Press Releases

oru celluloid kadhal
  உலகிலேயே அற்புதமான ஒன்று காதல் என்பதைக் கொண்டாடும் தினமான பிப்ரபரி 14ந் தேதி அன்று சினிமாவிலும் ஒரு அற்புதமான நிகழ்ச்சி நடந்தேறியது. எப்பொழுதும் இசை ஆல்பம் வெளியீடு மக்கள் கூடியிருக்கும் பொது இடங்களில் நடப்பது அரிது. அதுவும் காதல் இசை ஆல்பம் வெளியீடு என்றால்  சொல்ல வேண்டுமா! இதோ! காதலர் தினமான பிப்ரபரி 14ந் தேதி அன்று எம் கியூப் ஆட் கிரியேட்டர்ஸ் சார்பில் ஒரு செல்லுலாயிட் காதல் என்ற…
trisha-in-function
இனி தமன்னா, த்ரிஷா கலந்து கொள்ளும் விழாக்களில் கலந்து கொள்ள மாட்டாரு போலிருக்கே? என்ற ஐயத்துடன் கிளம்பினார்கள் ரசிகர்கள். இடம் ஆகம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா. ஏனிந்த ஐயப்பாடு? அம்புட்டுக்கும் காரணம் விழாவுக்கு வந்திருந்த அபிராமி ராமநாதனின் பேச்சுதான். நிகழ்ச்சியில் பேசிய அபிராமி ராமநாதன் “என்னை பேச அழைக்கும்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் பெண்மணி நடிகர் என்று சொல்லி அழைத்தார். அது தப்பில்லை . நான் ஒரு படத்தில் நடித்து…
manithan
“என்றென்றும் புன்னகை” வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் I.அஹமத் உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் புதிய திரைப்படம் “மனிதன்”.  “ரெட் ஜெயன்ட் மூவிஸ்” பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தில் “ஒரு கல் ஒரு கண்ணாடி” மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஹன்சிகா மோத்வாணியுடன்இரண்டாவது முறையாக உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ்,விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில் இயக்குநர் அஹமத்துடன்,  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முதல்முறையாக கை கோர்த்து, அருமையான நான்கு பாடல்களை அமைத்துக் கொடுத்துள்ளார்.  படத்தின் ஒளிப்பதிவை மதி கையாள்கிறார்.  படத்தின் கலை இயக்குநர்…
jaihind
நடிகர் அர்ஜுன் நடிகராக ஜெயித்ததோடு மட்டுமல்லாமல் இயக்குநராகவும் ஜெயித்திருக்கிறார். அவர் இயக்கிய படங்களில் பெரும்பாலும் சமுதாயத்துக்கு தேவயான கருத்துகளே மையமாக இருக்கும். அனைத்து தரப்பினருக்கும் எளிமையாக புரியும் வகையில் அவரது படங்களும் இருக்கும். கடந்த வருடம் அவர் நடித்து இயக்கிய ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகம் தமிழில் வெளியானது. இந்தப் படம் அபிமன்யூ என்ற பெரியரில் கன்னடத்திலும் வெளியானது. குழந்தைகளின் கல்வியும் அதன் முக்கியதுவத்தை குறித்து பேசியிருந்தது “ஜெய்ஹிந்த் 2”.…
kaali
“இறுதிச்சுற்று” படத்தை தமிழ் சினிமா உலகமும் தமிழ் சினிமா ரசிகர்களும் சிலாகித்துக்கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இறுதிச்சுற்று படத்தைப்பற்றி பேசும் அனைவரும் இயக்குநர் சுதா கொங்கரா, மாதவன், கதாநாயகி ரித்திகா சிங், சந்தோஷ் நாராயணன் பற்றியும் பேசுகிறார்கள். கூடவே அவர்கள் மறக்காமல் குறிப்பிடும் இன்னொரு பெயர், காளி வெங்கட். தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை காமெடி கம் குணச்சித்திர நடிகர் காளி வெங்கட்டுக்கு இறுதிச்சுற்று மிகப்பெரிய வரவேற்பைத் தந்திருக்கிறது. தேவி கருமாரியாக இருந்தாலும்,…
NT
பர்மா படத்தை தொடர்ந்து ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்சன வெம்புட்டி, கே.ஜெயச்சதிரன் ராவுடன் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ நவரச திலகம் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் மா.கா.பா.ஆனந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு, பாவா லட்சுமணன், மீராகிருஷ்ணன்,லஷ்மி, மகாதேவன் ஆகியோர் நடிக்கிறார்கள். வித்தியாசமான வேடம் ஒன்றில், இதற்குத் தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களின்…
yaman
விஜய் ஆண்டனி நடிக்கும் ‘எமன்’ படத்தை தயாரிக்கும் லைகா productions. திரைப் பட தயாரிப்பில் வேகமாய் வளர்ந்து வரும் லைகா productions நிறுவனம் தரமான கதைகளையும் , வர்த்தக ரீதியாக வெற்றி பெறக் கூடிய நட்சத்திரங்களையும் , இயக்குனர்களையும் வைத்து படம் தயாரித்து வருகின்றனர். நான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி , தொடரும் வெற்றிகளால் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்து உள்ள விஜய் ஆண்டனியை தங்களது அடுத்த தயாரிப்பான ‘எமன்’…
Kadhalum-Kadanthu-Pogum
‘காதலும் கடந்து போகும்’ ஒரு காதல் கலந்த காமெடி படம். முழுக்க காதல் கலந்த காமெடி படம் என்பது தமிழ் சினிமாவில் மிகவும் அரிது. ஒன்று காமெடி அதிகமாக இருக்கும் இல்லையென்றால் காதல் கலந்த காட்சிகள் அதிகமாக இருக்கும். இப்படத்தில் இறுதிகாட்சிகளுக்கு முன்பு வரை காட்சிகளோடு இழையோடும் காமெடி இருந்து கொண்டே இருக்கும். ‘சூது கவ்வும்’ படத்தின் கதைக்கு எதிர் திசையில் இப்படத்தின் கதையை அமைத்து அப்படத்தின் சாயல் இப்படத்தில்…
sangu chakaram
புதுப் புது பரிணாமப் பரிமாணங்களில் உருக்கொண்டு கருக் கொண்ட கதைகள், வியப்பூட்டும் படங்கள்… இவற்றின் ஆலவட்டம் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது . ஆனால் குழந்தைகளுக்கான படங்கள் என்பதை மாசு மருவில்லாமல் புரிந்து கொண்டு அவர்களுக்காகவும் அவர்கள் வழியே குடும்பத்தோடு படம் பார்க்க வரும் மக்களுக்காகவும் படம் எடுக்கும் படைப்பாளிகள், மிகக் குறைவாகவும் சொல்லப் போனால் அரிதாகவுமே இருக்கிறார்கள். அந்த வகையில் குடும்பத்தோடு வந்து பார்த்து,…
prabu soloman
மைனா, கும்கி, கயல் என புதுமுகங்களோடு தனது பயணத்தை தொடங்கியவர் பிரபுசாலமன். தனுஷை வைத்து பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலையில் இருந்த அவரை சந்தித்தோம்… · புதுமுகங்கள் என்கிற தாரக மந்திரம் தளர்ந்து போனது ஏன் ? அந்த நினைப்பு எப்போதும் எனக்கு உண்டு…சில கதைகளின் களம் புதுமுகங்களுக்கு ஏற்றதாக இருக்கும். சில கதைகளில் அனுபவம் மிக்கவர்கள் தேவைப்படும். இப்போது…
Metro tamil movie stills
சென்னை போன்ற பெரிய நகரங்களில் நாளுக்குநாள் கொலை, கொள்ளை போன்றவை மட்டுமல்ல செயின் பறிப்பும் அதிகரித்து வருகிறது .தங்கம் தொடர்பான பெண்களுக்கு எதிரான குற்றங்களை மையமாக வைத்து ‘மெட்ரோ’ என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது.இப்படத்தை எழுதி இயக்குகிறார் ஆனந்த கிருஷ்ணன். இவர் ஏற்கெனவே ‘ஆள்’ படம் மூலம் ஊடகங்களின் பரவலான கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றவர். இந்த ‘மெட்ரோ’ படத்துக்காக ஒரு செயின் பறிப்பு சம்பவத்தை படமாக்கிக் கொண்டிருந்தது…
arundhadhi
நாய்கள் ஜாக்கிரதை படத்தின் மூலம் கவனம் கவர்ந்த நடிகை அருந்ததி. இவர் ஆக்க்ஷன் காட்சிகளில் அதிரடியாக அசத்தும் புதிய படம் அர்த்தநாரி. கிருத்திகா பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஏ எஸ் முத்தமிழ் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்கியுள்ளவர் சுந்தர இளங்கோவன். இயக்குனர் பாலாவிடம் அசோசியேட் இயக்குனராகப் பணியாற்றியவர் இவர். படத்தைப் பற்றி உற்சாகமாகப் பேசும் அருந்ததி ” அர்த்தநாரி படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த ஒரு முழுமையான ஆக்க்ஷன்…
parkkalam pazhagalam
பார்க்கலாம் பழகலாம் படக் கதையின் கதாநாயகன் ஒரு ஓவியன். இவர் ஓவியக் கூடம் வைத்திருக்கும் இடம் பஸ் ஸ்டாப் அருகில். அந்த வழியாக வரும் கல்லூரி பேருந்தில் கதாநாயகி தினமும் வரும் போது ஹீரோ வரையும் படங்களை தினமும் பார்ப்பது உண்டு. இதை அதே பேருந்தில் பயணிக்கும் ஹீரோவின் நண்பர்கள் கவனித்து ஹீரோவிடம் ஹீரோயின் உன்னை லவ் பண்ணுவதாக கதைவிடுகின்றனர். இதை நம்பி ஹீரோ, ஹீரோயினை, பாலோ பண்ண, ஒரு…
azhiyadha kolangal
திரைமேதை அமரர் பாலுமகேந்திராவின் மாணவர்கள் சிலர் ஒன்றுசேர்ந்து, அவருக்கு சமர்ப்பணம் செய்யவிருக்கும் படம் இது. படத்தின் இயக்குனர் எம்.ஆர். பாரதி படம் குறித்துச் சொல்கிறார்… “பாலுமகேந்திராவிடம் ஒரு உதவியாளராக பணியாற்றவில்லையென்றாலும், ஒரு சினிமா பத்திரிகையாளனாக சுமார் 20 வருடம் அவரோடு நட்பைத் தொடர்ந்தவன். பாலுமகேந்திராவின் படங்களைப் போலவே தரமான, மிக இயல்பான படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். எனது முதல் படமான இந்த அழியாத கோலங்கள் அப்படி…
thozhan
“Stepup2stayup” என்ற பிரச்சாரம் மூலம் பேருந்துகளில் படியில் நின்று பயணம் செய்வது குறித்த விழிப்புணர்வை “தோழன்” இயக்கம் இன்னபிற இயக்கங்களுடன் சேர்ந்து நடத்துகிறது. இதன் பகுதியாக சென்னையில் மொத்தம் 67 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடப்பதின் துவக்க நிகழ்ச்சி இன்று தி. நகர் பேருந்து நிலையத்தில் நடக்கிறது. இந்த எண்ணிக்கை நமது 67-வது குடியரசு தின வாரத்தை குறிக்கிறது. தோழன்அமைப்பு2007ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இன்று சென்னையில் மட்டும் 2000 தன்னர்வலர்களுடன் இயங்கி வருகிறது. மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, இரத்த, கண் மற்றும் உறுப்பு தானம், பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஆகியவை குறித்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பேருந்துகளில் படியில் பயணம் செய்வது சாலை விபத்துகள் நடக்க முக்கிய காரணமாக உள்ளது. படியில் பயணம் செய்பவர்களில் 60 சதவீதம் பேர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள். மேலும் படியில் பயணம் செய்வதால் விபத்தில் இறப்பவர்களில் 90 சதவீதத்தினரின் வயது 16 முதல் 24 வரை உள்ளதாக ஒரு அதிர்ச்சியான புள்ளி விவரம் உள்ளது. நமது அக்கறையின்மையால் நாம் இளைய சமுதாயத்தின் உயிரை இழப்பதை அனுமதிக்க முடியாது. இதை தடுக்க நம் தன்னார்வலர்கள் பேருந்து நிறுத்தங்களில் பிரச்சார துண்டு பிரசுரங்களை விநியோகிப்பார்கள். மேலும் பேருந்து நிலையங்களில் உள்ள பயணிகளிடம் படியில் பயணம் செய்வதால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைப்பர். தோழன் அமைப்பு “விபத்தில்லா தேசம்” மூலம் தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் தொடர்ந்து படியில் பயணம் செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என உறுதி ஏற்றுள்ளோம்.
adida melam
டாட்டூ கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் அபய் கிருஷ்ணா தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் படம் ‘அடிடா மேளம்.’ இப்படத்திற்கு முதலில் ‘மேளதாளம்’ என பெயர்  வைக்கப்பட்டிருந்தது.படத்தின் கதையை கேட்ட தயாரிப்பாளர் கலைபுலி தாணு, இப்படத்திற்கு ‘அடிடாமேளம்’ என்பதுதான் சரியான தலைப்பு என்றாராம். இதை பார்ப்பவர்களிடம் பெருமையாக கூறி வருகிறார் அபய் கிருஷ்ணா. இப்படத்தில் ‘நாடோடிகள்’ அபிநயா கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், ஊர்வசி, மயில்சாமி, மிப்பு, ‘அவன் இவன்’ ராமராஜன்,…
amma endral
நம்ம ஊரு இளைஞர்கள் பீப் ஸாங் இசைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே வயதுதான்… அம்மாவை போற்றி ஒரு பாடலை உருவாக்கி அதை காணொளி வடிவத்திலும் வெளியிட்டிருக்கிறார் ஒரு நடிகர். நான் தமிழன்டா… என்று மூச்சுக்கு முன்னூறு தடவை மாரில் அடித்துக் கொள்கிற நபர்கள், ஒரு கேரள வாலிபரின் இந்த முயற்சிக்கு தலை தாழ்ந்து வணக்கம் சொல்லியே ஆக வேண்டும். விக்ரமன் இயக்கத்தில் ‘நினைத்தது யாரோ’ படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ரஞ்சித்மேனன்.…
pkp
சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொடூரமாகச் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படத்தின் இயக்குநர் கு.கணேசன் மற்று தயாரிப்பாளர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை(சம்மன்) அனுப்பியுள்ளது. இசைப்பிரியாவின் தாய் மற்றும் சகோதரி சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில் இவ் அழைப்பாணையினை சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பியுள்ளது. இசைப்பிரியா குடும்பத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விபரங்களை விளக்கியும், எதிர்வரும் 4ஆம் திகதி இருவரும்…
tea kadai raja Stills 002a
sarojadevi
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அவர்கள் தன்னுடைய பிறந்தநாளை இன்று கொண்டாடினார். இந்நிகழ்வில் நடிகர் சிவகுமார் , நடிகர் சங்க நிர்வாகிகள் மனோபாலா , குட்டி பத்மினி , உதயா , ரமணா , ஹேமசந்திரன் , அயுப் கான் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி அவர்கள் பேசியது , நான் முதலில் நடிகர் சிவகுமார் அவர்களிடம் தான் சென்னைக்கு வந்து பிறந்த நாள் கொண்டாடுவது…
Page 10 of 19« First...89101112...Last »

all news