கருப்புத் தல! கண்ணெதிரே மாற்றம்! என்னய்யா நடக்குது?

‘நான் இப்படிதான். முடிஞ்சா ரசி. இல்லேன்னா நடையை கட்டு’ என்கிற கொள்கை கோட்பாட்டுக்கெல்லாம் கும்பிடு போட்டுவிட்டார் அஜீத். நாலாபுறத்திலிருந்தும் கேட்ட நஷ்டக் குரல்தான் காரணம். இனிமேலும் தன் பிடிவாதத்தை தொடர்ந்தால் இப்போதிருக்கும் நடிகர்கள் எப்படி அவரவர் பணத்தை இன்வெஸ்ட் பண்ணி அவரவர்களே படம் எடுத்துக் கொள்கிறார்களோ… அந்த நிலைக்கு தள்ளப்படுவோம் என்று கூட நினைத்திருக்கலாம். (உதாரணம்- சூர்யா, கார்த்தி, தனுஷ், ஆர்யா, விஷால், உதயநிதி, விஷ்ணுவிஷால், சசிகுமார்)

‘விசுவாசம்’ படத்திற்காக தன்னை நிறைய மாற்றிக் கொள்ள முடிவெடுத்திருக்கிறாராம். டை அடித்தால் அலர்ஜி என்பதையும் மீறி கவுதம் மேனன் படத்திற்காக தலையில் ‘டை’ அடித்தார். ஆனால் கவுதம் மேனன் போல சிவாவுக்கு கட்டளையிடுகிற ஆற்றல் இல்லை என்பதால் மீண்டும் சால்ட் பெப்பர் லுக்குக்கே போனார் அஜீத். இதெல்லாம் அப்போ… இப்போ நிலைமையே வேறு. இந்த முறை யாரும் சொல்லாமலே தனது தலையை கருப்பாக்கிக் கொள்ள துணிந்துவிட்டார்.

படப்பிடிப்புக்கு இன்னும் சில வாரங்கள் இருக்கிற நிலையில், இப்பவே டை அடித்த கருப்புத் தலையுடன் காணப்படுகிறார் அஜீத். தப்பித் தவறி அவரது தரிசனத்தை காணும் சினிமாக்காரர்கள் ‘அட… தலயோட தல கருப்பாயிருக்கே’ என்று பேரதிர்சிக்கு ஆளாகிறார்கள்.

ஒருவேளை இது ட்ரையல் பீரியட் ஆக இருக்கலாம்.

1 Comment

  1. Vijay says:

    Mega Flop Star Ajith

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Vishal
ஆர்.கே.நகரில் விஷால் போட்டி! இல்லயாம்… ஆமாவாம்… இல்லயில்ல… இருக்கு இருக்கு… ஊரையே குழப்பியடிக்கும் விஷால்!

தமிழ்சினிமாவின் குழப்பவாதிகள் லிஸ்ட் எடுத்தால் முதல் பெயர் சத்தியமாக ரஜினிக்குதான். அவர் செய்யும் வேடிக்கைகளை கடந்த 25 வருஷங்களுக்கும் மேலாக அனுபவித்து வரும் ஜனங்களுக்கு லேட்டஸ்ட் பொழுதுபோக்கு...

Close