Katturaikal

Barathiraja-new
அவரை ஒரு மலேரியா இன்ஸ்பெக்டராக்கி வைத்திருந்தது அல்லிநகரம்! சென்னைக்கு வராமல் கொசு மருந்தும், குடிசைகளுமாக அவர் ஊரை சுற்றி சுற்றி வந்திருந்தாரென்றால் இந்நேரம் அந்த ஊர் கொசுக்கள் கூட மயில்களாகவோ, மைனாக்களாகவோ மாறியிருந்திருக்கும். ஏனென்றால், அந்த மலேரியா இன்ஸ்பெக்டரின் மனசு முழுக்க நிரம்பியிருந்தது ‘புதுமை செய்’ என்ற ஒரே கட்டளைதான்! அந்த காலத்து சென்னையில் அடைக்கலமாகிய யாருக்கும் கைகொடுக்கிற முதல் தொழில் ஓட்டல் சர்வராக இருக்கும். அங்கும் கூட தன்…
balaa
சில நடிகர்களின் படங்களுக்காக அவர்களது ரசிகர்கள் காத்துக்கிடப்பது போல சில இயக்குநர்களின் படங்களுக்காகவும் அவர்களின் ரசிகர்கள் காத்துக் கிடப்பதுண்டு. இந்த ரசிக எண்ணிக்கையில் அவ்வப்போது பொது ரசிகர்கள் இணைந்து கொள்வதும் நடக்கும். அப்படிப்பட்ட இயக்குநர்களின் ஒருவராக இருப்பவர் தான் பாலா. தன் கதாபாத்திரங்களை, தன் கதைக் களங்களை அதுவரை எப்போதும் ரசிகன் பார்த்தறியாத, கேட்டறியாத விசயங்களாக படைப்பதில் பாலா, தன்னை மற்ற இயக்குநர்களிடம் இருந்து வேறுபடுத்திக்கொண்டார். அதனால், பாலாவின் படங்களுக்கான…
Ar Rahman
உலகெலாம் ஓதற்கு எளியவனா இருந்தாலும், பரமனே…ன்னு பல்லாக்குல ஏத்தி வச்சு கும்புடுறதுதானே நம்மளோட பண்பாடு? படைச்சவனே இறங்கி வந்து ‘தம்பி… ஒரு பாட்டு பாட்றீ’ன்னு கேட்கிற அளவுக்கு உலகெலாம் இசையில் உயர்ந்தவராயிருக்கிறார் நம்ம இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். காலை ஜப்பானில் காஃபி. மாலை நியூயார்க்கில் ட்யூனு என்று விமானத்தில் பாதி நேரம், வேறோரு நாட்டில் மீதி நேரம்னு நடமாடும் இசையா, செவி தேடும் மழையா வாழ்ந்துகிட்டு இருக்கார் அவர். கனடாவில் ஒரு…
superstar rajini
இதை புத்தாண்டு ஸ்பெஷலாக வைத்துக் கொள்ளுங்களேன்… லிங்கா படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்! ரஜினிக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருக்கிறார் சரவணன். பிரபல மேக்கப் மேன் பானுவின் உதவியாளர் இவர். கோடிக்கணக்கான ரசிகர்களை கும்பிட வைக்கிற முகம். எவ்வளவு பயபக்தியோடும் பணிவோடும் நடக்க வேண்டும் அது? அப்படிதான் நடந்தது. ஆனால் மேக்கப் போடுகிற சமயத்தில் அவருக்கு ஒரு போன் வர, அதை எடுப்பதா? வேண்டாமா? பெரும் குழப்பத்தோடு தவித்த சரவணனிடம், “போனை எடுத்துப்…
2016 predictions
ரஜினிகாந்த்- இந்த வருஷம் முழுக்க கபாலி திசையில் கஷ்ட புத்தி ஓடுவதால், ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். படங்களில் அணைக்கட்டு உடைவது போலவோ, நீர் வெள்ளமாக பெருக்கெடுப்பது போலவோ காட்சிகள் வந்தால் தவிர்ப்பது நலம். அது கையிருப்பை குறைப்பதுடன், கெட்டப் பெயரையும் ஏற்படுத்தும். வருஷ இறுதியில் இரும்பினால் செய்யப்பட்ட பொருட்களால் நல்லது நடக்கும். எனவே எந்திரன்களை வாங்கிப் போடுவது விசேஷமான பலன்களை தரும். தலைக்கு மேல் சுற்றும் அரசியல் மேகங்களை கூலிங்…
na muthukumar
பத்தே நிமிஷத்தில் மெட்டு போட்டால் கூட அதற்கு, எட்டே நிமிடத்தில் பாட்டெழுதிக் கொடுத்து அசத்துகிற ஆற்றல் நா.முத்துக்குமாருக்கு உண்டு. பாடுனவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் என்கிற பழமொழிக்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர். சினிமா பாடல்கள் இலக்கியமாகுமா என்ற வெகுகால சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த கவிஞர்களில் மிக முக்கியமானவர் நா.முத்துக்குமாரும்தான். வழக்கம் போல இந்த வருடமும் அவர்தான் டாப். கடந்த வருடத்தில் எழுதிய படங்கள், இந்த வருடத்தில் எழுதிக் கொண்டிருக்கும்…
saranya sundaraj
தற்போது லண்டனில் இருக்கும் சரண்யா சுந்தர்ராஜ், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் முன்னாள் செய்தியாளர். ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது ஆகிய இரு படங்களிலும் கதாநாயகியாக நடித்தவர். சிம்புவின் அந்த ‘டேஷ்’ பாடல் பற்றி ஒரு கருத்தை தன் முகப்புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, சற்றேறக்குறைய சிம்புவுக்கு ஆதரவாக அவர் இந்த கருத்தை வெளியிட்டிருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்! ‘யூ டூ ப்ரூட்டஸ் பதிவு…
strdanush
‘தலைவலியும் திருகு வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்கிற பழமொழியெல்லாம் சிம்பு அனிருத்துக்கு மட்டும் செல்லாது. செல்லவே செல்லாது! மருந்தை தேடி மற்றவர்கள் போனால், வலியைத் தேடி போகிற வழக்கம் இருக்கிறது இருவருக்கும். அந்த வழுக்கல்தான் கடந்த நான்கு நாட்களாக அவர்களும், அவர்களால் ஜனங்களும் அனுபவித்துக் கொண்டிருப்பது! அருவா வியாபாரி, ‘சொருவ’ இடம் தேடி சுத்துற மாதிரியாகிருச்சு ரெண்டு பேரோட இசைப்புலமையும்! தமிழ்சினிமா இப்போதெல்லாம் ‘பொயட்டு’களின் ஆதிக்கத்திற்குள்தான் அடங்கிக் கிடக்கிறது.…
kamal-speech
சிக்குன எலியை சிதைக்காம விடமாட்டேன்னு ஒரு குரூப் கிளம்பறதும், எலிக்கு நடுவுல ஏதாவது ஒரு பூனை கிராஸ் பண்ணினா, அந்த கோரமான துரத்தலை அதை நோக்கி திருப்பறதும் அரசியல்வியாதிகளின் பொழுதுபோக்கு. அந்த அரசியல் (சாக்)கடையில் எதற்காக எண்ணையை வாங்கி, முகத்தில் தடவிக் கொண்டாரோ தெரியவில்லை… கமலின் முகத்தில் இப்போது டன் டன்னாக வழிசல்! சிக்குவது அவருக்கு புதுசு இல்லை. பாதம் பணிந்த பெருமாள் சுவாமிகள் பலர் ‘அடுத்த பிரதமர் ஒரு…
silent
“தமிழ்சினிமாவில் எனக்குதான் அதிக சம்பளம்” என்கிற இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் எல்லா ஹீரோக்களும். இப்படி சம்பளத்தில் போட்டி போடும் நடிகர்களோ, நடிகைகளோ… மக்களுக்கு ஒரு சங்கடம் என்றால், நான் நீ என்று போட்டி போடுகிற நிலைமை சத்தியமாக தமிழகத்தில் வரப்போவதில்லை. (அதற்கும் உதாரணமாக திகழ்வது அண்டை மாநில சினிமாக்கார்கள்தான்) தன் படங்கள் வரும்போதெல்லாம் கட் அவுட்டுகளுக்கு பால் ஊற்றிய ரசிகனின் ஊர், ரசிகனின் வீடு, ரசிகனின் உடமை, ரசிகனின்…
Bollywood Babe Indian Actress Reema Sen Wallpapers
‘தண்ணீரில் மனிதன் எடையிழப்பான்’ என்கிறது ஆர்கிமிடீஸ் தத்துவம்! தண்ணீரில் மனிதன் எடையை மட்டுமா இழப்பான்? உடை, மானம், மரியாதை, குடை, அண்ணாக்கயிறு, செருப்பு அத்தனையும் இழப்பான் என்கிறது ‘நீர்’க்கிமிடீஸ் தத்துவம்! குப்புறவோ, மல்லாந்தோ ஒருக்களிச்சோ கிடக்கிற ஒவ்வொரு குடிகாரனும் நல்ல செருப்போடு கடைக்கு போய் வெறுங்காலோடு திரும்புகிறான். செகன்ட்ஹான்டில் செருப்பு விற்றே பிழைக்கிறார்கள் பலர்! செருப்பிலிருந்து செல்வாக்கு வரை எல்லாவற்றையும் தொலைக்கிற குடிகாரனுக்கு அதே போதை மடத்தில் ஒரு செல்லுலாய்டு…
vettai
வேட்டைக்கு போன ராஜாவுக்கு வேட்டியெல்லாம் ரத்தக் கறைன்னா அது பெருமை! ஆனால் ‘ரகசிய’ வேட்டைக்கு போன மந்திரிக்கு அதிசயமா ஒரு அனுபவம் வாய்ச்சா அதுக்கு பெயரென்ன? பச்சக் பச்சக்னு ‘முத்தம்’ விழும்னு போன அந்த மந்திரிக்கு, பொளேர் பொளேர்னு ‘சத்தம்’ விழுந்த ஸ்டோரி இது! ராஜா உட்கார்ந்தால்தான் சிம்மாசனம். அதுவே, நரி உட்கார்ந்தால் அது சர்க்கஸ் நாற்காலி! ஒரு சிம்மாசனம் ஏன் சர்க்கஸ் நாற்காலியானது? அந்த அண்டை நாட்டு அசிங்கத்தை…
barathiraja-karuthamma
“திராட்சையை புதைச்சுட்டு ஒயினா எடுக்கிறீயே? உன்னால ஒரு ஒயின் பாட்டிலை புதைச்சுட்டு திராட்சையா எடுக்க முடியுமா? ஆ ஹை… ஆ ஹை…” என்று குதித்துக் கொண்டிருந்தார் ஒரு குடிமகன்! எதிரில் இவரை போலவே இன்னொரு தத்துவ மேதை. இருவருமே குடித்திருந்தார்கள். இரு குடிகாரர்களின் பேச்சை சற்றே தொலைவில் நின்று கேட்டு ரசிப்பதை விட சுவாரஸ்யமானது உலகத்தில் இல்லை. சில நேரங்களில் அதைவிட சுவாரஸ்யமாக இருக்கும் பல இலக்கியவாதிகளின் பேச்சும் அரசியல்வாதிகளின்…
aachi manorama
நீங்கள் வேண்டி விரும்பி ஏற்றுக்கொண்ட வேலையை எத்தனை வருடம் சலிப்பில்லாமல் செய்வீர்கள்? கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் மெனக்கெடலுடன் இலக்கில்லாத ஒரு இறுதியை நோக்கித் தொடர்ந்து பயணிக்க இயலுமா? ஆம், எனில் நீங்கள் கோபிஷாந்தா என்கிற மனோரமாவாகிய ஆச்சியின் நீண்ட நெடிய கலைப் பயணத்தைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். அவர்களுக்கென்ன சினிமாக் காரர்கள் புகழும் பணமும் மலிந்த இடம் பிறகு உழைப்பதெற்கென்ன என்று எளிதில் புறந்தள்ளவும் முடியாது, புகழுக்கும் உழைப்பெனும் முதலீடு தேவையாயிருக்கிறதே…..…
puli-murugan manthiram
சமீப காலமாகவே தமிழ் சினிமாவின் பெரிய, பெரிய கதாநாயகர்கள் நடித்து, பெரிய பெரிய பட்ஜெட்டுகளில் உருவாகும் நேரடி தமிழ் படங்கள், வெளியாகும் நேரத்தில் நிறைய பிரச்சினைகளை சந்திப்பதும், வெளியான பின் தலை கீழான விமர்சனங்களாலும் சமூக ஊடகங்களாலும் சேதாரத்திற்கு உள்ளாக்கப்படுவதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இதில் அரசியல் வேறு சேர்ந்துகொள்கிறது என்று கேள்விப்படுகிற தகவல் கண்டிப்பாக சினிமாவுக்கு ஆரோக்கியமானதென்று சொல்ல முடியாது. அந்த வரிசையில் இப்போது புலி. புலி –…
Thuppakki New Stills
‘தஞ்சாவூரு பெரிய கோவிலுக்கே சடை பின்னி பூ வச்சது எங்க ஆத்தாதான்’ என்று பெருமையடிக்கிற பலர், சாதாரண எருமை மேலிருக்கும் ஈயை விரட்டக்கூட லாயக்கில்லாதவர்களாக இருப்பார்கள்! அதுவும் கொஞ்சம் குடித்திருந்தால் போதும்… ‘குலோந்துங்க சோழனுக்கு குர்தா வாங்கிக் கொடுத்ததே எங்க தாத்தன்தான்’ என்று அளப்பார்கள். இப்படி தன்னோட சுயசரிதையையும், தன் முன்னோர்களின் சுயசரிதையையும் டாஸ்மாக்குல உட்கார்ந்து காற்றிலேயே எழுதி முடிச்சுட்டு கிளம்புன ஆசாமிகள் பலர், அதே காற்றிடம் ‘ராயல் டி’…
poettu with fighttu
நண்டு கொடுக்குலேயே பிளேடு இருந்தாலும், அது நாண்டுகிட்டு சாவறது ஏதோ ஒரு எண்ணெய் சட்டியிலதான்! வாலிப கொடுக்குக்கெல்லாம் ‘வைட்டமின் லவ்’ பொங்கி வர்ற காலம் பொற்காலமா இருக்கலாம். ஆனால் எங்காவது சறுக்கி எக்குத்தப்பா விழும்போதுதான், நாம விழுந்தது காதல்ல இல்ல… வெவகாரமான எண்ணெய் சட்டியில என்கிற ஞானமே வரும்! அந்த மாதிரி நேரத்திலெல்லாம் ஆகாயம் புட்டுக்கிட்டு ஆல்கஹாலா கொட்டும்! ஒயினோ, பிராந்தியோ, விஸ்கியோ, பீரோ… வழியுற வானத்தை கோப்பையில பிடிச்சு,…
Maalia nerathu mayakkam
ரொம்ப பேருக்கு சூரியன் அடங்குற நேரத்துலதான் கட்டுவிரியன் கண்ண தொறக்குது! அந்த ‘கட்டிங்’ விரியனுக்கு தன்னையே காவு கொடுக்கிற கொள்ளை பேரு, சாயங்காலம் ஆச்சுன்னா சர்வ பெரிய ஆர்ப்பாட்டங்களுக்கும் தயாராகிடுறாங்க. ஆறு மணிக்கு மேல அந்த அலெக்சாண்டரே கூப்பிட்டாலும், “நம்ம கையி வாளை எடுக்காதே!” என்பார்கள் வீரமாக! ‘நடை தளர்ந்து நம்பிக்கை போறதுக்குள்ள கடை அடைந்து ‘கட்டிங்’ போட்டுரணும்’ என்று ஆத்திரமும் ஆவேசமுமாக அவர்கள் ஓடுகிற ஓட்டம், ஒலிம்பிக்ஸ்சே வியக்கிற…
rajini-kamal
நேற்றைய வைரல் ரஜினியும் கமலும்தான். நேற்று மாலை வாட்ஸ்அப்புகளில் உலாவ ஆரம்பித்தது ரஜினியின் கபாலி பர்ஸ்ட் லுக்! அடுத்த வினாடியே காற்று வேகம் மனோ வேகம் என்பார்களே, அதைவிட வேகமாக பரவின அத்தனை ஸ்டில்களும். எல்லாம் ஆனந்த விகடன் இதழ் கடைக்கு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன் நடந்த பரபரப்பு. இந்த வார விகடன், கபாலி ஸ்பெஷல் போட்டோக்களுடன் வெளிவந்திருக்கிறது. சொல்லி வைத்துக் கொண்ட மாதிரி, அதே நாளின் அழகான…
jananam-serial
உலகம் முழுக்க ‘இருக்கு’ன்னு சொல்றவனை விட, ‘இருக்கா?’ன்னு கேட்கிறவனோட எண்ணிக்கைதான் ஜாஸ்தியாயிருக்கு! அறிவிருக்கா? மூளையிருக்கா?ன்னு ஆரம்பிச்சு, நடு ராத்திரியில கதவ தட்டி, ‘உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?’ன்னு கேட்கிற வரைக்கும் நாளுக்கு நாள் வளர்ந்துகிட்டேயிருக்கு கேள்வி கேட்கிற கூட்டம். நல்லவேளை… ‘உங்க பிரஷ்ல கைப்பிடி இருக்கா?’ன்னு கேட்காம விட்டாய்ங்களே? அதிருக்கட்டும்… ‘இன்னைக்கு பார்ட்டி இருக்கா மச்சி?’ ‘எந்த பார்ல மீட் பண்றோம்?’ குவார்டரோட நிறுத்திக்கணுமா? ஆஃப் வரைக்கும் எகிறலாமா? என்கிற…
Page 3 of 612345...Last »

all news