அஜீத்திற்காக வைத்திருந்த கதைதான் இருமுகன்? எரிச்சலில் ஏ.ஆர்.முருகதாஸ்!

வல்லாரை செல்கள் எக்கச்சக்கம் மண்டைக்குள் ஸ்டோர் ஆகியிருக்கிற ஞாபக சக்தி மன்னர்களுக்கு, மீண்டும் நினைவுபடுத்தத் தேவையில்லை. ஆனால் சற்றே மறதிக்காரர்களுக்கு மறுபடியும் ஒரு ‘டொக் டொக்!’ பல வருஷங்களுக்கு முன் ஏ.ஆர்.முருகதாசும், அஜீத்தும் இணைந்து ஒரு படம் தரப் போகிறார்கள் என்றொரு செய்தி வந்ததல்லவா? அந்த படத்திற்கு தலைப்பு கூட ‘ரெட்டத்தல’ என்று வைத்திருந்தார் முருகதாஸ்.

அஜீத்திற்கு ‘தல’ பட்டம் கொடுத்தவரே முருகதாஸ் என்பதாலும், மீண்டும் அவர் ‘ரெட்டத்தல’ என்ற டைட்டிலில் ஒரு படம் எடுக்கப் போகிறார் என்று தகவல் வந்ததாலும் பெரும் உற்சாகத்தில் இருந்தார்கள் அஜீத் ரசிகர்கள். ஆனால் பாதியிலேயே அந்த முயற்சி கைவிடப்பட்டது. சிலபல காரணங்களால் அஜீத் “இப்போது வேண்டாம்” என்று படத்தை தள்ளி வைக்க, வெவ்வேறு வேலைகளில் பிசியாகிவிட்டார் முருதாஸ்.

அந்த நேரத்தில் முருகதாசின் அசோசியேட் இயக்குனராக இருந்தவர்தான் இருமுகன் படத்தின் இயக்குனர் ஆனந்த் சங்கர். பல வருஷங்களுக்கு பின் தன் குருநாதர் கதையை அப்படியே சுட்டு அவர் விக்ரமிடம் சொல்லிவிட்டார். கதை மட்டுமல்ல, கதைக்குள் வரும் அந்த ஸ்பீட் என்கிற விஷயம் கூட, ‘ரெட்டத்தல’ கதையிலும் இருந்ததாம். சமீபத்தில் ‘இருமுகன்’ பார்த்த ஏ.ஆர்.முருகதாஸ் பலத்த அப்செட் என்கிறார்கள்.

தூறல் விழும்போதே துணியை எடுக்கிறவன்தான் புத்திசாலி!

To listen audio click below:-

 

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
surya-cricket-dhoni
நான் உங்கப்பாவின் ரசிகன்! சூர்யாவின் குழந்தைகளை குஷியாக்கிய தோனி!

எம்.எஸ்.தோனி அண்டோல்டு ஸ்டோரி திரைப்படத்தின் பிரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி. புயல் ஒன்று சத்யம் தியேட்டர் வளாகத்தில் லேண்ட் ஆனது போல ஒரே...

Close