விஜய் அஜீத் வெளிப்படையாக ஒரு மோதல்!

‘நானும் அவரும் கட்டை விரலும் கடன் பத்திரமும் போல’ என்று கூறி வருகிற பல ஹீரோக்கள், உள்ளுக்குள் அந்த விரலையே கடித்துத் துப்புகிற அளவுக்கு பகமை சேர்ப்பது சினிமாவில் சகஜம். இப்படி ஒண்டிக்கு ஒண்டி நட்பாக இருப்பதை போல பாவனை காட்டி வரும் விஜய்யும் அஜீத்தும் பல விஷயங்களில் எதிரும் புதிரும்தான். இந்த அதிர்ச்சி ஏதோ நேற்று முந்தா நாள் நடந்ததல்ல. அப்பவும்… இப்பவும்… எப்பவும் அதே நிலைதான் பல வருஷங்களாக! அந்த பகைமையின் இளம் நெருப்பில் இன்னும் சில சுள்ளிகளை போட்டுவிட்டது நிலைமை.

அட்லீ இயக்குகிற விஜய் 61 படத்தின் பப்ளிசிடிக்காக அஜீத்தின் மேனேஜர்தான் நியமிக்கப்பட்டாராம் முதலில். பொதுவாக தான் நடிக்கும் படத்தின் மற்ற மற்ற டெக்னீஷியன்களை கவனித்து பார்க்கும் ஹீரோக்கள், இதுபோன்ற சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை. அப்படிதான் உள்ளே நுழைந்தாராம் அஜீத்தின் மேனேஜர். இவரும் அட்லீயும் பல வருஷத்து பிரண்ட்ஸ். அந்த நட்பிற்கு அழுத்தம் கொடுத்த அட்லீ இந்த விஷயத்தை விஜய் காதிலேயே போடவில்லை. ஆனால் விஜய் படத்தில் அஜீத்தின் மேனேஜர் வந்தால் இங்கிருக்கிற ரகசியங்களும் களவு போகும்தானே?

சற்று தாமதமாக இந்த விஷயத்தை விஜய்யின் காதுக்கு கொண்டு சென்றது ஒரு நலம் விரும்பும் கூட்டம். அவ்வளவுதான் சீறிவிட்டாராம் விஜய். யாரை கேட்டுட்டு இப்படி பண்றீங்க? முதல்ல அவரை தூக்குங்க என்று கடிக்க… அடுத்த வினாடியே வேறொருவர் வந்திருக்கிறார். இதற்கப்புறம் நடந்ததற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்காது என்று நம்புவோம்.

விஜய் 61 படத்தின் ஷுட்டிங் துவங்குகிற அதே நாளில் தனது 57 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் டீசரையும் வெளியிட்டார் அஜீத். இதனால் சமூக வலைதளங்களில் டிராபிக் நெரிசல். அதுமட்டுமல்ல…. இரு பெரும் ரசிகர்களுக்கு இடையில் ஒரே கெட்ட வார்த்தை அர்ச்சனைகள்.

பெருந்தன்மைக்கு பெயர் போன அஜீத், இப்படி குறுக்கே வந்து கொய்யாப்பழம் விற்பது நல்லாவா இருக்கு?

1 Comment

  1. ஜோசப் அற்புதராஜ் says:

    ரெண்டு பேரும் அடித்து கொண்டு சாவுங்கடா.
    தமிழ் சினிமாவாவது நன்றாக இருக்கும்.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
“LAWRENCE DONATES 10 LAKHS FOR THE STUDENT WHO DIED IN A PROTEST”-EMOTIONAL MOMENT.
“LAWRENCE DONATES 10 LAKHS FOR THE STUDENT WHO DIED IN A PROTEST”-EMOTIONAL MOMENT.

https://www.youtube.com/watch?v=dgGdr5_YP7E

Close