மூலிகை சுருட்டு இருந்தா நமீதாவுக்கு கொடுத்து உதவுங்க ஐயாங்களா?

பட்டுன்னு பட்டுன்னு முடிவெடுக்கக் கூடாது என்ற கொள்கையை வகுத்துக் கொண்டு பல படங்களை தள்ளிப் போட்டு வந்த நமீதாவை, பொட்டு பொட்டென்று முடிவெடுக்க வைத்திருக்கிறார் டைரக்டர் வடிவுடையான். ஒரு காலத்தில் சதைக்கு ஸ்கோப் உள்ள ஐட்டமாக தேடிப்போன நமீதாவை, முதன் முறையாக கதைக்குள் இழுத்து வைத்துக் கொண்ட வடிவுடையானை பாராட்டுவதா? காத்திருந்த நமீதாவை பாராட்டுவதா? (படம் தியேட்டருக்கு வரட்டும்… பார்த்துட்டு கூட பாராட்டிக்கலாம்) பொட்டு என்ற பெயரில், முடிகயிறு தாயத்து வியாபாரிகளுக்கு கொள்ளை லாபத்தை ஈட்டிக் கொடுக்கப் போகிற படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது இது. யெஸ்… இதன் மெயின், சைட், இன் அண்டு அவுட் எல்லாமே ஆவி, பேய், இன்னபிற அச்சுறுத்தல் சமாச்சாரங்கள்தான்.

ஒரு காலத்தில் அடங்காத சம்பளத்தை கேட்டு, பலரையும் அலற விட்ட பரத் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். எறும்பு தேய்ஞ்சு ஈறு பேன் ஆவதை எத்தனை காலமா பார்த்துட்டு இருக்கோம்! தப்பிக்க முடியுமா பரத்? நல்லவேளையாக தமிழ்சினிமாவின் ட்ரென்ட் புரிந்து இதில் நடிக்க ஒப்புக் கொண்ட பரத்தையும் பாராட்டிதான் ஆக வேண்டும்.

இதே வடிவுடையான் இயக்கி விரைவில் திரைக்கு வர தயாராக இருக்கும் சவுக்கார் பேட்டை படம் போலவே இருக்கிறது இப்படத்தின் ஸ்டில்கள். கேட்டால், இந்த படம் சவுக்கார் பேட்டையின் செகன்ட் பார்ட்தான் என்கிறார்கள் யூனிட்டில். நமீதா இந்த படத்தில் நடிப்பதற்காக ஒரு கெட்டப் போட்டு மேக்கப் டெஸ்ட் எடுத்திருக்கிறார்கள். சும்மா சொல்லக் கூடாது. மிரட்டியிருக்கிறார்… படம் முழுக்க சுருட்டு பிடித்தபடியே வருவாராம். உடம்பு விஷயத்தில் அசால்ட்டா இருக்கக்கூடாது என்பதுதான் என்னோட ஆசை. ஆனால் இப்படி சுருட்டு குடிச்சாதான் மிரட்ட முடியும்னா, என்ன பண்ணுறது? உடல் ஆரோக்கியத்தை ஒதுக்கி வச்சுட்டு நடிப்புக்காக குடிச்சுதானே ஆகணும் என்கிறார் கவலையாக.

இதற்காக புகை மட்டும் வெளிப்படுகிற மூலிகை சுருட்டு கிடைக்குமா என்று தேடச் சொல்லியிருக்கிறார் நமீதா. இருந்தா, ஒரு கட்டு சுருட்டோட, சென்னைக்கு ஒரு எட்டு வந்துட்டு போங்க ஐயா மாருங்களே….

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Top Ajith-Layola
கருத்துக்கணிப்பில் அஜீத் டாப்! விஜய் ரசிகர்களுக்கு கசப்பு? கலகலக்க விட்ட ராஜநாயகம்?

பொதுவாகவே லயோலா கல்லூரி கருத்துக்கணிப்புகள் துல்லியமாக இருக்கும் என்பது கடந்த கால கால்குலேஷன். அரசியல் ஏரியாவில் மட்டுமே இப்படி கருத்துக்கணிப்புகள் நடத்தி புளியை கரைத்து வந்த அக்கல்லூரியின்...

Close