உண்ணாவிரதப்பந்தல் அஜீத்திற்கு ஷாக் கொடுத்த நடிகர்கள்!

காவேரி பிரச்சனை, சென்னையில் வெள்ளம், பாலசந்தர், பாலுமகேந்திரா மறைவு, நடிகர் சங்க எலக்ஷன், இன்னும் எத்தனையோ அத்யாவசியமான பிரச்சனைகளின் போது கூட, “நான் பேஸ் மாட்டேன்… பேஸ்வே மாட்டேன்” என்று மூச்சை பிடித்துக் கொண்டு இருந்தவர் அஜீத். இந்த முறையும் அப்படியே இருந்துவிடலாம் என்று அவர் நினைத்திருந்த நேரத்தில்தான், “அட அண்ணாத்தே… இந்த நேரத்துல கூட நீங்க வாயை திறக்க மாட்டீங்களா?” என்று நமது நியூதமிழ்சினிமா.காம் கேள்வி எழுப்பியது.

“கலெக்ஷைனை மட்டும் பார்த்துட்டு கமுக்கமா இருந்துடலாம்னு நினைச்சா, இப்படி தேடிப்புடிச்சி தேனீயை அவுத்து வுடுறானுங்களே” என்று நினைத்திருக்கலாம். முதலில் ஒரு அறிக்கை மட்டும் வெளியிடலாம் என்று நினைத்தாராம் அஜீத். அந்த நேரத்தில்தான் நடிகர் சங்கம் ஒரு உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தது. ரஜினி கமல் அஜீத் விஜய் கலந்து கொள்வார்கள் என்றும் நிருபர்களிடம் கூறியிருந்தார் பொன்வண்ணன். அப்படியே இந்த தகவலை அஜீத்திடம் பாஸ் பண்ணினார்களாம். “மீடியாக்கள் வருவாங்க. எதையாவது டென்ஷன் ஏத்துற மாதிரி கேள்விகள் கேட்பாங்க. பதில் சொல்லணுமே?” என்று தயங்கியவரிடம், “உங்களுக்கு அந்த பிரச்சனையே வராது. நாங்க மீடியாவை உள்ள விடப்போவதில்லை” என்று கூறிதான் அவரை வரவழைத்ததாம் சங்கம்.

ஆனால் அஜீத் பயந்ததெல்லாம் அநாவசியமானது உள்ளே. கேமிராக்களுக்கு மட்டும் தடைவிதித்த சங்கம், நிருபர்களை அனுமதித்தது. அவர்களும் அஜீத்தை தேடிப்போய் முக்கியத்துவம் தரவில்லை. அதெல்லாம் விட பெரிய அதிசயம் இதுதான். அஜீத், ரஜினி இருவரை பார்த்தாலும் ஓடி ஓடி செல்ஃபி எடுத்துக் கொள்வது சக நடிகர் நடிகைகளின் வழக்கம். நேற்று ஒருவர் கூட அஜீத் அருகில் சென்று செல்ஃபிக்கு கெஞ்சவில்லை.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் ஒரே நேரத்தில் பேய் பிசாசு விலகுச்சு என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்!

4 Comments

 1. Subbu says:

  Well said. Finally Ajit came because people are noting him that he has no concern on Tamils and their issues. Unfornutely he attended to avoid questions from people where is Ajit when entire Tamil Nadu burning. Shame on him. He could donated at least one Crore for water and food like Lawrence did. GOD is watching. GOD brought him to this celebrity status, GOD knows when to bring him down as well. If he continuously ignore the issues of people who buy tickets for his moves that made him rich…he will face disaster of flops soon.

 2. Rajesh says:

  Andhanan….guess you dint get the monthly payment from Ajith..and never used to get the payment from Rajini..looking very evident from your posts. Grow up man.

 3. Jallikattu says:

  ‘தல’ யோட அம்மா கோல்கட்டா ‘சிந்தி’ அப்பா
  ‘பாலக்காடு’, மனைவி ‘மலையாளி’, உடன் பிறப்புகள் அனைவரும், அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள், பிறந்தது ‘ஹைதராபாத்’, தமிழ் எழுத தெரியாது, பேச கற்றுக்கொண்டது மாடலிங் வந்த பிறகு.

  அந்த ‘தல’ க்கி தளபதி எவ்வளவோ பரவாயில்லை. ‘Demonstisation’ க்கு எதிரா குரல் கொடுத்தார், இப்ப மெரினா வந்தார். ‘தல’ க்கி பணம் மற்றும் கலெக்கஷன்ஸ் மற்றுமே குறிக்கோள்.

 4. சிபி சக்கரவர்த்தி says:

  உன்னைய முதலில் தமிழ்நாட்டை விட்டு துரத்தணும்டா . தமிழக இலைகர்களை ஏமாற்றி பணம் பறித்த வரையில் போதும். இனி உன் ஆட்டம் எடுபடாது. உன் போலி வேஷம் கலைக்கப்படும். உன் முகத்திரை கிழிக்கப்படும். தமிழக மக்களே சிந்தியுங்கள்.
  வாழ்க தமிழகம் வாழ்க தமிழக மக்கள்
  ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Director Cheran Pressure To Vishal.
Director Cheran Pressure To Vishal.

https://youtu.be/4kCqQQBA6aE

Close