கைதட்டலுக்காக சீறும் ஹீரோக்கள்! பாகுபலி 2 சிக்கலுக்குப் பின்பாவது திருந்துவார்களா?

ஒரு மேடை கிடைத்துவிட்டால் போதும். பின் விளைவுகள் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை பல ஹீரோக்கள். அதுவும் சத்யராஜ் மாதிரியான ஹீரோக்கள், தங்கள் இன உணர்வை காட்டுகிறேன் பேர்வழி என்று மேடை நாகரீகத்தை காற்றில் பறக்க விடுகிற காட்சிகள், வருஷத்திற்கு ஒருமுறையாவது நடந்துவிடும். ரஜினி மீதிருக்கும் ஆத்திரத்தை “அடேய் கன்னட நாய்களா?” என்று ஜாடையில் முழங்கிய சத்யராஜால், 9 வருஷத்திற்கு பின் பாகுபலி 2 படத்திற்கு சிக்கல்.

ராமதாஸ், வேல்முருகன் போன்றவர்கள் இப்படி ஆத்திரப்படுவதில் பிரச்சனையே இல்லை. அவர்களுக்காகவே ‘ஹோல்சேல்’ ரேட்டில் ஒப்படைக்கப்பட்ட விஷயங்கள் நிறைய இருக்கிறது. சத்யராஜ் மாதிரி ஆட்களுக்கு ஏனிந்த வாய் துடுக்கு? அவருக்கென இன உணர்வு இருக்கக்கூடாதா? அவருடைய தமிழுணர்வை அவர் சட்டை பட்டனை போட்டு மறைத்துக் கொள்ள வேண்டுமா என்றெல்லாம் கேள்விகள் எழும். தாராளமாக இருக்க வேண்டியதுதான். சினிமாவில் நடிப்பதிலிருந்து விலகிக் கொண்டு இஷ்டத்திற்கு பேச வேண்டியதுதானே? அல்லது விஜயகாந்த் போல, “நான் தமிழ் படங்களை தவிர வேறு படங்களில் நடிக்கவே மாட்டேன்” என்று கொள்கை குன்றில் ஏறி நின்று தொலைய வேண்டியததானே?

பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் இதையெல்லாம் மனதில் வைத்துதான், “ஹீரோக்கள் அரசியல் சம்பந்தமாக கருத்து தெரிவிக்கறதுக்கு முன்னால், தனது படங்களை வாங்கிய விநியோகஸ்தர்களை ஒரு நிமிஷம் மனதில் நினைத்துக் கொண்டு பேச வேண்டும்” என்று கூறியிருந்தார். அது இப்போது பலித்துவிட்டது.

கன்னடர்களுக்கு எதிராக சத்யராஜ் பேசியதற்கு மன்னிப்பு கேட்டால்தான் பாகுபலி 2 படத்தை திரையிட விடுவோம் என்று வாட்டாள் நாகராஜ் அறிவித்திருக்கிறார். இவரை மாதிரி ஆட்களுக்கு ஒரு கேடும் இல்லை. கன்னட ஏரியாவை தாண்டி இவர்களின் யாவாரம் பலிக்கப் போவதில்லை. ஆனால் பல மொழிப் படங்களில் நடிக்கும் சத்யராஜுக்கு நாவடக்கம் தேவையல்லவா?

சரி… இப்போது என்னதான் பிரச்சனை? பாகுபலி 2 வெளியாகும் ஏப்ரல் 28 ந் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன கன்னட அமைப்புகள்! கன்னடத்தில் படம் வெளியாகாவிட்டால் சுமார் 35 கோடி நஷ்டம் ஏற்படுமாம் தயாரிப்பாளருக்கு.

நாலு பேர் கைதட்டுகிறான் என்பதற்காக உளறிய வார்த்தைகளுக்குதான் எவ்வளவு வேல்யூ?

பின்குறிப்பு- சத்யராஜ் நிஜமாகவே இனமான பேராசிரியர்தான். அவரை குறை சொல்லாதே என்பவர்களுக்கு… அப்படியே அவர் இனமான காவலராக இருந்தால், தமிழன் நலம் சார்ந்த எல்லா விஷயங்களுக்கும் வந்து முன் நின்றிருக்க வேண்டுமல்லவா? சீசனுக்கு மட்டும் பூக்கும் விசேஷ பூ வா அவர்?

2 Comments

 1. Rajii says:

  உண்மையான பதிவு. மத்த வர்களை ஒருமையில் பேசினால் தான் இன உணர்வு என்பதே இங்கு பலரின் நினைப்பு

 2. சக்திகுமார் எல் says:

  சின்ன வயதில் இந்தியர் என்பதில் பெருமைகொள்வோம் எனப்படித்தது வெறும் கிரிக்கெட் பார்க்க மட்டும்தான் எனத்தவறாக புரிந்து கொண்டு இருக்கின்றனர் பலர்….

  வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்பதாலையே இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம் என பெருமையாக சொல்லி கொண்டிருந்தோம்.
  அந்த பெருமைக்கான நிகழ்வுகள் அபோது 100% இல்லை எனினும் 70% தாராளமாக இருந்தது !

  அதற்கு 1950க்கு பழைய வரலாறு,செத்திகள் பார்த்தால் தெளிவாகப்புரியும். அந்த சதவிகிதம் இப்போ படிப்படியாக குறைந்து 20% கூட இல்லை என்பதை பார்க்கும்போது மிகவும் வேதனை அளிக்கிறது.
  (ஆனால் நான் பெருமையுடன் கூறிக்கொள்குறேன் 20% ல் நானும் ஒருவன் காரணம் என் தலைவன்)!

  உலகம் எனப்பேசும்போது ஆசியன்
  ஆசியன் எனப்பேசும்போது இந்தியன்
  இந்தியன் எனப்பேசும்போது இந்து முஸ்லீம் கிறித்தவன்…
  திராவிடம் எனப்பேசும்போது தமிழன்,தெலுங்கன், கன்னடன் , மலையாளி!
  இதற்கெல்லாம் காரணம்
  திடீர் போராளி… !!

  படித்தவர்களையும் முட்டாளாக்கி
  ஒரு குறிப்பிட்ட மொழியின் பேரைச்சொல்லி அந்த மொழியில் உள்ள வெறியர்களை(கூமுட்டைக்களை)
  தன் சுய லாபத்திற்காக பயன்படுத்துகிற
  சீமான்
  வேல்முருகன்
  வாட்டல் நாகராஜ் போன்ற அலப்பறைகள்
  அவர்களுக்கு சப்போர்ட் பண்ணும்
  சத்தியராஜ் போன்ற அல்லக்கைகள்!!

  இப்போ சமிபத்திய பிரச்சனை
  சத்தியராஜ் வருத்தம் தெரிவித்தது….
  ஒன்பது வருடம் முன் நடந்த பிரச்சனைக்கு அந்த சம்பவம் நடந்த ஒரு வாரகாலத்தில் வந்த படத்திற்காக அதன் தயாரிப்பாளர்களுக்காக ரஜினி வருத்தம் தெரிவித்தார் அதற்கு இரண்டு முக்கிய காரணம்
  1.அந்த படம் ரஜினியை முன்னிலைபடுத்தி எடுக்கப்பட்ட படம் ரஜிக்காக மட்டுமே கர்நாடகாவில் ஓடக்கூடியபடம்
  2.பிரச்சனை வந்து ஒரு வாரத்தில் ரீலிசாக வேண்டிய படம் அதனால் பிரச்சனையின் வீரியம் அதிகம்

  ஆனால் இன்று சத்தியராஜின் நிலைபாடு வேறு
  1.சத்தியராஜை முன்னிலை படுத்தி வெளியிடப்படுகின்ற
  படம் இல்லை… சத்தியராஜ் வருத்தம் தெரிவிக்கவிட்டாலும்
  இயக்குனர் தரப்பில் இருந்து இனி சத்தியராஜை புரக்கணிக்கிறோம் எனக்கூறி அறிவிப்பு விட்டால் கூட ரீலிஸ் ஆகி இருக்கும்

  2. 9 வருடம் கழித்து பிரச்சனையுன் வீரியம் சுத்தமாக இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே அப்படி இருக்கும் போது இப்படி பக்கம் பக்கமாக விளக்கமளிக்க அவசியம் எதும் இல்லை
  அந்த விளக்கத்துக்கு சொம்பு தூக்குறவங்களுக்கு புரிதலும் இல்லை.

  3. 9 வருடம் முன்பே சத்தியராஜ் என் படங்கள் இந்த சிறு நடிகனின் படங்கள் இனி கர்நாடகத்தில் ரீலிஸ் ஆகாது என அறிவித்து இருக்கலாமே
  இதுவரை இன்னைக்கு வரை உனக்கு இருக்கிற மார்க்ர்ட்டுக்கு ஏற்றால் போல கல்லாகட்டிகிட்டு தானே இருக்க.

  சரி விசயம் தான் என்ன….
  1.பொறாமையின் உச்சம்.
  எப்படி இவன் இவ்ளோ பெரிய ஆள் ஆனால்
  நாமளும்தான் நடிச்சோம் ஆடினோம் பாடினோம் சிவப்பா இருக்கோம்
  நமக்கு ஒன்னும் பெருசா இல்லையே….

  2.எளிமையான விளம்பரம்.
  இதற்கு செலவு இல்லாமல் தமிழகத்தில் ஏன் இந்தியாவில் இருக்கிற ஒரே வாய்ப்பு ரஜினி என்கிற மனிதர்….
  தன்னை எவன் எவன் எப்படித்திட்டினாலும்
  கடவுள் இருக்கிறான் என்ற ஒற்றை நம்பிக்கையில்
  அமைதியாக இருக்கும் குணம்.

  அதனால் தான் ஈமுக்கோழி வாங்கினால் கோடீஸ்வரன் ஆகலாம் என கோடி வாங்கி விளம்பரத்தில் நடித்து விட்டு கோடிபேரை நஸ்டத்தில் தள்ளும் போது மூடிகிட்டு இருந்த வாய் இப்போ அதே சத்தியராஜ்க்கு சால்றா போடுகிறது.

  இவனுங்க என்னதான் பண்ணினாலும்
  தமிழ்ன்,கன்னடன்,தெலுங்கன்,மலையாளி,குஜராத்தி, மராட்டி,பஞ்சாபி எனப்பாரபட்சம் இல்லாமல் ரசிகர்களின் ஆதரவு.. சமூக ஆர்வகளின் ஆதரவு பொது மக்களின் ஆதரவு எனப்பெற்று இன்று இந்திய ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கும் அளவிற்கு பேசப்படுகிற அளவுக்கு வளர்ந்து இருப்பதற்கு காரணம்
  தன்னை மதிக்காதவரை தரக்குறைவாக பேசாமல்
  சமயம் வரும்போது அவர்களுக்கும் உதவும்
  எளிமையின் சிகரம்
  எங்கள் தலைவரின் நற்குணங்களால் மட்டுமே சாத்தியம்.

  தலைவர் தமிழ்நாட்டில் தான் இருப்பார்
  பிடிக்கலைனா ஓடிப்போய்ருங்க எங்க ஓடிப்போவீங்க??
  ஏனெனில் தமிழ்நாட்டில் மட்டும் அவரை மட்டம் தட்டும் போது வார்த்தையால் பதில் காரணம் இது நீங்க பிறந்த ஊர்….
  மத்த இடத்தில் மரண அடிதான்.

  ஆகையால்
  அவர் வளர்ச்சியை கண்டு பொறாமையில் பொங்காமல்
  பொங்கல் தின்னுட்டு ஓரமாக இருக்கவும்.

  நீண்ட இடைவெளிக்குப்பின்
  மகிழ்ச்சியுடன்
  -சிட்லு அஜய் ரஜினி.

Leave a Reply

Facebook

Follow Us on Twitter