்களைச் செய்து வாழ்ந்துவரும் சாதாரண மக்களைப் பற்றியான பல பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. எம் ஜி ஆர் நடித்த படகோட்டியில் வரும் தரைமேல் பிறக்க வைத்தான், விவசாயி படத்தில் வரும் கடவுள் எனும் முதலாளி, ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தின் நான் ஆட்டோக்காரன், அண்ணாமலை படத்தின் வந்தேன்டா பால்காரன் போன்றவை இதன் புகழ்பெற்ற உதாரணங்கள். வெளிவரப்போகும் சவரக்கத்தி திரைப்படம்…
Suseendran-Maveeran Kittu
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் ஏசியன் சினி கம்பைன்ஸ் ஐஸ்வர் வி. சந்திரசாமி மற்றும் நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் இணைந்து தயாரிக்கும் படம் ‘மாவீரன் கிட்டு’. இந்தப் படத்துக்கு வசனம், பாடல்களை எழுதுகிறார் கவிஞர் யுகபாரதி. டி இமான் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பழனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கதாநாயகனாக விஷ்ணு விஷால், அவருக்கு ஜோடியாக ஶ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி…
pottu
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் – வடிவுடையான். படம்…
lovelin
அழகிய தோற்றத்திற்க்கும் எதார்த்த நடிப்பாற்றலுக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கிய சகோதரிகள் சரிதா மற்றும் விஜி. பல எண்ணற்ற படங்களில் நடித்து அனைவரின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெற்ற இவர்களின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய இளமை ததும்பும் கதாநாயகி அறிமுகமாகவுள்ளார். சந்திரசேகர் – விஜி தம்பதியின் மகளான லவ்லின் விரைவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். சிறு வயது முதலே நடிப்பின் மேல் உள்ள ஈர்ப்பால் கதாநாயகியாக உருவாகவேண்டும் என்ற…
matraan
டிஜிட்டல் புரட்சியில் முக்கியமான வரவு வீடியோ கேமரா அமைந்த ஆண்ட்ராய்டு செல்போன்கள் மற்றும் சிறிய வகை கையடக்க கேமராக்கள், காதலியுடனோ அல்லது மனைவியுடனோ அந்தரமாக இருப்பவர்கள் அதை படம்பிடித்து வைத்துக்கொண்டு பின் வரும் நாட்களில் அதை பார்த்து ரசிக்க ஆசைப்படுகிறார்கள். சில நேரங்களில் அந்த செல்போன் தவறுதலாக காணாமல் போனாலோ அல்லது பழுது பார்க்க தரும்போது அந்த வீடியோ காட்சியை காணும் நபர்கள் தான் பார்த்து ரசிப்பதோடு நண்பர்களுக்கும் அனுப்புவது.…
doop light
கோடம்பாக்கத்தில் டூப் லைட் என்றொரு படம் தயாராகி வருகிறது. (பின்னாளில் வரிவிலக்கு வேண்டி இதை எப்படி தமிழ் படுத்துவார்களோ? அந்த ஈசனுக்கே வெளிச்சம்) ” எங்கள் படத்தின் தலைப்பானது வெறும் கதையோடு மட்டும் பயணிக்காமல், கதாப்பாத்திரத்தோடும் ஒட்டி இருக்க வேண்டும் என்று நாங்கள் கருதினோம். அந்த தேடலின் முடிவில் நாங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பு தான் ‘டூப்லைட்’. அதுமட்டுமின்றி பாலிவுட் மாச்சோ – மேன் சல்மான் கான் அவர்களும் அவரின் புதிய…
Enda thalaila ennai vekkala
‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ என்னும் வார்த்தையை கேட்டிராதவதர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. அதற்கு காரணம் பெற்றோர்கள். இப்படி சிறுவயதிலிருந்தே நம் வாழ்க்கையோடு ஒட்டிக்கொண்டு பயணிக்கும் அந்த வார்த்தையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது தான், இசையமைப்பாளர் – பாடகர் ரெஹானா ‘யோகி & பார்ட்னர்ஸ்’ சார்பில் தயாரித்து வரும் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ திரைப்படம் . அறிமுக இயக்குனர் வி. விக்னேஷ் கார்த்திக் கதை எழுதி இயக்கும் இந்த…
selvi
சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “ செல்வி “ பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா உட்பட ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. தெலுங்கில் “ பாகுபங்காராம் “ என்ற பெயரில் தயாராகும் படமே “ செல்வியாக தமிழில் உருவாகிறது.…
nigeriaya
ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ‘கபாலி’ படம் தலைநகர் அபுஜாவில் இரண்டு காட்சிகளும், மற்றொரு பெரிய நகரான லாகோஸ்-ல் இரண்டு காட்சிகளும், போர்ட் ஹர்கோர்ட், கனோ ஆகிய ஊர்களில் தலா ஒரு காட்சி என மொத்தம் 6 காட்சிகள் திரையிட்டுள்ளார்கள். நைஜீரியா தலைநகரான அபுஜா-வில் வசிக்கும் ரஜினி ரசிகர்களான தமிழ்நாட்டைச் சேர்ந்த திலீப், எல்விஸ், ராஜேந்திரன், ராஜ், கணேஷ், செந்தில், ஹரி ஆகியோர் அங்கு வசிக்கும்…
Madhan-88
ஜெ.கே மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக A.ஜெயகுமார் தயாரிக்கும் படம் “ 88 “ இந்த படத்தில் மதன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் டாக்டர் ராஜசேகரின் தங்கை மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக உபாஷ்னாராய் நடிக்கிறார். இவர் மிஸ் இண்டியா ஏசியா 2015 ல் பட்டம் வென்றவர். மற்றும் ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, மீராகிருஷ்ணன், பவர்ஸ்டார், சாம்ஸ், அப்புகுட்டி, சாப்ளின்பாலு, சிசர்மனோகர், சேரன்ராஜ், பாய்ஸ் ராஜன் ஆகியோர்…
namathu
மோகன்லால் – கவுதமி நடிக்கும் நமது திரைப்படம் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் இந்த மூன்று மொழிகளிலும் ஒரே தேதியில் ஆகஸ்ட் 5 இல் ரிலிஸ் ஆகிறது.. மோகன்லால் – கவுதமி ஜோடி சேர்ந்து நடிக்க மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழில் ஒரு படம் தயாராகிறது. தெலுங்கில் அந்தப் படத்திற்கு “ மனமன்தா “ என்றும் தமிழில் “ நமது “ என்றும் பெயர் சூட்டி உள்ளார்கள். சாய் ஷிவானி வழங்க,…
vedhalam sollum kadhai
கொடைக்கானல் ஓண்ட் மியூசிக் விடியோவை இயக்கிய ரதிந்தரன் ஆர் பிரசாத் ஒரு முழு நீள திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். அதற்கு ‘இது வேதாளம் சொல்லும் கதை’ என்று பெயர் இடப்பட்டுள்ளது. இதில் அஷ்வின் (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜீரோ), மற்றும் குரு சோமசுந்தரம் (ஆரண்ய காண்டம், ஜோக்கர்) இணைந்து நடிக்க உள்ளனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் இத்திரைப்படத்திற்கான இசைப்பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டார். பிரபல ஹாலிவுட் நடிகரும், மல்யுத்த வீரருமான க்ரெக் ப்யூரிட்ஜ்(…
Skill India Week celebrations
சென்னை: மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் (Ministry of Skill Development &  Entrepreneurship) சார்பில் வேலை வாய்ப்பு முகாமை கிண்டி தொழிற்பேட்டையில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மற்றும் நீயான நானா கோபிநாத் தொடங்கி வைத்தனர். ஒரு வார காலம் நடக்கும் இந்த முகாம், கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சிடிஐ வளாகத்தில் நடக்கிறது. டிஜிடல் இந்தியா, தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா வரிசையில்…
saya
சாயா என்பதற்கு சக்தி நிறைந்த என்று பொருள். அந்த சக்தி நிறைந்த வார்த்தைக்கும் ஆத்ம சக்திக்கும் நல்ல நோக்கத்திற்குமான தொடர்பு இருப்பதால் படத்திற்கு சாயா என்று பெயரிட்டுள்ளனர். சந்தோஷ் என்கிற புதுமுகம் அறிமுகமாகிறார். அவருடன் டூரிங் டாக்கீஸ் படத்தின் நாயகியாக காயத்திரி நடிக்கிறார். மற்றொரு நாயகியாக ஓம் சாந்தி ஓம் படத்தில் நடித்த கௌதமி செளத்ரி நடிக்கிறார். காட்டிற்குள் நடக்கும் கடுமையான சண்டைக் காட்சிகளில் பயிற்சி எடுத்துக்கொண்டு நடித்திருக்கிறார் சோனியா…
andhamaan
சுதா மூவிஸ் கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் ’அந்தமான்’ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இப்படத்திற்காக எஸ்.பி.எல்.செல்வதாசன் இசையில், டி.ஆர்.எஸ்.ரமணி ஐயர் எழுதிய 6 பாடல்களும் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது. படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு பாடல்களும் ஒவ்வொரு விதத்தில் அமைந்துள்ளது. அதிலும், கானா பாலா பாடியுள்ள “காலை மாலை தெரியாம குடிக்கிற மனுஷா…குடும்பத்தைவிட பாழாய் போன குடிதான் பெருசா….”…
siranjeevi
சீயான் விக்ரம் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் “இருமுகன்” படத்தின் தெலுங்கு டைட்டில் மற்றும் டீசரை ஆந்திராவின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி வெளியிட்டார். விக்ரம், நயன்தாரா முதன்முறையாக ஜோடி சேரும் இப்படத்திற்கு தெலுங்கில் “இன்கோகடு” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற, தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகங்களின் பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது வழங்கும் விழாவில் இன்கோகடு படத்தின் டீசரை வெளியிட்ட மெகா ஸ்டார்…
Page 2 of 1512345...10...Last »