அஜீத் முடிவு! அமிதாப் ஆச்சர்யம்! நாட்ல இப்படியெல்லாம் நடக்குமா?

பத்திரிகையாளர்களைதான் மறந்துவிட்டாரே ஒழிய, பழசையெல்லாம் ஞாபகத்தில்தான் வைத்திருக்கிறார் அஜீத். அதற்கு மிக சரியான உதாரணம், நாம் இப்போது சொல்லப் போகும் சம்பவம்தான். சில வாரங்களுக்கு முன்பு மிக முக்கியமான ஒரு பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. அப்படி பேசிக் கொண்டவர்கள் அஜீத்தும், அமிதாப்பச்சனும்தான். ஒரு காலத்தில் ஏகப்பட்ட கனவுகளோடு சென்னையில் தன் சினிமா கம்பெனியை துவங்கிய இந்தியாவின் மெகா சூப்பர் ஸ்டார் அமிதாப், ‘உல்லாசம்’ என்ற படத்தை தயாரித்தது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

விக்ரம், அஜீத் இருவரும் அப்படத்தில் நடித்திருந்தார்கள். படம் படு சுமார். ஒரு வாரம் கூட ஓடவில்லை. உல்லாசத்துடன் சேர்ந்து அமிதாப் தயாரித்த பிற படங்களுக்கும் இதே நிலைமை. திடீரென பெரும் கடனாளி ஆனார் அமிதாப். அவரது சொத்துகள் ஜப்திக்கு வந்தன. நல்லவேளை… மல்லையா வைத்தியத்தை மேற்கொள்ளவில்லை அமிதாப். அதற்கப்புறம் காபி, டீ, இஞ்சிமரபா, கடலை முட்டாய் என்று கண்ட விளம்பரங்களிலும் நடித்தார். கடும் முயற்சிக்கு பின் மீண்டு வந்த அமிதாப், படத் தயாரிப்பு ஆசையை பதினாறு துண்டுகளாக வெட்டி, மடித்து மூட்டைக்குள் வைத்து கட்டி, நடுக்கடலில் வீசிவிட்டு நிம்மதியாக தன் வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டார். கட்…

போன வாரம் அமிதாப்புடன் பேசிய அஜீத், சார்… நீங்க மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கணும். அந்த படத்தில் நானே மீண்டும் நடிக்கணும் என்று கேட்டுக் கொள்ள, அஜீத்தின் மார்க்கெட் நிலவரம், வசூல் வேட்டை எல்லாவற்றையும் அடிக்கடி கேள்விப்பட்டு வந்த அமிதாப் மனசார சரி என்று கூறியிருக்கிறாராம். இந்த செய்தியை முதன் முதலில் நாட்டுக்கு அறிவிப்பதில் பெருமை கொள்கிறது நியூதமிழ்சினிமா.காம்.

இந்த படத்தை இயக்கவிருப்பவர், அநேகமாக அஜீத்தே விரும்பிய அட்லீயாக இருக்கலாம் என்பதுதான் இறுதி மற்றும் உறுதியான செய்தி!

2 Comments

  1. selva says:

    Intha news ku evalavu panam vanguneenga sir

  2. roja says:

    அஜீத் படத்தைத் தயாரிக்கவில்லை’.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமிதாப்பச்சன்!
    அமிதாப் பச்சன் ட்விட்டர் பாத்திங்களா? நீங்களும் அஜித் பான் என்பதை நிரூபித்திடீங்க வடை சுட வேண்டாம்

Leave a Reply

Facebook

Follow Us on Twitter