அரசியல்

966d3633-60ff-4ca6-97de-e781cacd6b63_S_secvpf
ரெயில்களில் மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளில் பயணிக்கிற பயணிகளின் அந்தரங்கத்தை கருத்தில் கொண்டு இருக்கைகளின் ஓரத்தில் மறைவுக்காக (நடைபாதையில்) திரைகள் பொருத்தப்படுவது, கடந்த 2009-ம் ஆண்டு அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி ஆந்திர மாநிலம், அனந்தப்பூரில், பெங்களூர்-நாந்தெட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒரு ஏ.சி. மூன்றடுக்கு பெட்டியில் தீப்பிடித்தது. இதில் அந்த பெட்டியில் பயணம் செய்த 2 குழந்தைகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். 13…
rajini-thenikannan
அன்புள்ள தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம். நான் தங்களின் கடைகோடி ரசிகன். எனது பள்ளிக்காலத்தில் ரிலீஸான சிவா படத்தைப் பார்க்க தேனி கிருஷ்ணா திரையரங்கில் பத்து மணிக்காட்சிக்கு ஏழுமணிக்கே போய் காத்துகிடந்து, டிக்கெட் கவுண்டரில் நுழைய முடியாமல் மூச்சுத் திணறியவன். தேனியில் பிரபலமான தங்கக்குதிரை ரசிகர் மன்றத்து அண்ணன்கள்தான் என்னை தலைக்கு மேலே தூக்கி கவுண்டருக்குள் திணித்தார்கள். அப்படியும் எவனோ ஒரு புத்திசாலி ஈசியாக டிக்கெட் எடுக்க…
416f1892-e75b-46bd-8bd9-6c42052b0a3a_S_secvpf
கல்வித்துறையின் இந்த ஆண்டிற்கான பொறியியல் பட்டதாரி திறனறித் தேர்வு (GATE) கடந்த பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 2 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. மொத்தம் 8.89 லட்சம் பேர் இந்தத் தேர்வுகளை எழுதியிருந்தனர். இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மின் பொறியியல் பிரிவில் அங்கிட் கோயல் என்ற மாணவரும், இயந்திர பொறியியல் பிரிவில் சுபம் சிங் என்ற மாணவரும் முதலிடம் பெற்றுள்ளதாக அவர்களின்…
a4793a80-324b-4af3-a4dc-c27841d25797_S_secvpf
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளி ஒன்றில் பயின்றுவரும் 14 வயது மாணவன் சுவிர் மிர்சன்தானி ஒரு இந்திய வம்சாவளி மாணவன் ஆவான். இவன் அந்நாட்டு உத்தியோகபூர்வ ஆவணங்களில் பயன்படுத்தப்படும் சில எழுத்துகளின் உருவத்தை மற்றொரு வடிவத்தில் மாற்றி எழுதுவதன் மூலம் அமெரிக்க அரசு ஆண்டுக்கு 400 மில்லியன் டாலர் சேமிக்கமுடியும் என்ற திட்டத்தை தயாரித்துள்ளான். தங்களது பள்ளியில் நடைபெறும் அறிவியல் திட்டங்களின் ஒரு பகுதியாக வீணாக்குவதைக் குறைத்து…
download
பிரிட்டிஷ் கோடை நேரம் என்று குறிப்பிடப்படும் கடிகாரங்களை ஒரு மணி நேரம் முன்னோக்கி வைக்கும் நடைமுறையானது இங்கிலாந்தில் இன்று தொடங்குகின்றது. வரும் அக்டோபர் வரை இந்த நடைமுறையே அங்கு வழக்கத்தில் இருக்கும். பகலொளி சேமிப்பு நேரம் என்ற மற்றொரு பெயரும் இந்த வழக்கத்திற்கு குறிப்பிடப்படுகின்றது. கடந்த 1907 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த வில்லியம் வில்லேட் என்ற குதிரை சவாரியாளர் அதிகாலை நேரங்களில் அங்குள்ள காடுகளின் வழியே நீண்ட…
fbacc46e-a256-47a9-b402-03c71b22bb06_S_secvpf
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஜுட் மெட்கால்ப் (23). இவர் ‘கிளின்பெல்டார்’ என்ற உடல் பருமன் நோயால் அவதிப்படுகிறார். இந்த நிலையில் இவர் ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடிக்க முயன்றார். அப்போது பிடிபட்ட இவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனையும், 12 மாதம் சமூக சேவையும் செய்ய வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து அவர் லண்டனில் உள்ள ஒரு…
40b06a82-2867-4083-9cdf-84b9dcc63f7f_S_secvpf
பத்தே நிமிடங்களில் லேப்டாப் கம்ப்யூட்டர்களை பிரித்து, பின்னர் மீண்டும் பொருத்தி சாதனை படைத்த கோவையை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பிரிட்டைன் நாட்டிலுள்ள உலக சாதனைகளை அங்கீகரிக்கும் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளது. கோவை மாவட்டத்தின் கோயில்பாளையம் பகுதியில் கம்ப்யூட்டர்களை பழுது நீக்கும் தொழில் செய்து வருபவர், பிரபு மகாலிங்கம். இவரது மகள் ஆதர்ஷினி(9) அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறாள். துறுதுறுப்பு…
460b6e76-8b01-45e7-968b-6c3c24cacd8c_S_secvpf
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்–டயானா தம்பதியின் மூத்த மகன் இளவரசர் வில்லியம். இவரது மனைவி இளவரசி கேத் மிடில்டனுக்கு கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பு பற்றிய செய்தி தெரிய வந்தவுடன் பிரிட்டைன் மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் திளைத்தனர். 41 குண்டுகள் முழங்க புதிய இளவரசருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இளவரசர் ஜார்ஜ் என்று பெயரிடப்பட்ட மகனின் பிறப்புக்கு பிறகு பொது நிகழ்ச்சிகளில்…
ecf3d953-39d9-4d8a-9096-b1f9e69e8e1c_S_secvpf
உலகப்புகழ் பெற்ற ஆலிவுட் நடிகை ”மர்லின் மன்றோ” ஏராளமான ஆங்கிலப் படங்களில் நடித்தவர். அவரது நடையழகும், உடையழகும் மிகவும் பிரசித்தி பெற்றது. ஹாலிவுட் சினிமா உலகின் ராணியாக விளங்கியவர், நடிகை மர்லின் மன்றோ. அவருக்கு இணையாக அகில உலகப் புகழ் பெற்ற நடிகை வேறு எவரும் இல்லை. செல்வத்தில் புரண்டு செருக்கோடு வாழ்ந்தவர், மர்லின் மன்றோவின் கடைக்கண் பார்வைக்காக எத்தனையோ கோடீசுவரர்கள் தவம் கிடந்தார்கள். அவரது வாழ்க்கையின் பிற்பகுதியே இப்படி…
89860d07-7f39-476e-8b45-a977b0370e7a_S_secvpf
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவது என்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. அதுவும் ஒரு காலை இழந்த நிலையில் நடைபயணம் மேற்கொண்டு சிகரத்தை எட்டுவது சாமானிய மனிதர்களால் முடியாது. ஆனால் அந்த சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறார் அருணிமா சின்கா. அருணிமா சின்கா (வயது 25), உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர். வாலிபால் வீராங்கனையான அருணிமா, கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி லக்னோவில்…
f6ea9156-7912-46f4-a050-d14febc8091c_S_secvpf
சூரிய மண்டலத்திற்கு இரண்டு பில்லியன் கிலோ மீட்டர் தொலைவிற்கு வெளியே சனி மற்றும் யுரேனஸ் கிரகங்களுக்கு இடையே ஒரு குட்டி கிரகத்தை வானியல் ஆராயச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சனி கிரகத்தை போல் இந்த குட்டி கிரகத்தை சுற்றி பனிக்கட்டி மற்றும் எறி கற்கள் நிறைந்த இரண்டு வளையம் காணப்படுகிறது. இந்த இரண்டு வளையங்களுக்கிடையே 14 கி்.மீ இடைவெளி உள்ளது. 7 கி.மீ அகலமும், சில நூறு மீட்டர்கள் அடர்த்தியும் கொண்டுள்ளது. நீல்ஸ்…
ab982738-40c1-46a7-8b82-25c11c284d4a_S_secvpf
ஆஸ்திரேலியாவில் முதன்முதலாக 1817ல் அச்சிடப்பட்ட நூறு 10 ஷில்லிங் நோட்டுகளில் மிச்சமிருப்பதாகக் கருதப்படும் ஒரேயொரு நோட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் 3,10,000 அமெரிக்க டாலருக்கு விற்பனை ஆனது. இந்தத் தகவலைக் கூறிய நோபில் நாணயவியல் நிறுவனத்தின் உரிமையாளர் ஜிம் நோபில் உலகம் முழுவதிலுமிருந்து இதற்கான ஏலத்தொகை குறிப்பிடப்பட்டிருந்தது என்று தெரிவித்தார். காலனியின் ரூபாய் நோட்டு விற்பனையில் இது பெரிய சாதனையாகும் என்று குறிப்பிட்ட ஜிம் இதனை வாங்கியவர் ஒரு பெரிய…
d24c48f5-0435-4921-bb4a-9852876c14dd_S_secvpf
இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக போலியோ நோய்த்தாக்கம் எதுவும் காணப்படாத நிலையில் உலக சுகாதார கழகம் அதற்கான சான்றிதழை இந்தியாவிற்கு இன்று வழங்கியது. அதுமட்டுமின்றி தென் கிழக்கு ஆசியாவே போலியோ நோய் இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தியாவிலிருந்து போலியோ நோய் ஒழிக்கப்பட்டது உலக சுகாதார முயற்சிகளில் பெரும் சாதனையாகக் கருதப்படுகின்றது. ஐந்து வருடங்களுக்கு முன்னால் உலகளவில் பாதி சதவிகித நோய்த்தாக்கம் இந்தியாவில் இருந்ததாகக் கூறப்பட்டது. சுகாதார சவால்களும்,…
1be12f45-d224-43b0-82f2-12f3bce22ae6_S_secvpf
குவாலியரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் இன்ஜினியரிங் மாணவர் ஒருவர் புலி உறைவிடத்தில் சுவரேறிக் குதித்து நடனமாடிய காட்சி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவரும் யசோனந்தன் கவுசிக் என்ற அந்த மாணவர், வனவிலங்கு பூங்காவுக்கு சென்று, அங்குள்ள புலி உறைவிடத்தின் 20 அடி உயர மதில் சுவரை தாண்டி உள்ளே குதித்ததுடன் தனது மேலாடையை கழற்றிவிட்டு ஆட்டம் போட்டார். அப்போது…
58a3149e-4a8b-4363-9cdc-13fa59fb42f7_S_secvpf
கேரளாவைச் சேர்ந்த முகமது அலி கேரளாவின் கேலிகட்டிலிருந்து அபுதாபி வழியாக ரியாத் செல்லும் விமானத்தில் கடந்த 6ம் தேதி கிளம்பினார். ஆனால் கடுமையான மேகமூட்டம் காரணமாக அந்த விமானம் அல் அய்ன் வழியாக திருப்பி விடப்பட்டது. பின்பு தாமதமாக அபுதாபி விமான நிலையத்தை அடைந்தது. வெகுநேரமாகியும் விமானம் கிளம்பாததால் பயணிகள் பதற்றமடைந்தனர். உடனடியாக ரியாத் செல்லும் பயணிகள் அனைவரும் அபுதாபியிலிருந்து ரியாத்திற்கு செல்லும் மற்றொரு விமானம் மூலம் செல்ல அறிவுறுத்தப்பட்டார்கள்.…
ae7d717a-274a-46c2-8e7a-a50f23ec9ce9_S_secvpf
தொழில்நுட்ப ஆர்வமுடைய வாடிக்கையாளர்களை கவரும் விதமாக இந்தியாவி்ன் தனியார் வங்கியான கோட்டக் மகிந்திரா வங்கி விரைவில் சமூக வலைத்தளமான டுவிட்டர் இணையதளத்தில் வங்கிச் சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சேவையை முதற்கட்டமாக 11 நகரங்களில் அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் உள்ள பேலன்ஸை தெரிந்து கொள்ளுதல், செக் புக் பெற விண்ணப்பித்தல், கடைசி பரிமாற்றங்களை தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட 21 வங்கிச் சேவைகளை டுவிட்டர் கணக்குகளைக் கொண்டே…
c84c5897-cfb6-484c-b828-e15f86c89560_S_secvpf
நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓயோ மாநிலத்தில் வாடகைக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் தங்கள் உறுப்பினர்களில் சிலரைக் காணவில்லை என்றும் அவர்கள் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தனர். இது குறித்து தேடுதல் வேட்டையில் இறங்கியபோது, இபடன் என்ற இடத்தில் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு வீட்டை சந்தேகித்த போலீசார், கடந்த சனிக்கிழமை அன்று அந்த வீட்டை சுற்றிவளைத்தனர். உள்ளே சென்று சோதனையிட்டபோது அங்கு எலும்புக்கூடுகளையும், அழுகிய நிலையில் இருந்த…
download (1)
சுற்றுச்சூழல், காற்று மாசுபடுதல் தற்போது உலகை அச்சுறுத்தும் ஒன்றாக விசுவரூபம் எடுத்து வருகிறது. இதுதொடர்பாக ஐ.நா.வின் சுகாதார அமைப்பு ஒரு ஆய்வு நடத்தி அறிக்கை கொடுத்துள்ளது. அதில் ‘கடந்த 2012-ம் ஆண்டில் காற்று மாசுப்பாட்டின் பாதிப்பால் உலகம் முழுவதும் 70 லட்சம் பேர் இறந்து இருக்கிறார்கள்’ என்பதாகும். இது அதிர்ச்சி தரும் தகவல் மட்டுமின்றி மிகவும் கவலைப்பட வேண்டிய விஷயம் என இந்த அமைப்பின் தலைவர் மரியா தெரிவிக்கிறார். மேலும்…
download
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 முதன்மை தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. நேர்முகத்தேர்வு அடுத்த (ஏப்ரல் மாதம்) 7-ந்தேதி நடக்கிறது. துணை கலெக்டர்-8, போலீஸ் துணை சூப்பிரண்டு-4, வணிகவரித்துறை உதவி ஆணையர்-7, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள்-5, பதிவுத்துறை பதிவாளர்-1 உள்பட 25 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டு முதன்நிலை தேர்வை நடத்தியது. இந்த தேர்வை 75 ஆயிரத்து 704 பேர் எழுதினார்கள். அவர்களில் 1,381 பேர் தேர்ச்சி…
515d8560-7d92-45ba-bac5-41b56d9b08b6_S_secvpf
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் புறப்பட்ட விமானம், கடந்த 8-ந் தேதி அதிகாலையில் திடீரென்று மாயமானது. மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த போயிங் ரக விமானத்தில், சென்னையை சேர்ந்த சந்திரிகா சர்மா உள்ளிட்ட 5 இந்தியர்களுடன் மொத்தம் 239 பேர் பயணம் செய்தனர். தெற்கு சீனா கடலுக்கு மேலே பறந்து கொண்டு இருந்தபோது, அந்த விமானத்துடனான தொடர்புகள் முழுமையாக துண்டிக்கப்பட்டது. மாயமான அந்த விமானத்தை…
Page 4 of 7« First...23456...Last »

all news