Cinema News

venmegam-vitharth
விதார்த்தின் அடுத்த ரிலீஸ் அஜீத்தின் ‘வீரம்’தான். மைனா வெற்றிக்கு பிறகு ராட்சத கழுகாக மாறுவார் என்று எதிர்பார்த்தால், மைனா தேய்ந்து எறும்பாகிப் போனதுதான் மிச்சம். இனி பொறுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தவரின் அதிரடி ஆட்டம்தான் இந்த வீரம். பொதுவாகவே அஜீத்தின் நல்ல மனசுக்கு அவருடன் சேர்ந்து நடிக்கும் மற்ற ஹீரோக்களே எடுத்துக்காட்டு. ஆரம்பம் படத்தில் ஆர்யாவுக்கு அஜீத் கொடுத்த முக்கியத்துவமே இதற்கு சாட்சி. வீரம் படத்திலும் விதார்த்தை அவர் கைவிட…
?????????????????????????????????????????????????????
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கப் போவதாக கூறியிருக்கிறார் இயக்குனர் வ.கௌதமன். பிரபாகரனை போன்ற மாவீரர்களின் கதையை படமாக்க வேண்டுமெனில் அதை பட்ஜெட் படமாக எடுத்தால் சுத்தப்படாது என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். இருந்தாலும், இப்போதிருக்கிற சூழலில் ஏதோ தன்னாலான முயற்சி என்கிற அளவிலேயே இந்த படத்திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார் அவர். தமிழ்சினிமா ஹீரோக்கள் பலரையும் தன் தனிப்பட்ட துணிச்சல் மூலமே கவர்ந்திருக்கிறது அவரது பெயர். ஆனால் ‘பிரபாகரன்…
vimal
கடைஞ்ச மோரை, உடைஞ்ச பானையில ஊற்றி வச்ச மாதிரியே நடக்கிறது விமலுக்கு எல்லாமும். இவருக்கு பின்னால் வந்த சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இருவரும் இவர் டிராவல் பண்ணிய அதே தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து உச்சாணிக் கொம்பை பிடித்துவிட்டார்கள். இவரது நிலைமை மட்டும் இன்னும் சறுக்கல்தான். சமீபத்தில் வெளியான ‘ஜன்னல் ஓரம்’ படத்தினாலும் விமலுக்கு வந்தது ஒரு சத்திய சோதனை. பல்வேறு சிக்கல்களால் பட வெளியீடு களேபரமாக, தனது சம்பளமான அறுபது லட்சத்தை…
sangavi
புதிய கட்டிடத்தில் ஜாம் ஜாமென இயங்க ஆரம்பித்திருக்கிறது சென்னை நரக காவல் துறை ஆணையர் அலுவலகம். எந்த நேரத்தில் திறக்கப்பட்டதோ, காதல் ஜோடிகளும் கவர்ச்சி நடிகைகளும் பஞ்சாயத்துக்காக இங்கே கிளம்பி வந்துவிடுகிறார்கள். இது அடிக்கடி நடக்க ஆரம்பித்திருப்பதால், கமிஷனர் அலுவலக ரிப்போர்ட்டர்கள் எந்நேரமும் பரபரப்புடனே இருக்கிறார்கள். சமீபத்தில் தன்னை ஒரு தொழிலதிபர் ஏமாற்றிவிட்டதாக புகார் கூறினார் சுந்தரா டிராவல்ஸ் ராதா. அந்த பிரச்சனையை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறது போலீஸ். இதற்கிடையில்…
goutham simbu
ஒரே தலைப்பை இரண்டு படங்களுக்கு வைத்து இரண்டு பேரும் அடித்துக் கொள்வதை டிக்கெட் வாங்காமலே பார்த்து இன்புறுகின்றன இந்த தலைப்பு குழப்பத்திற்கு சம்பந்தப்பட்ட அத்தனை சினிமா சங்கங்களும். மங்கல்யாண் ராக்கெட் பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை கிரகங்களையும் சுற்றி வந்து முடித்திருந்தாலும், இந்த பிரச்சனையை முடித்து வைக்க எவ்வித யுக்தியும் கிடைக்காது. சக்தியும் அமையாது போலிருக்கிறது. நல்லவேளையாக இந்த அவஸ்தையிலிருந்து கடைசி நேரத்தில் தப்பியிருக்கிறார் கவுதம் மேனன். இவர் சிம்புவை வைத்து…
ajith01
மங்காத்தாவில் ஆரம்பித்த ஸ்டைல் இது. ‘தலைவா… இதையே மெயின்ட்டெயின் பண்ணு….’ என்று ரசிகர்கள் கொண்டாட, தனது தலைக்கு டை அடிக்காமலே விட்டுவிட்டார் அஜீத். இதற்கு சால்ட் அன்ட் பெப்பர் லுக் என்று செல்ல பெயரிட்ட அஜீத் அர்பணிப்பு மன்றத்தினர் பலர் தங்கள் தலைக்கும் டை அடிக்காமல் விட்டு, சிகை அலங்கார நிபுணர்களின் வருமானத்திற்கு வேட்டு வைத்தார்கள். இவர்கள் தந்த பிரச்சனை இது என்றால், அதற்கப்புறம் வந்த எந்த படத்திற்காகவும் தலையில்…
meenashi
ஏ.வி.எம் புதிய பிள்ளையார் கோவிலில் ‘வில்லங்கம்’ படத்தின் துவக்க விழா நடைபெற்றது. ரெட் ஒன் புரடக்ஷன் சார்பாக இந்த படத்தை சுமதி அண்ணாமலையும், ரா.நா.சரவணனும் தயாரிக்கிறார்கள். படத்தை இயக்குகிறார் ரா.நா.சரவணன். இவர் ஏற்கனவே இயக்கி விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் ‘முகம் நான் அகம் நீ’ வில்லங்கம் படத்தில் ‘புன்னகை பூவே’ படத்தில் அறிமுகமாகி ஆணிவேர், வேலுர் மாவட்டம் போன்ற படங்களில் நடித்த நந்தா ஹீரோவாக நடிக்கிறார். கருப்பசாமி குத்தகைதாரர்…
vijay-nanban
இன்று வெளியாகியிருக்கும் தகராறு படத்தில் பூர்ணா படு பயங்கரமான வில்லியாக நடித்திருக்கிறாராம். படத்தில்தான் அப்படியா, இல்ல நிஜத்திலேயே நீங்க வில்லிதானா என்று விஜய் ரசிகர்கள் கொந்தளிக்கிற அளவுக்கு அவர் புலம்பி வருகிறாராம். பெரிய குடும்பத்தில் பிறந்த (சே அந்த பெரிய இல்ல. இது வீட்ல இவரையும் சேர்த்து ஆறு பேர் என்ற கணக்கில் சொல்லும் இந்த பெரிய…) பூர்ணா தனது நெடுநாளைய கனவு வீட்டை இப்போதுதான் கேரளாவில் கட்டி முடித்திருக்கிறார்.…
rajini
ரஜினி எந்த கடவுளை வணங்குகிறாரோ, அந்த கடவுளை வணங்குவது அவரது ரசிகர்களின் வழக்கம். ஒரு காலத்தில் திருவல்லிக்கேணியில் இருக்கும் ராகவேந்திரர் கோவிலை யாரும் கவனித்தது கூட இல்லை. அந்த கோவிலுக்கு அடிக்கடி ரஜினி வருகிறார் என்று கேள்விப்பட்டதும், ராகவேந்திரரை பார்க்க கிளம்பிய கூட்டத்தை விட ரஜினியை பார்க்க வந்த கூட்டமே அதிகம். காலப்போக்கில் நமது வரவு கோவிலுக்கும் நிர்வாகத்திற்குமே பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதை உணர்ந்த ரஜினி, நெஞ்சமே கோவில்,…
Sri_divya
  ஃபேஸ்புக் குறும்பர்களுக்கு அஞ்சியே அக்கவுன்ட்டை குளோஸ் பண்ணிவிட்டு நடையை கட்டிவிடுவார்கள் போலிருக்கிறது ஊதாக்கலரு ஸ்ரீதிவ்யாவும், கும்கி லட்சுமிமேனனும். சமீபத்தில் ஒரு ஒப்பீடு புகைப்படத்தை உருவாக்கிய ஒரு குறும்பர், அதை சம்பந்தப்பட்ட இருவருக்குமே டேக் செய்திருக்கிறார்.   ஸ்கூல் போற லட்சுமிமேனை டீச்சரா நடிக்க வைக்கிறாங்க. டீச்சர் வயசுள்ள ஸ்ரீதிவ்யாவை ஸ்டூடன்ட்டா நடிக்க வைக்கிறாங்க. என்னாங்கடா போங்கு ஆட்டம்? என்று இவர் கலாய்க்க, சம்பந்தப்பட்ட நடிகைகள் அந்த ஓப்பீட்டு கலகத்தை…
shruti_hassan
அதென்னவோ தெரியவில்லை. உலக நாயகனின் மூத்த மகளுக்கு உள்ளுர் சினிமா கைகொடுக்கவே இல்லை. அவர் தமிழில் நடித்த படங்கள் இரண்டுமே அவருக்கும் சரி, ரசிகர்களுக்கும் சரி, உற்சாகத்தை கொடுக்கவில்லை. தெலுங்கு இந்தி என்று திசைமாறினாலும், தமிழின் மீது ஓரு தீராக்காதல் இருந்து கொண்டேயிருக்கிறது அவருக்கு. இந்த நேரத்தில் நயன்தாரா, அமலாபால் என்று இரண்டு டாப் ஹீரோயின்களுடன் நடிக்க கமிட் ஆகியிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஸ்ருதியுடனும் நடித்துவிட்டால், புகழின் உச்சியில் பூ வைச்ச…
mandiya
பஞ்சாப் சினேகா என்று கொண்டாடப்படும் ஒரு நடிகையை தமிழ்நாட்டு நமீதாவாக்கி திண்டாட விட்டிருக்கிறார் வெங்கட்பிரபு. அந்த ஊர்ல பல படங்களில் குடும்ப குத்துவிளக்காக நடிச்சிருக்கிறார் மாண்டி தாக்கர். புடவை இல்லேன்னா சுடிதார். இது தவிர வேறு காஸ்ட்யூம்ல அவர் நடிச்சதேயில்ல. பிரியாணி படத்தில் இப்படியொரு கேரக்டரை உருவாக்கினதும், அதுக்கு பொருத்தமான நடிகையை தேடினோம். அப்பதான் மாண்டியோட போட்டோ கிடைச்சுது. உடனே அழைச்சுட்டு வந்து நடிக்க வச்சோம் என்றார். படத்தில் நடித்துக்…
vijay-newtamilcinemacom
‘தலைவா’ திரைப்படம் விஜய்யை பொருத்தவரை கோஷத்திற்கு மட்டுமே உதவும் ‘தொண்டா’வாகிப் போனது. அந்த படத்தை பற்றி மீண்டும் அவர் நினைத்துக் கூட பார்க்க விரும்பாத அளவுக்கு அவரை சுற்றியடித்தது சூறாவளி. ஆனால் அவ்வளவு வலியிலும் ஒரு நல்லது நடந்திருக்கிறதாம். ஆனால் இப்போதிருக்கும் நிலையில் இந்த நல்லதையும் அவர் நினைத்துப் பார்ப்பாரா தெரியவில்லை. அண்மையில் மறைந்த டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகள் காயத்ரி ரகுராம் அப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். அந்த…
vijay sethupathy
‘நான் நின்னது மட்டுமில்ல… தமிழ்நாடே கொண்டாடுற விஜய் சேதுபதியும் என் பக்கத்துல இடம் இல்லாம நின்னாரு….’ இப்படி அமீரால் ஒரு விழாவில் பாராட்டப்பட்டவர் விஜய் சேதுபதி. அவரே சொல்கிற மாதிரி தமிழ்நாடே கொண்டாடுகிற ஒரு நடிகரின் கால்ஷீட் இருக்கு. அவரை வச்சு படம் பண்றீங்களா என்று ஒரு இயக்குனரிடம் கேட்கப்பட, ‘அதெல்லாம் வேணாம் சார்’ என்று அந்த இயக்குனர் மறுத்தால் அவரை பற்றி என்ன நினைப்பீர்கள்? என்ன வேணும்னாலும் நினைச்சுட்டு…
ganja-karuppu
தானே தயாரித்த வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு தனது எதிரிகளுக்கும் வீடு தேடி சென்று இன்விடேஷன் வைத்தார் கஞ்சா கருப்பு. எதிரிகளையே அழைத்தார் என்றால், நண்பர்களை எப்படி அழைத்திருப்பார்? கமலா தியேட்டர் வாசலில் நின்று கொண்டு வாங்கண்ணே… வாங்க என்று அவர் அழைத்த விதத்தில் உருகி வழிந்தது விருந்தினர் கூட்டம். விழா நடைபெறும் தியேட்டருக்குள் நுழைந்தால் கடப்பாரை விழுந்தால் குண்டூசி ஆகிவிடுகிற அளவுக்கு கூட்டம். இதில் அமீருக்கே…
samantha
எவ்வளவு உயரத்திற்கு போனாலும் சில இழப்புகளை சகித்துக் கொள்ள முடியாது. அப்படி சகித்துக் கொள்ள முடியாத ஒரு தோல்வியிலிருந்து மீண்டிருக்கிறார் சமந்தா. அதுவும் சில பெண்களுக்கேயுரிய கண்ணீர் ஆயுதத்தை கொண்டு. ‘சமந்தாவும் சருமநோயும்’ என்று தனியாக ஒரு ஓய்வு கட்டுரையே எழுதுகிற அளவுக்கு மேற்படி நோயால் தாக்கப்பட்டு முக்கிய படங்களையெல்லாம் நழுவ விட்டிருக்கிறார் சமந்தா. கடந்த வருடத்தில் அவரை தாக்கிய இந்த சரும புயலால் மூன்று மாதங்கள் வெளியே தலைகாட்டாமல்…
rajini-kamal
ரஜினியும் கமலும் ஒரு காலத்திலும் மோதிக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் நட்பு அப்படி. ஆனாலும் கமல் விஸ்வரூபம் பார்ட் 2 க்கு காட்டுகிற துல்லியத்தை பார்த்தால் அது ரஜினியின் கோச்சடையானுக்கு தொந்தரவாக வந்து அமையுமோ என்பது போலவே இருக்கிறது சுச்சுவேஷன். இன்னும் பத்து நாட்கள் படப்பிடிப்பு மீதம் இருக்கிறதாம் விஸ்வரூபம் படத்திற்கு. அதுமட்டுமல்ல, ஆரோ 3டி தொழில் நுட்ப வேலைகளை முடிக்கவே ஒரு மாதம் தேவைப்படும் என்கிறார்கள். இந்த…
nayanthara-NTC
நயன்தாராவின் சம்பாத்தியத்தையெல்லாம் ஏதாவது ஒரு சீசன் புயல் வந்து கபளீகரம் செய்துவிட்டு போகும். இந்த கொடுமை காதல் என்ற பெயரில் நடந்து வருவதுதான் இன்னும் பெரிய கொடுமை. புயலுக்கு பின்னே அமைதி என்பது போல சில மாதங்கள் மவுன விரதங்கள் மேற்கொள்ளும் நயன்தாரா, அதற்கப்புறம் ஒன்ணுலயிருந்து எண்ண ஆரம்பித்து மறுபடியும் கோடிகளை சேர்ப்பார். இப்போதெல்லாம் பண விஷயத்தில் ரொம்ப கறாராக இருக்கும் நயன்தாரா, சிம்புவுடன் இணைந்து நடிக்க போட்ட நிபந்தனைகள்…
arya
தமிழ்சினிமாவுக்கு தமிழில் பெயர் வைப்பதையே பெரிய விஷயமாக பேசும்படி ஆகிக் கொண்டிருக்கிறது செம்மொழியான தமிழ் மொழியாம் நிலைமை. இருந்தாலும் பாராட்டியே ஆக வேண்டும் என்கிற அளவுக்கு வடிகட்டிய தமிழில் பெயர் வைத்திருக்கிறார் மகிழ் திருமேனி. தடையற தாக்க என்பது இவரது முந்தைய படம். அதற்கும் முன்பாக ஒரு படம் வந்தது. அதை அவரே நினைவில் வைத்திருக்கவில்லை. அல்லது விரும்பவில்லை. ஆனால் தடையற தாக்கவுக்கு பிறகுதான், இவருடைய வரலாறை விசாரிக்க ஆரம்பித்தது…
vijay
ஃபேஸ்புக், ட்விட்டர் , இணையதளங்கள் போன்ற நவீன யுகத்தை பற்றி அதிகம் அலட்டிக் கொள்பவரல்ல விஜய். ஆனால் அவரை ஆட்டோ ஆட்டென ஆட்டி வைப்பதும் இதுபோன்ற சமூக வலைதளங்களும் இணையதளங்களும்தான். ‘கடுபேத்துறங்க யுவர் ஆனர் ’ என்று கதறக்கூட முடியாதளவுக்கு பழைய பஞ்சாகத்தில் ‘லாக்’ ஆகிக் கிடக்கும் விஜய், நேற்றும் அப்படிதான். பத்து பதினைந்து நாளிதழ் நிருபர்களுக்கும் ஒரு சில வார இதழ் நிருபர்களுக்கும் அழைப்பு விடுத்தார். இவர்களை தனித்தனியாக…
Page 227 of 241« First...102030...225226227228229...240...Last »

all news