Katturaikal

vettai
வேட்டைக்கு போன ராஜாவுக்கு வேட்டியெல்லாம் ரத்தக் கறைன்னா அது பெருமை! ஆனால் ‘ரகசிய’ வேட்டைக்கு போன மந்திரிக்கு அதிசயமா ஒரு அனுபவம் வாய்ச்சா அதுக்கு பெயரென்ன? பச்சக் பச்சக்னு ‘முத்தம்’ விழும்னு போன அந்த மந்திரிக்கு, பொளேர் பொளேர்னு ‘சத்தம்’ விழுந்த ஸ்டோரி இது! ராஜா உட்கார்ந்தால்தான் சிம்மாசனம். அதுவே, நரி உட்கார்ந்தால் அது சர்க்கஸ் நாற்காலி! ஒரு சிம்மாசனம் ஏன் சர்க்கஸ் நாற்காலியானது? அந்த அண்டை நாட்டு அசிங்கத்தை…
barathiraja-karuthamma
“திராட்சையை புதைச்சுட்டு ஒயினா எடுக்கிறீயே? உன்னால ஒரு ஒயின் பாட்டிலை புதைச்சுட்டு திராட்சையா எடுக்க முடியுமா? ஆ ஹை… ஆ ஹை…” என்று குதித்துக் கொண்டிருந்தார் ஒரு குடிமகன்! எதிரில் இவரை போலவே இன்னொரு தத்துவ மேதை. இருவருமே குடித்திருந்தார்கள். இரு குடிகாரர்களின் பேச்சை சற்றே தொலைவில் நின்று கேட்டு ரசிப்பதை விட சுவாரஸ்யமானது உலகத்தில் இல்லை. சில நேரங்களில் அதைவிட சுவாரஸ்யமாக இருக்கும் பல இலக்கியவாதிகளின் பேச்சும் அரசியல்வாதிகளின்…
aachi manorama
நீங்கள் வேண்டி விரும்பி ஏற்றுக்கொண்ட வேலையை எத்தனை வருடம் சலிப்பில்லாமல் செய்வீர்கள்? கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் மெனக்கெடலுடன் இலக்கில்லாத ஒரு இறுதியை நோக்கித் தொடர்ந்து பயணிக்க இயலுமா? ஆம், எனில் நீங்கள் கோபிஷாந்தா என்கிற மனோரமாவாகிய ஆச்சியின் நீண்ட நெடிய கலைப் பயணத்தைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். அவர்களுக்கென்ன சினிமாக் காரர்கள் புகழும் பணமும் மலிந்த இடம் பிறகு உழைப்பதெற்கென்ன என்று எளிதில் புறந்தள்ளவும் முடியாது, புகழுக்கும் உழைப்பெனும் முதலீடு தேவையாயிருக்கிறதே…..…
puli-murugan manthiram
சமீப காலமாகவே தமிழ் சினிமாவின் பெரிய, பெரிய கதாநாயகர்கள் நடித்து, பெரிய பெரிய பட்ஜெட்டுகளில் உருவாகும் நேரடி தமிழ் படங்கள், வெளியாகும் நேரத்தில் நிறைய பிரச்சினைகளை சந்திப்பதும், வெளியான பின் தலை கீழான விமர்சனங்களாலும் சமூக ஊடகங்களாலும் சேதாரத்திற்கு உள்ளாக்கப்படுவதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இதில் அரசியல் வேறு சேர்ந்துகொள்கிறது என்று கேள்விப்படுகிற தகவல் கண்டிப்பாக சினிமாவுக்கு ஆரோக்கியமானதென்று சொல்ல முடியாது. அந்த வரிசையில் இப்போது புலி. புலி –…
Thuppakki New Stills
‘தஞ்சாவூரு பெரிய கோவிலுக்கே சடை பின்னி பூ வச்சது எங்க ஆத்தாதான்’ என்று பெருமையடிக்கிற பலர், சாதாரண எருமை மேலிருக்கும் ஈயை விரட்டக்கூட லாயக்கில்லாதவர்களாக இருப்பார்கள்! அதுவும் கொஞ்சம் குடித்திருந்தால் போதும்… ‘குலோந்துங்க சோழனுக்கு குர்தா வாங்கிக் கொடுத்ததே எங்க தாத்தன்தான்’ என்று அளப்பார்கள். இப்படி தன்னோட சுயசரிதையையும், தன் முன்னோர்களின் சுயசரிதையையும் டாஸ்மாக்குல உட்கார்ந்து காற்றிலேயே எழுதி முடிச்சுட்டு கிளம்புன ஆசாமிகள் பலர், அதே காற்றிடம் ‘ராயல் டி’…
poettu with fighttu
நண்டு கொடுக்குலேயே பிளேடு இருந்தாலும், அது நாண்டுகிட்டு சாவறது ஏதோ ஒரு எண்ணெய் சட்டியிலதான்! வாலிப கொடுக்குக்கெல்லாம் ‘வைட்டமின் லவ்’ பொங்கி வர்ற காலம் பொற்காலமா இருக்கலாம். ஆனால் எங்காவது சறுக்கி எக்குத்தப்பா விழும்போதுதான், நாம விழுந்தது காதல்ல இல்ல… வெவகாரமான எண்ணெய் சட்டியில என்கிற ஞானமே வரும்! அந்த மாதிரி நேரத்திலெல்லாம் ஆகாயம் புட்டுக்கிட்டு ஆல்கஹாலா கொட்டும்! ஒயினோ, பிராந்தியோ, விஸ்கியோ, பீரோ… வழியுற வானத்தை கோப்பையில பிடிச்சு,…
Maalia nerathu mayakkam
ரொம்ப பேருக்கு சூரியன் அடங்குற நேரத்துலதான் கட்டுவிரியன் கண்ண தொறக்குது! அந்த ‘கட்டிங்’ விரியனுக்கு தன்னையே காவு கொடுக்கிற கொள்ளை பேரு, சாயங்காலம் ஆச்சுன்னா சர்வ பெரிய ஆர்ப்பாட்டங்களுக்கும் தயாராகிடுறாங்க. ஆறு மணிக்கு மேல அந்த அலெக்சாண்டரே கூப்பிட்டாலும், “நம்ம கையி வாளை எடுக்காதே!” என்பார்கள் வீரமாக! ‘நடை தளர்ந்து நம்பிக்கை போறதுக்குள்ள கடை அடைந்து ‘கட்டிங்’ போட்டுரணும்’ என்று ஆத்திரமும் ஆவேசமுமாக அவர்கள் ஓடுகிற ஓட்டம், ஒலிம்பிக்ஸ்சே வியக்கிற…
rajini-kamal
நேற்றைய வைரல் ரஜினியும் கமலும்தான். நேற்று மாலை வாட்ஸ்அப்புகளில் உலாவ ஆரம்பித்தது ரஜினியின் கபாலி பர்ஸ்ட் லுக்! அடுத்த வினாடியே காற்று வேகம் மனோ வேகம் என்பார்களே, அதைவிட வேகமாக பரவின அத்தனை ஸ்டில்களும். எல்லாம் ஆனந்த விகடன் இதழ் கடைக்கு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன் நடந்த பரபரப்பு. இந்த வார விகடன், கபாலி ஸ்பெஷல் போட்டோக்களுடன் வெளிவந்திருக்கிறது. சொல்லி வைத்துக் கொண்ட மாதிரி, அதே நாளின் அழகான…
jananam-serial
உலகம் முழுக்க ‘இருக்கு’ன்னு சொல்றவனை விட, ‘இருக்கா?’ன்னு கேட்கிறவனோட எண்ணிக்கைதான் ஜாஸ்தியாயிருக்கு! அறிவிருக்கா? மூளையிருக்கா?ன்னு ஆரம்பிச்சு, நடு ராத்திரியில கதவ தட்டி, ‘உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?’ன்னு கேட்கிற வரைக்கும் நாளுக்கு நாள் வளர்ந்துகிட்டேயிருக்கு கேள்வி கேட்கிற கூட்டம். நல்லவேளை… ‘உங்க பிரஷ்ல கைப்பிடி இருக்கா?’ன்னு கேட்காம விட்டாய்ங்களே? அதிருக்கட்டும்… ‘இன்னைக்கு பார்ட்டி இருக்கா மச்சி?’ ‘எந்த பார்ல மீட் பண்றோம்?’ குவார்டரோட நிறுத்திக்கணுமா? ஆஃப் வரைக்கும் எகிறலாமா? என்கிற…
siva iyyadurai
அறிவியல் அறிஞர் சர். சி.வி.ராமன்! கணித மேதை ராமானுஜன்! தன்னம்பிக்கை மேதை அப்துல்கலாம்! இவர்கள் தமிழர்களுக்கு இந்திய முகவரி தந்தவர்கள்! சிவா அய்யாத்துரை தமிழர்களுக்கு உலகமுகவரி தந்தவர்! அது மட்டுமல்ல உலகத்து மனிதர்களுக்கெல்லாம் மின் அஞ்சல் முகவரி தந்தவர்.முதன் முறையாக ஈமெயில் கண்டுபிடித்தவர் சிவா அய்யாத்துரை. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது கண்டுபிடிப்பு பற்றியும் தனது குடும்ப பின்னணி குறித்தும் விளக்கினார். நான் 1978ல் ​​ஈமெயிலைக் கண்டு பிடித்தது…
Superstarrajini
சாமியார்ட்ட சகவாசம் வச்சுகிட்டா ருத்திராட்ச கொட்டைதான் மிச்சம்! இந்த புதுமொழி யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ? சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சர்வ பொருத்தமாகவே இருக்கிறது. காரணம்? அவர் நடித்து தோல்வியடைந்த முந்தைய படங்களின் வரலாறு அப்படி! ரஜினியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இருந்தால் கூட அதுவே என் உயிர், பொருள், ஆவி என்று ரசிகர்கள் திரிந்த காலம் அது. நின்றால் ஸ்டைல், நடந்தால் ஸ்டைல், தம்மடிச்சா ஸ்டைல், தலை கோதுனா ஸ்டைல்…
vijay-politics
“ஏன் இந்த கேள்வியை நடிகனை பார்த்து கேட்கிறீங்க? ஒரு குப்பை அள்ற தொழிலாளிகிட்ட கேளுங்க. ஒரு என்ஜினியர்ட்ட கேளுங்க. அல்லது கவர்மென்ட் ஆபிசில் வேலை பார்க்கும் ஒரு குமாஸ்தாவை கேளுங்க. அதையேன் சினிமாவுல நடிக்கிற யாரை பார்த்தாலும் கேட்கிறீங்க?” இப்படி பல நேரங்களில் தன்னிடம் மைக்கை நீட்டி கேள்வி கேட்கும் பலரையும் வறுத்து தொங்க விட்டிருக்கிறார் நடிகர் நாசர். அவர்கள் கேட்டதிலும் தப்பில்லை. இவர் கோபித்துக் கொண்டதிலும் தப்பில்லை. “நீங்க…
kodambakkam
‘குறடு, திருப்புளியையெல்லாம் குரல்வளைக்குள்ள விட்டு, ‘ஊர்ல இருக்கிற கெட்ட வார்த்தையெல்லாம் ஒண்ணு விடாம கொட்றா’ என்பார்கள் போலிருக்கு! வேற வழியில்ல, திட்டிற வேண்டியதுதான்’ என்று கிளம்புகிறது ஒரு கூட்டம்! அவர்களை திகட்ட திகட்ட திட்ட வைத்துக் கொண்டிருக்கிறது இன்னொரு கூட்டம். ‘ரப்பர் வாயா, கோமுட்டி தலையா, களிமண்ணு மண்டையா’, என்று கவுண்டமணி திட்டினால் கைதட்டுகிற கூட்டம், அதையே செந்தில் திட்டினால் மட்டும் ‘திமிர்டா’ என்கிறது. அவர் போட்டால் ஆஃப் பேண்ட்.…
indiyan rupee
கடைய திறந்ததும் கழுதைய கும்பிடுற வழக்கம் அநேக வியாபார ஸ்தலங்களில் இருக்கு! கும்பிட்டால் கல்லா ரொம்பிவிடும் என்பது நம்பிக்கை. ஆனால் அதெல்லாம் நிஜக் கழுதையா இருக்காது. படக் கழுதைதான்! ஒரே ஒரு பத்தியும் அதை பத்த வைக்கிற தீக்குச்சியுமா முடிஞ்சுரும் செலவு. நிஜக்கழுதைன்னா அது முடியாதே? அந்த படத்திலிருக்கும் கழுதையும் ‘என்னை பார் யோகம் வரும்’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது. இப்படி மேள தாளத்தோடு கழுதையின் இமேஜை வளர்க்கிற…
vambu
குனிந்து நிமிர்ந்து வாசலை பெருக்கினாள். வாசல் சுத்தமாச்சு…. அப்புறம்…? க்ளுக்கென சிரித்தாள் வேலைக்காரி! கல்யாண்ஜி சார்… உங்க கவிதையின் கடைசி வரியை ‘வைரஸ் அட்டாக்’ பண்ணியதற்கு காரணம் வேறு யாருமல்ல. அந்த ஹீரோதான்! சமயங்களில் அவரே ஒரு ‘ஆன்ட்டி’ வைரஸ்தான்! ஒருமுறை அவர் வீட்டுக்கு பேட்டியெடுக்க போயிருந்தார்கள் வானொலி பண்பலை நிருபர்கள் சிலர். காலை பத்து மணிக்கு அப்பாயின்ட்மென்ட்! நேரத்தை வாங்கிக் கொடுத்தவர் ஹீரோவின் செய்தி தொடர்பாளர். அந்த நம்பிக்கையில்…
Kadambakkam chek post
‘மாப்ளே… ஒருத்தன் சிக்கியிருக்கான்!’ என்றுதான் ஆரம்பிக்கிறது எல்லா காதலும். அந்த காதலில் சிக்கி சீவலப்பேரி பாண்டியானவனும் இருக்கான். சீவல் பொட்டலமா மடிஞ்சவனும் இருக்கான். ‘புல்லு நட்டேன்… நெல்லு முளைச்சுருச்சு’ என்று மகிழவும் வைக்கும். ‘நாத்து நட்டேன்… சேத்துப்புண்ணுதான் மிச்சம்’ என்று அழவும் வைக்கும் சக்தி அந்த காதலுக்குதான் உண்டு! இப்படி அமர காவியங்களும், ஒரு இடத்திலும் உருப்படியாக ‘அமரா’ காவியங்களுமாக சினிமாவில்தான் எத்தனையெத்தனை காதல்கள்? நிறைஞ்ச ‘அமாவாசயா’ திரியுற சீரியஸ்…
kodambakkam chekpost
அண்டங்காக்கா தொடையில அஞ்சு ரூபா சைசுக்கு மச்சம் இருந்தாலும் வெளியில் தெரியவா போவுது? அப்படிதான் சினிமாவுலகத்துல அநேக சமாச்சாரங்கள் ஒண்ணுக்குள்ள ஒண்ணா மிக்ஸ் ஆகிக் கிடக்கு. பெரிய அந்தஸ்திலிருக்கிற படைப்பாளிகளை கண்டால், பக்கத்திலேயே துண்டு போட்டு இடம் பிடிக்க ஒரு பெரும் கூட்டம் அலையும். கடவுளே… கண் கண்ட தெய்வமே…நாலும் அறிஞ்சவரே…அவரே… இவரே… பவரே… சுகரே…. என்று போற்றி புகழ ஒரு கூட்டம் கிளம்பி வந்துவிடும். எங்கோ தொலைவிலிருக்கும் ரசிகனின்…
abi
‘சவுக்காரம்’ என்ற சொல்லையே சம்ஹாரம் ஆக்கிவிட்டது காலம்! இந்த லட்சணத்தில் ‘உருக்காங் கல்’ தெரியுமா உலகத்திற்கு? செங்கல்லை விட கடினமாக, பாறாங்கல்லை விட இலகுவாக இருப்பதுதான் இந்த உருக்காங் கல்! செங்கல் சூளையில் எப்படியோ எக்குத்தப்பாக வெந்து, ஏடாகூடமான வலுவில் இருக்கும் அது. ஆணானப்பட்ட ஷாஜகான்களையே கூட வீழ்த்திவிடும்! கிராமத்து மும்தாஜ்களுக்கு இந்த கையளவு உருக்காங் கல்தான் ஒரு காலத்தில் மைசூர் சாண்டில், சின்த்தால், ஹமாம், டவ் எல்லாம்! அழுத்தித்…
18232-manisha-koirala.jpg
உவமைகள் எல்லாம் உண்மைகளானால் உலகம் தாங்குமாடா கலகநாதா? புனல் மின்சாரம், அனல் மின்சாரமெல்லாம் அவசியமேயில்லை. ‘மீனா கண்ணே… கண்ணே மீனா!’ என்று கவிதையிலே மின்சாரம் எடுத்து, எழுத்திலேயே சம்சாரம் பிடிப்பவர் பார்த்திபன். எப்பவோ அவர் எழுதிய அந்த ரெண்டு வரி கவிதை இருக்கிறதே… அதுமாதிரியான அப்ரோச், இன்னும் தமிழ்சினிமாவில் நிகழவேயில்லை. செத்துப்போன கவிச்சக்கரவர்த்திகள் எல்லாம் சேர்ந்து வந்து பிறப்பெடுத்தாலும், பார்த்திபனின் தமிழுக்கு முன்னே பல்டிதான் அடிக்கணும். இப்படி ‘உவமைகளே பேட்டரி,…
kisu-baaaaa
வெளிச்சத்துல எடுக்கணும். இருட்டுல பார்க்கணும். இதுதான் சினிமா சூத்திரம்! சிலரோட சூத்திரமே வேற… அவங்க தேடுற அந்த இருட்டு அவங்க மனசுலயே இருக்கும். அதுவும் போதாது என்று ‘ஹோல் சேல் ரேட்ல கொஞ்சம் கும்மிருட்டு கிடைக்குமா?’ என்று அலைவார்கள்! கருமத்தை தொலைக்கதான் காசிக்கு போவாங்க. நானும் போனேன். திரும்பி வரும்போது, என்னோட சேர்ந்து முப்பது லட்ச ரூபாய் கருமமும் வந்துச்சு’ என்று புதிர் போட்டார் அந்த பட அதிபர். ‘காலை…
Page 4 of 7« First...23456...Last »

all news