Cinema News

koopidu05
ரெகமன்டேஷன் இல்லாத துறை ஏதாவது இருக்கிறதா? ப்ரிகேஜி யில் துவங்கி யுனிவர்சிடி படிப்பு வரைக்கும் ரெகமன்டேஷன் வேண்டும். கல்வி துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் வார்த்தைதான் இந்த ‘ரெகமன்டேஷன்’. இப்போதெல்லாம் உதவி இயக்குனராக சேர்வதற்கு மினிஸ்டர்கள் தரும் சிபாரிசு கடிதங்களோடு வந்து ‘மிரட்டுவதாக’ கூட புலம்புகிறார்கள் சில இயக்குனர்கள். கோடம்பாக்கத்தில் சுமார் ஒரு வருஷ காலமாக உலவிக் கொண்டிருக்கும் ஜோக் இது. இதை நியூஸ், அல்லது…
vivek-nanthan bala-review
வெறும் வேர்க்கடலை வறுப்பதற்கு, எதற்கு பாற்கடலை கடையணும்? ‘விவேக் ஹீரோவாக நடிச்சா நல்லாதானய்யா இருக்கும்’ என்று கவலைப்பட்டவன்தான் தமிழன். அவனுடைய கவலைக்கு பால் ஊற்றுகிறேன் பேர்வழி என்று ‘கள்ளிப்பால்’ ஊற்றியிருக்கிறார் இயக்குனர் கண்ணன். விவேக்கின் லொட லொட வாயிலும் படபட வசனத்திலும் விழுந்து… தேய்த்து… குளித்து… தன்னையே சுத்தமாக்கிக் கொண்ட அத்தனை பேருக்கும் நான்தான் பாலா, ‘ஏன்தான் பாலா!’ ஒரு நேர்மையான பெருமாள் கோவில் பூசாரிக்கு, அதே பெருமாள் கொடுப்பது…
surya-simbu
எத்தனை பழைய செய்தியாக இருந்தாலும், முக்கியமான செய்தியல்லவா? அதனால் மீண்டும் ஒருமுறை ரிப்பீட்! தமிழ்சினிமாவுலகமே ஒன்று திரண்டு சூர்யா ஜோதிகா திருமணத்தை வாழ்த்தியது. தமிழ்சினிமா காதல் ஜோடிகளில் பல பொருந்தா ஜோடிகளும் உண்டு. எதை பற்றியும் வருந்தா ஜோடிகளும் உண்டு. ஆனால் எல்லாரும் ஆசிர்வதித்த அற்புதமான ஜோடிதான் சூர்யா- ஜோதிகா. இவர்களின் திருமணத்திற்கு ஒட்டுமொத்த கோலிவுட்டும் ஆஜர். அப்படியிருந்தும் இரண்டே இரண்டு பேருக்கு மட்டும் அழைப்பிதழ் வைக்கப்படவில்லை. ஒருவர் விக்ரம்.…
rajini-aniruth
ஒரு வகையில் நெருங்கிய சொந்தம் என்பதாலும் இருக்கலாம். அல்லது இளம் வயசில் இப்படியொரு துள்ளலா என்றும் நினைத்திருக்கலாம். ரஜினியின் பரிபூரண ஆசி அனிருத்துக்கு எப்பவுமே இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் போல நல்லா போயிட்டு இருக்கும் போதே நடிப்பு மீது ஆசை வந்தது அனிருத்துக்கு. ‘கண்ணா… இதெல்லாம் பார்க்க இனிப்பா இருக்கும். பக்கத்துல போனா துவக்கும்’ என்று அட்வைஸ் கூறி அனிருத்தின் நடிப்பு ஆசைக்கு அணை போட்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். அதனால்…
surya
சாதாரணமாகவே கேரளப் பெண்கள் அழகு. அந்த அழகுக் கேரளமே ‘அடடடா அழகு’ என்று வியந்து வியந்து கொண்டாடிய ஒரு அழகுதான் மஞ்சு வாரியர்! குடும்ப வாழ்க்கை கசந்து போன 982 வது நடிகையாக இப்போது திரும்பி வந்திருக்கிறார் இவர். ஏன் பிரிஞ்சீங்க? எதுக்கு பிரிஞ்சீங்க? என்று குடும்பம் கேட்டு, கோர்ட் கேட்டு, மீடியாவும் கேட்டு மனசை நோகடித்த பின்பும் தன் அழகு குறையாமல் அப்படியே இருக்கிறார் என்றால், அதுதான் கடவுள்…
tamil-cinema-ramanujan-movie
‘கும்பகோணம் டூ கேம்பிரிட்ஜ்….’ இன்றைய வளர்ந்த யுகத்திலேயே யாருக்கும் அவ்வளவு எளிதில் வாய்த்துவிடுவதில்லை இந்த பயணம். ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்திலிருந்து கிளம்பிப் போய் கேம்பிரிட்ஜில் படித்து உலகத்திற்கே தமிழனின் பெருமையை நிலை நாட்டியவர் கணிதமேதை ராமானுஜம். அவரது கதையை படமாக்கி வருகிறார் ஞான.ராஜசேகரன். ‘இந்தியாவின் எந்த மாநிலத்திற்கும் இல்லாத பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. இங்கு நல்ல படங்களை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்’ என்று சந்தோஷப்படுகிறார் இவர். மோகமுள்,…
vetrichelvan
ருத்ரனுக்கும் மன நோய் காப்பகத்திற்கும் பூர்வ ஜென்ம தொடர்பு இருப்பதாகவே படுகிறது. பிரபல மனநல மருத்துவர் ருத்ரனை அறியாதவர்கள் இருக்க முடியாது. அதே பெயரை கொண்டிருக்கும் டைரக்டர் ருத்ரனும் தனது ‘வெற்றிச் செல்வன்’ படத்தின் அழுத்தமான க்ளைமாக்சை மன நோய் காப்பகத்தில் வைத்திருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய ஆச்சர்யம்! ‘சென்னை கீழ் பாக்கம் மன நல மருத்துவமனையில் பத்து நாளுக்கும் மேல் ஷுட் பண்ணினோம். ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கிதான் பண்ணியிருக்கோம்.…
gvprakash
‘உலக நகைச்சுவை தினம்’ எப்போது என்பது பலருக்கும் தெரியாது. அது எப்போதாக இருந்தால் என்ன? அந்த தினத்தை ஜுன் 13 என்று கெஸட்டில் மாற்றிவிட வேண்டியதுதான். ஏனென்றால் நேற்றுதான் ‘அகில உலக ஜி.வி.பிரகாஷ் நற்பணி மன்றம்’ துவங்கப்பட்டுள்ளது. ஒரு படத்தில் தலைகாட்டிவிட்டால் போதும். அடுத்த எம்ஜிஆர் நாம்தான் என்று முடிவு கட்டிக் கொள்ளும் பலருக்கும் காலம் ஒரு பை நிறைய அமிர்தாஞ்சன் டப்பாக்களை வழங்கிவிடும். சமீபத்திய உதாரணம் வடிவேலுவின் தெனாலிராமன்!…
sivakarthikeyan-lingusamy
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் வந்து திருத்தப்படாத தீர்ப்பை கூட திருத்தி எழுதிவிட்டது. படம் மொக்கையாக இருந்தாலும், பிடித்த ஹீரோ நடித்திருந்தால் ஷியூர் ஹிட் என்பதுதான் அந்த திருத்தம். அதற்கு முன்பு வரை இருந்த சிவகார்த்திகேயனின் ரேஞ்ச் அதற்கப்புறம் என்னவானது என்பதை மார்க்கெட்டில் விசாரித்தால், மயக்கமே வந்துவிடும். அந்தளவுக்கு இன்றைய தேதிக்கு டாப்போ டாப் அவர். ஏழு கோடி வரைக்கும் சம்பளம் தர தயாராக இருக்கிறார்களாம் இங்கே. இந்த நேரத்தில்…
ajalai-red
கோட் சூட் போடாத கோபியாக ‘நீயா நானா?’ யுத்தம் நடத்திக் கொண்டிருந்த மு.களஞ்சியத்திற்கு முதல் ஆறுதல் கிடைத்துவிட்டது. ஒவ்வொரு முறையும் ஏதாவது நிகழ்ச்சியில் மைக்கை பிடிக்கும் அவர், ‘இங்க தமிழ்சினிமாவில் அத்தனை சங்கங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு சங்கமும் என் விஷயத்தில் உதவவில்லை’ என்று கவலைப்பட்டு கண்ணீர் சிந்திக் கொண்டேயிருந்தார். அதற்கு ஓரளவுக்கு ஒரு ஆறுதல் கிடைத்துவிட்டது. அவர் இயக்கிக் கொண்டிருக்கும் ‘ஊர் சுற்றி புராணம்’ படத்தில் அஞ்சலி நடித்துக்…
kadhalai thavira
பிள்ளைகளின் முதுகை ஒடிக்கும் பள்ளி நிர்வாகங்கள் அவசியம் பார்க்க வேண்டிய படமாக இருக்கும் ‘காதலை தவிர வேறொன்றுமில்லை’. கொஞ்சம் காதலும் நிறைய காமெடியுமாக படம் எடுக்கிற செல்வபாரதி, இந்த முறை என்ன கலவையில் படம் எடுத்திருக்கிறாரோ, அது வெளிவந்தால்தான் தெரியும். ஆனால் விவாதிக்கவும், வில்லங்கமாக யோசிக்கவும் நிறைய விஷயங்கள் படத்தில் இருப்பதாக படுகிறது. அதுவும் படத்தில் ஒரு மாணவன் பேசுவதைப்போல ஒரு டயலாக், கண்டிப்பாக கவன ஈர்ப்பு தீர்மானமே அன்றி…
amalapal-alvijay
முதலில் அமலாபால்-விஜய் இளம் தம்பதிகளுக்கு நமது நியூதமிழ்சினிமா.காம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அப்படியே புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே… தங்கச்சி கண்ணே… ஸ்டைலில் ஒரு அட்வைஸ். நடந்து வந்த பாதையை, ஏறி வந்த ஏணியை இதுபோன்ற முக்கியமான சந்தர்ப்பங்களில் நினைத்து பார்க்க வேண்டுமே தங்கச்சி என்பதுதான் அது. தமிழ்சினிமாவில் ‘நன்றி’ என்ற தலைப்பில் படம் வந்திருக்கிறது. ‘நன்றி மீண்டும் வருக…’ என்று கூட தலைப்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் ‘நன்றியே…
evan-gana bala
சில புன்னகைகள் மிகவும் அர்த்தமுள்ளவை. அதே நேரத்தில் இயலாமைக்கு உரியவையும் கூட! நேற்று புலவர் புலமைப்பித்தன் அவர்களின் சிரிப்பும் அப்படிதான் இருந்தது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் போர்ப்படை தளபதிகளில் மிக முக்கியமானவர் புலமைப்பித்தன். அரசவை கவிஞராகவும் மேலவை தலைவராகவும் அவரை வைத்திருந்து அழகு பார்த்தார் எம்ஜிஆர். சரி… புன்னகைக்கு வருவோம். அவரது பேரன் திலீபன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘எவன்’. இந்த படத்தில் ஒரு அருமையான கருத்தாழமிக்க பாடல் ஒன்று இருக்கிறது.…
nayan-tattoo
பால் குண்டானில் பசு மாடே விழுந்த மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள் உணர்ச்சி வசப்படுகிற அத்தனை பேரும்! அதற்கு நயன்தாரா மட்டும் விதிவிலக்கா என்ன? இவரும் பிரபுதேவாவும் காதலில் விழுந்து காணாமல் போன நாட்களை இப்போதும் கூகுளில் தேடி எடுத்து குதுகலப்படலாம். ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் மனதளவில் இந்த காதலை நொறுவையில் போட்டு நசுக்கி நாளாச்சு. இனிமேல் எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்க மாட்டேன் என்கிறார் பிரபுதேவா. மறுபடியும் அவரை நினைக்கறதா?…
vijay-modi-politics
திமுக தலைவர் கலைஞரை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறியிருக்கிறார் ரஜினி. அத்துடன் தனது கோச்சடையான் படத்தை பார்க்க வருமாறும் அழைப்பு விடுத்திருக்கிறார். கலைஞர் முதல்வராக இருந்த நேரத்தில் வள்ளுவர் கோட்டம் அருகிலிருக்கும் ஃபோர் பிரேம்ஸ் தியேட்டர் எந்நேரமும் அலர்ட்டாக இருக்கும். ‘தலைவர் படம் பார்க்க வர்றேன்னுட்டாரு. அதனால் உங்க படம் கேன்சேல்…’ என்று முன்பே ஒப்பந்தம் போட்டவர்களுக்கு கூட அவ்வப்போது திடீர் குண்டு வீசுவார் பொறுப்பாளர் கல்யாணம்.…
trisha-balakrishna
எவனாவது தலைவனுக்கு வயசாகிருச்சுன்னு சொன்னீங்க…, மொத்த காலண்டரையும் அள்ளிட்டு வந்து ஆந்திரா சட்டசபைக்கு எதிர்ல போட்டு கொளுத்துவோம்ல…? என்று வேட்டியை மடிச்சு கட்டும் நல்ல ரசிகர்களை பெற்றவர்தான் பாலகிருஷ்ணா. ஆந்திராவையே தன் அதிரடியால் கிடுகிடுக்க வைக்கும் அவருக்கு இப்போது வயசு என்ன? கவர்மென்ட் ஊழியராக இருந்தால் பென்ஷன் வாங்குகிற வயசு. ஆனால் இப்பவும் இளம் சிட்டுகளுடன் டூயட் ஆடிக் கொண்டிருக்கிறார். அதுவும் சின்னஞ்சிறுசாக பார்த்து தனக்கு ஜோடியாக்கிக் கொள்வதில் அவரை…
manjapai-review
மனங்களால் ஆன வாழ்க்கையை நிறங்களால் பிரிக்க கற்றுக் கொண்டிருக்கிறான் மனிதன். ‘கலர்ல என்னடா இருக்கு கருமாதி?’ என்று இதை விலக்கவும் முடியாமல், தொடரவும் முடியாமல் தவிக்கும் இதே உலகத்தில் ‘மஞ்சப்பை’ என்ற ஒரு வார்த்தையே கலரையும் ஆளையும் எடை தராசில் ஏற்றி ஒரு சேர ‘பொதுக்கடீர்’ என்று போட்டுத்தள்ளுகிறது. அப்படி காலகாலமாக கறையாகி நிற்கும் ஒரு மஞ்சப்பைக்குள் ‘மரியாதையை’ நிரப்பியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ராகவன். ‘இவனுங்க பண்றதையெல்லாம் எங்க தாத்தன்…
karuthu
ஈழ தமிழர்களை அவமதிக்கும் ‘இனம்’ படத்தை தடை செய்ய வேண்டும் என்று குரல் எழுந்தபோது, கோடம்பாக்கத்தில் லிங்குசாமிக்கு பிரியமான சில இயக்குனர்கள் பொங்கியெழுந்துவிட்டார்கள். ஒரு படைப்பாளியின் கருத்து சுதந்திரம் இப்படி கண்டவங்களாலும் சிதையுதே என்று கவலைப்பட்டார்கள். அறிக்கை வெளியிட்டார்கள். ஆவேசப்பட்டார்கள். குறிப்பாக அமீர், பாலாஜி சக்திவேல், சசி, செல்வமணி, விக்ரமன் போன்றவர்கள், ‘அந்த படத்தில் ஒன்றும் குறையிருப்பதாக தெரியவில்லையே?’ என்றெல்லாம் கூறியபோது நம்ம இனத்துக்கே இப்படி நாக்கு குளறுதே என்று…
amala-vijay
அவரே எழுதிய திரைக்கதையை விட சுவாரஸ்யமாக இருக்கிறது இந்த காதல் கதை. ‘இருவருக்கும் லவ்வாம்…’ என்று கிசுகிசுவில் ஆரம்பித்த காதல், கோலாகலமான நிச்சயதார்த்தம் வரை வந்துவிட்டது. அனுஷ்கா, விக்ரம் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் வந்து வாழ்த்த விஜய் அமலாபால் அதிகாரபூர்வமான தம்பதிகள் ஆனார்கள். நேற்று கொச்சியில் உள்ள செயிண்ட் ஜூட் சர்ச்சில் விஜய் – அமலாபால் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கிறிஸ்தவ முறைப்படி இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். ஒரு ஏஞ்சலை…
vilasam
வில்லன் பவனுக்கு இப்போதுதான் முக ‘விலாசம்’ வந்திருக்கிறது. எப்பவோ ஹீரோவாக பிரமோஷன் ஆகியிருக்க வேண்டியவர், இப்போதுதான் ‘விலாசம்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தை இயக்குகிறார் பா.ராஜகணேசன். எழுதுவது கூட சுலபம். எழுதியதை சுமப்பதற்கு நடிகர் நடிகைகளை பிடிப்பதுதான் குதிரை கொம்பு. இந்த படத்தில் பவனுக்கு ஜோடியாக நடிக்க யார் யாரையோ வலை வீசித் தேடிக் கொண்டிருந்த ராஜகணேசன், ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில் குமாரை தேடி அவரது அலுவலகத்திற்கு போனாராம். அங்கேதான்…
Page 186 of 228« First...102030...184185186187188...200210220...Last »

all news