எம்.எஸ் சுப்புலெட்சுமி வரிசையில் ஐஸ்வர்யா தனுஷ்

நியூயார்க்கில் இருக்கும் 190 நாடுகள் அடங்கிய ஐக்கியா நாடுகள் சபையில் இந்திய தூதகரத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.

ஐஸ்வர்யா கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நல்லெண்ண தூதராக தேர்வு செய்யப்பட்டார். வருகிற மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் உலக மகளிரின் மகத்துவத்தை வர்ணிக்கும் பொருட்டும், இந்திய கலச்சார்த்தை உலக்குக்கு பறைசாற்றும் வகையிலும் இவர் நம் நாட்டின் நடன கலைகளுள் ஒன்றான பரத நாட்டியத்தை ஐ.நா.வில் அரங்கேற்றவுள்ளார். இந்நடன விழா ஐ.நா.வில் இருக்கும் இந்திய தூதகரத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் நடக்கும் இந்த கச்சேரியில் நாட்டியக் கடவுள் நடராஜருக்கு புஷ்பாஞ்சலியில் தொடங்கி, மதுரையை ஆண்ட மீனாட்சியின் வாழ்க்கையை சொல்லி உலக பெண்களின் மகத்துவத்தையும், வைரமுத்துவின் அவசர தாலாட்டு என்ற பாடலில் இன்றைய நாளில் பணிக்கு செல்லும் தாய்மார்களின் மேன்மையையும் தன் நாட்டியத்தின் மூலம் கூற இருக்கிறார். முடிவில் காஞ்சி பெரியவர் எழுதிய. மைத்ரிம் பஜத என்ற பாடலுடன் உலக சமாதானத்தை வேண்டி நிறைவு செய்கிறார். இது எம்.எஸ்.சுப்புலெட்சுமியால் ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாக பாடப்பட்ட பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் எம்.எஸ் சுப்புலெட்சுமி, பண்டிட் ரவிசங்கர், அம்ஜத் கான், ஷாகிர் உசேன், ஏ.ஆர்.ரகுமான், டாக்டர் எல் சுப்பிரமணியன், சுதா ரகுநாதன் போன்றோர் மட்டுமே கலந்து கொண்ட இவ்விழாவில் முதல் நடனம் ஆடும் பெண் என்ற பெருமையுடன் பங்கு பெறுகிறார். இவ்விழாவிற்கு பின் அமெரிக்க தமிழ்சங்கம் சார்பில் ஞாயிறு அன்று விழா எடுத்து அமெரிக்க தமிழ்ச்சங்கம் சார்பாக விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது.

1 Comment

  1. அஜீத் says:

    ALL THE BEST

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
இளைஞர்கள் அரசியலுக்கு வரணும் – சதுரங்க வேட்டை நட்ராஜ் ஆசை
இளைஞர்கள் அரசியலுக்கு வரணும் – சதுரங்க வேட்டை நட்ராஜ் ஆசை

https://www.youtube.com/watch?v=8OOUS4NmrBQ

Close