ஆபிஸ் நேரத்தில் அஜீத் பர்த் டே ! திண்டாட்டத்தில் அரசு ஊழியர்!

அதி தீவிர ரசிகர்களால் மட்டுமே தன்னை மறந்து இப்படியெல்லாம் செய்ய முடியும்? அஜீத்தின் அப்படியொரு தீவிர ரசிகைக்கு மேலதிகாரி கொடுத்த டோஸ்… கொஞ்ச நஞ்சமல்ல. அதோடு விட்டாரா? சம்பளமும் ஒரு வருஷத்திற்கு கட்! கடந்த வாரம் சென்னை மாநகராட்சி மண்டலத்தில் நடந்த இந்த விஷயம் குறித்துதான் ஒரே பேச்சு. ஆனால் சம்பந்தப்பட்ட ஜெயந்தி இப்போது வாயடைத்து உட்கார்ந்திருக்கிறார். ஒரு வருஷ சம்பளம் நிறுத்தி வைப்பு என்றால், குடும்பத்தை ரன் பண்ணுவதற்கு அஜீத்தா உதவப் போகிறார்? அந்த கலக்கம்தான் இப்போது.

கோடம்பாக்கம் மாநகராட்சி மண்டலத்தில் வேலை பார்க்கிற ஜெயந்தி, அஜீத்தின் பிறந்த நாளை ஆபிசுக்குள் வைத்து கேக் வெட்டி கொண்டாடினாராம். மற்ற மற்ற ஊழியர்களுக்கும் கேக் பரிமாறப்பட…. விஷயம் மாநகராட்சி கமிஷனருக்கு வீடியோ வடிவில் போனதாம். (அனுப்பிய நபர் விஜய் ரசிகரா இருக்குமோ?)

கடும் சினத்திற்கு ஆளான அதிகாரி, ஜெயந்தியை கடிந்து கொண்டதுடன் ஒரு வருஷ சம்பளத்தை நிறுத்தி வைக்கச் சொல்லியும் உத்தரவிட்டிருக்கிறார். இந்த விஷயம் அஜீத்தின் காதுக்கு போனதா? ஜெயந்திக்கு ஆறுதல் சொல்லப்பட்டதா?

சொல்ல முடியாது. அஜீத்தின் கோக்கு மாக்கு குணத்திற்கு… இந்நேரம் ஜெயந்தி நேரில் வரவழைக்கப்பட்டு ஒரு வருஷ சம்பளம் அவர் கைக்கு மாறியிருந்தாலும் ஆச்சர்யமில்லை.

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Latha Rajinikanth
ஆஸ்ரம் டூ அக்ரமம்…! லதாவால் நசுங்கும் ரஜினி இமேஜ்!

‘சிஸ்டம் சரியில்லே என்று கூறிய ரஜினி, முதலில் தன் வீட்டு சிஸ்டம் சரியா இருக்கான்னு பார்க்கணும்’! சோஷியல் மீடியாவில் நேற்றெல்லாம் அதிகம் முழங்கப்பட்ட ஒரே வாசகம் இதுவாகதான்...

Close