அஜீத்திற்கு 7 அடி உயர வெண்கல சிலை! வைக்க பர்மிஷன் தருமா அரசு?

மொட்டை வெயிலில் காக்காய்கள் கூட்டமாக சேர்ந்து ‘ஆய் போகிற’ டாய்லெட்டாக மாறிவிட்டன அநேக சிலைகள். நாட்டுக்கு உழைத்த நிஜமான தலைவர்களில் இருந்து, நாட்டை நாசமாக்கிய நாராச தலைவர்கள் வரைக்கும் இந்த ஆபத்திலிருந்து தப்பிக்கவே இல்லை. எதற்கெடுத்தாலும் சிலை. எங்கும் சிலை. என்கிற கலாச்சார கேடு, மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தான் எக்கச்சக்கம்.

இதில் “என் தலைவன் சிலைக்கு நடு ராத்திரியில செருப்பு மாலை போட்டுட்டானுங்க” என்று போக்குவரத்தையும் சீர்குலைத்து சட்டம் ஒழுங்கையும் சந்திக்கு இழுக்கும் சாதி வெறியர்கள் வேறு… இந்த களேபரங்கள் போதாது என்று புதிதாக ஒரு பிரச்சனைக்கு ஆர்டர் கொடுத்துவிட்டார்கள் அஜீத் ரசிகர்கள். தங்கள் பாசத் தலைவனுக்கு பரவசத்தோடு ஒரு வெண்கல சிலையை உருவாக்கியிருக்கிறார்கள். சுமார் 47 லட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள அந்த சிலை, நெல்லை மாவட்ட ரசிகர்களின் கைங்கர்யம்.

இதுவரைக்கும் கூட ஓ.கே. இது அவரவர் சொந்த விஷயம். மனம், மற்றும் ரசிப்புத் தன்மை பற்றிய விஷயம். ஆனால் இந்த சிலையை எங்காவது ஒரு முச்சந்தியில் வைத்தாக வேண்டுமே? அதற்கு மாநில அரசு பர்மிஷன் கொடுக்குமா என்பதுதான் இப்போதைக்கு எழுந்திருக்கும் பெரும் கேள்வி. ஏற்கனவே சினிமாக்காரர்கள் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். தனிக்கட்சி துவங்குவதாக பயம் காட்டுகிறார்கள். சினிமாவிலிருந்து இன்னொரு தலைவன் உருவானால், அது நம் பாக்கெட்டை பலமாக கிழிக்கும் என்றெல்லாம் அச்சப்படுகிற அரசியல்வாதிகள் ஐயோ குய்யோ என்று கதறி வருவதை கடந்த ஒரு மாதமாகவே நாடு நன்றாக கவனித்து வருகிறது.

இந்த அசாதாரணமான நேரத்தில், அஜீத்தின் சிலையை வைக்க அவ்வளவு சீக்கிரம் அனுமதி கிடைத்துவிடுமா என்ன?

1 Comment

  1. தமிழ் இனியன் says:

    முட்டாள் நடிகனுக்கு ஏற்ற முட்டாள் ரசிகன்கள்

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Rajinikanth-Kaala
ரஜினி அச்சம்? காலா ஷுட்டிங் ரத்து!

Close