Katturaikal

K-R-D
சைவமே சாந்தி என்பவர்களுக்கும், அசைவமே ஆனந்தம் என்பவர்களுக்கும் இடையே ஆண்டாண்டு காலமாக நடக்கும் கருத்…, ஸாரி ‘வயித்து’ வேறுபாடு இந்த ஆன்ட்ராய்டு காலத்திலும் தொடர்கிறது! சைவ வள்ளலார்களுக்கும், அசைவ உண்ணலார்களுக்கும் இடையே நடக்கும் இந்த போட்டிக்கு எந்த சாப்பாட்டு ராமனாலும் சரியான தீர்ப்பு சொல்லிவிட முடியாது. ‘எங்க நெய்தோசைக்கு ஈடாகுமா உங்க நெத்திலிகுழம்பு?’ என்பார்கள் இவர்கள். ‘கருவாட்டு ருசிக்கு ஈடாகுமா உங்க கத்திரிக்கா பொறியல்?’ என்பார்கள் அவர்கள். எதிர்காலத்துல அண்டங்காக்கா…
car-actor
‘இந்த கார வச்சுருந்த சொப்பன சுந்தரிய இப்ப யாரு வச்சுருக்கா?’ என்பதெல்லாம் முக்கியமில்லாத விஷயமாகிவிட்டது! சொப்பன சுந்தரி யாருட்ட இருந்தாதான் என்ன? அவளோட காரு இப்போ யாருகிட்ட இருக்கு? என்று ‘கார் கால’ மேகங்களாக கார்களை சுற்றி வர ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்க விஐபிகளின் லுக்! நாலு சோப்பு வாங்குனா நல்லா தேய்ச்சு குளிக்க மூணு நகம் இலவசம். ரெண்டு பாக்கெட் ஷாம்பூ வாங்குனா, மூணு பக்கெட் தண்ணி இலவசம்ங்கிற அளவுக்கு…
director copy
வெளிச்சத்துல எடுக்கணும். இருட்டுல பார்க்கணும். இதுதான் சினிமா சூத்திரம்! சிலரோட சூத்திரமே வேற… அவங்க தேடுற அந்த இருட்டு அவங்க மனசுலயே இருக்கும். அதுவும் போதாது என்று ‘ஹோல் சேல் ரேட்ல கொஞ்சம் கும்மிருட்டு கிடைக்குமா?’ என்று அலைவார்கள்! கருமத்தை தொலைக்கதான் காசிக்கு போவாங்க. நானும் போனேன். திரும்பி வரும்போது, என்னோட சேர்ந்து முப்பது லட்ச ரூபாய் கருமமும் வந்துச்சு’ என்று புதிர் போட்டார் அந்த பட அதிபர். ‘காலை…
kisukisu-a
லாண்டரி கடையில எலி புகுந்தா லங்கோடு கூட மிஞ்சாதல்லவா? காதல் அப்படிதான். சும்மா புரட்டி போட்டுட்டு போய்க்கிட்டேயிருக்கும். ‘அழகே… வந்து பழகேன்’னு கூப்பிடுறதுக்கு ஆயிரம் ரைட்ஸ் இருந்தாலும், அந்த காதல் மண்டிக்கால் போட்டு மனசார கெஞ்சும்! ‘கெஞ்சட்டும்… கேவி கேவி அழட்டும்… மாடிப்படியில் உருளட்டும்…. அது அவரு பாடு. நமக்கு எதுக்குய்யா இந்த வேல? ராத்திரியிலயும் தூங்க விட மாட்டேன்றாரு. பகல்லயும் பதுங்க விட மாட்டேன்றாரு. நல்லா வந்துச்சுரா காதல்’…
vettu kuthu
இதுவரை வெளியான தேவர் ஜாதி, சமூக பின்னணி கொண்ட படங்களில் “கொம்பன்” கண்டிப்பாக கொஞ்சம் மாறுபட்ட ஸ்பெஷலான நல்ல படம் தான். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது… படம் தொடங்கும்போதே தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு ஆள்களை வேலைக்கு கூட்டிச்செல்கிற லாரியையும், பள்ளிக்கூடத்திற்கு போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிற குழந்தையையும் வெள்ளையும் சுள்ளையுமாக காலையிலேயே பஞ்சாயத்துக்கு கிளம்புகிற ஊர்ப்பெரிசுகளையும் காட்டி…. “பள்ளிக்கூடத்துக்கு போகலேன்னா ஒண்ணு அவங்களை மாதிரி அடிமை வேலைக்கு போவ, அல்லது இவங்களை…
white heart
நயன்தாராவின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டால், ‘ஒரு வெள்ளை சுவரும் சில கரித்துண்டுகளும்’ என்றுதான் அந்த சரிதைக்கு தலைப்பு வைக்க முடியும்! தென்னிந்திய சினிமா ஒரு பட்டுப்புடவை என்றால், சந்தேகமேயில்லை, அதன் ‘சரிகை’ நயன்தான்! இருந்தாலும் அவரைச்சுற்றி ஆயிரமாயிரம் கிசுகிசுக்கள், ஆயிரமாயிரம் பிரச்சனைகள்…! அதனாலென்ன? மேலே ஸ்டூடியோ வெளிச்சம் விழுந்துவிட்டால், எல்லாவற்றையும் துண்டு பேப்பராய் சுருட்டி எரிந்துவிட்டு அந்த கேரக்டராகவே மாறிவிடுவதில் நயன்தாரா எப்பவுமே டைரக்டர்களின் மனசுக்கு பிடித்த ‘ஒயின்’தாராதான்! ‘எழுதுவதற்கு…
vishal-politics
திருட்டு விசிடி, பிளாக் டிக்கெட் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு ரசிகர் மன்றம் வேண்டும் என்பது சினிமா சூட்சுமம். அதிலும் கட்டுக்கடங்கா ரசிகர்களை வைத்திருப்பவர்களுக்கு, அரசியல்வாதிகள் பக்கத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் இன்னும் வேறு வேறு இன்ப துன்பங்களும் வந்து கொண்டேயிருக்கும். அதிலும் முறையாக நடந்து கொண்டால், இன்பமன்றி துன்பமில்லை. இதையெல்லாம் நன்றாக உணர்ந்து வைத்திருப்பதால், சட்டென்று தனது ரசிகர்களை ஒன்றிணைத்து ‘அகில இந்திய புரட்சிதளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி…
award
உள்ளூர்ல கிடைச்சா வெறும் குடை, அதுவே வெளிநாட்ல வாங்குனா வெண்கொற்றக் குடை என்கிற நினைப்பு பல முன்னணி ஹீரோக்களுக்கும் இயக்குனர்களுக்கும் இருக்கு. அதிலும் அந்த நினைப்பு இயக்குனர்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கு. ‘நீங்கள் சந்திக்க விரும்பும் ஹீரோ செம கடுப்பில் இருப்பதால், முணு, நாலு வருசம் கழிச்சு தொடர்பு கொள்ளவும்’ என்று மூக்கின் மீது அறிவிப்பு பலகையை தொங்கவிட்டுக் கொள்ளும் அநேக ஹீரோக்களுக்கு ஒரு ஐஎஸ்டி கால் மட்டும் வரட்டுமே,…
Book KTK
  நமது நியூதமிழ்சினிமா.காம் இணையதளத்தில் தொடர் கட்டுரையாக வெளிவந்த கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் மேலும் சில பகுதிகளுடன் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இயக்குனர் பாண்டிராஜ் அணிந்துரை வழங்கியிருக்கிறார். சினிமாவில் இயக்குனராக சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு தேவையான பல்வேறு விஷயங்களை திரையுலக முக்கியஸ்தர்களின் நேர் காணலுக்கு பிறகு தொகுத்து வழங்கியுள்ளேன். புத்தக சந்தையில் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் இந்த கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் புத்தகம் ‘போதி…
vks chandra
நினைவின் அறைகளிலும் அனுபவங்களின் வீதிகளிலும் இருளின் கருப்பு வண்ணத்திற்குள்ளும் சிதறிக் கிடக்கிற வார்த்தைகளை பொறுக்கி எடுத்து, கோர்த்து, மடியில் பரப்பி விளையாடுகிற சந்திராவின் விரல்களுக்குள் தீராத பேரன்பும், நிராகரிப்புகளைக் கூட நீலமலர்களின் மாலையாக்கி சூடிக்கொள்கிற காதலின் கம்பீரமும் இடைவிடாது வழிந்து கொண்டே இருக்கிறது. என் மன ஆழங்களுக்குள் நீ வீசியெறிந்த ப்ரியத்தை உடைக்க சிரமப்படாதே. எந்த ஆயுதத்தையும் எடுத்துக்கொள் ஆதுரமாய் தீரமாய் இருக்கும் என் இதயத்தை நீ இன்னும் இன்னும்…
sivaji
கலைஞர்களுக்கு உணர்ச்சி அதிகம் என்பார்கள். ஆனால் கடப்பாரையால் குத்தினால் கூட சில நேரம் அமைதியாக இருந்துவிடுகிற விசித்திர குணம் கொண்டவர்களும் அதே கலைஞர்கள்தான். தேவைப்பட்ட நேரத்தில் அழுது கண்ணீர் வடிக்கும் இவர்கள், ‘நமக்கெதுக்குப்பா இதெல்லாம்?’ என்று தோன்றினால் அங்கு அப்படியொரு விஷயம் நடப்பதாகவே காட்டிக் கொள்ள மாட்டார்கள். அண்மைகால உதாரணம் பாலசந்தரின் மறைவும், அவருக்கு சிலை வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையும். நீண்ட கால உதாரணம், சிவாஜியின் மணி மண்டபம்.…
cheran
ஒரு நூறு கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்துவிட்டு, ‘இன்னும் ஏதாவது கேள்விகள் இருக்கா?’ என்றும் டைரக்டர் சேரன் கேட்டபோது இண்டு இடுக்கு நண்டு நட்டு கேள்விகளால் அவரை மடக்கிய நிருபர்கள் ‘அக்கடா’ என்று ஓய்ந்திருந்தார்கள். நினைத்தது போல எல்லாம் சரியாக நடந்தால் தமிழ் சினிமாவுலகத்தில் பெரும் புரட்சியை விதைக்கப் போகும் C2H நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த பிரஸ்மீட்டில்தான் இப்படியொரு கேள்வி பதில் மழை! ‘படம் வாங்க ஆளில்லை. தியேட்டரில் நேரடியாக ரிலீஸ்…
na muthukumar
அஞ்சானில் தொடங்கி அவலாஞ்சி வரைக்கும் 2014 ம் வருடத்தில் மட்டும் 107 பாடல்களை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் நா.முத்துகுமார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது- கடந்த பத்து ஆண்டுகளைப் போலவே தொடர்ந்து பதினோராவது ஆண்டாக ‘2014’ம் ஆண்டிலும் அதிகப் படங்கள், அதிகப் பாடல்கள் எழுதிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. ‘2014’ம் ஆண்டு நான், 35 படங்களில் 107 பாடல்கள் எழுதியுள்ளேன். இவற்றில் 10 படங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளேன். அந்த படங்களின்…
alamaram kb
தஞ்சை மாவட்டம் நன்னிலம் – நல்லமாங்குடி அக்ரஹாரத்தில் 9, ஜுலை 1930ல் பிறந்தார். 84 வயது கே.பி.யின் கலையுலகப் பொது வாழ்வு அங்கே சிறு வயதில் திண்ணை நாடகங்களில்தான் ஆரம்பம்! சென்னை ஏ.ஜி. ஆபீஸில் 12 ஆண்டுகள் பணிபுரிந்துகொண்டே, நாடகங்கள் நடத்தி வந்தார். ‘மேஜர் சந்திரகாந்த்’ மிகப் பிரபலமான நாடகம். ‘எதிர் நீச்சல்’, ‘நாணல்’, ‘விநோத ஒப்பந்தம்’ போன்றவை மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாடகங்கள்! கமல், ரஜினி, சிரஞ்சீவி, நாசர்,…
kb
கவிதாலயாவின் எவர் கிரீன் ஹீரோ திருவள்ளுவர்தான். பின்புறமாக திரும்பியிருக்கும் அவர் அப்படியே ரசிகர்களை நோக்கி முன்புறமாக திரும்பும்போது ‘முதற்றே உலகு’ முடிந்து போயிருக்கும். இன்று தமிழ்சினிமாவில் முன்னணியில் இருக்கும் அத்தனை பேருக்கும் அகர முதலவும் திருவள்ளுவரும் யாரென்றால் அது இயக்குனர் சிகரம் கே.பி தான்! கடந்த சில தினங்களாக கோடம்பாக்கத்தின் எல்லா தெருக்களும் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் வீட்டு வாசலில்தான் முடிகின்றன. அவர் அலுவலக வாசலில் பூச்செரியும் மரங்கள் அத்தனையும்…
தமிழன் என்று சொல்லடா…  தள்ளாடியபடி நில்லடா! இந்த ஆண்டு ரைட்மந்த்ரா விருதுகள் பட்டியலில் ஒன்பது பேர் தான் இடம்பெற்றிருந்தனர். ஆனால் விழா நெருங்கும் சமயம் அதாவது கடைசி நேரம் ஒருவர் சேர்க்கப்பட்டு மொத்தம் பத்து பேர் இந்த விருது பெற்றனர். கடைசியாக சேர்க்கப்பட்ட அந்த நபர் யார் ? அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்? தமிழகத்தில் உள்ள 7.20 கோடி மக்களில், ஒரு கோடி பேருக்கு மேல் மது பழக்கத்துக்கு அடிமையாக உள்ளனர் என்று புள்ளிவிபரம் கூறுகிறது.…
இனி ஒரு பிரிவில்லை  துயர் வர வழி இல்லை! -இயக்குனர் தாமிரா எந்தச் சொல்லில் இருந்து துவங்குவது என்று தெரியவில்லை..நாம் சொற்களால் அரவணைத்து சொற்களில் வாழ்ந்தவர்கள்.எனது ஒரு சிறுகதையைப் படித்துவிட்டு என்னை சந்திக்க வேண்டும் என அழைத்தீர்கள்.அது நமது அன்பின் தொடர்கதை ஆயிற்று.பதினான்கு ஆண்டு காலம்.விலகிச் செல்லாத ஒரு நதியின் நீராய் உங்களோடு பயணிக்கிறேன். நாம் இருவருமே நதியின் காதலர்கள்..பழைய வீட்டில் உங்கள் அலுவலகத்தின் பெயர் காவேரி.எனதுபெயர் தாமிரா..இருவருமே நதியின்காதலர்கள்.காவேரியில்தான் உங்களை முதன் முதலாகச் சந்தித்தேன்.இரண்டு தினங்களுக்கு முன் உங்களைச் சந்திக்க காவேரி…
kamal
நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு ஒரு சேரிப்பையனின் பகிரங்க கடிதம்: வணக்கம் எனக்கு எட்டு வயசாகும்போது என் கண்முன்னே எங்கள் வீடு எரிந்துகொண்டிருந்த நடு இராத்திரி ஒன்றில் எழுத நினைத்த கடிதம் .வெகு காலதாமதம் ஆகிவிட்டது இந்த இருக்கையும் கணிப்பொறியும் எனக்கு கிடைப்பதற்கு . தேவர்மகனில் தொடங்கி உன்னைபோல் ஒருவன் வரை பார்த்தாகிவிட்டது உங்கள் பூனூல் முற்போக்குதனத்தையும் அதிகார அறிவின் அட்டகாசத்தையும் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க நான் ஒன்றும் என் அப்பன்…
ARMURUGADOSS-MINJUR GOPI
கிட்டதட்ட ஒரு முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது அந்த வீடியோ பதிவை பார்க்கும் போது. (https://www.youtube.com/watch?v=epiG28XXBaQ) ஒரு பொய் அவ்வளவு சப்தமாக ஒலித்துவிட முடியாது என்றே தோன்றுகிறது. அதுமட்டுமல்ல, ‘நான் பொய் சொல்லுகிறேன் என்று பேசுவதற்காகவாவது என்னோடு விவாதிக்க தயாரா?’ என்கிறார் கத்தி கதை என்னுடையது என்று கூறிவரும் கோபி. எதிர் தரப்பு கள்ள மவுனம் சாதிக்கிறது. மீடியா முன் தோன்றி விளக்கம் கொடுக்கக் கூட முடியாத அளவுக்கு திணறுகிறார் முருகதாஸ்.…
alexpaul menon
அலெக்ஸ் பால் மேனன். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள சமாதானபுரம் என்கிற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி. கடந்த 2012-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்மா மாவட்ட ஆட்சியராக அலெக்ஸ் பால் பணியாற்றியபோது மாவோயிஸ்ட் தீவிரவாதிகளில் கடத்தப்பட்டு 12 நாட்கள் கழித்து சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டவர். இப்போது அதே சத்தீஷ்கர் மாநிலத்தில் தேர்தல் ஆணையராகப் பணியாற்றி வருகிறார் அலெக்ஸ் பால். சினிமாக்கள் முதற்கொண்டு அனைத்து விஷயங்களை பற்றியும் இணையத்தளங்களில்…
Page 5 of 7« First...34567

all news