தனுஷ் சிம்பு பாடகி சுசித்ரா! நள்ளிரவில் நடந்த அத்துமீறல்? கண்டுகொள்ளுமா காவல்துறை?

எமக்குத் தொழில் நடிப்பு என்று மார் தட்ட வேண்டிய பல ஹீரோக்கள், அதையும் தாண்டி வெட்டி விவகாரங்களில் ஈடுபடுவதுதான் கோடம்பாக்கத்தின் கொசுத் தொல்லைகளில் ஒன்று. அதுவும் பலருக்கு சாயங்காலம் கை நடுக்கம் ஏற்பட்டு ஏதாவது ஒரு நட்சத்திர ஓட்டலில் ஒதுங்குவதும், நள்ளிரவில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு காலையில் எழுந்து ஸாரி கேட்டுக் கொள்வதும் அன்றாட அலுங்கல் குலுங்கல் சமாச்சாரம்.

கடந்த சில மாதங்களாகதான் இந்த பிரச்சனை சற்று ஓய்ந்திருந்தது. அவரவர் வீட்டிலேயே பார் வசதியுடன் கூடிய தள்ளாட்டங்கள் நடந்துவிடுவதால், பொது இடங்களில் அழுக்குகளுக்கு வழியில்லாமல் நடந்து வந்த கச்சேரிகள் மீண்டும் அரங்கேறியிருப்பதுதான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

 

 

 

தன் ட்விட்டர் பக்கத்தில் பிரபல பாடகி சுசித்ரா சில செய்திகளை வெளியிட்டிருக்கிறார். அதை காண்கிற அனைவரும் என்னதான்யா நடந்திருக்கும் என்று மண்டையை பிய்த்துக் கொண்டு அலைகிறார்கள். தன்னை தனுஷ் தரப்பினர் கடுமையாக தாக்கிவிட்டதாக கூறியிருக்கிறார் சுசித்ரா. அதுமட்டுமல்ல… தாக்கப்பட்டதால் ரத்தக்கட்டு ஏற்பட்டிருக்கும் தன் கையையும் போட்டோ எடுத்து போட்டிருக்கிறார். ‘அந்த நேரத்தில் நீயும்தானே இருந்தே சிம்பு?’ என்று அவர் கேட்டிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ், சுசித்ரா, சிம்பு இவர்கள் எதற்காக ஓரிடத்தில் கூடினார்கள்? அங்கு ரத்தக்கட்டு ஏற்படுகிற அளவுக்கு ஏன் தள்ளு முள்ளு நடந்தது? இதெல்லாம் காவல்துறையே தானாக முன் வந்து விசாரிக்க வேண்டிய விஷயங்கள்.

மேலும் சில பாவனா சம்பவங்களை தவிர்க்க வெண்டிய முக்கியமான கட்டத்தில் இருக்கிறது கோடம்பாக்கம்.

1 Comment

  1. Vimal says:

    hmm..when I look at the badly bruised hand, and reference to Danush is made by the victim, why kavalthurai is silent? A woman may be forced or tortured here? better look in to this, so many innocents can be saved in future.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
kamal new plan
ஓ.பி.எஸ் கமல் ஒரே மேடையில்! பரபரப்புக்கு தயாராகிறது தமிழ்நாடு?

Close