அபி சரவணன், அதிதி திறந்து வைத்த ‘கேஃபினோ’!

விளையாட்டுகளுக்கு மனமகிழ்வுக்கும் ஏற்ற இடமாக “‘கேஃபினோ’ தி கேம் யார்டு” தொடங்கப்பட்டுள்ளது. இன்று இதனை இயக்குநர் மீரா கதிரவன், நடிகர் அபி சரவணன், நடிகை அதிதி ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

இந்த கேஃபினோ, அழகான சூழலுடன், கண்களைக் கவரும் உள்வேலைப்பாடுகளுடன், கலைநயம் மிக்கதாக அமைந்துள்ளது. ஸ்நூக்கர் விளையாடுவதற்கென்று பெரிய இடம், கணிப்பொறி விளையாட்டுகள், பொழுதுபோக்க ஏற்ற இடங்கள் அத்துடன் காபி அருந்தவும் சுவையானவைகளை உண்டு மகிழவும் என்று விஸ்தீரமான இடமாக அமைக்கப்பட்டுள்ளது.

கேஃபினோவில் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்நூக்கர் மேசைகள் வேறு எங்கும் பார்க்க முடியாத அளவிற்கு தரமானதாக இருக்கின்றன. தொழில் ரீதியான ஸ்நூக்கர் வீரர்கள் இதுபோன்ற மேசைகளுக்கு ஏங்குவார்கள். நான்காம் தலைமுறை கணிப்பொறி விளையாட்டுகளும் இந்த கேஃபினோவில் சிறப்பம்சம்.

அவை மட்டுமல்ல, இசைவிருந்து , ஸ்டேண்ட் அப் காமெடி, கரோக்கி இரவுகள் என்று ஒவ்வொரு வாரமும் புதுமையான பொழுதுபோக்குகள் நடக்கும் சென்னையின் புதிய அடையாளமாக கேஃபினோ விளங்கும்.

கேஃபினோ, சென்னையிலும் வெளிநாடுகளிலும் அதன் கிளையைப் துவக்கவுள்ளது.

நண்பர்களுடன் சேர்ந்து சிறப்பான பொழுதுபோக்கு, விளையாட்டுகளுடன் கூடிய உணவகம் அல்லது காபி ஷாப் போகவேண்டும் என்று விரும்பினால், உங்களது தேர்வு நிச்சயம் கேஃபினோவாகத் தான் இருக்க முடியும்.

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Karthick Subburaj Kidnapped The Heroine.
Karthick Subburaj Kidnapped The Heroine.

https://youtu.be/SJT3QiJcnpY

Close