நினைத்ததை சாதித்தார் அஞ்சலி சென்னையில் நாளை ஷுட்டிங்! வரலாறு காணாத பாதுகாப்பு (ஹி…ஹி…)

அஞ்சலியை தமிழ்நாட்டிலிருந்தே விரட்டியடித்துவிட்ட சந்தர்ப்ப சூழ்நிலைக்கு மீண்டும் அதே அஞ்சலி மீது லவ்! எப்படியாவது அவரை மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று நினைத்த பலருக்கும் டைரக்டர் மு.களஞ்சியத்தின் பேட்டிகளும், அவரை சட்டப்படி சந்திப்பேன், அஞ்சலி எந்த சினிமாவிலும் நடிக்க முடியாதளவுக்கு முடக்குவேன்’ என்றெல்லாம் களஞ்சியம் உரைத்த சூளுரைகளும் அச்சத்தை ஏற்படுத்த, ‘அஞ்சலி… உங்களை நடிக்க வைக்க ஆசையாதான் இருக்கு, ஆனா முடியலையே?’ என்று புலம்பும்படி ஆனது.

எத்தனை நாளைக்குதான் அஞ்சலியும் ஓடிக் கொண்டிருப்பார்? பிடிக்க வேண்டியவர்களை பிடித்து, அடக்க வேண்டியவர்களை அடக்கிவிட்டார். முதலில் இந்த விவகாரத்தில் வீராப்பாக இறங்கிய இயக்குனர் சங்கம், அதற்கப்புறம் யாரிடமிருந்து என்ன சமிக்ஞை வந்ததோ, சைலன்ட்டாக ஒதுங்கிக் கொண்டது. இந்த நேரத்தில்தான் சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் அஞ்சலி. இதன் படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்குகிறது.

அவர் படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் தடுப்பேன் என்று ஆவேச குரல் எழுப்பிய சண்டை இயக்குனர் ஜாகுவார் தங்கம், தான் பதவி வகிக்கும் கில்டு என்ற அமைப்பின் சார்பாக அறிக்கையெல்லாம் விட்டிருந்தார். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் அஞ்சலி சென்னை வருவதால், நாளை ஜாகுவார் பாய்ச்சல் இருக்குமா என்கிற சந்தேகம் வலுத்துள்ளது. அதுமட்டுமல்ல, அஞ்சலியை செருப்பால் அடிப்பேன் என்றெல்லாம் இவர் பொது மேடையில் பேசியவராச்சே! இவ்வளவு ஆவேசமாக பேசியிருப்பதால், அவரையும் ஒரு ககலக் கணக்கில்தான் வைத்திருக்கிறார்கள் இந்த நிமிடம் வரைக்கும். இவரை போல களஞ்சியமும் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து தகராறு செய்தால் என்னாவது என்பதால், தனியார் செக்யூரிட்டிகளை நாடியிருக்கிறார்களாம்.

ஐந்தடுக்கு பாதுகாப்போடு அஞ்சலி ஷுட்டிங்குக்கு வருவார். ஆனால் அவரை தொந்தரவு தராமல் நடிக்க விடுவார்களா என்பதற்கு இந்த செகன்ட் வரைக்கும் ஒரு உத்தரவாதமும் இல்லை.

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
ajith-vijay-in one film
அஜீத் விஜய் இணையும் படம்…. சாத்தியம் இருக்கிறதா? ஒரு வியாபார அலசல்!

எந்த புண்ணியவானின் வேலையோ, கடந்த சில நாட்களாகவே அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்றொரு செய்தி இணைய உலகத்தின் கழுத்தை இறுக்கி பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அண்டங்காக்காவுக்கு...

Close