அரசியல்

rupee
2005ஆம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் மற்றும் ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுக்களை மார்ச் 31ம் தேதிக்கு பிறகு திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்திருந்தது. ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து ஜூன் மாதத்துக்குள் இந்த நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது. இதற்கு சில விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டுக்கு முந்தைய நோட்டுக்கள்…
jayakanthan
எழுத்தாளர் ஜெயகாந்தன் சென்னை சாலிகிராமத்திலிருக்கும் பிரபல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவசர சிகிச்சை பிரிவிலிருக்கும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தி பரவிய கணத்திலிருந்தே உலகம் முழுவதுமிருக்கிற அவரது ரசிகர்கள், ‘அவருக்கு என்னாச்சோ?’ என்று அக்கறையோடு விசாரித்த வண்ணம் இருக்கிறார்கள். இன்று பிற்பகல் குளியலறையில் வழுக்கி விழுந்தாராம் அவர். இதனால் மயக்கமுற்ற ஜெயகாந்தனை அவசரம் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டதுடன், முக்கியமான…
santhan murugan perrarivalan
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை, ஆயுள்தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும் 3 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் ஆயுள்…
mkazhagiri
திமுகவில் இருந்து மு.க. அழகிரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் மதுரை மாவட்ட திமுக கூண்டோடு கலைக்கப்பட்ட நிலையில், இன்று அழகிரியே கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். திமுக தென் மண்டல பொறுப்பாளராக உள்ள அழகிரிக்கும் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வரும் நிலையில், தேமுதிகவுடன் கூட்டணிக்கு திமுக முயன்று வருகிறது. ஆனால், அதைக் கெடுக்கும் வகையில் விஜய்காந்தைத் தாக்கி அழகிரி பேட்டி தந்தார். இதையடுத்து அழகிரிக்கு கடும் எச்சரிக்கை…
saroja-admk
ஏற்காடு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரோஜா 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். இத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரோஜா 1, 42, 771 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மாறன் 64,655 வாக்குகளையும் பெற்றனர். வாக்குப்பதிவுக்காக தொகுதி முழுவதும் 290 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 269 வாக்குச்சாவடிகள் வெப்-கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பானது. இத்தேர்தலில் மொத்தம் 89.24% வாக்குகள் பதிவாகி இருந்தன. பதிவான அனைத்து…
douglas-devananda
இசைப்பிரியா படுகொலை செய்தி தொடர்பாக முழுமையான நீதி விசாரணை நடத்த வேண்டும். அதன் மூலம் உண்மையை தெளிவு படுத்த வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். இசைப்பிரியா படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பெண் விடுதலைப்புலி இசைப்பிரியா. இலங்கையில் உள்ள தமிழ் தொலைக் காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்தார். வன்னியில் நடந்த இறுதி கட்ட போரில் அவர் கொல்லப்பட்டதாக இலங்கை…
rajabakshe-tamilcinema
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்‌சே கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நான் நினைத்தால் பேஸ்புக்-யை இலங்கையில் தடை செய்வேன் என கூறியுள்ளார். புதன்கிழமை அன்று மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜபக்சே, பேஸ்புக் என்ற சமூகவலைத்தளத்தில் நச்சு போன்று என்னை பற்றி செய்திகள் பரவி வருகின்றது. அதில் வரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். நான் நினைத்தால் இலங்கையில் பேஸ்புக்கினை தடை செய்யும் வழிகள் அரசாங்கத்திடம்…
tamil-nadu-cops-
ஆந்திர மாநிலம் எல்லையில் சென்னை அருகே புத்தூ­ரில் பதுங்கி இருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்­டனர். இவர்களை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சண்டை நடத்தினர். இதில் தமிழக போலீ­சார் 2 பேர் ­கா­ய­முற்­ற­னர். தொடர்ந்து 12 மணி நேரம் ­ந­டந்­த ­போ­ராட்­டத்த்­திற்­கு ­பின்­னர் ம­தி­யம் 2 ம­­ணி­ய­ள­வில் ­ஒ­ரு ­பெண்­ணும், 3 கு­ழந்­தை­க­ளும் ­பத்­தி­ர­மா­க ­உ­யி­ரு­டன் ­மீட்­கப்­பட்­ட­னர். ம­தி­யம் 2. 30 ம­ணி­ய­ள­வில் ­வீ்­ட்டி­னுள் ­இ­ருந்­த ­பி­லால்மா­லிக், ­பன்­னா…
chandrababu-naidu
ஆந்திர மாநிலத்தைப் பிரிக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, வரும் 7ஆம் தேதி முதல் தில்லியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். அவர் ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: காங்கிரஸ் கட்சி இந்த நாட்டைச் சீரழித்து விட்டது. ஆந்திர மாநிலத்தை பேரழிவில் தள்ளி விட்டுள்ளது. தெலுங்கு பேசும் மக்களின் கவலைகளைத் தீர்க்காமல் மாநிலத்தைப் பிரிக்கும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. எனவே காங்கிரஸின்…
Kadri Gopinath, Saxophone Maestro, Senior Film Actor S Shivaram and AN Shrithi, 3D photographer launching the website of unique 3D foto club at a press conference in Bengaluru on Monday 27th May 2013. (Photo: IANS)
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் சிறையிலும் தனக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு கோரியதை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், முன்னாள் பீகார் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதையடுத்து லாலு ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில்…
rahul
தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் அவசர சட்டம் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமரை விமர்சித்ததற்காக ராகுல் வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்,.பி, எம்.எல்.ஏக்கள் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆனால் இதை செயல்படுத்தாமல் இருப்பதற்காக மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்து…
online-wordle
இந்தியாவின் உயர் கல்வி துறையில் தற்போதுள்ள புதிய சவால் தரமான கல்விதான். நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்கள், ஆயிரக்கணக்கான பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் உருவாகியுள்ளன. ஆனால், அதற்கு ஏற்றவாறு உயர்கல்வியில் பெரிய அளவில் தரம் இல்லை. உயர்கல்வி துறை தரம் மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் எடுத்து வருகிறது. இதற்காக தேசிய தொழில்நுட்ப வழி கல்வி மேம்பாட்டு திட்டம் (என்பிடிஇஎல்) 2003ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்…
stalin
மு.க. ஸ்டாலின், மா. சுப்பிரமணியன் சென்னை மேயராக இருந்தபோது ரூ. 417 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக தற்போதைய மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினர். கேள்வி நேரம் முடிந்த பிறகு அவர் அறிக்கை ஒன்றை வாசித்தார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, சாலைகள் அமைத்ததில் முன்னாள் மேயர்களான ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் இருந்த காலத்தில் ரூ.417 கோடிக்கு…
blinds problem
பார்வையற்ற பட்டதாரிகள் பிரச்னையில் அமைச்சரின் பேச்சில் உடன்பாடு ஏற்படாததால் முதல்வரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் என பார்வையற்ற பட்டதாரிகள் அறிவித்துள்ளனர். ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும்போது பார்வையற்றோருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணில் பார்வையற்றோர் மதிப்பெண் 40 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் கடந்த ஒரு வாரமாக திடீர் போராட்டங்களில் ஈடுபட்டு…
vinayagar-idols
சென்னையில் இன்று மட்டும் 1,400 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. கடந்த 9ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி மக்கள் தங்கள் வீடுகளில் சிறிய விநாயகர் சிலைகளை வைத்து பூஜித்தனர். பின்னர் அவற்றை கடந்த 11ம் தேதி முதல் கடலில் கரைத்து வருகின்றனர். சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை 14, 15, 16 மற்றும் 18ம் ஆகிய தேதிகளில் கடலில் கரைக்க அதிகாரிகள் அனுமதி…
1DMKProtest_Firstpost
லோக்சபா தேர்தலுக்கு திமுகவும் தயாராகிவிட்டது. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி முடிவெடுக்க திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொதுச்செயலர் க. அன்பழகன் ஆகியோருக்கு அக்கட்சியின் மாவட்ட செயலர்கள் கூட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், – லோக்சபா தேர்தல் தொடர்பான கூட்டணி உள்ளிட்டவற்றை முடிவு செய்யும் அதிகாரம் திமுக தலைவர் கருணாநிதிக்கும் பொதுச்செயலர் அன்பழனுக்கும் வழங்கி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…
15-vijayakanth-celebrates-independence-day-600
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இந்தியாவின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, கழகத் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கழக பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன், கழக தலைமை நிலைய செயலாளர் ப. பார்த்தசாரதி, எம்.எல்.ஏ., கழக துணை செயலாளர் எஸ். ஆஸ்டின், கழக இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இனிப்புகள் தவிர பள்ளி…
30-srilanka-protest-600-jpg
கொழும்பு: ஈழத் தமிழருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கக் கூடிய இலங்கை அரசியல் சாசனத்தின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இந்தியா தீவிரம் காட்டுவதைக் கண்டித்து கொழும்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜிவ்- ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தினால் உருவாக்கப்பட்டது இலங்கையின் அரசியல் சாசனத்தின் 13வது திருத்ததம். இதன்படி ஈழத் தமிழருக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைக்கும். ஆனால் அண்மைக்காலமாக அரசியல் சாசனத்தின் 13வது திருத்தத்தையே ரத்து செய்ய இலங்கை அரசு முயற்சிகளை மேற்கொண்டு…
manmohan-singh-02-high-res
டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து பிரதமர் மன்மோகன்சிங் ஆற்றிய சுதந்திர தின உரை: இந்தியா தொழில்நுட்பத்தில் வளர்ந்துள்ளது. நாடு வளர்ச்சிப்பாதையை நோக்கி முன்னேறி வருகிறது. வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். இந்தியாவை வேலை வாய்ப்பு நிறைந்த நாடாக உருவாக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறி வருகிறது. உத்தர்காண்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவு பெரும் கவலை அளிக்கிறது. உத்தர்காண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்படும். உத்தர்காண்டில்…
jayalalitha01
சேலத்தில் தலைவா படத்தின் திருட்டு விசிடி தயாரித்து விற்றவர்களை போலீசிடம் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். இதற்காக விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு திருட்டு சிடி தயாரிப்பதும் விற்பதும் சட்டப்படி குற்றமாகும். அன்பு ரசிகர்களே, தமிழ்நாட்டில் இன்னும் தலைவா படம் வெளியிடப்படவில்லை. அதற்குள் யாராவது திருட்டு சிடி விற்றாலோ, தயாரித்தாலோ அவர்களை பற்றி காவல் துறைக்கு தெரிவியுங்கள். நமது முதல்வர் மாண்புமிகு…
Page 7 of 7« First...34567

all news