மேக்கப் மேன் நீக்கம்! அஜீத்தின் முடிவும் ஐயய்யோ பின்னணியும்!

அஜீத் எப்போது கடவுள் ஆனாரோ, அப்போதிலிருந்தே பூசாரிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. தனது முதுகுக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்பாத அஜீத்தின் தனிமை, அவரது ‘தெய்வம்‘ இமேஜுக்கு செம நெருக்கடி கொடுத்து வருகிறது. நல்லவேளை அதை இப்போதாவது உணர்ந்து கொண்டாரே? என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.

“அஜீத் சார் உங்ககிட்ட சொல்ல சொன்னார். அஜீத் சார் கேட்டார். அஜீத் சாருக்கு இது பிடிக்காது. அஜீத் சார் விரும்பல”. இப்படி சொல்லி சொல்லியே இன்டஸ்ட்ரியில் ரூல் பண்ணிக் கொண்டிருந்த அவரது பணியாளர்களில் சிலர் மீது கண் வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் அஜீத். ஏன்? நடந்த சம்பவம் அப்படி.

‘விவேகம்’ படத்தில் பணியாற்றிய அஜீத்தின் பர்சனல் மேக்கப்மேன், “அஜீத் சார் உங்ககிட்ட சொல்லச் சொன்னார்” என்று தினந்தோறும் வாங்கிய சம்பளம் 70 ஆயிரம். அஜீத் சாரே சொல்லிவிட்ட பின், பேரம் பேசினால் அது அவருடனான நல் உறவுக்கு இழுக்கை ஏற்படுத்திக் கொடுத்துவிடுமே என்று தினந்தோறும் 70 ஆயிரத்தை அழுது வந்திருக்கிறது சத்யஜோதி நிறுவனம். (விஜய்யின் மேக்கப் மேன் பேக்கேஜாக 30 ஆயிரம் வாங்குவதாக கூறுகிறது இன்டஸ்ட்ரி)

சற்று தாமதமாக அஜீத்தின் காதுக்கு விஷயம் வந்து சேர, மேக்கப்மேனை அழைத்தாராம். நன்கு தீர விசாரித்து, நடந்தது உண்மைதான் என்று அறிந்தபின் அந்த நிமிஷமே சீட்டு கிழித்து அனுப்பிவிட்டாராம். இத்தனைக்கும் மேற்படி நபருக்கு தனது சொந்த செலவில் ஒரு வீடும் வாங்கிக் கொடுத்திருக்கிறார் அஜீத். நல்லவேளை… வீட்டை பிடுங்கவில்லை என்கிறது மேலதிக தகவல்கள்.

எலி போன ஓட்டையை இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார் அஜீத். முதலை போன ஓட்டைகளும் இருக்கக்கூடும். எதற்கும் ஒரு கண் வைங்க ஏ.கே!

1 Comment

  1. SATISH says:

    தல படத்துக்கு 35 கோடி ஆட்டைய போடுவான். ஆனா மேக்ப்பு மேன் ஒரு பத்தாயிரம் கூட வாங்குனா தலைக்கு அடில எரியுதா? வெறும் பத்தாயீரம் புடுங்கறவன் வீடு பிரீயா கட்டி கொடுத்தான்னு புருடா விட்டு தருதலையை ஏண்டா கடவுள் ஆக்குறீங்க?

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Kush-9
குஷ்புவே நமஹ 9 -ஸ்டான்லி ராஜன், சதிகார கேள்விகள்! தப்பிக்கும் குஷ்பு!

Close