அஜீத் சிவகார்த்திகேயன் மோதல்? பெரும் விபத்து தவிர்ப்பு!

இப்பவே அதுக்கென்னய்யா அவசரம்? என்று மண்டை நரம்புக்கு ஓய்வு கொடுக்கிற ஏரியா அல்ல சினிமா! விதை நடும்போதே, பழத்தை குத்தகைக்கு விடுவதற்காக ரேட் பேசும் விந்தையான பீல்டு அல்லவா? இங்குதான் அஜீத்தின் விவேகம் எப்போ? என்று எதிர்பார்ப்புடன்  விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள் ஹீரோக்களும் தயாரிப்பாளர்களும். அந்த நேரத்தில் நம்ம படம் வந்தால், சுருட்டி வீசப்படும். அதையும் மீறி நிற்க வேண்டும் என்றால், கதை மட்டுமல்ல. கமா புல் ஸ்டாப்புகள் கூட சரியாக இருந்தால்தான் முடியும்.

இப்போது பேசப்படும் தகவல்கள் படி, விவேகம் ஆகஸ்ட் ரிலீஸ்! அதே மாதத்தில்தான் சிவகார்த்திகேயனின் வேலைக்காரனும் ரிலீஸ். அப்படின்னா? இருவரும் ஒரே நேரத்தில் வந்து ஒரே காம்ப்ளக்சில் மோதுவாங்களா? இப்படியெல்லாம் கேள்விகள் எழ… ஆர்வத்தோடு அலச ஆரம்பித்திருக்கிறது ரசிகனின் மனசு.

டிராபிக்கே இல்லாத ரோட்டில், சைக்கிளோ பைக்கோ ஓட்டி பழகுவதுதான் சிவகார்த்திகேயன் ஸ்டைல். அதுவும் நாலைந்து நாட்கள் சேர்ந்து வரும் விடுமுறை தினத்தை குறிவைத்து அடிப்பது அவருக்கு கை வந்த கலை. அந்த விடுமுறை தினத்தைதான் குறி வைக்கிறதாம் அஜீத்தின் விவேகம் படமும். அப்படியென்றால் இருவரும் மோதித்தானே ஆகணும்? யாரோ ஒருவருக்கு சேதாரம் பலமா இருக்குமே? இப்படியெல்லாம் யோசித்த விநியோகஸ்தர்கள், லேசுபாசாக தலையிட்டு மோதலை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்களாம்.

அதன்படி விவேகம் ஆகஸ்ட் 13, 14, 15 விடுமுறையை கணக்கிட்டும், வேலைக்காரன் செப்டம்பர் ஆயுதபூஜையை கணக்கிட்டும் வரப்போகிறதாம்.

அப்பாடா… பெரிய ஆபத்து நீங்கியது!

1 Comment

  1. Raaj says:

    Velaikkaaran Vetri.
    Siva Best
    Ajith Waste

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Kaatru Veliyidai Stills 008
Kaatru Veliyidai Stills Gallery

Close