அதுக்கு அஜீத் சார் என்ன பண்ணுவார்? அப்புக்குட்டி சமாளிப்பு!

நடிகர்களில் சாமானியர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஒரு கரிசனப் பார்வையை வீசுவது அஜீத்தின் இயல்பு. அப்படிதான் வீரம் படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அப்புக்குட்டி மீதும் விழுந்தது. அவரது ஒரிஜனல் பெயரான சிவபாலன் என்ற பெயரையே அவருக்கு மீண்டும் வைத்து, நாட்டுக்கும் அறிவித்தார் அஜீத். இன்றளவும் டைட்டில்களில் அப்புக்குட்டி என்கிற சிவபாலன் என்றே போடச் சொல்லி வருகிறார் அப்புக்குட்டி.

அதற்கப்புறம் இவரை ஒரு போட்டோ செஷன் பண்ணி, அதை அவருக்கு அன்பு பரிசாகவும் அளித்தார் அஜீத். (மேற்படி ஸ்டில்கள் இணையங்களில் இப்போதும் பிரசித்தம்) இந்த நிலையில் அப்புக்குட்டிக்கு அஜீத்தின் தொடர் ஆதரவு இருக்கிறதா? அவரது எல்லா படங்களிலும் அப்புக்குட்டி இருக்கிறாரா என்று விசாரிக்க நினைத்தோம். நல்லவேளையாக அவரே நம் கண்களில் சிக்கினார்.

“அஜீத் உங்க மேல நிறைய பிரியம் வச்சுருக்காரே. இப்போ விவேகம் படத்தில் உங்களுக்கு ரோல் கொடுத்திருக்காங்களா?” என்று கேட்டோம்.

அஜீத் சார் என்மேல எப்பவும் பிரியமா இருப்பார். அதுக்கு நான் ரொம்ப கொடுத்து வச்சுருக்கணும். ஆனால் இந்தப்படத்தில் நான் நடிக்கல. காரணம், எனக்கு கொடுக்கிற மாதிரி படத்தில் ஒரு ரோலும் இல்ல. வெளிநாட்டில் படமாகும் கேங் வார் சம்பந்தப்பட்ட படம் அது. அதில நான் எப்படி சூட் ஆவேன்? நிறைய பேர் உங்களை மாதிரிதான் எங்கிட்ட கேட்கிறாங்க. எனக்கு படத்தில் ரோல் இல்லாமல் போவதற்கு அஜீத் சார் என்ன பண்ணுவார்?

நான் எப்பவும் அவரோட அன்பு தம்பி. அது போதும் எனக்கு என்றார்.

அது மட்டும் போதுமா அப்புக்குட்டி?

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
lawance
மன்னன் ரீமேக்! மறுபடியும் லாரன்ஸ்! ஆனால் அதில் ஒரு சிக்கல்?

Close