அஜீத் விஜய் ரசிகர்கள் கைகோர்ப்பு! எல்லா புகழும் தமிழிசைக்கே!

அஜீத் படங்களை விஜய் ரசிகர்களும், விஜய் படங்களை அஜீத் ரசிகர்களும் கழுவி கழுவி ஊற்றுவதுதான் கால காலமாக உலகம் சந்திக்கும் கலகம்! ஆனால் இரண்டு நாட்களாக நிலைமையே தலைகீழ் ஆகிவிட்டது. விஜய்க்கு ஒண்ணுன்னா நாங்க கேட்போம்யா… என்று களத்தில் குதித்திருக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள்.

உனக்கு படம்தான் பிரச்சனைன்னா பேசிக்கோ, திட்டிக்கோ. ஆனால் ஜோசப் விஜய்ங்கிற பேருதான் பிரச்சனைன்னா அதை நாங்க பார்த்துகிட்டு இருக்க முடியாது என்று அஜீத் ரசிகர்கள் ட்விட் செய்திருக்கிறார்கள்.

எங்களுக்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கு. ஆனால் விஜய்யை சீண்டுனா நாங்க வருவோம் என்றும் ட்விட்டியிருக்கிறார்கள். இந்த மாற்றம் உலக அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதே ஒற்றுமை தொடரட்டும்…. அப்பதான் தமிழ்நாட்டுல மூலைக்கு மூலை சென்சார் ஆபிஸ் முளைக்காது.

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Actor-Vijay
மதிக்காத விஜய்! பழி வாங்குகிறதா நடிகர் சங்கம்?

இதுதான் தமிழ்சினிமாவில் சாபக்கேடு. நாமதான் சூப்பர் ஸ்டார் என்று ஜெய், ஜீவா மாதிரி நடிகர்கள் கூட நினைத்துக் கொள்வார்கள். கண்ணை மூடுனா கலிபோர்னியாவில் டூயட் பாடுவது போல...

Close