Cinema News

rajini in sangadam
முன்னால் அமர்ந்திருப்பவர்கள் உங்களுக்கு தெரிந்த பிர்ர்ர்ர்ர்ரபலங்கள், பின்னால் நிற்பவர்கள் ஐயோ பாவம், துணை நடிகர் ரஜினி, உதவி இயக்குனர் மகேந்திரன் ஸ்டன்ட் துணை நடிகர் பிரபு சிவாஜிகணேசன். இந்த படத்தின் பின்னால் நிற்பவர்களில் வலது ஓரத்தில் நிற்கிறாரே, அவர் பெயர் இளையராஜா. ஏதோ மூணு படங்களுக்கு இசையமைத்திருக்கிறாராம். அவரது பக்கத்தில் நிற்கிறவர் பெயர் கமல்ஹாசனாம். அவரும் சிற்சில வேடங்களில் நடித்திருப்பதாக சொல்கிறார்கள்.  
anu01
நாக்கால பேசுனா தமிழ், மூக்கால பேசுனா மலையாளம். ஆனால் ‘சேச்சி’ அனுகிருஷ்ணா பேச்சுல அப்படியே தமிழச்சி வாடை. ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படத்தின் ஹீரோயினான அனு, இப்படி தமிழச்சியாகவே மாறிப் போன ரகசியம் என்ன? அடப் போங்க சார். நான் திருவனந்தபுரத்துல பொறந்தவளா இருந்தாலும் சென்னையில வளர்ந்தவ. எஸ்.ஆர்.எம் காலேஜ்ல என்ஜினியரிங் படிக்கிறேன். கூடப் படிக்கிறவங்களும் தமிழ்தானே. சுத்தமா மலையாள வாடையே விட்டுப் போச்சு என்றார். பக்கத்திலேயே இருக்கும் பாதுகாப்பு அதிகாரியான…
Shaam-
ஒரு திரைப்படமாக ஆறுமெழுகுவர்த்திகள் வெற்றிபெற்றுவிட்டது என்று விமர்சனங்கள் காட்டுகின்றன. பொருளியல்ரீதியாகவும் வெற்றி என்று இன்றைய நிலவரத்தைக்கொண்டு கணித்துவிட்டார்கள். மகிழ்ச்சி அடையவேண்டிய தருணம். ஆனால் மிகமிக மனக்கசப்புதான் எஞ்சுகிறது. காரணம், குழந்தைகளை இதேபோலத் தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கும் பலர் தொடர்புகொள்வதுதான். உண்மையில் இந்த அளவுக்குச் சாதாரணமாக இது இங்கே நிகழ்கிறது என்பது அதிர்ச்சியாகவே இருக்கிறது. தொண்ணூறு சதவீதம் குழந்தைகள் திரும்பக்கிடைப்பதில்லை. காணாமல்போகும் குழந்தைகள் பெரும்பாலும் பெண்கள் இங்கே பெரும்பாலான pan Indian குற்றங்கள்…
rajini with cm
* சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து நேரு விளையாட்டு அரங்கம் வரை முதல்வர் விழாவுக்கு வரும் வழியில், முதல்வரை வாழ்த்தியும் அவரது மலிவுவிலை உணவகம், மலிவு விலை குடிநீர் ஆகிய திட்டங்களைப் பாராட்டியும், பல பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. வழியெங்கும் மங்கல மேளம், கேரளத்து செண்டை மேளம், நாட்டுப்புற நடனம் என்று வீரியமான விழாக் கோலம் வசீகரித்தது. ஏராளமான அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் முதல்வரைக் காண வழியெங்கும் கூடி…
kamal rashith khan
கருப்பா பிறந்த எல்லாருமே காலரை துக்கிவிட்டுக் கொண்டது ரெண்டே சந்தர்ப்பங்களில்தான். ஒன்று காமராஜர் முதல்வராக வந்தபோது. மற்றொன்று ரஜினி அறிமுகமான பின். தமிழ்சினிமாவில் சிவாஜியின் தாக்கம் இல்லாமல் யாராலும் நடிக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை ரஜினியின் தாக்கம் இல்லாமல் நடிக்க முடியாது என்பதும். அப்படிப்பட்ட ஒருவரை சகிக்கவே சகிக்காத ஒரு பாலிவுட் நடிகர் சகிக்க முடியாத வார்த்தைகளால் விமர்சித்திருப்பது அநியாயம். “தென்னிந்திய நடிகர்களிலேயே ரஜினி மட்டும்…
shalini__shamili_sisters-other
நல்ல நல்ல நடிகைகளையெல்லாம் கல்யாணம் ‘கட்டிக் கொண்டு’ போய்விடுகிறது. ஜோதிகா, ஷாலினி என்று இவர்கள் வாழ்க்கை பட்ட இடம் வசந்தகாலப் பூக்களாக இருந்தாலும், சினிமாவில் இவர்களது வெற்றிடத்தை நிரப்ப, ஒரு மயிலும் இல்லை. மானும் இல்லை. அக்கா அளவுக்கு இல்லையென்றாலும் ஷாலினி தங்கை ஷாம்லிக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்றே நம்பினார்கள் சினிமாவுலகத்தில். ஆனால் அவர் தெலுங்கில் நடித்த படம் எதுவும் ஒடிய மாதிரி தெரியவில்லை. தமிழும் பெரிசாக ஷாம்லி…
pandiya-nadu-002
‘சுட்டக்கதை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை ஜெனிவாவில் நடத்தினார் அப்படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். ‘அதனால் விளைந்த பயன் யாது யாது யாது?’ என்று கே.பி.சுந்தராம்பாள் குரலில் ஒரு தனிப்பாடலே பாடலாம். அந்தளவுக்கு நொந்து போயிருக்கிறார் ரவீந்தர். படத்தை வாங்கிய வேந்தர் மூவிஸ், சுட்டக்கதையை நஷ்டக்கதையாக்குகிற அளவுக்கு நாள் கடத்திக் கொண்டே போனதுதான் மிச்சம். அதனால் போணியாகிற சரக்கை எந்த ஊரில் ரிலீஸ் செய்தாலென்ன என்று முடிவுக்கு வந்திருக்கலாம், விஷால்…
arya-ajith-in-aarambam-movie_
நான் தமிழன்டா என்று சினிமா திரையில் மார் தட்டும் நம்ம ஊர் சினிமா ஹீரோக்கள் சிலரிடம் ஒரு தமிழ் பேப்பரை கொடுத்தால் அலங்க மலங்க ஓடுவார்கள். ஏனென்றால் எழுத்துக் கூட்டி மட்டுமல்ல, எச்சில் கூட்டி கூட தமிழை படிக்க இயலாது அவர்களால். அப்படியென்றால் தன்னை பற்றி வருகிற செய்திகளை எப்படி தெரிந்து கொள்கிறார்களாம்? பக்கத்தில் இருப்பவர்களிடம் கொஞ்சம் படிங்கப்பா என்று சொல்லிதான். மேகசின் விஷயத்தில் இப்படி மேலோட்டமாக தப்பித்துக் கொண்டிருந்தாலும்,…
Ajith01
முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட இந்திய சினிமாவின் நுற்றாண்டு விழாவில் அஜீத்தும் கலந்து கொண்டாரா? இப்படியொரு கேள்வியை அவரது ரசிகர்கள் எழுப்புகிற அளவுக்கு அஜீத்தின் புகைப்படத்தை புறக்கணித்திருக்கிறது மீடியாக்களின் செயல்பாடு. பொதுவாக எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் பளிச்சென கண்ணில் படுகிறவர் அஜீத். அவரே ஒதுங்கிப் போனாலும் விடாமல் க்ளிக்கி தள்ளுவார்கள் பிரஸ் போட்டோகிராபர்கள். ஆனால் கடந்த 21 ந் தேதி நடைபெற்ற விழாவில் விஜய் விக்ரம் இருவரும் அருகருகே…
rajini01
தன் படங்களால் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்றால் விநியோகஸ்தர்களை கூப்பிட்டு ‘வச்சுக்கங்க உங்க பணத்தை’ என்று திருப்பித் தருகிற நேர்மை ரஜினிக்கு இருக்கிறது. ஆனால் அவரது மருமகனுக்கு இருக்கிறதா என்கிற கேள்வி கோடம்பாக்கத்தை சுற்றி சுற்றி வருவதால், ‘அட்றா அவன… புட்றா இவன…’ என்று தனிப்பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்கள் அண்ணணும் தம்பியும். இந்த இராம லட்சுமணர்களை சுற்றி என்னவாம் பிரச்சனை? காதல் கொண்டேன் படத்தை இந்தியில் ரீமேக் பண்ண ஆசைப்பட்டாராம் பிரபல…
Roja+Telugu+Hot Actress+Download (1)
ரோஜாவின் அடுத்த கட்ட பாய்ச்சல் அரசியல்தான் என்றிருந்தது. யாருடைய கெட்ட நேரமோ, இவர் தலைவராக ஏற்றுக் கொண்ட ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி அமரர் ஆகிவிட்டார். அதற்கப்புறம் அவ்ளோ பெரிய சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை கூட ஒண்டிக்கு ஒண்டி கூப்பிட்டு அரசியல் செய்து பார்த்த ரோஜாவுக்கு, மக்கள் தந்தது நக்கலான ஒரு ஸ்மைல்தான். வந்த மடம் இல்லேன்னா சந்த மடம் என்பார்கள் கிராமத்தில். ரோஜாவின் முடிவும் அப்படியாகிவிட்டது. மீண்டும்…
karunaas
சினிமாவில் நடிகர் கருணாசின் வெற்றி தோல்விகள் எப்படியோ? அரசியலில் ‘பிரைட்டாக’ ஒரு விடிவெள்ளி முளைக்க ஆரம்பித்திருக்கிறது இவரது தலைக்கு மேல். அண்மைக்காலமாக தென்மாவட்டங்களில் விஐபி யாக வலம் வர ஆரம்பித்துவிட்டார் கருணாஸ். முக்குலத்தோர் இளைஞர்கள் இவர் பின்னால் அணிவகுத்துக் கொண்டிருக்கிறார்கள். தேவர் ஜெயந்தியின் போதெல்லாம் கருணாசின் பின்னால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புடைசூழ அவர் நடமாடி வருவதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன சக அரசியல் கட்சிகள். இந்த நேரத்தில்தான் இப்படியொரு அதிர்ஷ்டம்…
jj
இந்திய சினிமாவின் நுற்றாண்டுவிழா கொண்டாட்டம் களை கட்டி வருகிறது. அதே நேரத்தில் சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் முதல்வர் ஜெயலலிதா இந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்காக பத்து கோடி ரூபாயை வழங்கியிருக்கிறார். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வேண்டும் என்கிற நோக்கம் மட்டுமல்ல, இதையே காரணம் காட்டி யாரும் யாரிடமும் வசூல் வேட்டையில் ஈடுபட்டுவிடக் கூடாது என்கிற நல்லெண்ணத்திலும்தான். ஆனால் அவர் நினைத்தது நடக்கிறதா என்றால் அதுதான் இல்லை. மதுரை, கோவை,…
vijay ajith
கதர் சட்டைக்கும் கஞ்சிக்கும் இருக்கிற தொடர்புதான் சரத்குமாருக்கும் நடிகர் சங்கத்திற்கும்! அவர் செயலாளராக இருந்தபோதும் சரி, தலைவராக இருக்கிற போதும் சரி. அந்த ‘மொட மொட’ப்பை குறைய விட்டதேயில்லை. ராகுவும் கேதுவும் சேர்ந்து கொண்டு நடிகர் சங்கத்தை வளைத்துவிட்டதை போலவும், வாலை நீ பிடி… தலையை நான் பிடிக்கிறேன் என்று அரவங்களை அகற்றி துயரங்களை துடைக்க முன் வந்தது போலவும் நடந்து கொண்டனர் சூர்யா, விஷால், கார்த்தி, ஜீவா உள்ளிட்ட…
prakash-1
பிரகாஷ்ராஜூக்கு அட்வான்ஸ் கொடுத்தவர்கள், அதான் கொடுத்தாச்சே… வந்துருவாரு என்று நிம்மதியாக இருந்ததாக ஹிஸ்ட்ரியே இல்லை. கால்ஷீட் குழப்ப விஷயத்தில் ஹிஸ்ட்ரிக்கு பதிலாக ஹிஸ்டீரியா என்று மாற்றி படிக்கிற அளவுக்கு புத்தியை பேதலிக்க விடுவார் மனுஷன். அப்படிப்பட்ட பிரகாஷ்ராஜ் சேரனின் ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்திற்கு கால்ஷீட் கொடுத்தாராம். அதுவும் எப்படி? போனிலேயே பிரகாஷை அழைத்த சேரன், ‘இப்படியொரு கேரக்டர் இருக்கு. நீதான் பண்ணணும் நண்பா’ என்று அழைக்க, விமான டிக்கெட்,…
balachandar
இயக்குனர் சிகரம் பாலசந்தருக்கு இன்டஸ்ரியில் எப்போதும் மரியாதை உண்டு. ஏனென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினியையும், கலைஞானி கமல்ஹாசனையும் அறிமுகப்படுத்தியவர் என்பது மட்டுமல்ல, அவர்கள் இருவருமே பாலசந்தர் அழைத்தால், படுவேகத்தில் ஓடி வருபவர்கள் என்பதாலும்தான். ‘இவர்களின் முரட்டு அன்புக்கு ஈடாக நான் என்ன செய்யப் போகிறேன்’ என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன் மனசிலிருக்கும் ஸ்கிரீனை ஓப்பன் பண்ணி விடுவார் பாலசந்தரும். இவ்வளவு அன்பும் பாசமும் மரியாதையும் இவர் மீது மற்றவர்கள்…
gvprakash
மோதிரக் கையால் குட்டுவாங்காத எந்த அறிமுக ஹீரோவும், கோடம்பாக்கத்தின் உச்சி வெயிலையும் அதனால் ஏற்படும் உஷ்ணத்தையும் அனுபவித்தே ஆக வேண்டும். இதனால் அறிமுகமாகிற நிலையிலேயே, ‘நல்ல டைரக்டர் கிடைக்கணும். நல்ல கம்பெனி கிடைக்கணும்’ என்றெல்லாம் பிள்ளையாரையும் முருகனையும் பிராண்ட ஆரம்பிக்கிறார்கள் அவர்கள். சாதாரண ஆட்களுக்குதான் இப்படி. ஏற்கனவே ஆட்டோகிராப் போடுகிற அளவுக்கு மார்க்கெட்டில் வளர்ந்து வீங்கி கிடப்பவர்களும் கூட, பெரிய இயக்குனர் கையால் அறிமுகமாகணும் என்று ஆசைப்பட்டால் எப்படி? அப்படிதான்…
madhan karky
கவிப்பேரரசு வைரமுத்து குடும்பத்தில் அவரை தவிர மற்றவர்களும் பேச்சாளர்கள்தான். ஆனால் அவரை போல வீச்சாளர்கள் அல்ல. அவர் பேசினால் அதில் இருக்கிற கம்பீரம், அவரது புத்திரர்களுக்கு இருக்கிறதா என்றால்… ம்ஹும். சுட்டுப்போட்டாலும் அது வராது. ஆனால் மென்மையாக பேசுகிறார்கள் கபிலனும், மதன்கார்க்கியும். அதில் நிறைய விஷயமும் சுவாரஸ்யமும் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. ஏனென்றால் அவர்களின் பிளட் குரூப் அப்படி! அண்மையில் ஃபேஸ்புக் பற்றி மதன்கார்க்கி பேசியதை கேட்பவர்கள் ஒவ்வொரு…
selvamani
யானை சைஸ் பலுனை ஒரு சின்ன குண்டூசியால் கீறிய மாதிரி டொப்பென்று முடிந்துவிட்டது அத்தனை சர்ச்சையும். நேற்று முழுவதும், ‘ஆர்.கே.செல்வமணி இப்படி சொல்லிட்டாரே…’ என்று கண்களை ‘கோவப்’பழமாக்கிய நிருபர்களுக்கு இன்று கொய்யாப்பழ ஜுஸ் கொடுத்த மாதிரி ஒரு விளக்கத்தை கொடுத்து அவர்களை நிம்மதியாக அனுப்பி வைத்தார் செல்வமணி. ‘தமிழ்’ என்ற குறும்படத்தின் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு வந்திருந்த செல்வமணி, பத்திரிகையாளர்கள் பற்றி பேசும்போது ‘ஒரு நாயும் இங்க வரல’ என்று…
Page 221 of 223« First...102030...219220221222223

all news