‘ ஒத்த சடை ரோசா ‘ இன்னொரு கருப்பு நிறத்தழகியா?

மருது என் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் மண்மனம் மாறாத மீண்டும் கிராமிய திரைப்படமாக இருக்கும். ஒரு பாட்டிக்கும் பேரனுக்குமான கதைதான் மருது. தாய் தகப்பனை இழந்தவர்களுக்கு முதலில் கைகொடுப்பது பாட்டியாக தான் இருக்கும். அது மகன் வழி வந்த பேரன் பேத்தி ஆக இருந்தாலும் சரி , மகள் வழி வந்த பேரன் பேத்தி ஆக இருந்தாலும் சரி. நம்முடைய பெற்றோர்களை தாண்டி நம் பாட்டி நமக்கு வாங்கி கொடுக்கும் பொருட்கள் நிச்சயம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். பாட்டி பேரன் என்ற தவிர்க்க முடியாத உறவை பற்றி பேசும் படம் தான் மருது.

உலகத்தில் உழைக்கும் வர்கத்தை சேர்ந்த அனைவருக்கும் உடல்வாகு தெறிப்பாக தான் இருக்கும். எல்லா ஊரிலும் முட்டைகளை சுமக்கும் லோட் மேண் என்பவர்கள் இருப்பார்கள். அவர்களுடைய வாழ்க்கைக்காக மிகவும் கடினமாக உழைப்பார்கள். அவர்களை பார்க்க நார்நாராக நல்ல வளத்தியாக , வயிர் என்ற ஒன்றே வெளியே தெரியாத அளவிருக்கு இருப்பார்கள். அவர்களுடைய வேலை காலை 10 மணிக்கு ஆரம்பித்தது என்றால் இரவு 10 மணி வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இப்படி இருக்கும் லோட் மேன் கதாபாத்திரத்துக்கு விஷால் மிகச்சரியாக பொருந்தி இருந்தார். அவருடைய உடல் அமைப்பும் , நிறமும் இந்த கதாபாத்திரத்துக்கு நன்றாக பொருந்தியது. ஆம் படத்தில் மருது என்னும் கதாபாத்திரம் மூட்டைகளை சுமக்கும் லோட் மேன் கதாபாத்திரமாகும். இந்த கதாபத்திரத்துக்கு எடுத்துகாட்டாக என்னுடைய பெரியப்பாவை எடுத்து கொண்டேன். அவர் கையில் சிங்கத்தையும் , நெஞ்சில் புலியையும் பச்சை குத்தி இருப்பார். நான் சிறுவயதில் இருந்த அதை பார்த்து ரசித்து இருக்கிறேன். நாம் ஒரு நாள் திரைப்படம் இயக்கம் போது இதே போல் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க வேண்டும் என்று எண்ணியதுண்டு. அப்படி என்னுடைய பெரியப்பாவை போன்ற ஒரு கதாபாத்திரமாக தான் மருது என்னும் கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறேன். நிஜத்தில் என்னுடைய பெரியப்பா வேலைக்கு செல்லும் போது மேலாடை ஏதும் அணிந்திருக்கமாட்டார். ஆனால் படத்துக்காக விஷால் முண்டா பனியன் அணிந்திருப்பது போல் கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறேன். விஷாலின் உடல் அமைப்புக்கும் , முகஅமைப்புக்கும் ஏற்ற கதாபாத்திரம் இந்த மருது. சிங்கத்தை நாம் பார்த்தாலே மிரட்டலாக இருக்கும் , சிங்கத்துக்கு அப்படி ஒரு ஆஜானுபாகுவான தோற்ற்றம் உண்டு . புலி தன்மானம் உள்ள ஒரு மிருகம் அதனால் உழைக்கும் வர்கத்தை சேர்ந்த ஒருவன் அவ்விரு மிருகங்களின் உருவத்தையும் பச்சை குத்தி இருப்பான்.

படத்தின் கதாநாயகி ஸ்ரீ திவ்யா , என்னுடைய முதல் இரு படங்களில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்தார். இக்கதைக்கு ஸ்ரீ திவ்யா அழகாக பொருந்தி வந்ததால் அவரை இக் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்தோம். அதுமட்டுமல்லாமல் நாங்கள் படபிடிப்பு ஆரம்பிக்கவிருந்த நேரத்தில் தான் அவருக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் , காக்கிசட்டை போன்ற படங்கள் வெளிவந்து வெற்றி பெற்று இருந்தது. அவரை பார்க்கும் போது நமக்கு நம்ம ஊர் பெண் என்ற விஷயம் தோன்றும். இவை தான் ஸ்ரீ திவ்யா படத்தின் நாயகி ஆக்கியது. அவருக்கும் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரம் தான். என்னுடைய படத்தில் எந்த ஒரு கதாபாத்திரமும் முக்கியமானதாக தான் இருக்கும். படத்தில் விஷால் , ஸ்ரீ திவ்யா , ராதா ரவி , ஆர்.கே.சுரேஷ் என படத்தில் அனைவருக்கும் முக்கியமான கதாபாத்திரம் தான்.

என்னுடைய முந்தைய படங்களை போல் அல்லாமல் இப்படத்தில் காதலுக்கு முக்கியதுவம் கொடுத்து காட்சிகளை உருவாக்கி இருக்கிறேன். இக்காட்சிகள் நிச்சயம் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும். படத்தில் கதையை மீறி எந்த ஒரு விஷயம் இருக்காது. படத்தில் செண்டிமெண்ட் காட்சிகள் முக்கிய இடம் பிடிக்கும். ஒரு கதையில் எமோஷன் என்னும் ஒரு விஷயம் இருக்கும் போது கண்டிப்பாக அதிரடி சண்டை காட்சிகள் இருக்கும். நான் என்னுடைய நாயகனை லோட் மேன் ஆக மாற்றி சாராசரி மனிதன் எப்படி இருப்பானோ , கோபப்படுவானோ அதே போல் எதார்த்தமாக காட்டிவிட்டு சண்டை காட்சி இல்லாமல் காட்டினால் எப்படி இருக்கும் ?? நிச்சயம் படத்தில் அதிரடி சண்டை காட்சிகள் உண்டு. அதே போல் விஷால் போன்ற மாஸான ஒரு நாயகனை வைத்து கொண்டு சண்டை காட்சிகள் இல்லை என்றால் எப்படி இருக்கும் ??

நான் சுப்பர் படம் எடுக்கிறேனா ?? என்று கேட்டால் எனக்கு பதில் சொல்ல தெரியாத , ஆனால் நான் தப்பானா படம் இயக்கவில்லை என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும். இந்த மருதுவும் அதை போன்ற ஒரு படம் தான். படத்தில் அருமையான , காரணத்துடன் கூடிய சண்டை காட்சிகள் நிறைய இருக்கிறது. மருது டீசரில் விஷால் வாயில் அருவாளை கடித்து கொண்டு வருவது போன்றதொரு காட்சி உண்டு. நிச்சயம் அது எல்லோருக்கும் பிடிக்கும் ஒரு காட்சியாக இருக்கும். ஏனென்றால் நான் ஒரு காட்சியை எடுக்கும் போது ஒரு கடைகோடி ரசிகனாக இருந்து தான் அந்த காட்சியை இயக்குவேன். அதனால் எனக்கும் பிடிக்கும் ஒரு காட்சி ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

இசையமைப்பாளர் இமானுடன் எனக்கு முதல் படத்தில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்ற ஆசை உண்டு.என்னுடைய முதல் இரண்டு படத்தில் எப்படியாவது அவரை இசையமைக்க வைத்துவிட வேண்டும் என்ற ஆசை உண்டு ஆனால் இந்த படத்தின் மூலம் அது நிறைவேறி உள்ளது எனக்கு மகிழ்ச்சி. அதே படத்தில் பாடல்களும் சிறப்பாக வந்துள்ளது , வெற்றியும் பெற்றுள்ளது. படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள். நான்கு பாடல்களும் மிகவும் வித்தியாசமாகவும் , வெவ்வேறு வகையான பாடல்களாகவும் இருக்கும். நான் இசையமைப்பாளர் இமானுடன் பணியாற்ற விரும்பியதே வெவ்வேறு வகையான வெரைட்டி பாடல்கள் கிடைக்கும் என்று தான். நான் நினைத்தது போலவே பாடல்கள் வந்துள்ளது. படத்தில் “ ஒத்த சடை ரோசா “ என்ற ஒரு பாடல் உண்டு அது கருப்பு நிறத்தழகி பாடல் போல் மிகப்பெரிய வெற்றி பெறும். இப்பாடல் காட்சியாக படத்தில் பார்க்கும் போது இன்னும் சிறப்பாக இருக்கும். கருவக்காட்டு கருவாயா பாடல் கதையோடு சேர்ந்து வரும் பாடலாக இருக்கும். “ அக்கா பெத்த ஜக்கா வண்டி “ என்னும் பாடல் கமர்ஷியல் விஷயங்கள் நிறைந்த அருமையான ஒரு பாடலாக இருக்கும். சூறாவளி டா என்னும் ஒரு பாடல் உண்டு , அது மருது என்னும் கதாபாத்திரம் எப்படிபட்டவன் என்பதை விவரிக்கும் ஒரு பாடலாக இருக்கும்.

படத்தின் 2 முதல் 3 ஆவது ரீலில் இருந்து ப்ரீ கிளைமாக்ஸ் வரை கதையை நகர்த்தி செல்லும் கதாபாத்திரம் நடிகர் சூரியின்னுடையது. அவர் இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரமாக மட்டுமல்லாமல் மிகச்சிறந்த கதாபாத்திரமாக இருக்கும். எனக்கு அவருடைய கால்சீட் என்னுடைய முதல் இரண்டு படங்களுக்கு கிடைக்கவில்லை ஆதலால் அவரை என்னுடைய மூன்றாவது படத்தில் மிகச்சரியாக உபயோகபடுத்தி உள்ளேன்.

படத்தின் கதைக்களம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் , எப்போதும் அப்பகுதி மிகவும் செழிப்பாக அழகாக இருக்கும். நான் கொம்பன் படம் முடித்தவுடன் தயாரிப்பாளர் அன்பு அண்ணன் என்னை அழைத்து எனக்கு ஒரு படம் இயக்க வேண்டும் என்று கூறினார். எனக்கு அவர் என்னை அழைத்ததும் மிகவும் மகிழ்ச்சி. நான் அவரிடம் விஷால் இந்த கதையில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியதும் எனக்கு உடனேயே அவருடைய கால்ஷீட்டை வாங்கி தந்தார். எனக்கும் விஷாலை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஆசை உண்டு. நான் மூன்று முறை முயற்சித்தும் அது நடக்கவில்லை இந்த முறை அது நிறைவேறி உள்ளது எனக்கு மகிழ்ச்சி , அனுபவங்கள் கூட கூட நாம் செய்து முடிக்கும் வேலையின் நாட்கள் குறைய வேண்டும். இப்படத்தின் படப்பிடிப்பை நான் திட்டமிட்டதை விட மிக விரைவாக முடித்தது எனக்கு பெரும் மகிழ்ச்சி என்றார் இயக்குநர் முத்தையா.

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
KO 2 – Official Trailer
KO 2 – Official Trailer

https://www.youtube.com/watch?v=ORl_zzuGAg0

Close