அப்பாவி நண்பனுக்கு திருட்டுப்பட்டம்! போலீஸ் ஸ்டேஷனில் மாட்டிவிட்ட கொடூர பாபிசிம்ஹா!

‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தை தன் மேனேஜர் சதீஷ் பெயரில் தயாரித்து வரும் நடிகர் பாபி சிம்ஹா, நல்லவருக்கும் நல்லவராக இருக்கிறாரா என்றால், அதுதான் இல்லை! அதற்கு உதாரணமாக சொல்ல ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், லேட்டஸ்ட்டாக ஒரு காரணம் இருக்கிறது. அதுதான் நண்பனுக்கு திருட்டுப்பட்டம் கட்டி ஜெயிலுக்கு அனுப்ப நினைத்த சம்பவம்.

ஜிகிர்தண்டா, இறைவி போன்ற படங்களில் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய செந்தில்குமரன் என்பவர் மீதுதான் இந்த திருட்டுப்பட்டத்தை சுமத்தியிருக்கிறார் பாபிசிம்ஹா. அந்த படப்பிடிப்பு நடக்கும் நேரத்தில் பாபிசிம்ஹாவுக்கு குளோஸ் பிரண்ட் ஆகியிருந்தார் செந்தில்குமரன். வல்லவனுக்கும் வல்லவன் படத்தின் எக்சிக்யூட்டிவ் புரட்யூசராகவும் இவரை பயன்படுத்திக் கொண்டார் பாபி. அந்த அன்பில் தனது காரை முழு நேரமாக படப்பிடிப்புக்கு பயன்படுத்திய செந்தில்குமரன், படப்பிடிப்பு தடை படும் நேரத்திலெல்லாம் தனது மனைவியின் நகைகளை வைத்தும் நண்பர்களிடம் வாங்கியும் சுமார் பத்து லட்சத்தை கொடுத்து உதவியிருக்கிறார். அதை திருப்பிக் கேட்டதில்தான் பிரச்சனை ஆரம்பித்தது.

“நீ படத்திலிருந்தே விலகிக்கோ… படத்தில் வொர்க் பண்ணிய விதத்திலும், கைமாற்றாக வாங்கிய பணத்திற்காகவும் சேர்த்து 20 லட்ச ரூபாய்க்கு காசோலை தருகிறேன்” என்று கூறி ஒரு காசோலையுடன் அவரை கழற்றிவிட்டுவிட்டார் பாபிசிம்ஹா. அதற்கப்புறம் செக்கை வங்கியில் போட்ட செந்தில்குமரனுக்கு பலத்த அதிர்ச்சி. போன வேகத்தில் திரும்பிவிட்டது அது. டிசம்பர் 19 ந் தேதி செக் திரும்பி வர, அதிர்ச்சியான செந்தில் பலமுறை பணத்திற்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார். இந்த நேரத்தில்தான் அந்த பேரதிர்ச்சி தரும் திருப்பம். டிசம்பர் 29 ந் தேதி காவல் நிலையத்தில் பாபி சிம்ஹாவின் மேனேஜர் சதீஷ் ஒரு புகார் கொடுத்திருக்கிறார். (பாபியின் பினாமி தயாரிப்பாளர் இவர்தானே, அதனால்தான்) தங்கள் கம்பெனியிலிருந்து செந்தில்குமரன் செக்கை திருடி 20 லட்சம் ஏமாற்ற முயன்றார் என்று கூறியிருக்கிறார் அந்த புகாரில்.

நல்லவேளையாக தான் கொடுத்த பணத்திற்கு முறையான ஆதாரமும், நகை அடகு சீட்டுகளையும் அப்படியே வைத்திருந்ததால் ‘உள்ளே போகாமல்’ தப்பித்தார் செந்தில். இதற்கிடையில் படத்தை தேனாண்டாள் நிறுவனம் மூன்றரை கோடிக்கு வாங்கியிருப்பதாக தகவல். இந்த நேரத்தில் கூட செந்தில் குமரனின் பணத்தை திருப்பித் தராமல் அவரை கோர்ட்டுக்கு அலைய வைத்திருக்கிறார் பாபிசிம்ஹா. அது கூட பரவாயில்லை. “செந்தில்குமரன் திருடன். அவனை நம்பாதீங்க” என்றும் திரையுலகத்தில் பலரிடமும் இவரை பற்றிய தவறான எண்ணத்தை பரப்பி இவரது எதிர்காலத்தையே காலி பண்ணவும் முயல்கிறாராம்.

ஒரு கொசுறு செய்தி. இப்போது நிறைய படங்களில் பாபிசிம்ஹா வில்லனாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

நடிப்பு தத்ரூபமாக இருக்கும் என்று நம்புவோமாக!

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
OPS New Plan To Recover MLA’S From Sasikala.
OPS New Plan To Recover MLA’S From Sasikala.

https://www.youtube.com/watch?v=PgxdLFLCqTs

Close