Cinema News

trisha-balakrishna
எவனாவது தலைவனுக்கு வயசாகிருச்சுன்னு சொன்னீங்க…, மொத்த காலண்டரையும் அள்ளிட்டு வந்து ஆந்திரா சட்டசபைக்கு எதிர்ல போட்டு கொளுத்துவோம்ல…? என்று வேட்டியை மடிச்சு கட்டும் நல்ல ரசிகர்களை பெற்றவர்தான் பாலகிருஷ்ணா. ஆந்திராவையே தன் அதிரடியால் கிடுகிடுக்க வைக்கும் அவருக்கு இப்போது வயசு என்ன? கவர்மென்ட் ஊழியராக இருந்தால் பென்ஷன் வாங்குகிற வயசு. ஆனால் இப்பவும் இளம் சிட்டுகளுடன் டூயட் ஆடிக் கொண்டிருக்கிறார். அதுவும் சின்னஞ்சிறுசாக பார்த்து தனக்கு ஜோடியாக்கிக் கொள்வதில் அவரை…
manjapai-review
மனங்களால் ஆன வாழ்க்கையை நிறங்களால் பிரிக்க கற்றுக் கொண்டிருக்கிறான் மனிதன். ‘கலர்ல என்னடா இருக்கு கருமாதி?’ என்று இதை விலக்கவும் முடியாமல், தொடரவும் முடியாமல் தவிக்கும் இதே உலகத்தில் ‘மஞ்சப்பை’ என்ற ஒரு வார்த்தையே கலரையும் ஆளையும் எடை தராசில் ஏற்றி ஒரு சேர ‘பொதுக்கடீர்’ என்று போட்டுத்தள்ளுகிறது. அப்படி காலகாலமாக கறையாகி நிற்கும் ஒரு மஞ்சப்பைக்குள் ‘மரியாதையை’ நிரப்பியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ராகவன். ‘இவனுங்க பண்றதையெல்லாம் எங்க தாத்தன்…
karuthu
ஈழ தமிழர்களை அவமதிக்கும் ‘இனம்’ படத்தை தடை செய்ய வேண்டும் என்று குரல் எழுந்தபோது, கோடம்பாக்கத்தில் லிங்குசாமிக்கு பிரியமான சில இயக்குனர்கள் பொங்கியெழுந்துவிட்டார்கள். ஒரு படைப்பாளியின் கருத்து சுதந்திரம் இப்படி கண்டவங்களாலும் சிதையுதே என்று கவலைப்பட்டார்கள். அறிக்கை வெளியிட்டார்கள். ஆவேசப்பட்டார்கள். குறிப்பாக அமீர், பாலாஜி சக்திவேல், சசி, செல்வமணி, விக்ரமன் போன்றவர்கள், ‘அந்த படத்தில் ஒன்றும் குறையிருப்பதாக தெரியவில்லையே?’ என்றெல்லாம் கூறியபோது நம்ம இனத்துக்கே இப்படி நாக்கு குளறுதே என்று…
amala-vijay
அவரே எழுதிய திரைக்கதையை விட சுவாரஸ்யமாக இருக்கிறது இந்த காதல் கதை. ‘இருவருக்கும் லவ்வாம்…’ என்று கிசுகிசுவில் ஆரம்பித்த காதல், கோலாகலமான நிச்சயதார்த்தம் வரை வந்துவிட்டது. அனுஷ்கா, விக்ரம் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் வந்து வாழ்த்த விஜய் அமலாபால் அதிகாரபூர்வமான தம்பதிகள் ஆனார்கள். நேற்று கொச்சியில் உள்ள செயிண்ட் ஜூட் சர்ச்சில் விஜய் – அமலாபால் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கிறிஸ்தவ முறைப்படி இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். ஒரு ஏஞ்சலை…
vilasam
வில்லன் பவனுக்கு இப்போதுதான் முக ‘விலாசம்’ வந்திருக்கிறது. எப்பவோ ஹீரோவாக பிரமோஷன் ஆகியிருக்க வேண்டியவர், இப்போதுதான் ‘விலாசம்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தை இயக்குகிறார் பா.ராஜகணேசன். எழுதுவது கூட சுலபம். எழுதியதை சுமப்பதற்கு நடிகர் நடிகைகளை பிடிப்பதுதான் குதிரை கொம்பு. இந்த படத்தில் பவனுக்கு ஜோடியாக நடிக்க யார் யாரையோ வலை வீசித் தேடிக் கொண்டிருந்த ராஜகணேசன், ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில் குமாரை தேடி அவரது அலுவலகத்திற்கு போனாராம். அங்கேதான்…
un samayal arayil
கோடம்பாக்கமே ஒரு பெரிய கொத்து பரேட்டா சட்டியாகிக் கொண்டிருக்கிறது. அந்த ‘சட்டியும் காரம். சமையல்காரனின் எரிச்சலும் அதன் ஓரம்’ என்பது போலவே இருக்கிறது எல்லா படங்களும். இந்த அசந்தர்ப்பமான சூழலில்தான், ஆர அமற மர நிழலில் உட்கார்ந்து பாட்டி சுட்ட வடையை பந்தி பரிமாறுகிறார் பிரகாஷ்ராஜ். அத்தனை கவளங்களுக்குள்ளும் ஒளிந்திருக்கிறது ஆர்ப்பாட்டமில்லாத ருசி. நாற்பதை கடந்த பின்பும் ஏனோ கல்யாணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே போகும் பிரகாஷ்ராஜ், சரியான சாப்பாட்டு…
anjali
ஒரு நடிகை தான் நடித்துக் கொண்டிருந்த படத்தை பாதியிலேயே விட்டுவிட்டு போகலாமா? அப்படி போயிருந்தால், அந்த படத்திற்காக செலவு செய்யப்பட்ட தொகைக்கு யார் பொறுப்பு? இப்படியெல்லாம் பல கேள்விகள் அஞ்சலியை சுற்றி சுற்றி வந்தாலும், அவரை கற்பூரம் போல காக்கும் கரங்கள் இதே சினிமாவிலிருப்பதால், பணம் போட்ட மு.களஞ்சியம் காத்திருக்கிறார் அஞ்சலிக்காக. அவர் ஒரே ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாலும் போதும், சட்டப்படி புகுந்து தர்மப்படி தனது…
anushka-ajith
‘ஐ லவ் அனுஷ்கா’ என்று தமிழ்நாட்டு வாலிபன்ஸ் தவம் கிடக்க, ஆந்திராவை விட்டு நகர மறுக்கிறது அனுஷ்கா தென்றல்! நல்லவேளையாக இளைஞர்களின் குரலாக ஒலித்திருக்கிறார் கவுதம் மேனன். தெலுங்கு பட ஷுட்டிங்கை முடிச்சுட்டு சீக்கிரம் சென்னைக்கு வாம்மா என்று படுத்திக் கொண்டிருக்கிறாராம். பிளாஷ்பேக்கில் வரும் அஜீத்திற்கு த்ரிஷா ஜோடி. மற்றொரு அஜீத்திற்கு அனுஷ்கா ஜோடி. பொதுவாகவே தன் பட ஹீரோயின்களை அழகாக காட்டுவதில் கவுதமுக்கு நிகர் கவுதமே. சமீரா ரெட்டியையே…
angaditheru mahesh
ஒரு மிகப்பெரிய ஹிட் படம் கொடுத்த ஒரு ஹீரோவுக்கு இன்றைய தேதியில் ஜீரோவுக்கான மரியாதை கூட இல்லை. இந்த பேரதிர்ச்சியில் இருந்து விடுபட முடியாமல் ஹீரோ தவியாய் தவித்து தண்ணீர் கூட குடிக்காமல் குப்புற படுத்துக் கிடப்பார் என்று நீங்கள் நினைத்தால், அங்குதான் ட்விஸ்ட். அன்றுதான் டபுள் பிளேட் பிரியாணியை வாங்கி உள்ளே இறக்கினாராம் அவர். ஹ்ம்ம்ம்… இப்படியும் ஒரு ஹீரோ. போகட்டும்…. விஷயத்திற்கு வருவோம். ‘ஆதார்’ என்ற படம்…
vikram-vijaymilton
பணம் என்றால் பிணமே வாயை திறக்கும் காலமிது. அப்படியிருக்க, சமானியர்கள் திறக்க மாட்டார்களா என்ன? விக்ரம் ஹீரோவாக நடிக்க, கோலிசோடா வெற்றிக்கு பின் விஜய் மில்டன் ஒரு படத்தை இயக்கப் போகிறார் அல்லவா? அந்த படத்தை 24 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்வதாக தெரிவித்திருக்கிறதாம் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம். இதைதான் தட்டிக் கொண்டு போக முடிவெடுத்தாராம் லிங்குசாமி. அவங்க 24 ன்னா நான் 28 தர்றேன். எப்பூடி… என்று லிங்குசாமி…
vijay antony
நன்றாகவே தேறிவிட்டார் விஜய் ஆன்ட்டனி. ‘இந்த படத்திலேயே உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன?’ என்ற கேள்விக்கு ‘இந்த படத்திலேயே எனக்கு பிடிச்சது ஹீரோயினும் ஒரு சின்ன கேரக்டரில் நடிச்சுருக்கும் அஸ்மிதாவும்தான்’ என்றார். சலீம் பட பிரஸ்மீட்டில்தான் இத்தகைய கூத்து. அடிப்படையில் மனைவி தாஸனான அவருக்குள் இப்படியொரு நகைச்சுவை உணர்வா? என்று திடுக்கிட்ட அடுத்த வினாடியே சுதாரித்துக் கொண்டார் அவர். ‘எல்லாரும் கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரின்னு சொல்றாங்க. ஆனால் எனக்கு அவங்க கூட…
jayam_ravi_raja
‘நடிப்பா? ஆளை விடுங்கப்பா…’ என்று ஒவ்வொரு முறையும் தப்பித்து ஓடிய டைரக்டர் ராஜாவை ‘கரைக்க’ ஒரு சோப்பு கம்பெனி முதலாளியால் ‘முடியும்’ என்பதை நிரூபித்திருக்கிறார் ஏ.வி.அனுப். இவர் மெடிமிக்ஸ் சோப் கம்பெனியின் அதிபர். இவரது தயாரிப்பில் உருவாகும் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார் ஜெயம் ராஜா. நான் ஷுட்டிங்குக்கு நடிக்க கிளம்பும்போது ஜெயம் ரவி சொன்னான். ‘எங்க எல்லாரையும் படுத்தி வச்சேல்ல. இப்ப…
snehan
கவுன்ட்டரில் கையை விட்டு டிக்கெட் வாங்குவது எப்படி? அவரவர் சீட்டில் உட்கார்ந்து படம் பார்ப்பது எப்படி? இன்டர்வெல்லில் இஞ்சி மரபா தின்பது எப்படி? என்பது மாதிரியான இன்றியமையாத கலைகளை பற்றி மட்டும்தான் தனியார் கல்வி நிறுவனங்கள் கோர்ஸ் எடுக்கவில்லை. மற்றபடி சினிமாவில் எல்லாவற்றும் கோர்ஸ் வந்துவிட்டது. மூன்றே மாதத்தில் முடி திருத்தலாம். நான்கே மாதத்தில் நகம் வெட்டலாம், என்பதை போல ‘பத்தே நாளில் படமெடுக்கலாம்’ என்றும் கோர்ஸ்கள் வரக்கூடும். வேடிக்கை…
trisha
‘அவ கூட சேர்ந்தே? உருப்புடறதுக்கு வழியே இல்ல…’ ஏதோ நடுத்தர வர்கத்தின் குடும்ப கோஷம்தான் இது என்று நினைத்திருப்பவர்களுக்கு செம ஷாக். தன் மகள்களை இப்படி கண்டிக்கும் தாய் குலங்களின் திருக்குரலாக த்ரிஷாவின் மம்மியின் குரலும் இருந்தால் எங்கே போய் முட்டிக் கொள்வது? மகளை தனியாகவோ அல்லது தோழிகளுடனோ ஃபாரினுக்கெல்லாம் அனுப்பி வைத்துவிட்டு நிம்மதியாக இங்கே டி.வி பார்த்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் கூட த்ரிஷாவின் மம்மிக்கு இப்படியொரு டயலாக் தேவைப்படவில்லை.…
vivek-nanthan bala
இப்படி நகைச்சுவை நடிகர்கள் எல்லாரும் ஹீரோவாகிட்டீங்கன்னா, அப்ப காமெடிக்கு நாங்க யாரை தேடுறது? இப்படியொரு கேள்வியை விவேக்கை பார்த்து கேட்க வேண்டிய நேரம் இதுதான். யெஸ்… அவரும் ஹீரோவாகிவிட்டார். ‘நான்தான் பாலா’ படத்தில் ஹீரோவாக நடிக்க அவரை அழைத்தபோது, முதலில் தயங்கினாலும் இரண்டு வருஷம் விடாப்பிடியாக போராடி எப்படியோ நடிக்க வைத்துவிட்டார் டைரக்டர் ஆர்.கண்ணன். துளசி தீர்த்தமா? கூலிப்படை ரத்தமா? யாருக்கு வெற்றி என்பதுதான் படத்தின் க்ளைமாக்ஸ் என்கிற விவேக்,…
vijay-amalapal
விஐபிகளுக்கு திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கு வெளியே மறுநாள் கிடக்கும் குப்பைகள் அத்தனையும் கசங்கிய மலர் கொத்துக்களாகவே இருக்கும். அன்பை தெரிவிக்க பூங்கொத்து அவசியம்தான். ஆனால் அது மலைபோல குவிக்கப்பட்டு ஒருவருக்கும் பிரயோஜனமில்லாமல் குப்பை லாரியில் போவதை நினைத்தால், மனசு ஐயோவாகிவிடும். அன்பளிப்பை தவிர்க்கவும், மாலைகளை தவிர்க்கவும், சால்வைகளை தவிர்க்கவும். அதற்கு பதிலாக ஏதாவது புத்தகங்களை கொடுங்கள் என்று அட்வைஸ் செய்தாலும், இந்த குப்பைகளை சேர்க்கவே பிரியப்படுகிறார்கள் சக வி.ஐ.பிகள். எழுத்தாளர்…
shruthihaasan_bank
எவ்வளவோ பணம் இருந்தாலும், கடன் வாங்கி கலர் படம் ஓட்டுவதுதான் பணக்காரர்கள் பலருக்கு வாடிக்கை. எல்லாம் ‘டாக்ஸ்’ தந்திரம். அப்படியொரு தந்திரத்திற்குள் அகப்பட்டுக் கொண்டாரா? அல்லது நிஜமாகவே பணம் இல்லையா தெரியாது. மும்பை பாந்தரே ஏரியாவில் தனக்கென ஒரு விசேஷ பிளாட் வாங்கினார் ஸ்ருதி. இதை வாங்க வங்கி கடன்தான் அவருக்கு உதவி செய்திருக்கிறது. எச் – ல் -துவங்கும் அந்த வங்கியின் அதிகாரிகள், ஸ்ருதியின் பயோ-டேட்டாவை கண்டு மயங்கி…
singamuthu
‘என் வழி தனி வழி!’ ஊர் உலகத்திற்கெல்லாம் பழகிப் போன இந்த பஞ்ச் டயலாக்கைதான் தன் படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார் ஆர்கே. இந்த தலைப்பு கிடைச்சது எப்படி? இதற்கு ஒண்ணும் ஆட்சபேணை வரலீயா போன்ற அதி அத்யாவசியமான கேள்விகளுக்கெல்லாம் மெல்லிய சிரிப்போடு, அதெல்லாம் பார்த்துக்கலாம் சார். ஒண்ணும் பிரச்சனையிருக்காது என்று பதிலளித்த ஆர்.கே, தமிழ்சினிமாவின் மினிமம் கியாரண்டி சப்ஜெக்டான போலீஸ் கதைக்குள் இறங்கிவிட்டார். ஆர்கேவுக்கு ரெண்டு ஜோடிகள். ஒருவர் மீனாட்சி…
sneha
தமிழ்சினிமாவில் பாதிக்கு மேற்பட்டோர் ஷிர்டி சாய்பாபாவின் பக்தர்களாக இருக்கிறார்கள். நல்லதோ, கெட்டதோ, அவரது பாதம் பணியாமல் இவர்கள் எந்த வேலையையும் தொடங்குவதேயில்லை. அப்படி வணங்குகிறவர்களுக்கு சில நேரங்களில் சோதனையும் கொடுத்து வருகிறார் பாபா. இருந்தாலும், பாபாவே சரணம் என்கிற சரண கோஷம் ஒலிக்காத சினிமா கம்பெனிகளையும் ஹீரோ ஹீரோயின்களையும் விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்த பாபா நம்பிக்கையில் புதிதாக தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் சினேகா. பிரசன்னா தம்பதி. இதில் பிரசன்னா…
ilayaraja birthday
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் விழா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் இளையராஜா குமுதத்தில் தொடராக வந்த இளையராஜாவின் கேள்வி பதில்களின் தொகுப்பான ‘இளையராஜாவைக் கேளுங்கள்’ எனும் புத்தகமும், திருப்பாவை பள்ளி எழுச்சிப் பாடல்களும் வெளியிடப்பட்டன. இந்த விழா இளையராஜாவின் பிறந்தநாளாக மட்டுமல்லாமல். 71001 மரக் கன்றுகள் நடும் விழாவாகவும் நடைபெற்றது. காலத்தால் அழிக்க முடியாத அற்புதமான பாடல்களை இந்த நாட்டுக்கு அளித்த ‘புண்ணிய ஸ்தலம்’…
Page 196 of 237« First...102030...194195196197198...210220230...Last »

all news