Cinema News

shivani copy
ஒரு சினிமா டைரக்டரை கேப்டன் ஆஃப் த ஷிப் என்கிறார்கள் இங்கே. சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தின் டைரக்டர் கஸாலி சொல்வதை கேட்டால், இவரை எபவ்டன் ஆஃப் த ‘ஹிப் ’ என்றுதான் வர்ணிக்க வேண்டும் போலிருக்கிறது. அதுவும் அழகான இடுப்பை பார்த்த பிறகும், ‘மூடிக்கோம்மா…’ என்று உத்தரவிட்டால், அவரை எந்த புளியோதரை லிஸ்டில் சேர்ப்பது? தஞ்சாவூர், கும்பகோணம், காரைக்குடி, என்று மாறுபட்ட அழகான குறு நகரங்களில் எடுக்கப்பட்டு வரும் படம்…
vijay-jilla copy
வெட்டி வேரா இருந்தாலும் விறகுக்கு ஆவுமான்னு பார்க்குற ஊர் இது. வெட்டி வேரா, விறாகான்னே தெரியல… ஆனால் சமீபத்தில் அதிகம் உஷ்ணத்தை தருகிற இடத்திலிருக்கிறார் விஜய். அரசியலே பேசாம ஒரு படத்தை விட்டேன். அதுல அரசியல் இருக்குன்னு எழுதி எழுதியே அதை எங்கேயோ கொண்டு வந்து நிறுத்தி தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை உண்டாக்கினாங்க. அதற்கப்புறம் ஃபுல்லா அரசியல் பேசியே ஒரு ஹீரோவின் படம் வந்துச்சு. ஆனால் ஒரு சேதாரமும் இல்லையே அதுக்கு?…
hansika
எவ்வளவு ஸ்டிராங்கான பில்டிங்காக இருந்தாலும் அஸ்திவாரத்திலிருந்து நாலைந்து செங்கல்லை பிடுங்கினால் கட்டிடமே காலி. ஹன்சிகா சிம்புவின் காதல் பில்டிங்கில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஆட்டம் கண்டு கிடக்கிறது அஸ்திவாரம். நயன்தாராவின் மறுவரவு சிம்புவின் வாழ்வில் சிலபல வசந்தங்களை கொடுக்கும் என்பதை சொல்லவே வேண்டாம். ஏனென்றால் நிகழ்கால காதலை விட கடந்த கால காதலுக்கு தெம்பு அதிகம். திருவள்ளுவருக்கே காதல் அதிகாரம் சொல்லிக் கொடுக்கிற அளவுக்கு திரியும் தாடிக்கார வள்ளுவரின்…
karthi wallpapers copy
கண்ணு இன்னும் முழுசா கெடல. அதனால் சூரிய நமஸ்காரம் தப்பில்ல என்று நினைத்திருக்கலாம். சமீபத்திய தோல்விகளுக்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று நினைத்துவிட்டார்கள் கார்த்தியும், அவரை சுற்றி இருப்பவர்களும். அண்மைகாலமாக நடந்து வந்த ‘காளி’ படப்பிடிப்பை காலவரையின்றி ஒத்தி வைத்துவிட்டார்களாம். இது முதல் கட்ட நடவடிக்கை. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? அதை கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள். காளி பட ஸ்கிரிப்ட்டை சினிமாவில் அனுபவம் வாய்ந்த சிலருக்கு கொடுத்து…
Sonia-Agarwal-Hot copy
நேற்றிரவு முழுக்க பத்திரிகையாளர்களையும் போலீஸ் உயரதிகாரிகள் சிலரையும் உறங்க விடாமல் விரட்டிக் கொண்டேயிருந்தது ஒரு கேள்வி. அந்த நடிகையை கைது செஞ்சுட்டாங்களாமே? உண்மையா என்று கேட்டு துளைத்தெடுத்தார்கள் நிருபர்கள். போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இப்படி வரிசையாக பத்திரிகையாளர்கள் போன் செய்து கொண்டேயிருக்க, ஒருவேளை நமக்குதான் ரிப்போர்ட் ஆகவில்லையோ என்னவோ என்று ஏரியா வாரியாக விசாரிக்க ஆரம்பித்தார்கள் உயரதிகாரிகள். ‘ அப்படியெல்லாம் இல்லைங்க. எல்லாம் புரளி’ என்று அவர்களுக்கு தகவல் கிடைக்கவே…
simbu-nayan copy
சிம்பு படம் என்றாலே சிக்கல்களுக்கு பஞ்சமில்லை என்கிறது முன்னோர் ஃபார்முலா. பாண்டிராஜ் இயக்கும் படத்திற்கும் அப்படியோரு சிக்கல் வந்து மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறது படம். இந்த படத்திற்காக சிம்பு கொடுத்திருந்த கால்ஷீட்டை அப்படியே எடுத்து கவுதம் மேனனுக்கு கொடுத்துவிட்டார். படப்பிடிப்பு நிறுத்தம் என்று சில தினங்களுக்கு முன் நமது இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதில் அரை சதவீதத்தை மட்டும் ஒப்புக் கொண்டார் பாண்டிராஜ். படம் நிறுத்தப்படவில்லை. படப்பிடிப்பும் நிறுத்தப்படவில்லை. சிம்பு…
ajith -new
ராஜா ராணி இயக்குனர் அட்லீயை கொஞ்ச நாட்களாக எங்கு தேடியும் காணக் கிடைக்கவில்லை என்கிறார்கள். அவரோ அடுத்த படத்தின் டிஸ்கஷனுக்காக சென்றிருக்கிறாராம். பொதுவாக ஒரு பெரிய ஹீரோ சம்மதம் தெரிவித்தாலன்றி குழுவோடு சென்று வெளியூரில் தங்கி கதைக்காக மெனக்கடுவதில்லை வெற்றிப்பட இயக்குனர்கள். அந்த வகையில் பார்த்தால் அட்லீயை முடுக்கிவிட்டது யார்? இந்த கேள்விக்கு எல்லாருமே நீலாங்கரை பக்கம் கையை நீட்ட, அங்கே இருப்பது அஜீத்தும் விஜய்யுமல்லவா? அதில் யார் என்கிற…
sasikumar-bala- copy
தமிழ்சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்தை விநியோகஸ்தர்கள் எல்லாரும் ஒன்று கூடி ஏலம் எடுத்தது இரண்டே படங்களுக்குதான். ஒன்று ராமராஜனின் கரகாட்டக்காரன். இன்னொன்று தனுஷின் திருடா திருடி. இதில் ராமராஜன் காசியில் விற்கும் தீப்பெட்டி போலாகிவிட்டார். மிச்ச மீதியிருக்கிற தனுஷும் கொடுக்கிற ஹிட்டுகளை (?) பார்த்தால் நமத்துப் போன தீப்பெட்டியாகிவிடுவாரோ என்றே தோன்றுகிறது. இந்த நிலையில் ராமராஜனின் நினைவுகளை கிளறிவிட ஒரு படம் வரப் போகிறது. அதையும் பாலா எடுக்கப் போகிறார்…
Priya_Anand copy
கீழே விழுந்தாலும் துப்பட்டாவுல சேறு படலை என்று சமாளிப்பது நடிகைகளுக்கு வாடிக்கைதான். அப்படிதான் தான் விலக்கப்பட்ட விஷயத்தை வேறொரு காரணம் சொல்லி மறைத்திருந்தார் ப்ரியா ஆனந்த். அவங்க கேட்ட தேதிகள் ஃப்ரியா இல்லை என்பதுதான் அவர் சொன்ன காரணம். ஆனால் இப்போது விஷயம் வெளியே கசிய ஆரம்பித்துவிட்டது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிகராகிவிட்டார் அல்லவா? இந்த படத்தில் முதலில் இவருக்கு ஜோடியாக நடிக்க அழைக்கப்பட்டவர் ப்ரியா ஆனந்த்துதான். அவர் பிரகாஷுக்கு அக்கா…
laksmi-menon- copy
பதக்கம் அணிவிக்கிறேன்னு கழுத்தையே காலி பண்ணுற வேலையை மிக நுணுக்கமாக செய்வதில் கோடம்பாக்கத்திற்கு நிகர் அதுவேதான். பாராட்டினால் ஒரேயடியாக பாராட்டுவதும், காலை வாரிவிட நினைத்துவிட்டால் ஒரேயடியாக பல் உடைகிற அளவுக்கு வாரி விடுவதும் இங்கே சகஜம். ஆனால் இதற்கெல்லாம் அடங்காத இலக்கணம்தான் இது. இருந்தாலும் இடிக்கிறதே… என்ன செய்ய? பாரதிராஜா ஒரு விழாவில் பங்கெடுக்கிறார் என்றால், ஹார்ஸ் ஆஃப் யூ என்ற வார்த்தையை எத்தனை முறை உபயோகிக்கிறார் என்று எண்ணிக்…
thagararu
கலைஞரின் பேரன் அருள்நிதி ஹீரோவாக நடிக்கிற ‘தகராறு’ படத்தின் பிரஸ்மீட். நட்ட நடுவில் அருள்நிதி அமர்ந்திருக்க, பேச வந்த அத்தனை பேரும் ‘அவருக்கு குழந்தை மனசு… அவர் இவ்வளவு அன்பா, பந்தாவே இல்லாம நடந்துப்பாருன்னு நாங்க நினைச்சுக் கூட பார்க்கல… அவ்வளவு பெரிய பேமிலியிலேர்ந்து வந்தவரா அவரு? போன்ற ஆச்சர்யங்களை வெளிக்காட்ட, கடைசியில் மைக்கை பிடித்தது குழந்தை. அவ்வளவு நேரம் அவர்கள் பேசியதை அப்படியே மெய்ப்பிக்கும் வகையில் ஒரு பேச்சு!…
vijay copy
தாமரை இலை அழகு. தண்ணீரும் அழகு. ஆனால் அது இரண்டும் ஒட்டாமல் தனித்தனியாக தத்தளிக்கிறதே… அதுதான் சோகம்! கிட்டதட்ட விஜய்யும் அப்படிதான். உலகமே கூடி கும்மியடித்தாலும் அந்த இடத்தில் எதுவுமே நடக்காதது போல அமைதியாக இருப்பார். இவரிடம் கதை சொல்லப் போகிற இயக்குனர்களுக்கு நேரும் சங்கடம், உலகத்தில் யாருக்குமே நேர்ந்திருக்காது. ஏன்? வந்தவர் விழுந்து விழுந்து சிரிக்கும்படி கதை சொன்னாலும், இப்ப என்னமோ சொன்னீங்கல்ல? என்பது போலவே இருப்பார் விஜய்.…
selvaragavan-newtamilcinemacom copy
நீச்சல் தெரியாமல் மூழ்கினாலும் சரி, நீச்சலை ரசித்து முங்கினாலும் சரி, தலையை மேலே உயர்த்தும்போது ஒரு கூட்டமே சேர்ந்து கல்லை போட தயாராக இருந்தால், மண்டை காலி. அப்படியொரு மண்டை காலி சுச்சுவேஷனில்தான் சிக்கிக் கொண்டிருக்கிறார் செல்வராகவன். அவரது இரண்டாம் உலகம் படம் ரிலீசாகும்போதுதான் தங்களது முந்தைய பாக்கிகளை வசூலிக்க முடியும் என்று கூட்டமே அவரை விரட்டிக் கொண்டிருக்கிறதாம். முதலில் யார்? பிரபல பாலிவுட் பிரபலம் ராஜ்குமார் சந்தோஷிதான் அவர்.…
kochadayan
ரஜினியின் படங்கள் வரும்போதெல்லாம் தங்கள் பட ரிலீசை தள்ளி வைத்துவிட்டு வீட்டு மொட்டை மாடியில் பத்தாம் எண் புயல் எச்சரிக்கை கொடியை பறக்க விடுவது முன்னணி பின்னணி சைட்னி ஹீரோக்களின் வாடிக்கை. இந்த முறை கோச்சடையான் ஜனவரி 10 ந் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஹீரோக்களின் ரீயாக்ஷன் வழக்கம் போலதான் இருக்கும் என்று எதிர்பார்த்தால், அதுக்கெல்லாம் அஞ்சுன ஆள் நான் இல்லே என்பது போலவே நடந்து கொண்டிருக்கிறார்கள் விஜய்யும் அஜீத்தும்.…
tony jaw
இந்த வாரம் 3D வாரம் போலிருக்கிறது. ஆனந்தவிகடனின் கண்ணாடி தந்த பிரமிப்பு மறைவதற்குள், அடுத்த கண்ணாடியை தந்தார்கள் ‘கும்கி வீரன்’ என்கிற டப்பிங் படத்திற்காக. (இப்படத்தின் ஒரிஜனல் பெயர் டாம் யம் கூங் 2) பொதுவாக இதுபோன்ற டப்பிங் படங்களின் வசனங்களுக்காகவும் லிப் மூவ்மென்டுக்காகவுமே அதை ரசிக்கலாம். இந்த படத்திலும் புன்னகையை தவழ விட்டது பெரும்பாலான வசனங்கள். இத்தனைக்கும் நமக்கு காண்பிக்கப்பட்டது வெறும் ஒன்றரை நிமிட காட்சிகள்தான். டீஸர்…! யானை…
all in all
பல மேடைகளில் பேசியாச்சு. ஆனால் யாரும் திருந்துவதாக இல்லை. ஆனால் பேசியவர்களே பேசியதை மறந்த கதை இந்த கோடம்பாக்கத்தில்தான் நிகழும். ஒரு காலத்தில் அஜீத் படம் பிளாப் ஆகிவிட்டால் விஜய் பட ரசிகர்கள் ட்ரீட் தருவார்கள். விஜய் படம் மொக்கையானால் அஜீத் ரசிகர்களுக்கு ஆனந்தம். பார்ட்டி, ட்ரிட் என்று அமர்க்களப்படுத்துவார்கள். ரசிகர்களிடம் தொற்றிக் கொண்டிருந்த வியாதி அப்படியே சம்பந்தப்பட்ட நடிகர்களையும் பிடித்து ஆட்டத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை சாயங்காலமே இப்படிப்பட்ட பார்ட்டிகளை…
thankar
‘நான் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்’ என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சொன்னாலும் சொன்னார். அப்போதிலிருந்தே இந்த ‘படுத்துக்கொண்டே…’ கான்சப்டை விடாமல் பிடித்துக் கொண்டது கோடம்பாக்கம். ‘எங்க தியேட்டருக்கு வாங்க. படுத்துகிட்டே படம் பார்க்கலாம்’ என்று அறிவித்தார் அபிராமி தியேட்டர் அதிபர் ராமநாதன். அவர் அறிவித்து ஒரு வாரம் கழித்து வேறொரு சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பீரங்கி பேச்சாளர் தங்கர்பச்சான், ஏற்கனவே சினிமா கேடு கெட்டுக் கிடக்கு. இதுல படுத்துகிட்டே படம்…
ajith-tv
வெற்றிலை பாக்கே மாற்றல… அதற்குள் விருந்து ரெடியான்னு கேட்டால் எப்படியிருக்கும்? அப்படி கேட்டவரிடம், பொறுமை ப்ளீஸ் என்று சொல்றதுதானே நேர்மை? ஆனால் அப்படி சொல்லாமல் ஆன வரைக்கும் அமுக்க பார்த்தாராம் ஒரு தயாரிப்பாளர். அதுவும் அஜீத்தின் நாக்குறுதியை நம்பி நடந்த விஷயங்கள்தான் இவ்வளவும். ஆரம்பம் படத்தின் தாறுமாறான கலெக்ஷன் அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் வெநீர் ஊற்றுகளையெல்லாம் பன்னீர் ஊற்றுகளாக்கிவிட்டு போயிருக்கிறது. இந்த நேரம் பார்த்து இவர் மீது இன்னும் இம்ப்ரஸ்…
en nejai thottaye copy
அடப்பாவி டைரக்டரே… அடுக்குமாய்யா இதெல்லாம்? விஷயம் பெரிசு. அதனால்தான் இப்படியொரு தலைப்பு. விஷயம் மட்டுமல்ல, விஷயத்தில் ஈடுபட்டவர்களும் ‘பெரிசுகள்’தான். ‘என் நெஞ்சை தொட்டாயே’ என்றொரு படம் கோடம்பாக்கத்தில் விறுவிறுவென வளர்ந்து வருகிறது. ஆர்.கே.அன்புச்செல்வன் இயக்கி வரும் இப்படத்தில் ஒரு காட்சி. இதற்காக அஞ்சாறு கிழவிகள் வேணும்யா என்றாராம் டைரக்டர். தயாரிப்பு நிர்வாகியும் இவர் கேட்ட கிழவிகளை லோக்கல் கிராமத்திலிருந்தே அழைத்து வந்திருக்கிறார். வந்த இடத்தில்தான் வம்போ வம்பு. அத்தனை பேருக்கும்…
sneha-NTC copy
‘டை’ இருக்கிற வரைக்கும் எந்த ஹீரோவுக்கும் ‘டை’ என்பதே இல்லை. யூத் உலகத்தில் தனக்கும் ஒரு சீட் கேட்டு இவர்கள் பண்ணும் அலம்பல்கள் அநேகமாக எல்லா மொழி படங்களிலும் நடக்கிற இனிமையான சமாச்சாரங்கள்தான். ஆனால் ஹீரோயின்கள்தான் பாவம். மூன்று முடிச்சை ஏற்றுக் கொள்கிறபோதே முடிந்துவிடுகிறது அவர்களின் சகாப்தம். கல்யாணத்துக்கு பிறகு நடிப்பீங்களா என்ற கேள்வியை நடிகையை பார்த்து கேட்கும் நிருபர்கள் யாரும் நடிகர்களை பார்த்து கேட்பதேயில்லை. சரி, இதெல்லாம் இப்போ…
Page 216 of 227« First...102030...214215216217218...Last »

all news