அம்பானிக்குதான் நன்றி சொல்லணும் அஜீத்!

அவரு பெருசா? இவரு பெருசா? என்கிற ஒப்பீடு இருக்கிற வரைக்கும், உள் நாட்டு கலகம் இருந்தே தீரும். விஜய் படத்தை அஜீத் படத்துடன் ஒப்பிடுவது. அஜீத் படத்தை ரஜினி படத்துடன் ஒப்பிடுவது. (கமல் படத்தை….? சேச்சே வேணாம். அது வேற லெவல்) இப்படி பொதுவெளியில் ஒப்பிட வரும் புண்ணியவான்கள் அவரவர் ரசிகர்களால் அடித்து விரட்டப்படுகிற காட்சியும் அன்றாடம் நடப்பதுதான்.

இந்த நிலையில்தான் விவேகம் டீசர் வந்திருக்கிறது. சும்மாயிருக்குமா பஞ்சாயத்து வேஷ்டி? மடித்துக் கட்டிக் கொண்டு தராசை கையில் தூக்கிவிட்டார்கள். விவேகம் டீசர் வெளியிடப்பட்டு 24 மணி நேரத்தில் அதை எவ்வளவு பேர் பார்த்திருக்கிறார்கள் என்பதுதான் தராசில் வைக்கப்பட்ட மேட்டர். இந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் 61 லட்சம் பேர் பார்த்தார்களாம். அப்படின்னா கபாலி வந்திச்சே. அப்போ? கபாலி டீஸர் வந்த 24 மணி நேரத்திற்குள் 51 லட்சம் பேரும், விஜய்யின் பைரவா படத்திற்கு 28 பேரும் பார்த்ததாக ஒரு புள்ளி விபரத்தை வெளியிட்டிருக்கிறார் அஜீத்தின் அதிதீவிர ரசிகர் ஒருவர்.

நியாயமாக இந்த பார்வையாளர்கள் எண்ணிக்கை எதன் பொருட்டு அமைகிறது? யோசித்தால் பளிச்சென்று கண் முன் வருவது இணையதள சேவையும் அதன் வேகமும்தான். அம்பானியின் ஜியோ சிம் வந்த பின்புதான் இணைய பயன்பாட்டாளர்கள் ஒரு டீசரையோ, ட்ரெய்லரையோ முழுமையாக பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். கபாலி டீஸர் வந்தாபோதும் சரி. பைரவா டீஸர் வந்த போதும் சரி. இந்த ஜியோ சிம்மின் பயன்பாடு இந்தளவுக்கு இல்லை. அப்படியிருக்க… விவேகம்தான் டாப் என்று சொல்வதை பல்லை கடித்துக் கொண்டு எதிர்க்கிறது ரஜினி அண்டு விஜய் கோஷ்டி.

அப்படின்னா அஜீத் நன்றி சொல்ல வேண்டியது அம்பானிக்குதானே?

7 Comments

 1. Dpr says:

  Jio Sim வந்து 8 மாசம் ஆச்சு.. பைரவா வந்து 4 மாசம் தான் ஆகுது. பைரவா வரும் போது jio ஓசி.. இப்ப காசக்கிட்டானுங்க.. வேற மாதிரி முட்டு குடுக்க முயற்சி பன்னுங்க… 😂😂

  • சிவா says:

   கபாலி வேர லெவல். ஆனா பைரவா வரப்போ ஜியோ எல்லாம் புல்லா ஓசி தான்…இப்போ ஜியோ 101 & 305 கொடுத்து நெட் பேக் போட்டு இருக்காங்க.. ஒரு பதிவு போட்ரப்போ நல்ல தெரிஞ்சு தெளிவா போடுங்க.. ஏதோ எனோ தானுன்னு முட்டாள் தனமா போடாதீங்க.. யாருக்கும் முட்டு கொடுக்கமா சுயமா நியூஸ் போடுங்க…

 2. samsul says:

  Jio launched 2016 July.. Bhairava teaser , trailer are released after that.. and kindly change your MuttalThanam

 3. ரவி says:

  நீங்க போய் Jio எப்போ வந்துச்சினு தெரிஞ்சிட்டு வாங்க. அப்போயாவது ஃபிரி நெட். இப்போ காசு

 4. Kumaran says:

  You have habbit of adding Vj when u say big abt Rajini..first you get the points right..Jio came after Kabali..but available for free during Bhairava time. Vj-ku nalla muttu kodukkareenga, but news became super comedy than vj movies :-)

 5. ரவி says:

  கபாலியை மிஞ்ச எவண்டா

 6. சிவா says:

  ரஜினியை பார்த்து நடிக்க வந்து சூடு போட்டு கொண்ட பூனைகள்.
  அவனுகளாவது ரஜினியை வெல்வதாவது. போங்கடா டே.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
vijay actor
யாரோ ஒரு ரசிகர் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வாராம்?

Close