ரூம் ரெண்ட் இரண்டரை லட்சம்! கதற விட்ட அஜீத்?

தங்கத்திலேயே சிலை செஞ்சாலும், அதற்கு உயிர் கொடுக்க முடியுமா என்ன? மனிதாபிமானத்தின் மல்கோத்ரா… கனிவின் கடல் புறா… என்றெல்லாம் கொண்டாடப்படும் அஜீத், பல்கேரியாவில் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலின் அறை வாடகை இப்போது தெரிய வந்திருக்கிறது. தினந்தோறும் இரண்டரை லட்சமாம்! சாப்பாடு, இதர செலவுகள் தனி…

பொதுவாக ஒரு ஹீரோ எங்கு தங்குகிறாரோ, அங்குதான் படத்தின் முக்கிய டெக்னீஷியன்களுக்கும் இடம் ஒதுக்கப்படும். அந்த வகையில், மற்றவர்களும் பெரும் செலவு வைக்க… ‘எல்லாம் பய மயம்’ ஆகியிருக்கிறது.

இதுவே தயாரிப்பு செலவின் முக்கிய இடத்தை கடித்துத் துப்பியதால், லாபத்தின் பெரும் பங்கு அவுட் என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில். அதுமட்டுமல்ல…. அஜீத்தின் கால்ஷீட் கிடைத்த நேரத்தில் சந்தோஷத்தின் எல்லைக்குப் போன சத்யஜோதி பிலிம்ஸ், கதை கேட்டதும் காற்றுப் போன பலூன் ஆகிவிட்டதாம். ஏனென்றால், ஒரு கதையை கேட்கும் போதே அதன் செலவுகள் கண் முன் விரியும். அப்படி இந்த கதை விரிய விரிய கண்கள் பிதுங்கியதாம். இருந்தாலும், அஜீத் என்கிற மாஸ் ஹீரோவை வைத்துக் கொண்டு எவ்வளவு செலவு செய்தாலும் மீட்டு விடலாம் என்கிற நம்பிக்கைதான் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியதாம்.

அதையெல்லாம் காலி பண்ணியிருக்கிறது பல்கேரியாவின் செலவு. நல்லவேளை… கம்பெனி எதிர்பார்த்த மாதிரி நல்ல பிசினஸ் அமைந்ததால், சந்தோஷமாக படம் வெளியாகியிருக்கிறது.

இதையடுத்து தயாரிப்பாளர் குடும்பம், இயக்குனரின் குடும்பம், மற்றும் அஜீத்தின் குடும்பம் இணைந்து இந்தப்படத்தை பார்த்து ரசித்திருக்கிறது. திரையிடப்பட்ட இடம், என்.எப்.டி.சி தியேட்டர்!

2 Comments

  1. Kalpana says:

    Someone fooled you SIR! Even in most expensive bulgeria’s capital sofia city’s “Sense” hotel, the most expsive Suite is around 382 Euros, max of 35 thousand indian rupees. http://www.sensehotel.com/ The shooting was mostly in less expensive cities. Please verify news before publishing.

  2. Mohanaraja says:

    எவன் இந்த நியூஸ் போட்டானோ அவன் ஒரு மூளை இல்லாத வடிகட்டின முட்டாள். தூ

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
AjithKumar
டிக்கெட் கொள்ளையை தட்டிக் கேட்கும் அஜீத் ரசிகர்கள்! ஆங்காங்கே அடிதடி!

Close