அஜீத்தை கெடுத்தது அவரு! உதயநிதியை கெடுத்தது இவரு! ஓவரா போறீங்களே… கலகநாதன்ஸ்!

ஷாலினிக்கு கார் டிரைவராக இருந்தவர்தான் டைரக்டர் பேரரசு. அந்த பழக்கத்தில்தான் அஜீத்திற்கு கதை சொல்ல வைத்தார் ஷாலினி. திருப்பதி  என்ற படத்தை பேரரசு இயக்கிய கதைதான் ஊருக்கே தெரியுமே? அந்தப்படத்தில் இவரும் ஒரு ஆட்டோ டிரைவர் வேடத்தில் நடிக்கிறார் என்பதும், பேரரசுவுக்கே படத்தில் ஒரு பைட் சீன் இருக்கிறது என்பதும் அஜீத்திற்கு முதலில் தெரியவே தெரியாது. அவருக்கு தெரியாமலே மேற்படி சீன்களை எடுத்துவிட்டார் பேரரசு. படத்தின் முதல் காட்சியை பார்க்கும் போதுதான், அடடா… ஏமாந்துட்டமே என்று அவஸ்தைப்பட்டார் அஜீத். அதற்கப்புறம் பேரரசு அஜீத்தின் போட்டோவை உற்று நோக்கினால் கூட, எங்கேயோ இருக்கும் அஜீத்தின் முகத்தில் சிவப்பு வெளிச்சம் அடிக்கிற அளவுக்கு போனது நிலைமை.

கட்…

அதே போலொரு இம்சையை உதயநிதிக்கு கொடுக்க தயாராகிவிட்டார் டைரக்டர் கவுரவ். தூங்காநகரம், சிகரம் சிகரம் தொடு படங்களை தொடர்ந்து லைக்கா நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்குகிறார் இவர். இதில்தான் உதயநிதி ஹீரோ.

படத்தில் உதயநிதிக்கே தெரியாமல் ஒரு கேரக்டரில் நடித்து வருகிறாராம் இவர். அதுவும் போலீஸ் கேரக்டரில். இந்த விஷயம் லேசுபாசாக உதயநிதிக்கு தெரியவர…. என்ன சார் நடக்குது என்று கேட்டிருக்கிறார். மென்று முழுங்கிய கவுரவ், இல்ல சார். அது சும்மா ரெண்டு நிமிஷம் கூட படத்துல வராது என்று இப்போதைக்கு சமாளித்திருக்கிறாராம். ஆனால் படத்தில் இவருக்கும் ஒரு ஸோலோ பைட் இருப்பதாக கூறப்படுகிறது.

நம்பி கால்ஷீட் கொடுத்தா, நடு திண்ணையில வச்சு கழுத்தறுக்கிறீங்களே பிரதர்ஸ்…?

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
vijay-sethupathi-ashwarya-rajesh
ஆமா… அதுக்கென்ன இப்போ? விஜய்சேதுபதி கேள்விக்காக எகிறிய நடிகை!

Close