வீங்குற அளவுக்கு குட்டியும் திருந்தலையே இந்த பாபி சிம்ஹா?

நேர்மையில்லாத மனுஷங்களை தேடிப் புடிச்சு தெருவுல விடுகிற வித்தையை மிக திறமையாக செய்து முடிக்கும் சினிமா. அந்த ஃபார்முலாபடி பார்த்தாலும் பாபி சிம்ஹா என்ற குரோட்டன்ஸ் நடிகரை கொட்டாங்குச்சியால் மூட வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. ஏன்? அவர் பண்ணுகிற காரியங்கள் அப்படி.

காசுக்கும் பணத்திற்கு கால் தேய நடந்த காலங்களில் வாய்ப்பளித்தவர்களை, வளர்ந்த பிறகு எட்டி உதைக்கும் நன்றி கெட்டவர்கள் நிறைந்த உலகம் இது. ‘நேரம்’ படத்தில் பாபி சிம்ஹா நடிப்பதற்கு காரணமாக இருந்தவரே மருதுபாண்டியன் என்ற இயக்குனர்தான். அவர் இயக்கிய ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தில் சொற்ப சம்பளத்தில் நடித்த பாபிசிம்ஹா, வளர்ந்து மார்க்கெட்டில் ஒரு இடத்தை பிடித்த பின்பு அதே படத்தில் டப்பிங் பேசுவதற்கு 60 லட்சம் கேட்ட கதையை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடுமா உலகம்?

இப்போது அவரது அடுத்த திருவிளையாடல் ஆரம்பம். அதுவாவது ஆசை ஆசை சம்பள ஆசை.

இது? வடிகட்டிய வவ்வால் தனம்!

அதை முழுதாக தெரிந்து கொள்வதற்கு முன் பாபி சிம்ஹா நடிகர் சங்கத்திற்கு கொடுத்த ஒரு கடிதத்தின் சுருக்கத்தை பார்த்துவிடுவது நல்லது. அதில் அவர் கூறியிருப்பது இதுதான்-

கடந்த சில தினங்களாக நாளேடுகளில் மீரா ஜாக்கிரதை என்ற படத்தின் விளம்பரம் வந்து கொண்டிருக்கிறது. அதில் நான் நடித்திருப்பதாக என்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். நான் அப்படியொரு படத்தில் நடிக்கவேயில்லை. அதில் பயன்படுத்தப்பட்டுள்ள படம் நான் உறுமீன் படத்தில் நடித்த போது எடுக்கப்பட்டவை. இது போர்ஜரி. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் பாபிசிம்ஹாவின் கடிதம்.

அவரது கடிதம் கசிந்தாலும் கசிந்தது. அந்த படத்தின் ட்ரெய்லரையே வெளியிட்டுவிட்டார்கள் மீரா ஜாக்கிரதை படக்குழுவினர். அதுமட்டுமல்ல, இந்த படத்தில் பாதிக்கு மேல் வருகிறாராம் அவர். “அப்போது எங்கள் படத்தில் தினந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வந்து நடித்துக் கொடுத்தார். இப்போது நான் நடிக்கவேயில்லை என்று கடிதம் கொடுத்திருக்கிறார். இது விந்தையிலும் விந்தை” என்கிறது இயக்குனர் தரப்பு.

இன்று நன்றாக இருக்கலாம். அன்று தினந்தோறும் இரண்டாயிரம் வாங்கும் போது அதுதான் என் தகுதி என்று ஒப்புக் கொண்டுதானே வாங்கினார் இந்த பாபிசிம்ஹா? ஒருவேளை அவர் நிலைமை அந்த இரண்டாயிரம் சம்பளம் வாங்கக் கூட தகுதியற்றவராக கீழே இறக்கியிருந்தால் என்ன செய்திருப்பார்? இப்படியொரு கடிதம் கொடுத்திருப்பாரா?

பழசை மறக்கிற எல்லாருக்கும் பச்சை குத்திய மாதிரி ஒரு தண்டனை கொடுத்தாலொழிய இந்த மாதிரி பொய்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இந்த கொடுமைக்கெல்லாம் காலம் என்ன பதிலை வைத்திருக்கிறதோ?

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
unnoodu ka Stills 019
unnoodu ka -Stills Gallery

Close