அஜீத்திற்கு நடிகர் சங்கம் தரப்போகும் சங்கடம்?

‘மக்கள்ட்ட சுரண்டறது சரியில்ல… நாமளே பணத்தை போட்டு நடிகர் சங்கத்தை கட்டுவோம்’ என்று அஜீத் சொன்ன விஷயம், எஸ்.வி.சேகர் மூலமாக வெளியே கசிந்ததால் நாடெங்கும் ஒரே சலசலப்பு. ‘சரியாதானே சொல்லியிருக்கார்?’ என்று பலரும் விவாதிக்க தொடங்கிவிட்டார்கள். ‘தல… நீதான் நிஜத் தல…’ என்று அவரது ரசிகர்களும் பொங்கி பொங்கி சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி எல்லாரையும் பொங்க விட்ட அஜீத், நடிகர் சங்க நிர்வாகிகளை மட்டும் எப்படி பொங்க விடாமலிருப்பார்? ‘ஆமாய்யா… அஜீத் சொன்னது சரின்னே வச்சுப்போம். வாங்க எல்லாரும் கிளம்பிப் போய் அஜீத் வீட்ல நிப்போம். ஏதோ பணம் தர்றேன்னு சொன்னீங்களே, தாங்கன்னு கேட்போம். ஒரு பேச்சுக்கு சொன்னா வந்து நின்னுட்டாங்களேன்னு நினைக்கிறாரா? இல்ல… ரெண்டு கோடிக்கு செக் போட்டு தர்றாரான்னு பார்ப்போம்’ என்று பேச ஆரம்பித்துவிட்டார்களாம்.

ஆளாளுக்கு எரிச்சல் படுவதை பார்த்தால், கிளம்பிப் போய் நின்றாலும் நிற்பார்கள் போலதான் தெரிகிறது. எதுக்கும் செக் புக்கை எடுத்து வைங்க அஜீத்!

3 Comments

  1. Karuppan says:

    they will not even get 2 rupees. Thala lives for himself and his family. Period.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Aruvi-Collection
அருவி அடைந்த 15 கோடி! வாய் பிளக்கும் திரையுலகம்!

தமிழ்சினிமாவின் மெகா பட்ஜெட் படங்கள் கூட செய்யாத சாதனையை ‘அருவி’ செய்துவிட்டது. கொஞ்சம் பாக்கெட் தாராளமான தயாரிப்பாளர்கள் கிடைத்துவிட்டால் போதும்.... அவர்களையே அரைத்து கூழாக்கி சாப்பிட்டு விடும்...

Close