Cinema News

ithu namma aalu
சிம்புவும் நயன்தாராவும் மீண்டும் இணைகிறார்கள் என்றதுமே, ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ரியும் வாயை பிளந்து ஆஹாவென்றது. ஆனால் இந்த ஆஹாவை அடுத்தடுத்து வந்த செய்திகள் ஓஹோவாக்கி, அப்புறம் ஓ…வ்வ்வ்வ்வ் என்றாக்கிவிட்டது. படம் டிராப் என்பதுதான் கடைசியாக மீடியாவில் கசிந்த பரபரப்பு. படத்தின் தயாரிப்பு நிறுவனமான சிம்பு சினி ஆர்ட்ஸ், இயக்குனர் பாண்டிராஜுக்கு ஒன்றரை கோடி பாக்கி, நயன்தாராவுக்கு ஐம்பது லட்சம் பாக்கி என்று வைத்ததால், தள்ளாடிக் கொண்டிருந்தது படப்பிடிப்பு. அப்புறம் ஒரு…
shankar-amyjacson
ஷங்கரின் ஐ படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும், இன்னும் ஒரு பாடல் காட்சி மீதமிருக்கிறதாம். இதற்காக சென்னை பிரசாத் லேபில் பிரமாண்டமான செட் ஒன்று போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடந்து வந்தது. விக்ரம், எமி இருவருக்குமான காதல் பாடல் அது. வெளிநாட்டிலிருந்த எமியிடம் விசேஷ கால்ஷீட் வாங்கி வரவழைத்திருந்தார் ஷங்கர். ஆசை ஆசையாக வந்த எமி மூன்றாம் நாளே படப்பிடிப்புக்கு அல்வா கொடுத்துவிட்டு எடுத்திருக்கிறார் ஒட்டம். எல்லாம் காசு செய்த கலவரம் என்கிறது…
rajini-twitter
நல்லவேளை… எலக்ஷனுக்கு முன்பு ரஜினி தனது ட்விட்டர் அக்கவுன்ட்டை துவங்கியிருந்தார் என்றால், தேர்தல் தினத்தன்று மட்டும் ‘தலைவா எதையாவது சொல்லு…’ என்று லட்சக்கணக்கான மெசேஜ்களை அனுப்பி அவரை திணறடித்திருப்பார்கள் ரசிகர்கள். இப்போது துவங்கியிருக்கிறார். அவரே வீடியோ கேமிரா முன் தோன்றி தனது ட்விட்டர் விஜயத்தை தெரிவித்திருப்பதே செம ஸ்டைலாக இருக்கிறது. கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்தால் அதை நீங்கள் ரசிக்கலாம். Salutation to the Lord. Vaṇakkam aṉaivarukkum…
vairamuthu
தனது பிள்ளைகள் மதன் கார்க்கி, கபிலன் தவிர வேறு எந்த தமிழ் பட பாடலாசிரியர்களையும் ஒரு பொருட்டாகவே கருத மாட்டார் வைரமுத்து. இதற்கு உதாரணமாக பல்வேறு சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போவார்கள் இங்கிருக்கும் பிற பாடலாசிரியர்கள். அண்மையில் இளையராஜாவுக்கு ஒரு வேண்டுகோள் வைத்த வைரமுத்து, ‘நீங்க கபிலன், மதன் கார்க்கி போன்ற இளைய பாடலாசிரியர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்’ என்றுதான் கேட்டுக் கொண்டாரேயொழிய, ‘அண்ணாமலையை சேர்த்துக் கொள்ளுங்கள் என்றோ, முத்துக்குமாரை…
shakila-director
மாவை ஊத்தியாச்சு. உருப்படியா வர்றது இட்லியா தோசையாங்கறது வெந்த பிறகுதான் தெரியும். இப்படியெல்லாம் நாக்கு மேல பல்லு படாம விமர்சனம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் ஒரு படத்தை! காரணம், அந்த படத்தை இயக்கப் போவது கவர்ச்சி முதிர் கன்னி, மலையாள மந்தாகினி ஷகிலாவேதான். தார் பாயை தாறுமாறா மடிச்சு வச்ச மாதிரி ஒரு ஷேப்பில் இருந்தாலும், கடந்த பல்லாண்டுகளாகவே ஷகிலாவை பற்றி உதட்டில் உமிழ்நீர் வடிய வடியதான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் இங்கேயும்…
Arputhammal
‘லாபி’ பண்ணாமல் விருதுகள் வராது என்று தேசிய விருதுகள் பற்றிய பார்வை மீது ஒரு புட்டி மையை தொடர்ந்து வீசி வந்த பகடி பேச்சுகளுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தங்க மீன்கள். ‘பொதுவா ஒரு படத்திற்கு தேசிய விருது கிடைக்கப் போகிறது என்றால், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே எப்படியோ நியூஸ் கசிந்துவிடும். பத்திரிகையாளர்களோ, அல்லது குழு சார்ந்த வேறு யாராவதோ போன் செய்து ‘உங்க படத்துக்கு விருது கிடைக்கும்…
urumeen
சூதுகவ்வும், நேரம், ஜிகிர்தண்டா படங்களை பார்த்துவிட்டு, ‘யார்றா அந்தாளு?’ என்று ஆச்சர்யப்பட்டவர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுக்க வந்திருக்கிறார் சிம்ஹா. யெஸ்… அதற்குள் ஹீரோவாக பிரமோஷன் ஆகிவிட்டார் இந்த சிம்ஹா. (ஸ்…ஹா. வேறொன்றுமில்லை, ரொம்ப காலமாக ஹீரோ அந்தஸ்துக்காக அல்லாடி வருகிறவர்களின் தும்மல் அது) பொதுவாகவே இந்த சிம்ஹா நடிக்கும் படங்கள் அனைத்துமே பிளாக் காமெடி டைப்பான படங்களாக இருந்திருக்கிறது. இதில் இவர் ஹீரோவாக அறிமுகமாகும் உறுமீன் என்ன மாதிரியான கதை? ஆக்ஷன்…
ajith-arya
தலைப்பை படித்துவிட்டு தலைகுழம்பி போகிறவர்கள், பின்வரும் தொடர்ச்சியை படித்துவிட்டு கூல் ஆகிவிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். பொதுவாக ஒரு முன்னணி ஹீரோவை அப்ரோச் செய்து கதை சொல்ல வேண்டும் என்றால், அது ஏழு கடல் தாண்டி மல்லாந்து படுத்துக் கொண்டே நீந்தும் ஆமையின் முதுகிலிருக்கும் மச்சத்தை தொட்டு வணங்குவதற்கு சமம். இப்படி கோடம்பாக்கத்தில் நாளைய இயக்குனர் கனவோடு அலைந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம் ஏராளம். அத்தனை பேரும் மார்க்கெட்டில் டாப்பில்…
vivek-ivanthan bala
வாய் வளர வளர வாய்ப்பு குறைய ஆரம்பிக்குதுன்னு அர்த்தம். விவேக்கை போல உச்சாணிக் கொம்பில் ஏறி நுனி கிளையை ஆட்டிய நடிகரே இல்லை. அந்தளவுக்கு பிஸி பிஸி என்று இருந்த விவேக், ரஜினி கமல் அஜீத் விஜய் விக்ரம் சூர்யா ஆகியோரால் ஒரே நேரத்தில் புறக்கணிக்கப்பட்டது அவரது திருவாய் செய்த திருவிளையாடலன்றி வேறில்லை. இப்போதுதான் மெல்ல அஜீத் படத்தில் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார். அதற்குள்? இவர் ஹீரோவாக நடித்த ‘இவன்தான் பாலா’…
dhanush-song
‘அண்ணேயண்ணே… சிப்பாயண்ணே… நம்ம ஊரு நல்ல ஊரு இப்போ ரொம்ப கெட்டு போச்சண்ணே…’ என்று ஒரு காலத்தில் இளையராஜா இசையில் வந்த பாடல் ஒன்றை கேட்ட விமர்சகர்கள், ‘ஐயே… இப்படியொரு குரலா? அதுவும் எருமை மாட்டுக்கு இருமல் வந்த மாதிரி’ என்று கவலைப்பட்டார்கள். ஆனால் அந்த பாடல் ஒலிக்காத மேடையில்லை, உச்சரிக்காத உதடுகள் இல்லை என்றாக்கினார்கள் ரசிகர்கள். ஒரு காலத்தில் பாட்டுலகத்தின் புரட்சியாகவே கருதப்பட்டது அந்த குரல். டி.எம்.எஸ். எஸ்.பி.பி.…
Santhanam copy
டேய்… ஆயர் ரூவாய்க்கு வாங்குன மாலையா தெரியலையே? உண்மைய சொல்லு. கொடுத்த பணத்துல எவ்ளோ அடிச்ச? என்று ஆளுயர மாலையை தோளில் வாங்கும்போதே கணக்குப் போடும் அரசியல்வாதியின் நிலைமை சந்தானத்திற்கு வந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனென்றால் ரசிகர் மன்றத்தை வளர்க்கிறேன் பேர்வழி என்று அவர் பண்ணும் அலம்பல் தாங்க முடியல சார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் டப்பிங் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. பலரும் வந்து போகிற…
rajini-latha copy
கோச்சடையான் படத்தில் ரஜினி நடித்தது வெறும் ரெண்டே நாட்கள்தான். மிச்சமெல்லாம் லொல்ளு சபா ஜீவாவே ரஜினியாக நடித்தவை என்றொரு செய்தி கோச்சடையானின் பளபளப்புக்கு குண்டு வைத்து வருகிறது. பொதுவாகவே ரஜினியின் உடல் நிலை அதிக வெப்பத்தை தாக்கு பிடிப்பதில்லை என்றும் அதனால் அவரை முடிந்தவரை கஷ்டப்படுத்தாமல் படம் எடுக்க வேண்டும் என்றும் நினைத்திருக்கிறாராம் கே.எஸ்.ரவிகுமார். அதன் காரணமாக லிங்கா படப்பிடிப்புக்கு ரஜினியிடம் வெறும் முப்பது நாட்கள் மட்டுமே கால்ஷீட் கேட்கப்பட்டிருக்கிறதாம்.…
namitha copy
இன்னும் சில மாதங்களில் சென்னை நகரம் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை காணப் போகிறது. காணக் கிடைக்காத அந்த அரிய நிகழ்ச்சியை மகா ஜனங்களுக்கு வழங்கி மகிழப் போவது கலையுலக வயாக்ரா, நடமாடும் நயாக்ரா நமீதாவேதான். அகில உலக ரசிகர் மன்றத்தை திரட்டி மாநாடு நடத்தப் போகிறாரா? தனிக்கட்சி துவங்கப் போகிறாரா? இப்படி கேள்விகளால் திக்கு முக்காடும் ஜனங்கள் பின் வரும் விஷயத்தை அறிந்தால் ஆச்சர்யத்தின் எல்லைக்கே போய்விடுவீர்கள். கடந்த ஓராண்டாக…
kali
சினிமாவையே கரைச்சு ‘காலி‘ பண்ணணும் என்கிற எண்ணத்தோடு கோடம்பாக்கத்துக்கு ரயில் ஏறுகிற ஆர்வலர்கள் பலர், இனிமேல் சினிமாவில் ‘காளி‘ போல ஆகாமல் விடக்கூடாது என்று தன் எண்ணத்தை மாற்றிக் கொள்கிற அளவுக்கு நம்பிக்கை உரம் ஏற்றுகிறது காளியின் வாழ்க்கை. பெயர் சொன்னால் தெரிந்து கொள்கிற அளவுக்கு இன்னும் நாற்காலியை பிடிக்கவில்லை காளி. ஆனால் அருகிலிருக்கும் போட்டோவை பார்த்தால், ‘அட நம்ம ஆளுப்பா இந்த பையன்’ என்கிற சந்தோஷம் பொசுக்கென்று சட்டை…
eppothum raja
எப்போதும் ராஜ்ஜ்ஜ்ஜா… நீ எப்போதும் ராஜ்ஜ்ஜ்ஜா என்று தொண்டை ‘ஜா’வெல்லாம் ஜவ்வு மிட்டாயாகி பாடிக் கொண்டிருந்தார் சீர்காழியின் மகனும், மருத்துவருமான பாடகர் சிவசிதம்பரம். ரெக்கார்டிங் சமயத்தில் கூட, ‘இவர்தான் உங்க தொண்டை ஜவ்வுக்கு தீனி போட்ட நடிகர் ’ என்று வின் ஸ்டார் விஜியை காட்ட முயற்சி நடந்திருக்காது என்று நம்புகிறோம். ஏனென்றால் இவர்தான் அந்த ராஜ்ஜ்ஜாவா? என்று கேட்ட மாத்திரத்தில், ஐயா சிவசிதம்பரனார் அந்த பாடலுக்கான சங்கதியை மட்டுமல்ல,…
murugan manthiram copy copy
இளையராசா, தன் தோளில் ஒரு மெல்லிய வெண்மையான குறுமேலாடை போர்த்தியிருப்பார். அந்த குறுமேலாடை மீது எனக்கு ஒரு கண். முதல்முறை இசைஞானியை மிக நெருக்கமாக சந்தித்த நிகழ்வு நடந்த அந்த இசைநாளின் இரவில்… ஒரு பெருந்திமிரும் பேரமைதியும் என்னுள் புகுந்திருந்தது. அடடா, அடுத்தமுறை இசைஞானியை சந்திக்கும்போது உறுதியாகவும் பிடிவாதமாகவும் அவர் பயன்படுத்தும் குறுமேலாடையில் ஒன்றை வாங்கி வந்தே ஆகவேண்டும் என்று எனக்குள் எழுதிக்கொண்டேன். முன்பாகவே தேனி கண்ணன் அண்ணனிடமும் சுகா…
ajith-birthda special copy
‘அதே நிறம்… அதே குணம்… அவரை போலவே வெற்றியும் புகழும் அடைய வாழ்த்துகிறேன் ’ சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அஜீத்தின் பிறந்த நாளன்று நாளிதழ் ஒன்றில் டைரக்டர் சரண் கொடுத்த விளம்பரம் இது. முன்பெல்லாம் எந்த நடிகரின் பிறந்த நாள் வந்தாலும் அவருக்காக தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் போட்டி போட்டுக் கொண்டு நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து மகிழ்வித்த வழக்கமிருந்தது. இப்போதும் அதற்கு நிறைய பேர் ஆசைப்பட்டாலும், தயாரிப்பு செலவை குறைக்கும்…
hansika-simbu
கோடம்பாக்கத்தின் இந்த வார ஹாட் ஷோ, ‘ஹன்சிகாவுக்கும் ஜெயப்ரதாவின் மகன் சித்தார்த்துக்கும் லவ்வாமே?’ என்பதுதான். மூணு புள்ளி ஒரு ஆச்சர்யக்குறியோடு அலைச்சல் காட்டும் எல்லா காதல்கள் போலதான் இந்த காதலும் இருக்கும் என்று நினைத்தால், ஏகப்பட்ட கேள்விக்குறிக்குள் அடங்கி விட்டது இந்த பரபரப்பு. ஆமாவா? இல்லையா? என்று இரண்டே கேள்விகளுக்குள் அடக்க முடியாத பிரச்சனையாகவும் இருக்கிறது இந்த லவ். ஏன்? ஜெயப்பிரதாவின் சொத்து விபரங்கள் அப்படி! மாட மாளிகைகள், கூட…
rajini-dhanush copy
ரஜினியின் அடுத்தப்படம் லிங்கா. இதை கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார் என்பதெல்லாம் பழைய செய்தியாகிவிட்டது. இந்த லிங்கா வந்த கதை தெரியுமா உங்களுக்கு? லிங்கா கதையே தெரியாது. அதற்குள் லிங்கா வந்த கதை எப்படி தெரியும்? என்று பதறும் ரஜினியின் ரசிக நெஞ்சங்களுக்கு நாம் சொல்லப் போவது அத்தனை பேரும் ரசித்து மயங்க வேண்டிய தகவல். இந்த தலைப்பே ரஜினி தேர்ந்தெடுத்ததுதான். ‘லிங்கா தலைப்பை உடனே பதிவு பண்ணிருங்க’ என்று கவுன்சிலுக்கு ஆள்…
balachandran copy
தகவல் அறியும் உரிமை சட்டத்தை பற்றிய அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளவும், அதன் மூலம் நாட்டில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கவும் , நாட்டு நலன் மீது அக்கறையுள்ள இளைஞர்களை ஒருமுகப் படுத்துவதற்காகவும் தயாரிக்கப்பட்ட படம்தான் அங்குசம். இந்த படத்தின் சிறப்பு காட்சிக்கு வந்திருந்த கலெக்டர் சகாயம், ‘இதுபோன்ற படங்கள் இன்னும் இன்னும் நிறைய வர வேண்டும்’ என்று வாழ்த்தினார். ‘லஞ்சத்திற்கு எதிரான இந்த படத்தை மக்கள் வெற்றிப்படமாக்க வேண்டும்’…
Page 210 of 246« First...102030...208209210211212...220230240...Last »

all news