ஆன்ட்ரியா மறுப்பு? கமல் கடுப்பு? என்ன நடக்குமோ அடுத்து?

நல்ல நேரத்திலெல்லாம் கமலுக்கு நம்பிக்கை இருக்காது. ஆனால் அவருக்கே நம்பிக்கையில்லாத அந்த நல்ல நேரம் இப்போதுதான் வொர்க் அவுட் ஆகிக் கொண்டிருக்கிறது அவருக்கு. கடந்த சில வருடங்களாகவே பஞ்சாயத்தை கூட்டி வரும் விஸ்வரூபம் பார்ட் 2 ல் திடீர் முன்னேற்றம். தனது பிடிவாதத்தை பெருமளவு தளர்த்திக் கொண்ட அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்தின், அப்படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கிவிட்டாராம். கமலுடன் இணைந்த வெளியீடா, அல்லது தனித்த வெளியீடா என்பது இன்னும் முடிவாகாவிட்டாலும், இருவருக்கும் இடையிலான பிணக்குக்கு புல் ஸ்டாப் வைக்கப்பட்டுவிட்டது.

அதற்கு உதாரணம்தான் இது. மோடியின் அறிவிப்பு பற்றிய கருத்தை பகிர்ந்து கொண்ட ஆஸ்கர் ரவிச்சந்திரன், “கமல் சாருக்கு இந்த அறிவிப்பால் ஒரு நஷ்டமும் வராது. ஏனென்றால் சின்ன சின்ன செலவுகளை கூட, காசோலையில்தான் காட்டுவார். எல்லாமே அவருக்கு வெள்ளையாக இருக்க வேண்டும். அதுதான் கமல் பாலிஸி” என்றெல்லாம் அவரை புகழ்ந்து தள்ளிவிட்டார்.

இப்போதைய நிலவரப்படி, அப்படியே விஸ்வரூபம் 2 ஐ வெளியிட்டுவிட முடியாது என்கிறார்கள். படத்தில் சில பல மாற்றங்களை செய்ய வேண்டுமாம். அதிலும் ஆன்ட்ரியா போர்ஷன்களை ரீஷுட் பண்ணியே ஆக வேண்டுமாம். ஆனால் ஆன்ட்ரியாவோ ஆளை விடுங்க என்கிறாராம். ஆன்ட்ரியாவின் பிடிவாதத்தை அடுத்து படத்திலிருந்தே அவர் தூக்கப்பட்டாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள்.

ஆன்ட்ரியாவுக்கு பதிலா அப்புக்குட்டிய நடிக்க வச்சாலும் ஆஹான்னுதான் சொல்லும் உலகம்!

 

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter