சொந்த செலவில் போஸ்டர்! கடும் கோபத்தில் அரவிந்த்சாமி!

தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தகரம் அதற்கு ஈடாகாது அல்லவா? பேஸ் ஆப் படத்தின் அப்பட்டமான காப்பி என்று சொல்லப்படுகிற ‘போகன்’ படத்தில், தங்கமான அரவிந்த்சாமியும் நடித்திருக்கிறார். படப்பிடிப்பில் ஜால்ராக்கள் தரும் மரியாதை விஷயத்தில் அரவிந்த்சாமிக்கும் ஜெயம்ரவிக்கும் அவ்வப்போது கசமுசா என்கிறார்கள். என்ன இருந்தாலும் ஜெயம் ரவி ஹீரோ. அரவிந்த்சாமி அப்படியில்லை அல்லவா? மரியாதையின் பங்கு ஒரு ஸ்பூன் குறைவுதானாம் இவருக்கு.

டைரக்டரின் இந்தப்போக்கு பப்ளிசிடி நேரங்களில் எதிரொலிக்க ஆரம்பித்தது. இதனால் கடும் எரிச்சலாகிவிட்டார் அரவிந்த்சாமி. “நீங்க என்னய்யா எனக்கு போஸ்டர்ல இடம் தர்றது? நானே அடிச்சுக்குறேன்” என்று சூடாகிவிட்டார். போஸ்டரின் எட்டு திசையிலும் அவரே விரவி பரவியிருப்பதை போல எக்கச்சக்க ஸ்டில்களை போட்டு போஸ்டர் அடித்து, தமிழகம் முழுக்க ஒட்டிவிட்டார். இந்த உண்மை புரியாத பொதுஜனம், “என்னய்யா படத்துல ஜெயம் ரவி ஸ்டில்லையே காணோம்?” என்று மண்டையை சொறிந்து கொள்கிறது.

இதுவரை தமிழ்சினிமா வரலாற்றில் இல்லாத அளவுக்கு புத்திசாலித் தனமாக(?) பட ரிலீசுக்கு முதல் நாள் மாலை ஏற்பாடு செய்யப்பட்ட பிரஸ்மீட்டையும் புறக்கணித்துவிட்டார்.

படத்தின் இயக்குனர் லக்சுமண் மீது அரவிந்த்சாமி கோபமாக இருக்கும் விஷயம் இன்டஸ்ட்ரியில் பரவினாலும், “வேறொரு பிரஷ்… வேறொரு சுவர்…” என்று புதுசாக பெயின்ட் அடிக்கக் கிளம்பிவிட்டார் லக்சுமணன். ஹ்ம்… பாலிடிக்ஸ் தொடரட்டும்…

No Comments

Leave a Reply

Facebook

Follow Us on Twitter