Cinema News

samantha
எவ்வளவு உயரத்திற்கு போனாலும் சில இழப்புகளை சகித்துக் கொள்ள முடியாது. அப்படி சகித்துக் கொள்ள முடியாத ஒரு தோல்வியிலிருந்து மீண்டிருக்கிறார் சமந்தா. அதுவும் சில பெண்களுக்கேயுரிய கண்ணீர் ஆயுதத்தை கொண்டு. ‘சமந்தாவும் சருமநோயும்’ என்று தனியாக ஒரு ஓய்வு கட்டுரையே எழுதுகிற அளவுக்கு மேற்படி நோயால் தாக்கப்பட்டு முக்கிய படங்களையெல்லாம் நழுவ விட்டிருக்கிறார் சமந்தா. கடந்த வருடத்தில் அவரை தாக்கிய இந்த சரும புயலால் மூன்று மாதங்கள் வெளியே தலைகாட்டாமல்…
rajini-kamal
ரஜினியும் கமலும் ஒரு காலத்திலும் மோதிக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் நட்பு அப்படி. ஆனாலும் கமல் விஸ்வரூபம் பார்ட் 2 க்கு காட்டுகிற துல்லியத்தை பார்த்தால் அது ரஜினியின் கோச்சடையானுக்கு தொந்தரவாக வந்து அமையுமோ என்பது போலவே இருக்கிறது சுச்சுவேஷன். இன்னும் பத்து நாட்கள் படப்பிடிப்பு மீதம் இருக்கிறதாம் விஸ்வரூபம் படத்திற்கு. அதுமட்டுமல்ல, ஆரோ 3டி தொழில் நுட்ப வேலைகளை முடிக்கவே ஒரு மாதம் தேவைப்படும் என்கிறார்கள். இந்த…
nayanthara-NTC
நயன்தாராவின் சம்பாத்தியத்தையெல்லாம் ஏதாவது ஒரு சீசன் புயல் வந்து கபளீகரம் செய்துவிட்டு போகும். இந்த கொடுமை காதல் என்ற பெயரில் நடந்து வருவதுதான் இன்னும் பெரிய கொடுமை. புயலுக்கு பின்னே அமைதி என்பது போல சில மாதங்கள் மவுன விரதங்கள் மேற்கொள்ளும் நயன்தாரா, அதற்கப்புறம் ஒன்ணுலயிருந்து எண்ண ஆரம்பித்து மறுபடியும் கோடிகளை சேர்ப்பார். இப்போதெல்லாம் பண விஷயத்தில் ரொம்ப கறாராக இருக்கும் நயன்தாரா, சிம்புவுடன் இணைந்து நடிக்க போட்ட நிபந்தனைகள்…
arya
தமிழ்சினிமாவுக்கு தமிழில் பெயர் வைப்பதையே பெரிய விஷயமாக பேசும்படி ஆகிக் கொண்டிருக்கிறது செம்மொழியான தமிழ் மொழியாம் நிலைமை. இருந்தாலும் பாராட்டியே ஆக வேண்டும் என்கிற அளவுக்கு வடிகட்டிய தமிழில் பெயர் வைத்திருக்கிறார் மகிழ் திருமேனி. தடையற தாக்க என்பது இவரது முந்தைய படம். அதற்கும் முன்பாக ஒரு படம் வந்தது. அதை அவரே நினைவில் வைத்திருக்கவில்லை. அல்லது விரும்பவில்லை. ஆனால் தடையற தாக்கவுக்கு பிறகுதான், இவருடைய வரலாறை விசாரிக்க ஆரம்பித்தது…
vijay
ஃபேஸ்புக், ட்விட்டர் , இணையதளங்கள் போன்ற நவீன யுகத்தை பற்றி அதிகம் அலட்டிக் கொள்பவரல்ல விஜய். ஆனால் அவரை ஆட்டோ ஆட்டென ஆட்டி வைப்பதும் இதுபோன்ற சமூக வலைதளங்களும் இணையதளங்களும்தான். ‘கடுபேத்துறங்க யுவர் ஆனர் ’ என்று கதறக்கூட முடியாதளவுக்கு பழைய பஞ்சாகத்தில் ‘லாக்’ ஆகிக் கிடக்கும் விஜய், நேற்றும் அப்படிதான். பத்து பதினைந்து நாளிதழ் நிருபர்களுக்கும் ஒரு சில வார இதழ் நிருபர்களுக்கும் அழைப்பு விடுத்தார். இவர்களை தனித்தனியாக…
thalaimuraigal
சசி… நான் உன்னை பார்க்க வரணும்… இது பாலுமகேந்திரா. எங்க இருக்கீங்க சார், நானே வர்றேன்… இது டைரக்டர் சசிகுமார். இல்லைப்பா நானே வர்றேன். ஏன்னா தேவை எனக்குதான். இப்படி சொல்லிவிட்டு அடுத்த சில நிமிடங்களில் சசிகுமார் ஆபிசில் பாலுமகேந்திரா நிற்க, நான் ஒரு கதை சொல்றேன். பிடிச்சிருந்தா அந்த படத்தை நீ தயாரிக்கணும் என்கிறார் பாலுமகேந்திரா. பாதி கதை முடிவதற்குள் இந்த படத்தை நான் தயாரிக்கிறேன் என்கிறார் சசி.…
vadivelu-singamuthu
நாலு எருது, ஒரு சிங்கம் கதையாகிப் போனோமே என்று கவலைப்பட்டும் கண்ணீர் சிந்தினால், தானாக அடுத்த கட்டத்தை நோக்கிதானே நகரும் மனசு? காமெடியில் ராஜாவாக விளங்கிய வடிவேலு விட்ட நாலு சென்ட் கேப்பில் அரண்மனையே கட்டிவிட்டார்கள் ஆளாளுக்கு. அதிலும் சந்தானமும் சூரியும் கட்டிய அரண்மனையை அண்ணாந்து பார்த்து கிடுகிடுத்து போயிருக்கிறார்கள் வடிவேலுவுடன் கோஷ்டி கானம் பாடிய காமெடியன்கள். இதில் அதிகம் நொந்து போனது சிங்கமுத்துதான். வடிவேலுவுடன் இணைந்திருந்தபோது கிடைத்த கைத்தட்டல்களும்…
ajith
கும்மியடிச்சு அம்மிய நகர்த்த முடியும்னு தோணல…. ஆனாலும் அஜீத்தை அரசியலுக்கு இழுக்கிற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள் சில முக்கியஸ்தர்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் நேரடியாக இறங்கி பிரச்சாரம் செய்யாமல் தனது அப்பா எஸ்.ஏ.சி யின் மூலம் ஆதரவு தெரிவித்தார் விஜய். ஒரு அதிமுக பொதுக்கூட்டத்திலாவது அவரை பேச வைத்துவிட வேண்டும் என்று நினைத்த அதிமுக தலைமைக்.கு கடைசிவரை ஏமாற்றத்தையே கொடுத்தார் விஜய். அதன் பலனை அவர் அதற்கப்புறம் அறுவடை…
nayanthara
எலக்ஷன் வருது. ஒண்ணா சுத்தாதீங்க… இது தாத்தாவின் கட்டளை. ஒன்றாக சுற்றியது பேரன் உதயநிதி. கோவிலுக்கு போவதையே கூட ‘ஒண்ணா சுத்துவது’ என்கிற சீப் டோனில் பார்க்கிற வழக்கம் இந்த சினிமா ரிப்போர்ட்டர்களுக்குதான் இருக்கிறது என்று உதயநிதி அலுத்துக் கொண்டாலும் உண்மை இதுதான். கடந்த சில தினங்களுக்கு முன் பழனி முருகனை தரிசிக்க சென்றார்கள் உதயநிதியும், நயன்தாராவும். இவர்கள் மட்டுமா போனார்கள்? ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் பங்கு பெற்ற…
kochadaiyaan-NTC
அந்த பரமேஸ்வரனே படம் எடுக்க வந்தால் கூட, சந்துல ஒளிய இடம் கிடைக்குமா என்று தேட வைத்துவிடும் கோடம்பாக்கம். பணம் போடுகிற முதலாளியை பந்தாடுகிற ஒரே இடம் தமிழ்சினிமாதான். இதற்கு உதாரணமாக இங்கே பல முதலாளிகளை கூறலாம். அவர்களும் சே… போதும்டா இந்த பொழப்பு என்று போட்டது போட்டபடி ஓடிய கதைகளும் நிறைய உண்டு. ஆணானப்பட்டவர்களையே ஆலைக் கரும்பாக பிழிந்து எடுத்துவிடும் வட்டி பிரச்சனைகளும், வாய் ஜால தொந்தரவுகளும் சௌந்தர்யாவை…
Sivakarthikeyan-newtamilcinemacom copy
சிவகார்த்திகேயன் கால்ஷீட் வேணுமா? இருபது கோடி இருந்தால் யார் வேண்டுமானாலும் அணுகலாம். அணுக வேண்டிய முகவரி- செல்லக் கை, கேர் ஆஃப் சிவகார்த்திகேயன். சென்னை மற்றும் தமிழகமெங்கும்…. அல்லக்கை கேள்விப் பட்டிருப்போம். இது என்ன செல்லக் கை? சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை உயர்த்திவிட்ட கை. அதனால்தான் இது செல்லக் கை. நடிப்பில் சிகரம் தொட்டாச்சு. நகைச்சுவையில் மனசை தொட்டாச்சு. அடுத்து தயாரிப்பாளராக புரமோட் ஆக வேண்டும் என்பதுதான் அவரது லட்சியமாம். ஆனால்…
thamana
அஜீத்தின் ஆரம்பம் வருவதற்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி. அப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்த நயன்தாராவின் புகைப்படத்தை தப்பி தவறி கூட வெளியிடவில்லை அப்படத்தின் டைரக்டர் விஷ்ணுவர்த்தன். அப்படம் வெளியான பின்பு விளம்பரங்களிலும் சரி, போஸ்டர்களிலும் சரி, அஜீத் மற்றும் ஆர்யாவின் படங்கள் இடம் பெற்றதே தவிர, நயன்தாராவின் படங்கள் எப்போதாவது கூட இல்லை. விசாரித்தபோது காதும் காதும் வைத்தது போல சில விஷயங்களை கசிய விட்டது பட வட்டாரம்.…
kanagadurga
விஜய் சேதுபதிதான் இன்றைய சூழ்நிலையில் பரபரப்பான நடிகர் என்கிறார்கள். ஆனால் எல்லா சினிமா விழாக்களிலும் அவரை அதிகம் பார்க்க முடிகிறது. யார் அழைத்தாலும் அவர்களை மதித்து அந்த விழாவில் கலந்து கொள்கிற நடிகராக அவர் இருப்பது ‘சுமார் பட்ஜெட் குமார்களுக்கு’ம் பெரிய வரப்பிர‘சாதமாக’ இருப்பதால், மூன்று வேளையும் அதே சாதத்தை அவர்கள் பரிமாறாமல் இருக்க வேண்டுமே என்கிற கவலையும் வந்துவிடுகிறது சமயங்களில். மேற்கு முகப்பேர் ஸ்ரீகனக துர்கா என்ற படத்தின்…
sivaji silai copy
எதையும் உணர்ச்சிப் பெருக்கோடு அணுகுவதில் தமிழனுக்கு நிகர் அவனே. சாம்பார்ல உப்பு கொஞ்சம் அதிகம் போட்டுவிட்டதை சுட்டிக்காட்டிய முதலாளி முன்பு ‘ஐயா… இந்த பாவியோட கையை வெட்டுங்கய்யா… வெட்டுங்க’ என்று கதறுகிற நடிகர் எஸ்.வி.சுப்பையாவில் தொடங்கி, அப்படிப்பட்ட காட்சிகளை தொடர்ந்து வடிவமைத்து தரும் அத்தனை தமிழனுக்கும் மூக்குக்கு முன் தொங்கிக் கொண்டேயிருக்கிறது உணர்ச்சி எனும் அபாய சங்கு. சமயம் கிடைக்கும்போதெல்லாம் அதை எடுத்து ஊதி ஊரையே உறங்கவிடாமல் பண்ணுவதில் அவனுக்கு…
vadivelu-thenaaliraman-newtamilcinemacom
ஏ.வி.எம் -ல் பிரமாண்டமாக செட் போட்டு எடுக்கப்பட்டு வருகிறது வடிவேலுவின் ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன். ஒவ்வொரு நாள் ஷுட்டிங் முடிந்து கிளம்பும்போதும், தம்பி வீட்டுக்கு வந்துருப்பா… என்று டைரக்டர் யுவராஜிடம் கூறிவிட்டு கிளம்புகிறார் வடிவேலு. கண்ணும் கண்ணும் வைத்தது போல வடிவேலு வீட்டுக்கு போகும் யுவராஜ், நாளைக்கு என்னென்ன காட்சிகள் எடுக்கப் போறோம் என்பதை விளக்குகிறாராம். அதை கவனமாக கேட்டு அதில் சில பல கரெக்ஷன்களை சொல்லியனுப்புகிறார் வைகைப்புயல். நீங்க…
meyazhagi sneha poorna
அண்மையில் வெளிவந்திருக்கும் ‘மெய்யழகி’ படம் வசூல் ரீதியாக ‘மொய்’யழுகினாலும், விமர்சகர்களால் ‘அட’ என்று பாராட்டப்படுகிற ரகம். இந்த படம் தோல்வியா அல்லது படுதோல்வியா என்று கூட கணிக்க முடியாமல் தவிக்கிறார் அப்படத்தின் டைரக்டர். அதே நேரத்தில் ‘எல்லாரும் பாராட்டுறாங்களே… இதில் கொஞ்சம் கமர்ஷியல் வேல்யூ உள்ள ஹீரோயின்கள் நடித்திருந்தால் ஒரு வாரமாவது தியேட்டரில் தாக்கு பிடித்திருக்குமே’ என்கிற வருத்தமும் மேலிட அப்படத்தின் இயக்குனர் ஜெயவேல் புலம்பி வருவதும் ஐயோ பாவமாக…
pallavi-1
எல்லாமே தங்கம்தான். ஆனால் ஒவ்வொரு ஜூவல்லரிக்கும் ஒவ்வொரு குவாலிடி இருக்குமல்லவா? கவுதம் மேனன் ஜுவல்லரி தங்கங்களுக்கு மட்டும் தரத்திலும் சரி, நிறத்திலும் சரி, டாப்போ டாப் என்பார்கள் ரசிகர்கள். அவரது ‘மின்னலே’ படத்தில் அறிமுகமான ரீமாசென்னில் ஆரம்பித்து, லேட்டஸ்ட்டாக வந்த விண்ணை தாண்டி வருவாயா , நீதானே என் பொன் வசந்தம் வரைக்கும் ISI முத்திரையே கொடுக்கலாம் அவரது செலக்ஷன்களுக்கு. கடனில் விழுந்து கட்டெறும்பாய் தேய்தாலும், அவரது ரசனை மட்டும்…
Sivakarthikeyan_ntc copy
சென்னை போக்குவரத்து சீராகும் காலம் எப்போது என்றே தெரியவில்லை. ஆனால் அரிப்பெடுத்த முதுகுக்கு சொறியும் விரல்கள் பகையில்லை என்பது போல நெளிவு சுளிவுக்குள் வாழ பழகிவிட்டான் மிஸ்டர் சென்னைவாசி. இருக்கிற வேதனை போதாதென்று ரோட்ல படம் எடுக்கணும். பர்மிஷன் தர்றீங்களா என்று தலையை சொறிந்தால் என்ன கிடைக்கும்? ஏமாற்றம்தான் பல இயக்குனர்களுக்கு. இந்த விஷயத்தில் சென்னை நகர போலீசாரின் பிடிவாதத்தை பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் படமும் எடுத்தாகணுமே? பலரும்…
selvaragavan-NTC copy
நாட்டாமை, சொம்பே நசுங்கி போற அளவுக்கு அபாரதம் போட்டதால் ஆடிப் போயிருக்கிறார் செல்வராகவன். இரண்டாம் உலகம் படத்திற்கு சொன்னதை விடவும் பல கோடி ரூபாய் பட்ஜெட்டை ஏற்றிவிட்டதால் செல்வராகவனை பஞ்சாயத்துக்கு அழைத்த பி.வி.பி நிறுவனம், அவரை நசுக்கி நாறாக பிழிந்து தனது நஷ்டத்திலிருந்து ஓரளவுக்கு தப்பித்துக் கொண்டிருக்கிறது. குற்றம்… நடந்தது என்ன? செல்வராகவன் தனக்கு சொந்தமான ஐந்து கோடி மதிப்பிலான கட்டிடத்தை பி.வி.பிக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். அது போதாமல், தனுஷின்…
Maankaatha-Ajith copy
‘காஜா பீடி ஓனர், காஜா பீடி பிடிப்பதில்லை’ என்கிற ஒருவரி சித்தாந்தத்தோடு இந்த செய்தியை அணுகினால், எந்த ரசிகருக்கும் உச்சி மண்டையில் உஷ்ணம் வராது. பீடியை வைத்துதான் சொகுசான வாழ்க்கை என்று தெரிந்தும், பீடியை விரும்பாத முதலாளி மாதிரிதான் ரசிகர்களை விரும்பாத ஹீரோக்களும் இருக்கிறார்கள். ‘மன்றத்தை கலைச்சுட்டேன்’ என்று கூறிய நடிகர், மன்றம் சார்பில் நடந்த கைகலப்பு பற்றி உதிர்த்த ஒரு சொல்தான் இந்த செய்தியின் கடைசி வரி. தென்…
Page 205 of 218« First...102030...203204205206207...210...Last »

all news